காணாமல் போன காக்கைக் கூட்டங்கள்!
மழைக்கால
ஈசல்களாய் திரு
விழாக்கால
வேடந்தாங்கிகள்
வேடந்தாங்கலாய்
முகநூல் முழுதும்
உமிழ்ந்த
எச்சிலின்
எச்சங்கள்
இன்னும்
காயவில்லை.
தோள் கொடுத்த
இஸ்லாமியர்களுக்கு
இனிய தோழனாய்
இருப்பார் கலைஞர்
என்றனர்.
ஓட்டளித்த
மை அழியுமுன்னே
தன் வீட்டாரின்
வழக்கு நீர்க்க
இழக்க
இனி இல்லை
ஏதும்
என்ற நிலையிலும்
உனக்காய்
உழைத்து
ஏமாந்த
என் இனத்தை
ஒழிக்க
துடிக்கின்ற
ஓநாய்க்
கூட்டத்திடம்
ஒப்படைத்துச்
சன்மானம்
வாங்கத்
துடிக்கின்றாய்
சதிகாரா!
கருணையற்றவனே!
பொருப்பற்ற
அறிக்கை விட்டு
உன் சிக்கல் தீர
என் மக்களை
சிக்கலுக்கு
உள்ளாக்குகிறாய்.
வீதியோரம் நின்று
விழியசைவால்
வீழ்த்த எண்ணும்
விலை மகளுக்கும்
உனக்குமில்லை
வேறுபாடு.
தவறான
உன்னறிக்கை
எம் மக்களைச்
சங்கடப்
படுத்தக் கூடும்
என்ற போதும்
வருத்தம் கூடத்
தெரிவிக்கலையே
வஞ்சகா!
உனக்கு
வாக்களித்தல்
ஆறாம் கடமை
என்று சொல்லும்
அடிமைகளைப்
பெற்ற
நீ ஏன்
அஞ்ச வேண்டும்.
கலைஞருக்கே
கட்டாயம்
வாக்களிப்போம்
என்ற
காணாமல் போன
காக்கைக் கூட்டங்களே!
கண்டனத்தையாவது
பதிவு செய்யுங்கள்
மனக் காயம்
ஆறட்டும்.
இல்லையென்றால்
நல்ல
மார்க்கத்தைச்
சொல்வோரை
எதிர்ப்பதொன்றே
உங்கள்
நடுநிலைப் பணி
என்பதை
நாடு உணரட்டும்.
– Bangu Siddique
கருணாநிதி முகத்தில் கரியை பூசினார் கருணாநிதி….!!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு முஸ்லிம்களை தொடர்புப்படுத்தி பேசி யுத்த பிரகடனம் செய்திருந்தார் திமுக தலைவர் கருணாநிதி.
கருணாநிதியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் நாடு முழுவதும் கடும் கண்டனங்களும் எதிர்ப்பு அலைகளும் விண்ணை முட்டியது.
தமிழக இயக்கங்களான TNTJ, SDPI, இந்திய தேசியலீக் கட்சி, முகநூல் முஸ்லிம்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.
அதேபோல இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்….
எந்த சம்பந்தமும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது யுத்த பிரகடனம் செய்துள்ள கருணாநிதிக்கு எல்லாம் வல்ல இறைவன் இன்னொரு கருணாநிதி மூலம் முகத்தில் கரியை பூச வைத்துள்ளான்.
ஆம் சத்தியம் டிவி நேரடி விவாத களத்தில் பங்குகொண்ட முன்னால் காவல்துறை டிஜிபி கருணாநிதி முஸ்லிம்களுக்கும் இந்த குண்டுவெடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இன்னும் சொல்லப்போனால்…
தீவிரவாதம் என்றாலே உடனடியாக முஸ்லிம்கள் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும் என்று பேசினார்.
இவையனைத்தையும் விட கோவை இன்று அமைதியாக இருக்கிறது என்றால் அதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்றும் உண்மையை உரக்க சொன்னார்.
இவருடைய பேச்சை காணும்போது….
நம்முடைய மரியாதைக்குரிய அன்பு சகோதரர் மாவீரன் ஹேமந்த் கர்கரே அவர்கள் கண்களில் வந்து வந்து சென்றார்.
எங்களுடைய இறைவனே….
அநியாயமாக முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி போர் பிரகடனம் செய்துள்ள கருணாநிதிக்கு இன்னொரு கருணாநிதி மூலம் கரியை பூசிய எல்லாம் வல்ல இறைவனே…
உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே….!!