நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (20)
ஐந்து காரியங்களை அலட்சியம் செய்பவர்களுக்கு ஐந்து பாக்கியங்கள் கிட்டாது.
1. உலமாக்களை மதிக்காதவர்களுக்கு சத்திய சன்மார்க்கம் சித்தியாகாது.
2. அரசர்கலையும், பணக்காரர்கலையும் வெறுத்து ஒதுக்குபவர்களுக்கு உலக ஆதாயம் கிட்டாது.
3. அண்டை வீட்டாரை பொருட்படுத்தாதவர்களுக்கு உண்மையான இலாபம் கிடைக்காது.
4.தம் உறவினர்களை மதிக்காதவர்களுக்கு இன்பமான வாழ்வு கிட்டாது.
5. என் உம்மத்துகள் ஐந்து விஷயங்களை மறந்துவிட்டு, (வேறு) ஐந்து காரியங்களுக்காக உழைக்கும் காலம் விரைவில் வந்தே தீரும். அப்போது அவர்கள் மறுமையின் சுகபோகத்தை மறந்துவிட்டு இம்மை இன்பத்தையே நாடுவார்கள். கப்ருகளைக் கண்டு விலகி மாளிகைகளையே விரும்புவார்கள். இம்மையின் பொருள்களைச் சேகரிக்கும் ஆவலில் அல்லாஹ் கேட்கும் கேள்வி கணக்குகளை மறந்துவிடுவார்கள். சுவர்க்கத்தின் ஹூர்ளை மறந்துவிட்டு தங்களின் சொந்தக் குடும்பங்களை மிகவும் நேசிப்பார்கள்.
எச்சரிக்கையாக இருங்கள்! அப்படிப்பட்டவர்கள் என்னைவிட்டும் ஒதுங்கிவிட்டவர்களாவர்; நானும் அவர்களை விட்டும் ஒதுங்கிக்கொள்வேன்.
ஐந்து நிஃமத்துக்களை அடையப் பெற்றிருப்பவர்களுக்கு அல்லாஹுத் தஆலா வேறு ஐந்து நிஃமத்துக்களையும் கொடுக்கின்றான்.
1. நன்றி (ஷுக்ரு) செய்யும் குணம் உள்ளவர்களுக்கு அல்லாஹ் மேலும் பரக்கத்தை அருளுகிறான்.
2. அல்லாஹ்விடம் கெஞ்சிப் ப்ரார்த்திக்கும் பழக்கம் உடையவர்களின் ‘து ஆ’வை அல்லா ஹ் ஒப்புக்கொள்கிறான்.
3. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவர்களுக்கு அல்லா ஹ் மேலும் மேலும் தருகிறான்.
4. ‘தவ்பா’ச் செய்பவர்களின் தவ்பாவை ஏற்றுக்கொள்கிறான்.
5. உண்மையான தான தருமம் செய்பவர்களை ஏற்று அவர்களைச் சிறப்பிக்க்றான்.
மக்களே! நீங்கள் ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன்பாகப் பாக்கியமானதாகக் கருதுங்கள்.
அவை
1. வயோதிகம் வருமுன் வாலிபமாய் இருக்கும் காலம்.
2. நோய் வருமுன் ஆரோக்கியமாக இருக்கும் நாட்கள்.
3. ஏழ்மை வருமுன் செல்வந்தனாய் இருக்கும் சமயம்.
4. மரணம் வருமுன் உயிரோடு வாழ்ந்திருக்கும் நாட்கள்.
5. வேலை நெருக்கடி உண்டாகுமுன் ஓய்வாய் இருக்கும் சமயம், ஆகியவையாகும்.
o மவுனம் ரகசியத்தைக் காக்கிறது;
o தானதருமம் செல்வத்தைக் காக்கிறது;
o கலப்பற்ற சித்தசுத்தி நல்வணக்கத்தைக் காக்கிறது;
o உண்மை, வார்த்தையைக் காக்கிறது;
o ஆலோசனைக் கேட்பது தன் அபிப்ராயத்தைக் காப்பாற்றுகிறது.
o (ஒரு காலம் வரும். அப்போது) எனது உம்மத்துக்கள் மறுமையை மறந்து உலகத்தையே விரும்புவார்கள். மரணத்தை அலட்சியப்படுத்திவிட்டு உலக வாழ்வையே காதலிப்பார்கள்.
o கப்ரு இருப்பதை மறந்து உலகத்தின் மாளிகைகளையே ஆசிப்பார்கள்.
o இம்மையின் தொடர்புகளை விரும்பி மறுமையை நினைக்காமலேயே இருப்பார்கள். படைக்கப்பட்ட பொருகளை விரும்புவார்களேயன்றி படைத்தவனைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள். (-முனப்ப ஹாத்த இப்னு ஹஜர்)
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.