Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காந்திஜியை அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி

Posted on May 6, 2014 by admin

காந்திஜியை அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி

[ தேசத்திற்காக, தேச விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்கள் புரிந்த முஸ்லிம்களை குற்றப்பரம்பரையாக சித்தரிக்க போட்டிபோடும் இந்துத்துவ ஊடகங்கள் தங்களது கீழ்த்தரமான செயல்களிலிருந்து இனியாவது திருந்திக்கொள்ளட்டும்.]

தேச விடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்த நேரம் அது. 1921 மார்ச் 31 ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிடப்பட்டது.

அந்நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும், மீதமுள்ள 40 லட்சத்தை பிற மாநிலங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப்பெரிய தொழிலதிபர்களான ஏ.பி.காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்கானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

லட்சக்கணக்கில் நிதி திரண்டு கொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப்பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி எனும் ஒரு முஸ்லிம் தனவந்தர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப் போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக் காசோலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை வழங்கினார் உமர் சுப்ஹானி.

ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. சும்மா இருப்பார்களா அவர்கள்?! பம்பாயின் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.

உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்பந்தப்படுத்தி வாங்கி, மிகக்குறைந்த விலையில் விற்றது ஆங்கில அரசு. இதனால் உமர் சுப்ஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம் ரூபாய். இதனை அவரது சகோதரி ஃபாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்தபோது, “அந்நியத் துணிகளை உங்கள் பஞ்சாலையில் வைத்து எரியூட்டலாமா?” என்று காந்திஜி உமர் சுப்ஹானியிடம் கேட்டபோது, “என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்துக்காகவா பயன்படப்போகிறது” என்று பதிலளித்தார் அவர்.

அந்நியத் துணிகளைத் தீயின் நாவுக்குத் திண்ணக்கொடுக்கும் எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது. ஆங்கில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல் வரும் எனத் தெரிந்தும், தன் பஞ்சாலையில் அந்நியத் துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக் கொடுத்ததோடு, தன்னிடமுள்ள 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத் துணிகளையும் எரியூட்ட வழங்கினார்.

1921 அக்டோபர் 9 ஆம் தேதியும் அந்நியத் துணிகளை எரியூட்டும் மற்றொரு நிகழ்ச்சி உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது.

அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்காக உமர் சுப்ஹானிக்கு பிரிட்டிஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம். தேச விடுதலைக்காக கொடுத்தும், இழந்தும் பொருளாதார தியாகங்களைச் செய்த உமர் சுப்ஹானியின் பெயரை இனியாவது இந்திய விடுதலை வரலாறு உச்சரிக்குமா?

(”சிந்தனிச்சரம்” நவம்பர் 1997. மீள்பதிவு: ”பாக்கியா” வார இதழ், ஏப்ரல் 18-24, 2014)

 

எல்லா கேள்விக்கும் விடை… ‘முஸ்லிம்’

கப்பல் ஓட்டிய வஉசி -க்கு அந்த கப்பலை ஒரு லட்ச ரூபாய் போட்டு வாங்கித்தந்தது யார்….?

நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க ஆயுதம் வாங்க எல்லாம்… ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் ஸ்பான்சர் யார்….?

காந்திஜிக்கு தென் ஆப்ரிக்காவில் வேலை போட்டுக்கொடுத்து… அங்கே போக வர வைத்து அவரை பிரிட்டிஷ் எதிர்ப்புக்கு தூண்டியவர் யார்….?

காங்கிரசின் சுதேசி கதர் ஆடையை கண்டுபிடித்தது யார்…?

ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர் யார்..?

இந்திய தேசிய கோடியை வடிவமைத்தவர் யார்..?

-எல்லா கேள்விக்கும் விடை… ‘முஸ்லிம்’..!

இதுபோல நாம் இதுவரை சிந்திக்காத… நாம் இதுவரை பள்ளி பாட எழுத்து காட்சி ஊடக வரலாறில் அறியாத ஆச்சர்யங்கள் இன்னும் எக்கச்சக்கம்..!

1. முதன்மையாளர்கள்

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. – குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.

தேசத்திற்காக, தேச விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்கள் புரிந்த முஸ்லிம்களை குற்றப்பரம்பரையாக சித்தரிக்க போட்டிபோடும் இந்துத்துவ ஊடகங்கள் தங்களது கீழ்த்தரமான செயல்களிலிருந்து இனியாவது திருந்திக்கொள்ளட்டும்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 − = 10

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb