உலமாக்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்
பள்ளி வாசல், முஸ்லிம் அனாதை இல்லம், மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், ஆலிமாக்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள்,
பொருளாதார மற்றும் கல்வி நிலைகள் முன்நேற்றம் அடைவதர்க்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டு செயல்ப்பட்டு வருகிறது.
இவாரியத்தில் உறுப்பினராக பதிவுச் செய்ய 13 வயது நிறைவு 60 க்குள் இருக்க வேண்டும். பதிவு செய்த உடன் ஓர் – ID CARD (அடயாள அட்டை) இலவசமாக இவ்வாரியத்தால் வழங்கப்படும்.
அடையாள அட்டை 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்….
A) விபத்து
1) விபத்தினால் மரணம் ஏற்ப்பட்டால் – 100000
2) விபத்தினால் ஊனம் ஏற்ப்பட்டால் -10,000 முதல் 100000
3) இயற்கை மரணம் -15000
4) ஈமச்சடகு சடங்கு – 2000
B) கல்வி உதவித் தொகை :
1) 10 – ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை – 1000
2) 10 – ஆம் வகுப்பு தேற்ச்சி பெற்றவருக்கு – 1000
3) 11 – ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை – 1000
4) 12 – ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை – 1500
5) 12 – ஆம் வகுப்பு தேற்ச்சி பெற்றவருக்கு – 1500
6) முறையான பட்டப் படிப்பு – 1500
7) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப் படிப்பு – 1750
8) முறையான பட்டப் மேற்ப் படிப்பு – 2000
9) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப் மேற் படிப்பு – 3000
10) தொழிற் கல்வி பட்டப் படிப்பு – 2000
11) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய தொழிற் கல்வி பட்டப் படிப்பு – 4000
12) தொழிற் கல்வி பட்டப் மேற்ப் படிப்பு – 4000
13) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய தொழிற் கல்வி பட்டப் மேற்ப் படிப்பு – 6000
14) ITI அல்லது Polytechnic – 1000
15) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய ITI அல்லது Polytechnic -1200
16) திருமண உதவித் தொகை – 2000
17) மகப்பேறு உதவித் தொகை மாதத்திற்கு ரூ.1000/வீதம் 6 மாதத்திற்கு – 6000
18) கண் கண்ணாடி செலவு (தொகையை ஈடு செய்தல்) – 500 (max)
19) முதியோர் ஓய்வு ஊதியம் மாதம் தோறும் – 500
சகோதரர்களே!
இதுவரை 13,464 உலமாக்கள் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்திர்க்கு 2013 -2014ஆம் ஆண்டிற்கு 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் நல வாரியம்
உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதார, கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு “உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்” துவங்கப்பட்டது.
இந்த வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யார் ?
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் வக்ஃபு அமைச்சர் அவர்கள் இதன் தலைவர் ஆவார். 10 அரசு அலுவல் சார் உறுப்பினர்களும் மற்றும் 15 அரசு அலவல் சாரா உறுப்பினர்களும் இவ்வாரியத்தில் உள்ளனர்.
இவ்வாரியத்தில் உறுப்பினராவதற்கான தகுதிகள் என்ன ?
18 வயது (பூர்த்தி செய்த) முதல் 60 வயதிற்கு உட்பட்ட
அ) பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் பேஷ் இமாம்கள், மோதினார்கள், பிலால்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் மற்றும் பிற பணியாளர்கள்.
ஆ) தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள், மற்றும் அனாதை இல்லங்களில் பணி செய்யும் முஜாவர் மற்றும் பிற பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.
உறுப்பினராவதற்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் ?
விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து பெற்று பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்ட ஆவணங்களை இணைத்து அவரிடமே சமர்ப்பிக்க வேண்டும்.
உறுப்பினர் படிவத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் ?
அ) 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
ஆ) பணியாற்றும் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பணிச்சான்றிதழ்
இ) வயதுச் சான்றிதழ் (பிற ஆவணங்கள் இல்லையெனில் மருத்துவரிடமிருந்து வயதுச் சான்றிதழை பெறலாம்)
உறுப்பினர் அடையாள அட்டை என்றால் என்ன ?
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (பி.ப.) மற்றும் சிறுபான்மை நல அலுவலர் பெறப்பட்ட விண்ணப்பத்தினை வக்ஃப் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைப்பார். அவர் விசாரணை, மேற்கொண்டு விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இருப்பின், பி.ப. மற்றும் சிறுபான்மை நல அலுவலருக்கு பரிந்துரை செய்வார். பி.ப. மற்றும் சிறுபான்மை நல அலுவலர் கூர்ந்தாய்வு செய்து விண்ணப்பதாரரை உறுப்பினராகப் பதிவு செய்து அதற்கான அடையாள அட்டையை வழங்குவார்.
உறுப்பினர் அடையாள அட்டை தவறினால் / தொலைந்தால் திரும்பப் பெற முடியுமா?
முடியும். மாவட்ட பி.ப. மற்றும் சிறுபான்மை நல அலுவலரிடம் ரூ.20/- கட்டணம் செலுத்தி நகல் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
நலத்திட்ட உதவிகளைப் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது ?
உறுப்பினர், நலத்திட்ட உதவிகளைப் பெற உரிய படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் அவர் பணிபுரியும் அமைப்பின் நிர்வாகியிடம் “உண்மைச் சான்றிதழ்” கையொப்பம் பெற்று மாவட்ட பி.ப. மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
உறுப்பினர் பதிவை எவ்வாறு புதுப்பிப்பது ?
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் அவரது பதிவை புதுப்பிக்க வேண்டும். 3 ஆண்டுகள் முடிவடைவதற்கு சற்று முன்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கு கட்டணம் ஏதும் உண்டா ?
உறுப்பினர் பதிவை புதுப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.
source: http://www.indg.in/social-sector/ssi/b89bb2baebbeb95bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-baabbfbb1-baaba3bbfbafbbebb3bb0bcdb95bb3bcd-ba8bb2-bb5bbebb0bbfbafbaebcd/