”அம்மா அல்லாஹ்விடம் பேசிக்கொண்டு இருக்கும் போது நீ எப்படி குறுக்கிடலாம்?”
ஒரு பெண் கூறினார்: “நான் தொழுகை நடாத்திக்கொண்டு இருக்கும் போது எனது சிறிய மகள் என்னை நோக்கி வந்து திரும்ப திரும்ப என்னை அழைத்து கொண்டே இருந்தாள். நான் தொழுகையில் இருந்தமையால் அவளுக்கு பதில் கொடுக்கவில்லை
அந்த சமயம் என்னுடைய 6 வயது நிரம்பிய இளைய மகன் அங்கு வந்து என் மகளிடம் ‘உனக்கு வெட்கம் இல்லையா? அம்மா அல்லாஹ்விடம் பேசிக்கொண்டு இருக்கும் போது நீ எப்படி குறுக்கிடலாம்?’ என்றான்.
இவனுடைய வார்த்தையை கேட்ட நான் ஒருகணம் தளர்ந்துவிட்டு வெட்கம் அடைந்தேன். ஏனென்றால் நான் இதுவரை என்னுடைய தொழுகைகளை அவசர அவசரமாக தான் தொழுது வந்துள்ளேன். இவனுடைய இந்த வார்த்தை எனக்கு ஒரு விஷயத்தை புரிய வைத்தது.
உலகை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அரசர்களுக்கெல்லாம் அரசனான என் ரப்பிடம் நான் பேசும் போது (தொழுகையின் போது)ஒவ்வொரு முறையும் எப்படி அவசர அவசரமாக கடமையை கழித்துவிட்டு செல்வது போல் தொழுகையை நிறைவேற்றி விட்டு சென்றுள்ளேன். இதில் நிச்ச்ச்சயம் எனது இறைவன் திருப்த்தி கொண்டிருப்பானா? என்று என்னை நானே எண்ணிக்கொண்டேன்
அன்றிலிருந்து ஒவ்வொரு தொழுகைக்கு செல்லும் போதும் என்னுடைய மகனின் அந்த வார்த்தையை நியபகப்படுத்தியே. ஒரு பயபக்த்தியுடைய தொழுகைக்காக தக்பீர் கட்டுவேன்.
சுபஹானல்லாஹ் ஒரு சில விஷயங்களை குழந்தைகள் மூலம் அல்லாஹு ரப்புல் ஆலமீன் மக்களுக்கு தெளிவு படுத்துகிறான் எல்லா புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்..
-Quran Learning Association & Mohamed