சொர்க்கத்தின் வாசலில்
மௌலானா வஹிதுத்தீன் கான்
‘சொர்க்கம்’ என்பது ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையோ அல்லது மறுதலிக்கக் கூடாத கொள்கையோ அல்ல.
இயற்கை நியதிப்படி சொர்க்கம் நிகழக்கூடிய நிலைபேறான ஒன்று.
சொர்க்கம் என்பது மாயம் ஒன்றுமில்லை. அறிவியல் ரீதியாக ஏற்கப்பட்டது. உலகத்தின் மாற்றமே சொர்க்கம்.
துவக்கத்தில் உலகம் உருகும் தன்மை கொண்டிருந்தது. பிறகு அடிப்பாகம் குளிர்ந்த தன்மை அடைந்தது. பின்பு மேல்பகுதியில் ஓடு வந்தது. பின்னர் நாம் வாழக்கூடிய இப்பூமி வந்தது.
இந்த மாற்றம் போலவே எதிர்காலத்தில் மற்றொரு மாற்றம் நிகழும். அந்த மாற்றம் மிகப் பெரியதாகவிருக்கும். பூமி அப்போது சொர்க்கமாக மாற்றம் பெறும்.
உலகத்திலுள்ள நிரம்பப் பொருட்கள் மாற்றத்தின் மூலமாகக் கிடைத்தன, கிடைக்கின்றன. எடுத்துக்காட்டு,
o தண்ணீர் ஆவியாக எடுக்கப்பட்டு மழையாக மனித இனத்துக்கு கிடைக்கிறது.
o சிறிய விதை மண்ணின் ஊட்டச்சத்து மூலம் மரமாகிறது.
o இரும்பு, ஸ்டீல் உதிரி பாகங்கள் வாயிலாக முழு இயந்திரம் உருவாக்கப்படுகிறது.
o தொழில் உலகம் கூறுகிறது. கழிவுப் பொருட்களிலிருந்து சமூகம் உபயோகிக்கக் கூடிய பொருட்கள் மாற்றுவதாக.
o சொர்க்கம் என்பது இயற்கை படைப்பின் உச்சக்கட்டம். அது சிறு துளி நேரத்தில் துவங்கும் தீர்மானிக்கப்பட்ட (Definite) ஆரம்பமாகவிருக்கும்.
எதிர்காலத்தில் பெரிய அளவிலான மாற்றம் உருவாகும். அப்போது இவ்வுலகம் சிறந்து விளங்கும். மத ரீதியாக அதனை சொர்க்கம் என்பர். இந்த மாற்றத்தை குர்ஆன் (14:48) “யவ்ம துபத்தலுல் அர்ளு ஙய்ரல் அர்ளி” இந்த பூமி மற்றொரு பூமியாக மாற்றப்படும்.
ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்லுதல் பூமியில் தொடர்ந்து நிகழ்கிறது. உலகில் நாம் அறிந்துள்ள இயற்கையான மாற்றமாக நாட்கள் நகருவதை நம்புவதுபோல் சொர்க்கம் என்பதையும் நம்புகிறோம்.
999 பொருட்கள் உற்பத்தி செய்த ஒரு இயந்திரம் ஆயிரமாவது பொருளை தரவிருப்பதை நம்புவது போன்று நம்பிக்கை வைக்க வேண்டும்.
‘சொர்க்கம்’ என்பது ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையோ அல்லது மறுதலிக்கக் கூடாத கொள்கையோ அல்ல.
இயற்கை நியதிப்படி சொர்க்கம் நிகழக்கூடிய நிலைபேறான ஒன்று.
புவி சம்பந்தமான படித்தலில் இன்றைய உலகம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைவதை அறிகின்றோம். அந்த வளர்ச்சியில் சொர்க்கம் என்பது ஏற்கக்கூடிய ஒரு கட்டம்.
இப்பிரபஞ்சத்தில் நாம் வாழும் பூமி மண்ணுள் விதைத்த விதை போன்றது. பிரபஞ்சம் நம்பமுடியாத அளவு பரந்த பரப்பளவைக் கொண்டதென வானியல் கல்வி கூறுகிறது. திறன் கொண்ட மிக நுண்ணிய தொலைநோக்குக் கருவி கொண்டு அளந்தாலும் அதன் பரப்பளவை இன்றளவும் கணக்கிட இயலவில்லை.
பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான நாம் வாழும் பூமியில் மட்டும் விதிவிலக்காக நீர், காற்று, பிராணவாயு, தாவர வகைகள் இருக்கின்றன. பூமியில் நாம் குறைவில்லாமல் இருப்பதற்கு இவைகள் நமக்கு ஒத்திருப்பது காரணம். இதுதான் ‘‘லைஃப் சப்போர்ட் சிஸ்டம்’’.
