ஆபரேஷன் “புளு வைரஸ்” -அவிழ்ந்தது மோடியின் கோவணம்
”ஆபரேஷன் ப்ளூ வைரஸ்” என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயற்பாட்டை ஆய்வு செய்தனர். இந்நிறுவனங்களின் பணியாளர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது, சட்டமன்றத் தேர்தலில் தங்கள் நிர்வாகத் தலைமை ஆதரிக்கும் கட்சிக்கு எதிரான வேட்பாளர்களைக் குறித்த தரக்குறைவான அவதூறு பிரச்சாரங்களை செய்யச் சொல்லியுள்ளதாக கூறியுள்ளனர்.
அந்த நிறுவனங்களே, நரேந்திர மோடியின் ஆட்சியில் நடந்ததாக பல சாதனைப் புளுகு மூட்டைகளையும் பரப்பும் வேலையைச் செய்ய உத்தரவிட்டிருப்பதாக கோப்ரா போஸ்டின் ஆசிரியர் அனிருத்தா பஹல் தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவரத்திற்கு பிறகும் ஏராளமான இஸ்லாமிய மக்கள் மோடியை ஆதரிக்கும் தோற்றத்தை வலுப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கில் இஸ்லாமியப் பெயர்களை பயன்படுத்தி பின்னூட்டங்களின் வெள்ளத்தை திணித்துள்ளதாகவும் இதற்கெல்லாம் ஏராளமானோர் ஆதரித்து விரும்புவது(லைக் செய்வது),கருத்திடுவது என – இவற்றையெல்லாம் ஒரே அறையில் அமர்ந்து எழுதிக் குவிக்கப்படுவது தெரியவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(http://www.truthofgujarat.com/welcome-new-age-namo-approved-internet-trolls/)
மேலும் இது குறித்த தகவல்களில் ஒரே IP முகவரியிலிருந்து வெவ்வேறு வலைத்தளக் கருத்துக்கள் நரேந்திர மோடிக்கு ஆதரவாய் பெருமளவில் கருத்துக் குவியல்களை நிகழ்த்தியிருக்கிறது. NitiDigital எனும் தளம் குஜராத் கலவரத்தை நியாயப்படுத்தி, அதற்கு ஆதரவான புனைவுக் கருத்துக்களை அதிவேகத்தில் நிகழ்த்துவதாகவும், இதுபோன்ற மோடிபிரச்சார தளங்கள் பெருமளவில் முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
(http://www.truthofgujarat.com/narendra-modi-chose-28th-february-register-website-odd-coincidence/)
இந்த ஆய்வின் போக்கில் RSS இன் sanghmarg.com தளத்தையும் இந்த NitiDigital மற்றும் Rajesh jain என்னும் நபரே நடத்துவதாகவும் தெரிகிறது.
இணைய தளத்தில் நரேந்திர மோடியின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்ய திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்படவிருக்கின்றனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென்னையில் நடத்தப்பட்டு தொழில் நுட்பப் பொறியாளர்கள் 350 பேர் கூட்டப் பட்டுள்ளார்கள்.
பி.ஜே. பி.யின் சென்னைத் தலைமை அலுவலகத்தில் இதற்காகத் தனி அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.
சுருக்கமாகச் சொல்லப்போனால், புளுகுகளைக் கட்டவிழ்த்து விட கோயபல்சுகள் திட்டம் தீட்டிவிட்டனர் என்றே கருதவேண்டும்.
இதற்கு முன்பேகூட இணைய தளத்தில் மோடியுடன் தொடர்பில் உள்ளவர்கள் 19 லட்சம் என்று ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.
இந்தியாவின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி நிறுவனமான ஹெட் லைன்ஸ் டுடே – மோடியின் டுவிட்டர் சமூக வலை தளக் கணக்கில் இணைந்துள்ளவர்களில் 70 சதவிகிதப் பெயர்கள் போலியானவை என்று அம்பலப்படுத்தி விட்டதே!
