அவலப் பெண்ணின் தர்க்கம்
மவ்லவி, ஷதீதுத்தீன் பாகவி
இஸ்லாத்தில் பெண்கள் உரிமை மிதிக்கப்படுகிறது என்று கூறுவோர்க்கு ஒரு பாடம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஒரு ஸஹாபிப் பெண்மணியை அவரது கணவர் அவரை அறியாமல் “தாய்” என்று அந்த பெண்மணியை பார்த்து கூறிவிடுவார்.
அந்த அறியாமை காலத்தில் ஒரு மனைவியை அவரது கணவர் “தாய்” என்று கூறிவிட்டால், அது தலாக் ஆகிவிடும். அரபியர் காலத்தில் இதற்கு முத்தலாக் உடைய அந்தஸ்து இருந்தது.
இனி கணவன் மனைவி இருவரும் சேரமுடியாது என்று எல்லா மக்களும் கூறிவிட்டனர்.
கடைசியாக அந்த பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள் .
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பேசும்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மௌனமாக இருந்தார்கள். ஏனென்றால் இன்னும் அதற்குரிய சட்டம் வரவில்லை.
பின், அந்த பெண்மணி நடுநிசியில் எழுந்து தஹஜ்ஜத்துடைய நேரத்தில் அல்லாஹ்விடம் மன்றாடினார்;
“யா அல்லாஹ்! என்னை என் கணவர் தெரியாமல் “தாய்” என்று கூறியதற்காக இந்த மக்கள் அதற்கு முத்தலாக் என்று கூறுகிறார்கள். நானும் என் கணவரும் சேர்ந்து மணிமணியாய் குழந்தைகள் பெற்றுள்ளோம் .இதனால் என் குழந்தைகளும் நானும் அநாதையாகி விடுவோம். யா அல்லாஹ்! வணக்கத்திற்கு உரியவன் நீ ஒருவன் தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறி நான் விசுவாசித்திருக்கிறேன். யா அல்லாஹ்! நீ இருப்பது உண்மையானால் நீயும் இதற்கு இதே சட்டத்தை ஹலாலாக்கி விடாதே!”
என்று அல்லாஹ்விடம் கேட்ட துஆ அல்லாஹ்வுடைய அர்ஷைத் தட்டும்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் ”வஹீ” இறக்குவான்.
28 ஜுஸ்வின் ஆரம்பம். தொடர்ந்த 4 வசனங்கள், அல்லாஹ் இறக்கி வைத்தான்.
சுமார் 1400 வருடங்களாக ஓதப்பட்டுவருகிறது.
இந்த அத்தியாயத்தை ஓதும் ஒவ்வொரு பெண்ணும் அந்த ஸஹாபிப் பெண்மணிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர்.
ஒரு பெண்ணின் துஆ சட்டத்தை மாற்றி அமைத்தது என்றால் இஸ்லாத்தில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது என்பதை உணர வேண்டும் .
இன்று வரைக்கும் இது தான் சட்டம் .
قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ
الَّذِينَ يُظَاهِرُونَ مِنكُم مِّن نِّسَائِهِم مَّا هُنَّ أُمَّهَاتِهِمْ إِنْ أُمَّهَاتُهُمْ إِلَّا اللَّائِي وَلَدْنَهُمْ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنكَرًا مِّنَ الْقَوْلِ وَزُورًا وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ
وَالَّذِينَ يُظَاهِرُونَ مِن نِّسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِّن قَبْلِ أَن يَتَمَاسَّا ذَٰلِكُمْ تُوعَظُونَ بِهِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَاسَّا فَمَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ذَٰلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ
குர்ஆன் வசனம் – 58:1. (நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் – மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.
குர்ஆன் வசனம் – 58:2. “உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் – எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் – ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்.
குர்ஆன் வசனம் – 58:3. மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
குர்ஆன் வசனம் – 58:4. ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் – வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
courtesy: Moulavi. Sadeedudeen Baaqavi, Adyar Jumma Masjid.