விலை மதிக்கவியலாத இப்பொருட்கள் பூமியில் இருந்ததனால்தான் மனிதன் அவற்றைப் பயன்படுத்தி நாகரீக வளர்ச்சிக்கு எடுத்துச் சென்றான். மறைவானவற்றை தேடி வெளிக்கொண்டு வந்தான். இதன் மூலம் நாகரிகம் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுகிறது.
குர்ஆன் அத். 84 வசனம் 19 ‘‘நிச்சயமாக ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவீர்கள்.’’
பரிணாம வளர்ச்சி குறித்த வரலாற்றில் மனிதனுடைய நாகரிகம் தொடர்ச்சியாக மேலும், மேலும் வளர்ச்சி கண்டிருக்கிறது. நிலையான வளர்ச்சி வாயிலாக ஒரு நாகரிகத்தை அடைந்தனர் அதை ஆன்மிக நாகரிகம் “Spiritual Civilization” அல்லது “Paradise” சொர்க்கம் என்கின்றனர்.
இந்த நாகரிக வரலாறு நமக்குக் காட்டுவது நாம் மூன்று பெரிய காலக்கட்டங்களைத் தாண்டி நான்காவது முடிவுக் கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
1. கற்கால நாகரிகம்
2. வேளாண்மைக்கால நாகரிகம்.
3. தொழில்மயக்கால நாகரிகம்
இந்த மூன்று காலக்கட்டங்களும் முடிந்து விட்டன.
Alvin Taffler – ஆல்வின் டாஃப்ளர் என்பவர் “Future Shock” எதிர்கால அதிர்ச்சி என்ற நூல் எழுதியிருந்தார் 1970இல் வெளிவந்தது.
அதனில் குறிப்பிட்டிருந்தார், ”நான்காவது நாகரிகக் காலக்கட்டம் இறுதியானது. மிக அருகில் அதனை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்” இவ்வாறு கூறியிருந்தார்.
நான்காவது காலக்கட்டத்தை ‘‘சூப்பர் இண்டஸ்ட்டீரியல் ஏஜ்’’ சிறப்பான தொழில்மயக்காலம். எனப் பதிவு செய்திருக்கிறார். முந்தைய காலக்கட்டங்களுடன் ஒப்பீடு செய்யும் போது நான்காம் காலக்கட்டம் முன்னோடியானதாக இருக்கும். மதரீதியாக இந்த நான்காம் கட்டத்தை ‘‘ஆன்மிக நாகரிகம்’’ என்பர்.
மூன்று கட்ட நாகரிகங்களில் முதல்கட்ட கற்கால நாகரிகத்தில் மனிதன் உபயோகிக்கக் கூடிய பொருட்கள் மூலத் தன்மை கொண்டிருந்தன. அதனால் ‘கல்’ மனிதனுக்குப் பயனுள்ள பொருளாக விளங்கியது. அக்காலத்தில் வேறு பல பொருட்கள் இருந்தாலும் கற்கள் மட்டுமே அவனிடத்தில் பிரதான இடத்தை பிடித்திருந்தன. அதன் காரணமாக கற்கால நாகரிகம் என்கிறோம். கற்கால மனிதரை ஹோமோ ஷாப்பியன்ஸ்’’ என்கின்றனர். நம்மைப் போலவே இயற்கையான தன்மை கொண்டிருந்தனர் என ஒரு ஆய்வு கூறுகிறது. கற்கால மனிதனின் மூளை. இக்கால மனிதன் மூளை இரண்டும் ஒன்றுதான். கற்கால மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லாத காரணத்தால் பூமியிலிருந்த மறைவானவற்றை வெளிக்கொண்டுவர இயலவில்லை.
இரண்டாவது கட்டமான வேளாண்மை வளர்ச்சிக் காலத்தில் இயற்கையாகப் பயன்படுத்தக்கூடிய விதத்திலான பொருட்களை மனிதன் கண்டு பிடித்தான். உழவு செய்தான். கால்நடைகள் வளர்த்தான். விலங்கினப் பெருக்கத்தில் ஈடுபட்டான். இரும்பு, ஸ்டீல் பயன்படுத்தி வாகனங்கள் செய்தான். இதன்மூலம் முந்தைய காலத்தினை விடவும் மேம்பட்ட வாழ்வியல் முறைக்கு மாறினான்.
