”எனக்கு ஹிஜாப் தான் முக்கியம்” -முர்ஷிதா நஸ்ரின்
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன். இவருடைய மகள் முர்ஷிதா நஸ்ரின்.
இவர் திருவாரூரிலுள்ள GRM பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.
மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியை கௌரவிக்கும் நோக்கில் பள்ளி நிர்வாகம் மீடியாவுக்கு அழைப்பு விடுத்தது.
மீடியா முன்னிலையில் வருவதாக இருந்தால் நிகாபை கழட்ட சொல்வார்கள். எனக்கு என்னுடைய கண்ணியம் தான் முதலில் முக்கியம்.
உலகில் கிடைக்கும் பெயர் புகழ் எதுவும் தேவையில்லை, அல்லாஹ்விடமிருந்து நற்பெயர் கிடைத்தாலே போதுமானது என்று மீடியா முன்னால் தோன்றுவதை முழுமையாக மறுத்துள்ளார்.
அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அந்த மாணவிக்கு சான்றிதல் வழங்கி கௌரவித்தார்.
இந்த பதிவின் மூலம் நாம் மூன்று விஷயங்களை உலகுக்கு சொல்ல முடியும்….
1. வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
2. உலகமே கௌரவப்படுத்த நினைத்த போதும் தனக்கு மார்க்கம் மட்டுமே முதலிடம் என்ற கொள்கையில் உறுதியோடு இருக்கிறார்.
3. முஸ்லிம் பெண்களின் பர்தா பெண்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துகிறது என்ற போலி சிந்தனையாளர்களின் கூற்று உடைபடுகிறது.
நம்முடைய அன்பு சகோதரி முர்ஷிதா நஸ்ரின் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விபரம்
தமிழ் 192,
ஆங்கிலம் 188,
பொருளியல் 200,
வணிகவியல் 200,
கணக்குப்பதிவியல் 200,
வணிக கணிதம் 197,
மொத்தம் 1177
மாவட்டத்தில் முதலிடம் பிடித்த அன்பு சகோதரி மாநில அளவிலும் முதலிடம் பிடித்து, தேசிய அளவிலும் முதலிடம் பிடித்து இம்மையில் பல்வேறு சாதனைகள் புரிந்து, மறுமையில் அல்லாஹ்வுடைய திருப்தியை அடைந்து ஈருலகிலும் வெற்றிபெறுமாறு இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆ செய்கிறோம்.
– சங்கை ரிதுவான்