இவரை பிரதமராக்குவதற்கு பிறர் செய்த நல்லறங்களை எல்லாம் இவர் செய்ததாக புகழ்ந்து உலக மக்களுக்கு எடுத்து சொல்ல APCO என்கிற நிறுவனத்தில் பல கோடி டாலர்களில் ஒப்பந்தம் செய்து இருக்கிறார் இந்த மோடி, இந்த புகழுக்காக இவர் எடுத்திற்கும் விஸ்வருபத்தால், வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதற்கு பல நாட்கள் இந்திய இராணுவத்தினர் உயிரையும் கொடுத்து செய்த உழைப்பை, இவர் தான் இநோவோ கார் முலம் இரண்டே நாட்களில் செய்து விட்டதாக அத்தனை பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்தியாக வர வைத்தான்,
அன்று வெள்ளத்தில் பல்லாயிரம் உயிர்கள் போன இந்த துக்க செய்திக்கும் மேலாக பணத்திற்காக இந்த மோடியை புகழ்ந்து தான் பக்கத்திற்கு பக்கம் செய்தி,
2013 ஜூன் மாதத்தில் உத்தரகாண்ட் வெள்ள அபாயத்தில் சிக்கிய 15,000 குஜராத்திகளை வெள்ளத் திலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றிவிட்டார் என்று கிளப்பி விடவில்லையா?
இராணுவத்தினரே மீட்புப் பணியில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்தித்த நிலையில், 80 இன்னோவா கார்களைப் பயன்படுத்தி 15 ஆயிரம் பேர்களை மோடி காப்பாற்றினாராம், நம்புங்கள், கேழ்வரகில் நெய் வடிகிறது!
அதிகபட்சமாகப் போனால், ஓர் இன்னோவா காரில் 7 பேர்களை ஏற்றலாம்; வேண்டுமானால், இரண்டு பேர்களை அதிகமாக ஏற்றிச் செல்லலாம். 80 கார்கள் டேராடூனிலிருந்து ஒரு தடவைக்கு 720 பேர்களைத்தான் கொண்டு செல்ல முடியும். 15 ஆயிரம் பேர்களை மலைப் பகுதியிலிருந்து கீழே கொண்டு போகவும், வரவும் 21 தடவைகள் பயணிக்கவேண்டும்.
கேதார்நாத்திலிருந்து டேராடூன் 221 கிலோ மீட்டர் தூரமாகும். 21 முறை என்று கணக்கிடும் பொழுது ஒவ்வொரு காரும் சுமார் 9300 கிலோ மீட்டர் பயணிக்கவேண்டும், அதுவும் மலைப் பகுதிகளில்.
சராசரியாக மணிக்கு 40 கிலோ மீட்டர் என்று வைத்துக்கொண்டாலும் கூட 233 மணிநேரம் பயணம் செய்யவேண்டும்.
இந்தச் சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான அளவில் அல்லாடிக் கொண் டிருக்கும் மக்களில் குஜராத் மக்களை அடையாளம் கண்டு, தேடிக் கண்டுபிடித்துப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தாராம், மற்ற மாநில மக்களைப் பார்த்து எப்படியோ தொலைந்து போங்கள் என்று சொல்லி அவர்களை விட்டுவிட்டு வந்துவிட்டாரா மோடி என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.6.2013) அம்பலப்படுத்தியதை நினைத்துப்பாருங்கள். ஒரே நாளில் 15,000 பேர்களை மீட்டதாகக் கூறுவது அண்டப் புளுகு ஆகாயப் புளுகுதானே!
இப்பொழுது இளைஞர்களை மயக்க, ஈர்க்க இணையதளத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்; அதற்காகக் கைதேர்ந்தவர்களை வலை போட்டுத் தேடிப் பிடிக்கிறார்கள்.
சீனாவில், குவாங்ஜோ என்னும் நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள தாக இணைய தளத்தில் வெளியிட்ட கோயபல்சுகள் வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டனர்!
உஷார்!! உஷார்!!
நன்றி: வாஞ்ஜூர்
குறிப்பு : சகோஸ் இது போன்ற மோடியின் அயோக்கியத்தனங்களை அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள் உங்கள் நட்பில் உள்ள மாற்றுமத சகோதரர்களில் ஒரு சிலராவது உண்மையை உணரக்கூடும்.
பி.ஜே.பி.ஆட்சியமைக்கும் என்று ஊடகங்கள் மாற்றி மாற்றி ஊளையிடுவது
”அப்பட்டமான பொய்” என்பதை கீழே இடம்பெற்றிருக்கும் கருத்துக்க்கணிப்பு உறுதி செய்கிறது.
டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிக்கை BJP யின் மத விரோத தேர்தல் அறிக்கை பற்றி கருத்து கேட்ட போது 75 சதவீதத்தினர் மோசம் என்று தெரிவித்துள்ளனர்.