மூன்றாவது தொழில்மய நாகரிகக் கட்டத்தில் மனிதன் முன்பு உருவாக்கிய இயந்திரத் திறனிலிருந்து மாறி நீரிலிருந்து நீராவித் திறன் கண்டுபிடித்து அதன்மூலம் இயங்கக் கூடிய இயந்திரங்களைக் கொண்டுவந்தான். மேலும் முன்னேற்றம் பெற்று எண்ணெயைக் கொண்டு வந்தான். எண்ணெயை எரிபொருளாகக் கொண்டு இயந்திரத்தை செலுத்தும் முறை உருவாக்கினான். தொலை தொடர்பு முறை கொண்டு வந்தான். தகவல் பறிமாற்றம் வாயிலாக மொத்த உலகத்தையும் சிறு கிராமமாக ஆக்கினான்.
நான்காவது காலக்கட்டம் ஆல்வின் டாஃப்ளர் கூறும் ‘‘சூப்பர் இண்டஸ்டிரியல் ஏஜ்’’ & தொழில்மயம் மேம்பட்ட காலம்.
இந்த காலத்தில் முழுமையான தானியங்கி இயந்திரங்களின் ஆதிக்கமிருக்கும். ஒரு பொருள் தயாரிப்பில் மனிதரின் பங்கு சிறிய அளவிலும், இயந்திரத்தின் பங்கு பெருமளவிலும் அமைந்திருக்கும். மனிதன் தனக்கான சுய தேவைகளை தானே பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அமையப்பெற்றிருக்கும். இது சொர்க்கத்தினுடைய மகிழ்ச்சிக்கான முந்தைய நிலை.
குர்ஆன் அறிவிக்கிறது 41:31 ‘‘உங்கள் ஆன்மாவில் மகிழ்ச்சி நிறையும்படி காண்பீர்கள். இரக்கம், கருணை கொண்ட அல்லாஹ்விடமிருந்து எல்லாவற்றையும் பெறுவீர்கள்.’’
அறிவியல் மற்றும் கல்வி ரீதியாக மேற்கூறப்பட்ட பொற்காலம் என்பது ஆன்மிக நாகரிக காலம். இதனைத்தான் சூப்பர் இண்டஸ்ட்ரியல் ஏஜ் என்று கூறுகின்றனர்.
நான்காவது நாகரீகக் காலக்கட்டத்தை இனிமேல்தான் அடையவிருக்கிறோம். வரவிருக்கும் அப்பொற்காலத்தை மத ரீதியாக சொர்க்கம் என்றழைக்கிறோம்.
தற்போது நடைமுறையிலிருக்கும் காலம் சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிற காலம். ‘சொர்க்கம்’ என்பது மனித நாகரிகப் பயணத்தின் இறுதிக் கட்டம். இயற்கை விதிப்படி இன்னும் சிறிது காலத்தில் அந்த உலகம் வரவிருக்கிறது. அவ்வுலகத்தில் தீயவைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பயம், கவலை, வலி, சோகம் இல்லாத உலகமாகவிருக்கும்.
மனிதன் உருவான காலத்திலிருந்து அவன் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், வரவிருக்கும் சொர்க்கக் காலத்தில் நிறைவு பெறும். மனிதன் ஆளுமையின் புதிய உயரத்தை அடைவான். முழுமையாளனாக மாறுவான். நிலை பேறுடைய வாழ்வை அடைவான். கடந்து வந்த முந்தைய காலக்கட்டங்களில் ஏற்பட்ட விபத்து, இறப்பு, நோய் எதுவும் அக்காலத்தில் இருக்காது. அந்த பொற்காலத்தில் மனிதன் தன்னிடமுள்ள முழு ஆளுமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வான். பூரணத்துவ அனுபவத்தை அடைவான்.
‘‘சொர்க்கம் என்பது மனித நாகரிகப் பரிணாமத்தில் ஏற்படக்கூடிய கூர்மையான பாறை (Pinnacle) சொர்க்கம் ஒரு விடியலின் முழுமை. மனிதன் கண்டுவந்த கனவுக்குரிய பொற்காலம். அதனை அடையும் மனிதன் முன்பு பெற்றுவந்த கவலைகள், துயரங்கள் அனைத்திலும் இருந்தும் விலகி இருப்பான். மகிழ்ச்சி, அமைதி கொண்ட ஆட்சியே சொர்க்கத்துள் நிகழும்.
மனதில் கொள்ளவேண்டிய பிரதானமானது சொர்க்கம் என்பது நிலையான ஒன்றல்ல. அங்கு புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். சலிப்பு தோன்றாது. புதுப்புது அனுபவங்கள் மனிதனுக்கு மேலான மகிழ்ச்சி அளிக்கக்கூடியவை. அந்த மகிழ்ச்சி மனிதருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும்.
சொர்க்கத்தில் உண்மைக் கதவுகள் தினந்தோறும் திறக்கப்படும். சொர்க்கம் நிலைபேறுடைய உண்மை. இதுவரை உருவாகிய உலகங்கள் போன்று நிகழவிருக்கும் ஒன்றுதான் சொர்க்கம்.
