Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முடிவற்ற ஆசைகள். வரையறுக்கப்பட்ட நிறைவேறல்கள்!

Posted on April 11, 2014 by admin

ஏன் இந்த முரண்பாடு?

முடிவற்ற ஆசைகள். வரையறுக்கப்பட்ட நிறைவேறல்கள்

Percy Bysshe Shelley என்ற ஆங்கிலக் கவிஞர் இரண்டு நூற்றாண்டுகள் முன் வாழ்ந்து 30 வயதில் மரணித்தார் அவர் எழுதிய இருவரிக் கவிதை

“Our Sweetest Songs are those

that tell of saddest thought”

“நம்முடைய இனிமையான பாடல்கள் தான் சோகமான எண்ணங்களைச் சொல்லும்-.” என்கிறார்

பொதுவான மனித அனுபவம் இது. சோகம் நிறைந்த பாடல்கள். துயரம் நிறைந்த கதைகள் அனைவருக்கும் பிடித்தமானவை. மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட நாவல்கள் அனைத்தும் துயரக் கதைகள் கூறியவையே! சோகப்பாடல்கள் தான் அதிகமதிகம் மக்களைச் சென்றடைகின்றன. காரணம் மனித ஆன்மாக்கள் அனைத்தும் ஆசைகள் பூரணமாக நிறைவேற்றப்படாமல் இழப்பு நிலையில் இருப்பதுதான். அவர்களைச் சந்தோஷம் சென்றடைந்தாலும். கவலைகள் மட்டுமே சேருகின்றன. படிப்பினைகள் மூலம் அறியும் உண்மை.

இன்பத்தை எதிர்நோக்கும் சமூக விலங்கு மனிதன். இன்பத்தை அனுபவிக்கும் ஆற்றல், திறன், உயர்வான இன்பம் பெறுதலை அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே பரிசாக வழங்கியிருக்கிறான்.

சிந்தனை, பார்வை, செவிப்புலன், நுகர்தல், தொடுஉணர்வு, உண்ணுதல், பருகுதல் மனிதனுக்கு இன்பம் அளிப்பவை. இதிலிருக்கும் விநோத முரண்பாடு, மனிதனுக்கு இன்பம் மகத்தான விருப்பமாக அவனுக்குள்ளாகவே இருக்கிறது. அந்த இன்பத்தை முழுவதுமாகப் பெற அவன் கருதினாலும் இவ்வுலகம் தராது. போதாது.

மனிதன் முதலில் பெரும் செல்வத்தை தேடுகிறான். பின் அந்தஸ்து அடைகிறான். அதிகாரம் பெறுகிறான். ஆடம்பரமாக வாழ்கிறான். தேவைக்கதிகமான பங்களாக்கள் கட்டிக் கொள்கிறான். பெருந்தனவந்தனாக மாறுகிறான். அடைந்து வந்த அனுபவத்திற்குள்ளும் ஒரு சில மனக்குறைகள் அவனுக்குள் இருக்கின்றன.

தேடியடைந்த பொருளாதாரமோ, வாழ்வியலோ அவனுக்கு உண்மையான, பூரணமான சந்தோஷத்தை தரமறுக்கிறது. மனிதன் ஆசை, விருப்பம் எல்லையற்றது. அனுபவிக்க நினைக்கும் மனிதனின் விருப்பத்திற்குத் தக்க திறன் இல்லை. அவனது இயலாமை அவனை அனுபவிக்க விடாத நிலைக்குத் தள்ளுகிறது.

வயது முதிர்ச்சி, உடல்நிலை மாற்றம், நோய் சீற்றம், மரணம் குறித்த மனநிலை தொடர்ந்து அவன் ஆசைகளை அனுபவிக்க விடாது செய்கின்றன. தேவைகள் அனைத்தும் பெற்ற மனிதன் பயன்படுத்தும் செயல்திறனை இழக்கிறான். அகத்துக்குள்ளிருந்து இதனை ஆராய்தல் மூலமே முரண்பாடு இல்லாததை உணரவியலும். நிகழும் நிகழ்வுகளின் பட்டியல் கூறும் முடிவிது.

இயற்கை விதி உணர்த்துவது. மனிதன் இறப்புக்கு முன்பு அவனது ஆடம்பரப் பொருட்கள், உலகில் ஏற்படுத்திக் கொண்டவை மீது அடிப்படை அறிமுகம் மட்டுமே அவனுக்குள் இருக்கும். உலகில் செய்த பயிர் விளைச்சலுக்கு தக்கவே அறுவடை கிடைக்கும். விவசாயி என்ன விதைக்கின்றானோ அதனையே அறுவடை செய்ய முடியும். இரும்பு உருக்கபட்டுத்தான் ஸ்டீல் ஆகிறது. ஒவ்வொன்றும் ஆரம்ப நிலையிலிருந்து பின்னர் முழுமைபெறுகின்றன.

அதுபோன்றுதான் மனிதனும் -இறை – படைப்பினத்திட்டத்தின் மூலமாக, முன் மாதிரியாக இறைவன் மனிதனை அனுப்பியிருக்கிறான். பூரணத்துவம் பெற மனிதனுக்கு தகுதி வேண்டும். தன்னைத் தானே பரிசுத்த ஆன்மாவாய் ஆக்கிக் கொள்ள வேண்டும். சுயநலம், வஞ்சகம், பொய், கோபம், பழிவாங்கும் செயல், வன்முறைப் போக்கு, வெறுப்பு போன்ற எதிர்மறைச் சிந்தனைகளைக் களைந்து நேரான வழியில் தனித்தன்மையை மனிதன் வளர்த்துக் கொண்டால் சுவனத்தை அடையலாம்.

மனித வாழ்வு இரண்டு பிரிவுகளாக ஆனது. மரணத்துக்கு முன். மரணத்துக்குப் பின். இறப்புக்கு முன் சிறிய பகுதி வாழ்வைத் தான் அவன் காணுகிறான். இறப்புக்குப் பின்புள்ள பெரும்பகுதி வாழ்வு தெரிவதில்லை. தனக்கு முன்புள்ள வாழ்வை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழும் அவனுக்குக் கேடாக அது அமைகிறது. அல்லாஹ் படைப்பு திட்டப்படி மனிதன் மிக நுட்பமான புள்ளியாக இருக்கிறான். இரண்டு வித இறை தேர்வில் மனிதன் எந்த வாழ்வை நோக்கிச் செல்கிறான்? (Sprit of Islam இதழிலிருந்து)

– தமிழாக்கம் : ஏ.ஜெ. நாகூர் மீரான், முஸ்லிம் முரசு பிப்ரவரி 2014

source: http://jahangeer.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb