நாட்டு நடப்பு!
o ‘பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டதே; அத்வானி, நரசிம்ம ராவுக்கு முன்கூட்டியே தெரியும்!’
o மோடியை கிழித்த தி எக்கனாமிஸ்ட், கொதிக்கும் பாஜக…
o Economist says India deserves better than Narendra Modi, BJP fumes
o Exposed: Narendra Modi’s tall claims are all lies
o அதிகமான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி (426 தொகுதியில்) போட்டி
o தொழிலதிபர்களுக்காகவே மோடி ஆட்சி நடக்கிறது என கேஜ்ரிவால் சொல்வது உண்மையே: கருத்து கணிப்பு
‘பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டதே; அத்வானி, நரசிம்ம ராவுக்கு முன்கூட்டியே தெரியும்!’
புதுடெல்லி: பாபர் மசூதி இடிக்கப்பட்டது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சம்பவம் என்றும், இந்த சதித்திட்டம் குறித்து பா..ஜனதா மூத்த தலைவர்களான எல்.கே.. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களுக்கு மட்டுமல்லாது, அப்போதைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவுக்கும் முன்கூட்டியே தெரியும் என்றும் தாங்கள் மேற்கொண்ட’ ஸ்டிங் ஆப்ரேஷன்’ எனப்படும் ரகசிய வீடியோ பதிவு மூலம் தெரியவந்துள்ளதாக கோப்ரா போஸ்ட் இணைய தளம் தெரிவித்துள்ளது.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி கரசேவர்களால் இடிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக கோப்ராபோஸ்ட் இணையதளம் நடத்திய ஸ்டிங் ஆபரேசனில் மசூதி திட்டமிட்டே இடிக்கப்பட்டுள்ளது என்றும், பா.ஜனதா தலைவர் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங்குக்கும் இது தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பில் முன்னணியில் நின்ற ராம்ஜென்ம பூமி இயக்கத்தினர் வினய்கட்டியார், உமாபாரதி,மெகந்த் வேதாந்தி உள்ளிட்ட 23 பேரிடம் இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் மேற்கொள்ளப்பட்டதாக கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.
‘கோப்ரா போஸ்ட்’ இணையதளத்தின் இணையாசிரியர் கே. ஆஷிஷ், அயோத்தியா இயக்கம் குறித்து ஆய்வு செய்து தாம் ஒரு புத்தகம் எழுத உள்ளதாக கூறி, மேற்கூறிய 23 பேரிடமும் பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவர்கள் கூறியவற்றை ரகசிய வீடியோ கேமராவில் பதிவு செய்துள்ளார்.
ஆஷிஷ் பேட்டியெடுத்த 23 பேரில் 15 பேர், பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷனிலும், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 19 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம், சிவசேனா ஆகிய அமைப்புகள் திட்டம் தீட்டி, பாபர் மசூதி இடிப்புக்காக கரசேவர்களுக்கு முன்கூட்டியே மாத கணக்கில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், இதற்கு ‘ ஆப்ரேஷன் ஜன்மபூமி’ என பெயர் சூட்டப்பட்டு, ராணுவ துல்லியத்துடன் பாபர் மசூதி இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது தொடர்பாக அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி முன்னிலையில் 1992 ஆம் ஆண்டு 5 ஆம் தேதி உறுதி மொழி எடுக்கப்பட்டதாகவும் அந்த 23 பேரும் கூறியதாக கோப்ரா போஸ்ட் கூறியுள்ளது.
தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவனேசா சதிதிட்டம் குறித்து இவர்கள் வெளிப்படையாக பேசினர் என்றும், இது மிகவும் தெளிவான திட்டமிட்ட செயல் என்றும், கரசேவகர்கள் திடீரென கூடி இடிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியை கிழித்த தி எக்கனாமிஸ்ட், கொதிக்கும் பாஜக…
உலகின் பிரபல ஊடகங்களில் ஒன்றான தி எக்கனாமிஸ்ட், மோடி போன்ற ஒருவர் இந்தியாவை ஆள தகுதியில்லை என்று கூறி பாஜகவை கொதிக்க வைத்துள்ளது, கூடவே மோடி ஆதரவாளர்களையும் தான்.
