Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சினைகளும்

Posted on May 6, 2014 by admin

நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சினைகளும்

  ஷம்சுல்லுஹா ரஹ்மானி  

இரு பெண்கள் தங்களி இரு குழந்தைகளுடன் இருந்நதனர். ஓநாய் வந்து அவ்விருவரில் ஒருவரின் குழந்தையைக் கவர்ந்து சென்றது. ஒரு தோழி (இன்னொரு தோழியைப் பார்த்து) உனது குழந்தையைத் தான் ஓநாய் கொண்டு சென்றது என்று இன்னொரு தோழி சொன்னால். அவ்விருவரும் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இவ்வழக்கை கொண்டு வந்தனர். அவ்விருவரில் மூத்தவளுக்கு அந்தக் குழந்தை சொந்தம் என்று தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.

அவ்விருவரும் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் புறப்பட்டு வந்தனர். அப்போது, சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடத்தில், “ஒரு கத்தியைக் கொடுங்கள் அந்தக் குழந்தையை இரு கூறாக போட்டு இந்த இருவருக்கும் இடையில் பங்கு போட்டு கொடுக்கின்றேன்” என்று உத்தரவு போட்டதும், “அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! நீங்களி அப்படி செய்யாதீர்கள். அந்தக் குழந்தை மூத்தவளின் குழந்தைதான்” என்று இளையவள் சொன்னால். உடனே சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்தக் குழந்தை இளையவளுடையதுதான் என்று தீர்ப்பு வழங்கினார்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (நூல் : புகாரி)

இந்தச் சம்பவத்தில் ஒரு உண்மைத் தாய் அந்தக் குழந்தை யாரிடமிருந்தாலும், உயிரோடு இருக்கட்டும் என்று விரும்புவாள்; அதுதான் ஒரு உண்மையான தாயின் இலக்கணமாகும் என்ற யுக்தியை மூலதனமாகக் கொண்டுதான் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்படி ஒரு அழகான தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள்.

இப்போது இதுபோன்ற ஒரு வழக்கு இன்றைய நீதிபதிக்கு முன்னால் வரும்போது இதே யுக்தியை முன்மாதிரியாகக் கொண்டு தீர்பளிக்க முடியாது.

ஏனெனில் உண்மையான தாயும், தாயைப் போன்று நடிக்கும் நாடகத் தாயும், அந்தக் குழந்தையை வெட்டாதீர்கள்; அந்தக் குழந்தை உயிருடன் இருந்தால் போதும் என்ற கருத்தில் மேலே கண்ட அதே பாணியில் உணாச்சி பொங்க உள்ளத்தை தொடும் வகையிலே வசனம் பேசி விட்டால், உண்மையான தாய் யார் என்று உன்னிப்பாக வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கும், இவ்வழக்கை உற்றுநோக்கும் உலகத்துக்கும் உண்மை தெரியாமல் போய்விடும். அப்படியானால் இதற்கு மாற்றுத் தீர்வு கண்டாக வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும். ஆம்! இன்று காலம் இட்டக் கட்டளைப்படி மற்றுத் தீர்வு கண்டாயிற்று. பிரச்சினைக்குரிய குழந்தை மற்றும் அக்குழந்தைக்குச் சொந்தம் கொண்டாடும் இரு தாய்pகளின் இரத்தக் கூறுகளுடன் பொருந்திப் போகும் போது உண்மைத் தாய் யார் என்பது உலகுக்குத் தெரிகின்றது. போலித்தாயின் முகத்திரையும் கிழிக்கப்படுகின்றது. இம்மாபெரும் தீர்வு இன்றைய அறிவியல் புரட்சியின் விளைவேயாகும்.

