கபுருக்குப் போகும் வரை பிஸி… பிஸி…
எனக் கூறுபவர்களுக்கு குடும்பம் தேவையில்லை!
மௌலவி முனைவர், வி.எஸ்.அன்பர் பாதுஷா உலவி
இங்கு வருகை புரிந்திருப்போர் “ஹஜ்ரத் நல்லா பேசுனீங்க” என்று மதிப்பெண் போடுவதற்காக இந்த மாநாடு கூட்டப்படவில்லை.
வீடுகளில் டி.வி. ஓடும் அளவிற்கு அல்லாஹ் ரசூல் குறித்து போதிக்கப்படவில்லை.
நபியும், ஸஹாபாக்களும் ரத்தம் சிந்தி வளர்த்த தீன் எந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறோம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இளம் வயதினர் முதியோரை மதிப்பதில்லை. புர்கா எதற்கு அணிகிறோம் என்பதே கேள்விக்குறியாகவிருக்கிறது.
யாரையோ ஏமாற்றுவதாகக் கருதி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஆண் பிள்ளைகள் கெடுவதற்கு தந்தையர் காரணமாக இருக்கின்றனர். குடும்பத்தை கவனிப்பதில்லை. எப்போதும், எந்நேரமும் பிஸி என பொருளீட்டுவதில் அலைகின்றனர்.
கபுருக்குப் போகும் வரை பிஸி தான். பிஸி எனக் கூறுபவர்களுக்கு குடும்பம் தேவையில்லை.
மனைவி, மக்களைக் காப்பதிலிருந்தும் கடமை தவறக் கூடாது.
தான் திருத்த வேண்டும் எண்ணம் ஒவ்வொருவர் மனத்திலும் தோன்றாதவரை திருத்தமுடியாது.
வீடு, வசதி வாழ்வு. பிள்ளைகளுக்கு தேடி வைக்கிறோம். ஈமான் – இஸ்லாமிய வாழ்வை தேடிப் போதிக்க மறுக்கிறோம்.
தாய், தந்தையர் வடிக்கும் கண்ணீர் கேலிப் பொருளாக பிள்ளைகளுக்குத் தெரிகிறது.
தர்பியத் கிடைக்கவில்லை. சண்டையிட்டுக் கொண்டு வாழும் தாய், தந்தையரைப் பார்க்கும் குழந்தைகள் அன்பு, அரவணைப்பு இல்லாமல் ரவுடிகளாக மாறுகின்றனர்.
நம்மைச் சுற்றியுள்ள சூழல்களைச் சரிசெய்ய வேண்டும். மாப்பிள்ளைப் பார்க்கப் போகும் இடத்தில் மாமனார் மாப்பிள்ளையிடம் என் மகளிடம் பேசுங்களேன் என்கிறார். பேசாத ஆண் வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறார்.
ஒரு இளைஞன், இளைஞி குட்டிச்சுவராக கையில் நல்ல செல்போன் கொடுத்தால் போதும். நிச்சயதார்த்தம் முடிந்தால் பாதி திருமணம் முடிந்த மாதிரி எனக் கூறுகின்றனர். அவ்வாறு யார் சொன்னது பிரச்சினைகள் பூதகரமாகத் தெரியும்.
தீர்வு எளிது, அல்லாஹ், ரசூல் சொன்னபடி வாழ்வதுதான்?
பார்வை தாழ்த்திக் கொள்வது, கற்பைக் காத்துக் கொள்தல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது: இதில்தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பிருக்கிறது. உதாசீனம் செய்தால் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும்.
[ 25.01.2014 அன்று சென்னை- பெரம்பூர் ஜமாலியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தினுள் நடந்த. சென்னை மாவட்ட ஜ.உ.சபை ஏற்பாடு செய்திருந்த “குடும்ப உறவுகள் சீர்பெற” தலைப்பில் நடந்த மாநாட்டில் மௌலவி முனைவர், வி.எஸ்.அன்பர் பாதுஷா உலவி, (செயலாளர் ஜ.உ.சபை, சென்னை மாவட்டம்) ஆற்றிய உரை ]
source: http://jahangeer.in/