கற்காலத்தின் உள்ளே விவசாய காலம் மறைந்திருந்தது. விவசாய காலத்தின் உள்ளே தொழில் மயக்காலம் அந்தரங்கமாக இருந்தது. அந்தந்த காலத்தில் அதற்குரிய நேரத்தில் வெளியானதைப் போன்று சொர்க்கக் காலக்கட்டமும் வெளிப்படும்.
மேம்பட்ட தொழில் மயக்காலத்தில் பூமி முழுவதும் அழகாக்கப்படும். அதன் நகரங்கள் கவனமுடன் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படும்.
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி இந்த பூமியை நன்கு வாழக்கூடிய இடமாக மாற்றி அமைத்திருக்கிறது. வைகறையாக வரக்கூடிய ஆன்மிகக் காலத்தில் பூமி இன்னும் வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சியையே பொற்காலம் என்கின்றனர். இதற்கு குர்ஆன் பல இடங்களில் ஆதாரங்கள் உள்ளன.
அத்தியாயம் 39:74 ‘‘புகழனைத்தும் இறைவனுக்கே. சத்தியத்தை நிறைவேற்றி விட்டான். இந்த பூமியை நாம் வசிக்கும் இடமாக பரிசளித்து விட்டான். ஆகையால் இந்த சொர்க்கத்தில் எங்கு வேண்டுமானாலும் வாசம் செய்யலாம்.’’
57:21 ‘‘சொர்க்கம் என்பது பூமியைப் போன்று பெரியது. எவர் ஒருவர் இறைவன், இறைத்தூதர் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனரோ அவர்களுக்காக உருவாக்கப்பட்டது.
39:69 ‘‘பூமி இறைவனின் அருளால் செழிப்படையும்.
நாம் வாழக்கூடிய இப்பூமி நல்லவை, தீயவை இரண்டும் உடையது. அதனால் பொற்காலத்திலிருந்து நாம் தூரமாக இருக்கிறோம். நன்மை & தீமை செய்யக்கூடிய இருபிரிவினரும் ஒன்றாக வசிக்கின்றனர். எவரெல்லாம் தமக்குக் கொடுத்த சுதந்திரத்தை தீய வழியில் பயன்படுத்தினார்களோ அத்தகையோர் இறுதி காலத்தில் நல்லவர்களிடமிருந்து பிரிக்கப்படுவர். அமையவிருக்கும் பொற்கால பூமி நல்லது செய்யக்கூடியவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். தீமையாளர்களுக்கு பயனற்றதாகவிருக்கும்.
குர்ஆன் அத் 21:105 ‘‘நாம் ஜபுரில் எழுதியிருந்தோம் என்னுடைய நல்லடியார் மட்டுமே அவ்வுலகத்தில் வசிக்கமுடியும்.’’
பைபிள் (றிsணீறீனீ 37:29) ‘‘நல்லவர்கள் மட்டுமே அந்த பூமியில் என்றென்றும் வசிக்க முடியும்.’’
மனிதன் இவ்வுலகிற்கு வந்தபிறகு நாகரிகக் கட்டத்தின் அடிப்படையை உலகில் உருவாக்கினான். பின்னர் மேன்மையான நவீன உலகத்தை உருவாக்க விளைந்தான். இது மனிதன் ஏற்படுத்திய பரிணாமத் தொடர்ச்சியாக இருந்தது. இயற்கை ஏற்படுத்தும் வாயிலில் இன்னும் ஒரு காலக்கட்டம் மீதமிருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் உருவாகுவது தான் முழுமையான உலகம். அவ்வுலகத்தில் மகிழ்ச்சி மட்டுமே பெறுவர். ஒவ்வொரு நிகழ்வும் மகிழ்ச்சியையே வழங்கம் இவ்வுலகத்தில் கடின உழைப்பு, வெற்றி போன்றவை தேவை இருக்காது.
குர்ஆன் 36:55 ‘‘சொர்க்கத்தில் வசிக்கக் கூடியோர் மகிழ்ச்சிக்குரிய செயல்களுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பர்.’’ மனிதன் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்த சொர்க்க உலகம் முழுமையுடையதாகவிருக்கும். ஆசைப்படக்கூடிய குறிக்கோளை அடைவதற்கு உடல் உழைப்பு அங்கு தேவையிருக்காது. அறிவார்ந்த செயல்பாடுகளே போதுமானதாக அமைந்திருக்கும்.
– தமிழாக்கம் : ஏ.ஜெ. நாகூர் மீரான்
முஸ்லிம் முரசு டிசம்பர் 2013
source: http://jahangeer.in/?paged=5