ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்!
எல்லோரும் விரும்பாவிட்டாலும் கூட, பல பெண்கள் தங்கள் உறவின் ஒரு கட்டத்தில் அல்லது திருமணமான சில நாட்களில், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவார்கள்.
உறவை மேலும் நகர்த்தி செல்ல குழந்தை பெற்றுக் கொள்வதாலேயே முடியும் என்ற ஒரு கட்டம் வாழ்க்கையில் ஏற்படலாம்.
எல்லையில்லா மகிழ்ச்சியை குழந்தைகள் அளிப்பதால், தங்களுக்கென குழந்தை பெற்றுக் கொள்ள எந்த தம்பதியினர் தான் விரும்ப மாட்டார்கள்?
இருப்பினும் ஒரு ஆணிடம் அவர் ஆண்மையுடன், கருவளத்துடன் இருக்கிறாரா என்று கேட்பதும் அல்லது அதற்கான சோதனையை மேற்கொள்ள சொல்லி கேட்பதும் கடினமாகவும் நாகரீகமற்றதாகவும் விளங்கும்.
ஆனால் கருவளம் இல்லாத ஒருவருடன் சேர்ந்து குழந்தை பெற எத்தனை முயற்சி செய்தாலும், அது வீணாய் தானே போகும்.
ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் :
ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளது. சீரான அடிப்படையில் சில ஆழ்ந்த கவனிப்பை மேற்கொண்டால், இவ்வகையான அறிகுறிகள் தென்படும். ஆனால் அவரின் ஈர்ப்பை பெறாமல் நீங்கள் கவனிப்பது தெளிவாக தெரியாமலேயே இதனை மேற்கொள்ளலாம். அவரை கவனிக்க பாதுகாப்பான வழிகளை தேர்ந்தெடுத்து திட்டமிடப்படாத அறிகுறிகளால் அவரின் கருவள தகுதி நிலையை கூறிவிடலாம்.
விந்தணு தரம்
உங்கள் கணவன்/துணையின் கருவளத்தை பரிசோதிக்க அவர் மீது நீங்கள் நடத்தும் நேரடி சோதனைகளில் இதுவும் ஒன்றாகும். அவரின் விந்தணு அடர்த்தியாக மேகத்தை போல் இருந்தால். அதில் விந்தணு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும். அதே போல் அதன் பிசுபிசுப்பு தன்மையும் முக்கியம். உங்களுக்குள் சென்ற அவரின் விந்தணு எவ்வளவு சீக்கிரத்தில் வெளியேறும் என்பது விந்தணுவின் நிலைத்திறனை பொறுத்து அமையும்.
வெளித்தோற்றம்
உங்கள் கணவன்/துணை உடல் ரீதியான கட்டமைப்புடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அவருக்கு கருவளம் குறைவாக இருப்பதை அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தீர்மானித்து விடலாம். அளவுக்கு அதிகமான தொப்பையுடன் அவர் இருந்தால், அது அவரின் டெஸ்டோஸ்டிரோன் வரத்தை தடை செய்யும். அதனால் குழந்தை உண்டாக்கும் திறனும் குறையும். குழந்தை பெற்றுக் கொள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறுநீர்ப்பைக் குழாயின் அமைவிடம்
அவரின் சிறுநீர்ப்பைக் குழாய் என்பது ஆணுறுப்பின் நுனியில் இருக்கும் துளையாகும். அதன் வழியே தான் விந்தணு வடிதலும் நடைபெறும். அது சரியாக, ஆணுறுப்பின் தலை பாகத்தின் நுனியில் இருக்க வேண்டும். ஒரு வேளை, அது கீழே, சுழல்தண்டிற்கு அருகில் இருந்தால், அவரின் விந்தணுவின் நீந்தும் திறன் அல்லது உங்கள் பெண்ணுறுப்பை நோக்கி சரியான திசையை நோக்கி ஊடுருவும் திறனும் பாதிக்கப்படும்.
ஆண்விதைகளின் அளவு
ஆணின் ஆண்விதைகளில் தான் விந்தணு சுரக்கிறது. அதனால் அது எவ்வளவு தூரம் பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு விந்தணு வரத்தும் இருக்கும். அது வால்நட் அளவில் இருந்தால், அது ஆரோக்கியமான அளவே. அது கருவளமும் நன்றாக இருப்பதற்கான அறிகுறியே. ஒரு வேளை அது கிட்னியின் அளவு அல்லது அதற்கும் சின்னதாக இருந்தால், அது அவரின் கருவள திறனை பாதிக்கும் வண்ணம் இருக்கலாம்.
டெஸ்டோஸ்டிரோன்களின் அறிகுறிகள்
ஆண்களின் கருவளத்திற்கு பெரிதும் முக்கியமான ஹார்மோனாக விளங்குகிறது டெஸ்டோஸ்டிரோன்கள். அதன் பக்க விளைவுகளை பொறுத்து கருவளத்தை பற்றி முடிவு செய்யப்படும். முகம், அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்பை சுற்றி அதிகமான முடி வளர்ந்திருந்தால் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு வளமையாக இருக்கிறது என்ற அர்த்தமாகும். அதே போல் சொட்டை விழுந்த ஆண்களுக்கும் டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
விந்தணு எண்ணிக்கை அல்லது வெளியேறும் அளவு
விந்தணுவின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஆண்களின் கருவளத்தில் பிரச்சனை உள்ளது என்று கருதப்படும். பொதுவாக ஆண்களுக்கு 1 மி.லி. செமனில் 20 மில்லியன் விந்தணு இருக்கும். இதுவே 1 மி.லி.-க்கு 10 மில்லியன் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அது இயல்பான நிலையில் கிடையாது.
அதே போல் மேகங்களை போல் அடர்த்தியான, அதிக அளவிலான விந்தணு வெளியேற்றம் ஆரோக்கியமான விந்தணு எண்ணிக்கைக்கான நல்ல அறிகுறியாகும். உங்கள் கணவன்/துணைவனின் கருவளத்தை கண்டறிய மேற்கூறிய அனைத்தும் எளிய வகை சோதனைகளாகும்.
source: http://tamil.boldsky.com/