இதுபோன்ற வழக்குகளில் மார்க்கத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படும்போது, அறிவியல் வளர்ச்சியின் துணையின்றி தீர்ப்புக்கள் வழங்கப்பட முடியாது என்பதை அறிகின்றோம். அப்படியானால் அறிவியல் வளர்ச்சியும், மார்க்கத்தின் நிலைப்பாடும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து அமைந்துள்ளது என்பதைக் காண முடிகின்றது. இஸ்லாத்தை விட்டு அறிவியலை அணுவளவேனும் அப்புறப்படுத்தினால் அதன் விளைவுகள் படுபாதகமானவையாக அமையும்.

வேதத்தை விட்டு விலகலும் விளைந்த விபரீதங்களும்

அல்குர்ஆனை – அல்லாஹ்வின் மார்க்கமான இந்த இஸ்லாத்தை அணுவளவு கூட அறிவியலை விட்டு பிரிக்கக்கூடாது. அப்படிப் பிரித்து வைத்தோம என்றால் வேதத்தை விட்டு மக்கள் பிரிந்து விபரீதமான சித்தாந்தங்களில் செல்ல வேண்டிய சிக்கலான நிலை உருவாகும். அறிவியல் உலகின் மனித அறிவு கருத்தரித்து பிரசவித்த கண்டுபிடிப்புக்கள் ஏராளம்! ஏராளம்!! மனிதன் பயணம் செய்யும் அறிவியல் வண்டியின் சக்கரத்தின் வேகமான சுழற்சிக்கும், அறிவியலின் அபார வளர்ச்சிக்கும் அல்குர்ஆன் முட்டுக்கட்டையாக முன்னால் வந்து நிற்குமானால், அதை முட்டித் தள்ளி தகர்த்துவிட்டு அறிவியலாளர்கள் முன்னேறிச் செல்லத் தயங்க மாட்டார்கள்.

சூரியன் மற்றும் அதன் கோள்கள் புமியைச் சுற்றுகின்றன என்று கிறித்துவ திருச்சபை கொண்டிருந்த கருத்துக்கு மாற்றமான, அதாவது சூரியனைத்தான் பூமியின் மற்றக் கோள்களும் சுற்றுகின்றன – என்ற கருத்தைக் கொண்டிருந்த கோபர் நிக்கஸ் – கலிலியோ – புருனோ உயிருடன் கொளுத்தப்படுகின்றார். விவிலியத்தை (பைபிளை) வேதமாக கொண்ட திருச்சபை வளர்ந்து வரும் வேகமான விஞ்ஞான வளர்ச்சிக்கு விவிலியத்தின் மூலம் விடையும் விளக்கமும் கூறாமல் இருப்பதுடன் தடையும் விதித்தது. அந்தத் தடையை மீறுவோருக்கு தண்டனையும் வழங்கியது. விடையும் விளக்கமும் தராத வேதம் இனி நமக்கு எதற்கு? என்று வேத உலகத்திற்கு பிரியா விடை கொடுத்து விட்டு வெளியேறினர் விஞ்ஞானிகள்!

வேதத்தை விட்டு அறிஞர் உலகம் விரைவாக வெளியேறிப்போனதால் விளைந்திட்ட விளைவுகளில் முதல் விளைவு நாத்திகம்! நாத்திகம் என்ற விஷ வாய்வு மனித நாசிகளில் நுழைந்து அவனின் சுவாசப்பைகளை நச்சுப் பைகளாக மாற்றின. முனிதனை மதத்தை விட்டும் பிரிக்கும் மிகப் பெரிய சீர்கேட்டை கொண்ட செக்யு+லரிசம் என்ற சித்தாந்தம் தோன்றியது.

