ஈமானில் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றுள்ளார்கள்.
ஈமானின் கிளைகள் 70
அவை மூன்று வகைப்படும்.
1. உள்ளம் சார்ந்த ஈமான்,
2. நாவு சார்ந்த ஈமான்,
3. உடல் சார்ந்த ஈமான்.
உள்ளம் சார்ந்த ஈமான்:
இதில் 24 கிளைகள் இருக்கின்றன.
1. அல்லாஹ்வை ந்ம்புதல்,
2. வானவர்களை நம்புதல்,
3. வேதங்களை நம்புதல்,
4. இறைத் தூதர்களை நம்புதல்,
5. விதியை நம்புதல்,
6. மறுமையை நம்புதல்,
7. இறைவனை நேசித்தல்,
8. இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது, வெறுப்பது,
9. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதும், மதிப்பதும்.
10. நபி வழியைப் பின்பற்றுவது.
11. இக்லாஸ் – மனத்தூய்மை.
12. தவ்பா – பாவமன்னிப்புக் கோருவது,
13. அல்லாஹ்வை அஞ்சுவது,
14. இறையருளை நம்புவது,
15. நன்றி செலுத்துவது,
16. வாக்கை காப்பாற்றுவது,
17. பொறுமை காத்தல்,
18. விதியை ஒப்புக்கொள்ளல்,
19. தவக்கல் – இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவது,
20. இறக்க குணம் கைக்கொள்வது,
21. பணிவு,
22. தற்பெருமையை கைவிடுவது,
23. பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடுவது,
24. கோபத்தை அடக்குவது.
நாவு சார்ந்த ஈமான் :
இது 8 கிளைகளாகும்.
1. ஏகத்துவக் கலிமா(லாஇலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்)வை உரைப்பது,
2. குர்ஆன் ஓதுவது,
3. கல்வி கற்பது,
4. கல்வி கற்பித்துக்கொடுப்பது,
5. துஆ – பிரார்த்தனை செய்வது,
6. திக்ர் – அல்லாஹ்வை தியானம் செய்வது,
7. வீண் பேச்சுக்களை தவிர்ப்பது.
8. ஒவ்வொரு (நற்)காரியத்தை துவங்கும்போதும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று சொல்லி துவங்குவது
உடல் சார்ந்த ஈமான் :
இது 38 கிளைகளாகும்.
1. சுத்தம் செய்வது,
2. மர்ம உறுப்புகளை மறைப்பது,
3. தொழுவது,
4. ஜகாத் கொடுப்பது,
5. அடிமையை விடுதலை செய்வது,
6. தர்மம் செய்வது,
7. ஹஜ் செய்வது,
8. நோன்பு நோற்பது,
9. உம்ரா செய்வது,
10. தாஃப் – புனித கஃபாவை வலம் வருவது,
11. இஃதிகாஃப் – இறை இல்லத்தில் தங்கி இருப்பது,
12. லைலத்துல் கத்ர் எனும் சிறப்பு மிக்க இரவை தேடல்,
13. மார்க்க நம்பிக்கையைக் காக்க ஹிஜ்ரத் செய்வது (ஊர் துறப்பது).
14. நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது,
15. சத்தியங்களில் நேர்மையாக இருப்பது,
16. குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுவது,
17. திருமணம் செய்து கொள்வது,
18. குடும்பத்தாரின் உரிமைகளை மதிப்பது,
19. பெற்றோருக்கு நன்மை செய்வது,
20. குழந்தைகளை வளர்ப்பது,
21. உறவைப் பேணுவது,
22. எஜமானர்கள் அடிமைகளிடம் கனிவோடும், அடிமைகள் எஜமானர்களிடம் விசுவாசத்தோடும் நடந்து கொள்வது,
23. நீதமான ஆட்சி செலுத்துதல்,
24. சமூக உறவைப் பேணுவது,
25. பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது,
26. சமாதானம் செய்து வைத்தல்,
27. நன்மையான செயல்களுக்கு ஒத்துழைப்பது,
28. குற்றவியல் தண்டனைகளை நிலை நிறுத்துவது
29. அறப்போர் புரிவது,
30. அமானிதத்தைக் காப்பது,
31. கடனைத் திருப்பிச் செலுத்துவது,
32. அண்டை வீட்டாரிடம் அன்பு காட்டுவது,
33. முறையோடு சம்பாதிப்பது மற்றும் செலவழிப்பது,
34. ஸலாமுக்கு பதிலுரைப்பது,
35. தும்மியவர் “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறும்பொழுது அவருக்கு “யர்ஹமுக்குல்லாஹ்” என பதிலளிப்பது,
36. மக்களுக்கு தொல்லை தராமலிருப்பது,
37. வீண் கேளிக்கைகளிலிருந்து விலகியிருப்பது,
38. நடைபாதையில் கிடக்கும் முற்களை அகற்றுவது.
ஆக மொத்தம் 24+8+38 = 70 கிளைகள் ஈமானில் உள்ளன.
ஸஹீஹுல் புகாரியின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரியில் “ஈமானின் கிளைகள் 69 இருக்கிறது” என்று அதன் ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார். இதில் நாவு சார்ந்த ஈமானில் ஒன்றாக ‘‘ஒவ்வொரு நற்காரியத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கூறி துவங்க வேண்டும்” என்பதையும் சேர்த்து 70 ஆகிறது.
( ஈமானின் வகைகள் பற்றி இறைவன் திருமறையாம் குர்ஆனில் 2: 2-5,117; 21: 1-10 ஆகிய திருவசனங்களில் குறிப்பிட்டுள்ளான்.)
www.nidur.info