இதற்கு காரணமாக குஜராத் படுகொலைகளை சுட்டிக்காட்டியுள்ள தி எக்கனாமிஸ்ட்,” குஜராத் படுகொலைகளுக்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, இதனாலேயே இவ்வழக்கு முடிவு பெறாமல் இருக்கின்றது. தன்னுடைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, குஜராத படுகொலைக்களுக்கான விளக்கத்தை மோடி தந்திருக்க வேண்டும். மன்னிப்பும் கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் இதுக்குறித்த கேள்விகளுக்கு மோடி பதிலளிக்க மறுக்கின்றார். முஸ்லிம்களின் அச்சத்தை போக்க முயற்சிக்காமல் அதனை ஊக்கப்படுத்திவதில் முனைப்பாக உள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வாக்கு வங்கியை குறிவைத்து அவற்றை வளர்த்துக்கொண்டிருக்கின்றார்” என்று படுகாட்டமாக விமர்சிக்கின்றது தி எக்கானாமிஸ்ட்.
தங்கள் பிரதம வேட்பாளரின் தகுதி ஆதிக்கமிக்க சர்வதேச ஊடகங்கள் வரை அசிங்கப்படுவதை அறிந்த பாஜக இதுக்குறித்து கொதித்துக்கொண்டிருக்கின்றது. இங்குள்ள நிலைமையை அறியாமல் எக்கனாமிஸ்ட் பேசுவதாக பதறுகின்றது பாஜக. ஒரு பிரதம வேட்பாளர் இவ்வளவு எதிர்மறை விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவது நான் அறிந்து இதுவே முதல் முறை.
“ராகுல் காந்தி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுமா என்று தெரியவில்லை. ஆனால் பாதிப்பு குறைவு என்ற கருத்தோட்டத்தில் அதனையே இந்தியர்களுக்கு பரிந்துரைக்கின்றோம்” என்றும் கூறியுள்ளது எக்கனாமிஸ்ட்.
ஏற்கனவே குஜராத் முன்னேற்றம் இத்தியாதி இத்தியாதி என்று எல்லாம் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எக்கானாமிஸ்ட்டின் இந்த கட்டுரை தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது..
– Aashiq Ahamed
ஆதாரம்: http://indiatoday.intoday.in/story/economist-narendra-modi-india-deserves-better-bjp/1/352874.html
Economist says India deserves better than Narendra Modi, BJP fumes
IndiaToday.in New Delhi, April 4, 2014
News magazine The Economist, in an article, has slammed BJP prime ministerial nominee Narendra Modi, for his alleged role in the post-Godhra carnage. Drawing the ire of the BJP, the magazine wrote that India deserved better than Narendra Modi.
“Mr Modi’s performance as chief minister of Gujarat shows that he is set on economic development and can make it happen. Mr Gandhi’s coalition is tainted by corruption. By comparison Mr Modi is clean. So there is much to admire. Despite that, this newspaper cannot bring itself to back Mr Modi for India’s highest office,” the article read.
“We do not find the prospect of a government led by Congress under Mr Gandhi an inspiring one. But we have to recommend it to Indians as the less disturbing option,” it said.
BJP spokesperson Mukhtar Abbas Naqvi has told a news channel that the magazine was unaware of the ground realities.
The magazine wrote in the article that despite its admiration for the growth he impelled in Gujarat, it won’t back him owing to the his dubious role in the post Godhra violence.
“The reason begins with a Hindu rampage against Muslims in Gujarat in 2002, in which at least 1,000 people were slaughtered. The orgy of murder and rape in Ahmedabad and the surrounding towns and villages was revenge for the killing of 59 Hindu pilgrims on a train by Muslims.
Mr Modi had helped organise a march on the holy site at Ayodhya in 1990 which, two years later, led to the deaths of 2,000 in Hindu-Muslim clashes,” the article said.
Talking about the Supreme Court-ordered probe in the riots, the magazine suspected destruction of evidence.
“The inquiries into the riots were inconclusive is that a great deal of evidence was lost or wilfully destroyed. And if the facts in 2002 are murky, so are Mr Modi’s views now. He could put the pogroms behind him by explaining what happened and apologising. Yet he refuses to answer questions about them.