முதலாளி, தொழிலாளி, வலியவன், எளியவன் என்ற இரு சக்திகள் ஒரு சேர செயல்படும்போது உலகம் ஒரு சீராக இயங்கும் என்ற நடைமுறை வாழ்க்கைச் சாத்தியத்திற்கு முரண்பட்ட பொதுவுடமை எனும் புற்றுநோய் புறப்பட்டு மனித சமுதாயத்தின் அகத்தையும் புறத்தையும் அரிக்க ஆரம்பித்தது. அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதங்களில் ஒன்றான விவிலியத்திற்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சியின் வெளிப்பாடுகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டால் தான் இப்படிப்பட்ட விபரீதமான விளைவுகள்! அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதம் அப்படியே அப்பழுக்கற்றதாக, பாதிரிகளின் கரைபடிந்த கைவரிசைப் படலங்கள் படியாத பரிசுத்த வேதமாக இருந்திருந்தால், இப்படிப்பட்ட பாதகமான விளைவுகளை இந்த உலகம் சந்தித்திருக்காது.

அல்குர்ஆனும் அறிவியலும்

ஐரோப்பியாவில் உள்ள அன்றைய அறிவியலாளர்கள் அறிஞர்கள் அல்குர்ஆனில் தங்களது கடைக்கண் பார்வைகளைச் செலுத்தியிருப்பார்களானால் அவர்களின் அறிவியல் உலகப் பயணத்தின் பாதையில் அவர்களது அறிவுச் சுடரை பிரகாசிக்க வைக்கும் அனல் பந்தங்களைக் கண்டு அதிசயித்துப் போயிருப்பார்கள்.

(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று?

மேலும், வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கின்றது என்றும், இன்னும் மலைகளை அவை எவ்வாறு நாட்டப்பட்டிருக்கின்றன என்றும், இன்னும் பூமி அது எவ்வாறு விரிக்கப்பட்டிருக்கிறது என்றும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) (அல்குர்ஆன் 88:17,18,19,20)

ஒட்டகத்தை அகன்று நீண்டு கிடக்கும் நீல நிற வானத்தை, ஓயாது சுழன்று கொண்டிருக்கும் பு+மியை, அநத பூமி பொதிந்து நிற்கும் மலைகளைப் பற்றி ஆராயச் கொல்லி மனிதனின் அறிவுக் கண்களை தன் ஆற்றல்மிகு வார்த்தைகளால் அல்குர்ஆன் திறந்து விடுகின்றது.

இரு கிழக்குகளுக்கும் அவனே இறைவன் இரு மேற்குகளுக்கும் அவனே இறைவன் (அல்குர்ஆன் 55:17)

என்ற வசனங்கள் மூலம் பு+மி உருண்டையானது என்ற புதுக் கருத்தை புரட்சிக் கருத்தை உலகிற்கு முதன் முதலில் புரிய வைத்தது இந்த உலகப் பொதுமறையான அல்குர்ஆன்தான்!

மனித ஜின் கூட்டத்தார்களே! வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைககை; கடந்துசெல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின் (அவ்வாறே) செல்லுங்கள். ஆனால் (மிகப்பெரிய) பலம் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது (அலகுர்ஆன் 55:33)

பரந்த வானப்பெருவெளியில் பறவைகள் மட்டும் பறக்கக்கண்டு பழக்கப்பட்ட மனித சமுதாயத்தை பார்த்து நீங்கள் அன்னாந்து பார்க்கும் இந்த ஆகாய வெளிகளில் பலங்கொண்ட கலங்கள் மூலம் பறந்து செல்லுங்களேன் என்று இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சுதந்திர பயணத்தின் சாத்தியக் கூறுகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியது இந்த திருக்குர்ஆன்தான்!

கலங்களிலும், கப்பல்களிலும் கடற்பயணங்களை மட்டும் கண்ட கடலாராய்ச்சி காணாத அன்றைய மக்களிடம்:

அவனே, இரண்டு கடல்களையும் சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கின்றது அதை அவை மீறாது. (அல்குர்ஆன் 55:19,20)

