மோடியை காப்பாற்றி வரும் அந்த நபர் யார்?
வடக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில். இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பெங்காலிகள் என்று கூறிக்கொண்டு மக்களிடையே கலவரத்தை தூண்டும் இவர்கள் யார்? இது எனக்கு வருத்தமளிக்கிறது. ஆனால் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மனம் போன போக்கில் பேசி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் நாட்டின் பிரதமரானால் நாடு தீப்பற்றி எரியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். – மம்தா.
“மோடி கையை தூக்கினால், அதிலிருந்து இரத்தம் வழிகிறது! குஜராத்தின் கசாப்கடைகாரன் மோடி”! – மம்தாவின் கடும் தாக்கு!
“சின்னபுள்ளதனமா நடந்துக்காதே” – மோடிக்கு,பிரியங்காகாந்தி தாக்கு.
“காஷ்மீருக்கு வர மோடிக்கு தைரியம் இருக்கா” – ஒமர் அப்துல்லா தாக்கு.
“பெண்ணை வேவுபார்த்த விஷயத்தில் மோடி மீது,முறையான விசாரனை வரும் 16ம் தேதிக்குள் அமைக்கப்படும்” – கபில் சிபல்.
அமித்ஷாவை அழைத்து முகத்தை துடைத்துக்கொள்.
குற்றவாளி மோடியை காப்பாற்றி வரும் அந்த நபர் யார்?
குஜராத்தில் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட இஷ்ரத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.வன்சாராவுக்கும், அம்மாநில உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் என்கவுண்டரின் போதும் என்ன நடந்தது என்பதை தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளது.
பல்வேறு காவல்துறை அதிகாரிகளும், இந்த சம்பவத்திற்கு இவர்கள்தான் காரணம் என சுட்டிக் காட்டியபோதும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வன்சராவின் ராஜினாமா கடிதத்தில், அரசின் ரகசிய உத்தரவையே நாங்கள் செயல்படுத்தினோம் என தெரிவித்திருந்திருக்கிறார்.
அப்படியானால் இது மோடியின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்கமுடியாது. அப்படியானால், இஷ்ரத் கொலை வழக்கில் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவை கைது செய்ய போதிய ஆதாரம் இருந்தும் அவர்களை கைது செய்யவிடாமல் காப்பாற்றுவது யார்?” – கபில் சிபல்.