By refusing to put Muslim fears to rest, Mr Modi feeds them. By clinging to the anti-Muslim vote, he nurtures it,” the article said.
Read more at: http://indiatoday.intoday.in/story/economist-narendra-modi-india-deserves-better-bjp/1/352874.html
Exposed: Narendra Modi’s tall claims are all lies
By Raghav Gakhar
Here, I will list all the reasons why I will not vote for Bharatiya Janata Party’s (BJP) prime ministerial candidate Narendra Modi.
Before that I want to make it clear that I was a hardcore BJP supporter and my family has always voted for BJP in Rajasthan.
But over time I realised that BJP and Congress are two different sides of the same coin or in simpler words they are similar wine in different bottles.
I know this blog might receive many abuses by crazy Modi Army who are never short of abuses 24 x 7 on social networking, but writing this is necessary to clean the illusion created by BJP.
Read more at: http://www.india.com/election-2014/exposed-narendra-modis-tall-claims-are-all-lies-22268/
அதிகமான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி (426 தொகுதியில்) போட்டி
புதுடெல்லி, ஏப். 4: பாராளுமன்ற தேர்தல் வருகிற 7–ந்தேதி தொடங்கி மே 12–ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஊழல் எதிர்ப்பை மையமாக கொண்டு கட்சியை தொடங்கியவுடன் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிதான் இதுவரை அதிகமான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 426 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் (80) அந்த கட்சி களத்தில் நிற்கிறது. இதே போல மராட்டியம் (48), மத்திய பிரதேசம் (29), கர்நாடகா (28), அரியானா (10), டெல்லி (7), பஞ்சாப் (13) ஆகிய மாநிலங்களிலும் ஆம்ஆத்மி அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 23 தொகுதியிலும் (மொத்தம் 39), பீகாரில் 39 இடங்களிலும் (40), ராஜஸ்தானில் 24 தொகுதிகளிலும் (25), குஜராத்தில் 21 இடங்களிலும் (26), ஒடிசாவில் 19 தொகுதியிலும் (21), கேரளாவில் 15 இடங்களிலும் (20) களம் இறங்குகிறது.
ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பா.ஜனதா 415 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 413 இடங்களுக்கு இதுவரை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது
தொழிலதிபர்களுக்காகவே மோடி ஆட்சி நடக்கிறது என கேஜ்ரிவால் சொல்வது உண்மையே: கருத்து கணிப்பு
அகமதாபாத்: குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சி அதானி மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்கள் பயனடையத்தான் நடைபெறுகிறது என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சொல்வது சரிதான் என்று அம்மாநில மக்கள் கூறுவதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக சி.என்.என்.- ஐபிஎன் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் பல மாநிலங்களைப் போல குஜராத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் ‘அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்கள் பயனடையத்தான் குஜராத்தில் ஆட்சி நடைபெறுகிறது என்று கேஜ்ரிவால் சொல்வது’ பற்றியும் கேட்கப்பட்டிருக்கிறது. கேஜ்ரிவால் சொல்வதை ஒப்புக் கொள்கிறோம் என்று 46% குஜராத் மக்கள் கூறியுள்ளனர். ஆனால் இதை ஏற்க முடியாது என்று 25% பேர் மட்டும்தான் தெரிவித்துள்ளனர். 29% பேர் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
கேஜ்ரிவால் சொல்வது உண்மைதான், குஜராத்தில் மோடி அட்சியில் முதலாளிகள் தான் நல்ல இருந்தார்கள். உதாரணம் டாட்டா நானோ காருக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒரு ரூபாய்க்கு கொடுத்தது மோடி அரசு .அதே போல் மின்சாரம் இலவசம் ,தண்ணிர் இலவசம் எல்லாம் முதலாளிகள் தான் கொண்ட்டட்டம். குஜராத் மக்கள் என்னும் மின்சாரம், குடிநீர், வேலை வாய்ப்பு, இல்லாமல் சிரமத்தோடு வாழ்ந்து வருகிறார்கள், இந்த தேர்தலில் மக்கள் ஆனைவரும் மோடி எதிராகத்தான் குஜராத்தில் இருக்கிறார்கள்.