என்று அல்லாஹ் அன்று கூறியது இன்றைய காலத்து கண்டுபிடிப்பானது. இதுவரை நாம் கண்ட வசனங்களிலிருந்து கிடைக்கப்பெறும் உண்மை, திருக்குர்ஆன் அறிவியல் ஆராய்ச்சிக்குத் தடை போடவில்லை என்பதே! முhறாக அறிவு ஆராய்ச்சியின்பால் அணையாத ஆர்வத் தீயை மூட்டி அதன் ஒளி வௌ;ளத்தை இந்த உலகம் முழுவதும் அனுபவிக்கச் செய்கின்றது. அறிவியல் ஆராய்ச்சியை ஆர்வமூட்டும் வசனங்கள் அல்குர்ஆன் நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன. இத்தலைப்பிற்கு தேவையான ஓரளவு வசனங்கள் மட்டும் இங்கு இடம்பெற்றுள்ளன.

நான்கு இமாம்களும் இன்றைய நவீன அறிவியல் புரட்சிகளும்

எல்லாப் பிரச்சினைகளுக்கும் இந்த நான்கு இமாம்களும் தீர்வுகளைக் கண்டுவிட்டார்கள். இனிமேல் தீர்வு காண வேண்டிய பிரச்சினை எதுவுமில்லை. இனிமேல் யாரும் இஜ்திஹாத் செய்ய வேண்டியதில்லை. இஜ்திஹாதின் கதவு சாத்தப்பட்டுவிட்டது என்று இந்த உலமாசபை ஒரேயடியாக சாதித்து வருகின்றது. இன்றைய உலகில் இமாம்கள் காலத்தில் இல்லாத உருவாகாத எத்தனையோ அறிவியல் புரட்சிகள் அடுக்கடுக்காக அடுத்து, அடுத்து வெடித்து வெளியாகிக் கொண்டிருப்பதை அவர்கள் வெளிப்படையாகவே கண்டு வருகின்றார்கள்.

பறவைகளின் கால்களில் கடிதங்களை தொங்கவிட்டு செய்தி அனுப்பும் காலம் மலையேறிப்போய் இன்று, இங்கிருந்து அனுப்பப்படும் செயிதியை அதே நொடியில் அடுத்த கண்டத்தில் அச்சாக்கி செய்தித்தாளை கக்கி வெளியே தள்ளும் ‘பெக்ஸ்’ போன்ற சாதனங்கள் சர்வசாதாரணகளாகி விட்டன!

ஆசியாக் கண்டத்திலிருந்து ஒருவர் பேசும் பேச்சை ஐரோப்பாக் கண்டத்தில் இருக்கும் ஒருவர் செவியுற்று பதில் தந்து கலந்துரையாடும் தொலைபேசி தொர்பு கருவிகள்! இவற்றை விஞ்சி நிற்கும் வயர்லெஸ், இனடெர்நெட் வகையறாக்கள்!

குரலுக்குச் சொந்தக்காரன் குழிக்குப்போய் ஆண்டுகளில் பல உருண்டு போயிருக்கும், ஆனால் அவனது உருவத்தை உடைசல் இல்லாமல் பதிந்தும், அவனது குரலை பிசிறடிக்காமல் பிடித்தும் வைத்திருக்கும் ஒலி, ஒளி நாடாக்கள் – ஆடியோ வீடியோ கேஸட்டுகள்!

இவையெல்லாம் செய்தி, ஒலி, ஒளி பரப்புத்துறையில் உருவாகிவிட்ட அறிவியல் புரட்சிகள்!

உடலின் வெளிப்புறத்தில் ஒரு புண்பட்டு விட்டால் அதற்கு மூலிகையை கரைத்து கசாயமாக்கி குடிப்பான். இன்று இந்த நிலை அப்படியே மாறிப்போய், துடித்துக்கொண்டிருக்கும் இதயத் துடிப்பு அடங்கிப்போகாத வகையில் இதயக் கூட்டை திறந்து இருதயம் மற்றும் இதர உதிரிப்பாகங்களில் தொட்டு தொற்றியிருக்கும் குறைகளை கோளாறுகளைகளையும் புரட்சியுகமாக மருத்துவ உலகம் மாறிவிட்டது.

நேற்று செய்திதாளை பிரதி எடுத்தான். இன்று ஆட்டை பிரதி எடுத்திருக்கின்றான். நாளை ஆளையே பரதி எடுக்கும் கலையைக் கையில் வைத்துள்ளான் மனிதன்.

ஒட்டகம், குதிரை, கோவேறுக் கழுதைகளில் தரைப் பயணத்தை அமைத்த மனிதன் கடலில் கப்பலில் மிதந்து கண்டம் சென்று கண்டம் கண்ற மனிதன் மண்வழிப் பயணத்திலிருந்து விண்வெழிப் பயணத்திற்கு மாற்றி விட்டான்! நிலா உலகிலும் புரட்சியை புகுத்து விட்டான்.

இவையெல்லாம் அந்த நாற்பெரும் இமாம்களுக்குப் பின்னால் உள்ள காலத்தில் மனிதன் கண்ட மாபெரும் அறிவியல் புரட்சிகளாகும். இப்படி புதிது புதிதாக உலகத்தில் புறப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவியல் புரட்சிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஈடுகட்டும் வகையில் ஷரீஅத் தரப்பிலிருந்து சளைக்காமல் சரியான தீர்வுகளை தரக்கூடிய சட்ட வல்லுநர்கள் இருந்தாக வேண்டும். இல்லையேல், அந்த இஸ்லாமிய ஷரீஅத் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதல்ல!

எல்லாத் தீர்வுகளையும் தரத்தக்க மார்க்கமல்ல. அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் இவற்றிற்கான தீர்வுகள் இல்லை என்ற நிலை தோன்றிவிடும். ஆனால் அல்லாஹ் இந்த சரிவு நிலையை விட்டும் ஷரீஅத்தை தடுத்திருக்கின்றான்.

கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கின்றான் என்று அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 12:76)

அறிவியல் உலகில் எவ்வளவு பெரிய அறிவியலாளர்கள் தோன்றினாலும் அதை விட மேலான அறிஞர்கள் சட்ட வல்லுநர்கள் இந்த ஷரீஅத்திலும் இருந்து கொண்டே இருப்பார்கள். இறுதி நாள் வரை தோன்றக்கூடிய எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதைத் தீர்த்து வைக்கும் திறனாய்வாளரை அல்லாஹ் தந்து கொண்டிருப்பான் என்பதை இந்த வசனத்தின் மூலம் அறிகின்றோம். இறுதி நாள்வரை இஜ்திஹாதின் வாசல் திறந்தே இருக்கின்றது.

இஜ்திஹாதின் வாசல் மூடப்பட்டு முத்திரை இடப்பட்டுவிட்டது என்று முழக்கமிடும் இந்த ஆலிமக்ள திருச்சபையை நோக்கி நான்கு இமாம்களுக்கும் பிறகு உருவான அறிவியல் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பின்வரும் அறிவியல் பிரச்சினைகளுடன் தொடர்பு கொண்ட மார்க்கப் பிரச்சிளைகளுக்கு நாற்பெரும் இமாம்கள் தங்கள் வாய்ப்பட வழங்கிய தீர்புகளிலிருந்து அல்லது அவர்கள் கைப்பட எழுதிய நூல்களிலிருந்து தீர்வுகளைத் தரவேண்டும். அதே சமயம் நான்கு இமாம்களுக்குப் பிறகு வந்த மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் வழங்கிய தீர்புக்களைத் தரக்கூடாது.

நான்கு இமாம்கள் வாய்ப்பட வழங்கிய தீர்புக்களிலிருந்து அல்லது கைப்பட எழுதிய நூல்களிலிருந்து தீர்புக்களை காட்டினார்கள் என்றால் நாம் அவர்கள் பாதைக்கு செல்ல தயாராக இருக்கின்றோம். அல்லது குறைந்த பட்சம் நான்கு இமாம்களைப் பின்பற்றாதவர்கள் வழிகேடர்கள் என்ற வெறுங்கோஷத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இப்போது இந்தப் பிரச்சினைகளுக்கு வருவோம்:

ஆடியோ அல்லாது வீடியோ கேஸட்டுக்கள் மூலம் ஒளிபரப்பப்படும் கிராஅத்தில் இடம்பெறும் சஜ்தா வசனங்களை செவியுறும் போது அவற்றிற்கு சஜ்தா செய்ய வேண்டுமா?

பெண் மாப்பிள்ளையைப் பார்த்தாயிற்று. மாப்பிள்ளை பெண்ணை பார்த்தாயிற்று. திடீரென மாப்பிள்ளை புறப்பட்டுப் போய் திருமணத்திற்கு தேவையான மற்ற நிபந்தனைகளை போன் மூலமே நிறைவேற்றி போன் மூலம் திருமணம் செய்யலாமா?

சவூதியா விமானம் சென்னையிலிருந்து இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு புறப்படுகின்றது. சவு+தி நேரப்படி 4 மணிக்கு சவூதியில் தரை இறங்குகின்றது. அப்போதைய இந்திய நேரம் 6 ண மணியை கவனித்துக் கொண்டு சவூதியில் நோன்பு திறக்கலாமா? அல்லது சவூதியில் சூரியன் மறையும் நேரத்தில் தான் நோன்பு திறக்க வேண்டுமா?

இரத்த தானம் செய்யலாமா?

கண் தானம் செய்யலாமா?

கிட்னி செயலற்று போன ஒருவருக்கு இன்னொருவர் கிட்னி தானம் செய்யலாமா?

மறைந்த தலைவர் ஆ.பு. இராமச்சந்திரன் தானமாக பெற்ற கிடனியின் மூலம் உயிர்வாழ முடிந்தது என்பதை நாம் அறிவோம்.

இன்று கிட்னி திருட்டு நடைபெறுவதை பத்திரிகையின் வாயிலாக அறிகின்றோம். கிட்னியை திருடியவருக்கு விலை மதிப்பான பொருளைத் திருடிவிட்டான் என்ற அடிப்படையில் கிட்னி திருடியவனின் கையை வெட்டி விடுவதா? அல்லது கண்ணுக்குக் கண் காதுக்குக் காது என்ற அடிப்படையில் திருடியவனின் கிட்னியை எடுத்து விடுவதா?

தொழுகை நேரம் சூரியனை அடிப்படையாக கொண்டே பூமியில் கணிக்கப்படுகின்றது. சூரியன் உதிக்கும் முன்பு இரவின் கடைசி நேரம் சுப்ஹ் நேரமாகும். சூரியன் உச்சிக்கு வந்து சாய்ந்ததும் ழுஹர் நேரம் – ஒரு பொருளின் நிழல் அதுபோன்ற அளவு தரையில் படும்போது அஸ்ர் தொழுகை நேரம். சூரியன் மறைந்ததும் மக்ரிபு நேரம். செம்மேகம் மறைந்ததும் இஷா நேரமாகும். பூமிக்குள் இருக்கும் போதுதான் இப்படி தொழுகை நேரத்தை கணிக்க முடியும். இந்தப் பூமி வட்டத்திலிருந்து வெளியேறி விட்டால் இந்த நிபந்தனை விலகி விடுகின்றது.

நேரங்குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் கூறும் இந்த நிபந்தனை விலகிவிடும்போது இந்த நிபந்தனையின் அடிப்படையிலான கடமையான தொழுகை நீங்கி விடுமமா?

டெஸ்ட் டியூப் மூலம் குழ்நதைப் பெறச் செய்யலாமா?

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நாற்பெரும் இமாம்களின் தீர்புக்களிலிருந்து பதில் தருவார்கள் என்று எதிர்பார்ப்போமாக!

source: http://kaisanriyadi.blogspot.in/2012/11/blog-post.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

36 + = 38

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb