வரக்கூடாதா ஷரீஅத் சட்டங்கள்? (TEAM B REPORT)
பெண்டகன் என்ற அமெரிக்க இராணுவ தலைமையகம் ஷரீஅத் சட்டங்கள் அமெரிக்காவில் தலைதூக்கிட கூடாது என்ற பிரச்சாரத்தை வேகப்படுத்திட, ஷரீஅத் சட்டங்கள் அமெரிக்காவின் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்றொரு முழக்கத்தை முன் வைக்கின்றார்கள். இந்த முழக்கத்தின் வழி அவர்கள், அமெரிக்க குடிமக்கள் அனைவரையும் ஷரீஅத் சட்டத்திற்கு எதிராக ஒன்று திரட்டிட முனைகின்றார்கள்.
உண்மையை சொன்னால் மொத்த அமெரிக்க மக்களையும் அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்திற்கு எதிராக திருப்பிட தங்களால் இயன்றதை எல்லாம் செய்து வருகின்றார்கள்.
பெண்டகனுக்கான அறிக்கை தயாரித்த அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இன்னொரு பிரச்சாரத்தையும் செய்ய தொடங்கி இருக்கின்றார்கள்.
ஷரீஅத்- சட்டங்கள் அமெரிக்காவின் அரசியல் சாசன சட்டத்தின் இடத்தை பிடித்து விடாமல் நாம் தடுத்திட வேண்டும் என்றால் முஸ்லிம்களை வளரவிடாமலும் எந்த செயல்களிலும் ஈடுபடவிடாமலும் தடுத்தாக வேண்டும்.
காரணம் முஸ்லிம்கள் இருந்தால் அவர்கள் நிச்சயமாக ஷரீஅத் சட்டங்களை அமெரிக்காவில் நிலைநாட்டிட எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவார்கள். காரணம் அது முஸ்லிம்களின் கடமை என்கின்றார்கள் பென்டகனின் இராணுவ ஆராய்ச்சியாளர்கள்.
அதை அவர்களின் சொற்களில் சொன்னால்,
SHARIA IS AN IMMUTABLE COMPULSORY SYSTEM THAT MUSLIMS ARE OBLIGED TO INSTALL AND THE WORLD REQUIRED TO ADOPT THEM, FAIL TO DO SO BEING DEEMED A DAMNABLE OFFENCE AGAINST ALLAH
ஷரீஅத் முறை என்பது ஒரு கட்டாய முறை. அதனை நிலைநாட்டுவது முஸ்லிம்களின் கடமை. இந்த உலகம் அதை ஏற்று கொள்ள வேண்டும். ஷரீஅத்-ஐ நிலை நாட்டிட தவறுவது, முஸ்லிம்கள் அல்லாஹ்விற்கு எதிராக செய்யும் கண்டனத்திற்குரிய குற்றம்.
எனவே அமெரிக்க முஸ்லிம்களை என்ன செய்யலாம் என்றொரு ஆலோசனையை நடத்தி இருக்கின்றார்கள் பெண்டகன் அதிகாரிகள்.
இதில் பல ஆலோசனைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்றை இங்கே தருகின்றோம்
பொதுவுடைமைவாதிகள் அமெரிக்காவில் தலையெடுத்த போது அவர்களை நாடு கடத்தும் திட்டம் ஒன்று தீட்டப்பட்டு, அவர்கள் மீது இராஜ துரோக குற்றத்தை சுமத்தி நாடு கடத்தினார்களாம் அமெரிக்கர்கள்.
அதே போல் முஸ்லிம்களையும் செய்து விடலாமா என்றொரு ஆலோசனை. இந்த ஆசொசனைக்கு செயல் வடிவம் கொடுத்திடலாமா? எனக் கேட்ட போது பெண்டகன் அதிகாரி ஒருவர் இப்படி பதில் சொல்லி இருக்கின்றார்.
முஸ்லிம்களை நாடு கடத்திடும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுமேயானால் அதில் நாடு முழுவதும் கொந்தளிப்பில்,
இன்னும் எராளமான அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஏற்ப்பார்கள். இதனால் நாளை வந்து விடுமோ என அச்சப் படும் ஷரீஅத் சட்டங்கள் இன்றே வந்துவிடும் என கருத்து கூறி இருக்கின்றார்கள்.
ஏற்கனவே 9/11 தான் அமெரிக்காவில் அதிகமான குடிமக்கள் இஸ்லாத்தின் பக்கம் திரும்பிட காரணமாக அமைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.
இதனால் அமெரிக்க செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கிறது.
இப்போதைக்கு ஷரீஅத்-ஐ நிலை நாட்டிட துடிப்பவர்களை இனங்கண்டு அவர்களை செயல் பட விடாமல் தடுப்பது என முடிவு செய்துள்ளது.
அமெரிக்க ஆய்வாளர்கள் இன்னொரு உண்மையையும் தாங்கள் தயாரித்த ஆய்வறிக்கையில் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
அது மொத்த ஐரோப்பாவிலும் வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருவதை குறிப்பிடுவதாகும். அதனை பென்டகனின் ஆய்வு இப்படி கூறகின்றது.
EUROPE WILL BE AN ISLAMIC CONTINENT BY THE END OF THIS CENTURY (Page: 29:SHARIA THE THREAT TO AMERICA –TEAM B REPORT)
இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பா ஓர் இஸ்லாமியக் கண்டமாக மாறும் என்பதாகும்.
பென்டகனின் இந்த அறிக்கையை படிக்கும் போது அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன வரிகள் தாம் ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றது.
“இப்புவியின் கிழக்கு பகுதிகள் மேற்குப் பகுதிகள் அனைத்தையும் அல்லாஹ் எனக்கு சுருக்கிக் காண்பித்து விட்டான். எதிர்காலத்தில் என் சமூகத்தின் ஆதிக்கம் எனக்கு காட்டப்பட்ட எல்லாப் பகுதிகளையும் சென்றடையும்.” (முஸ்னத் அஹ்மத் : பாகம் 5, பக்கம் 366)
அல்குர்ஆன் பிரகடனப்படுத்துகின்றது :
“அவன் தான் தன்னுடைய தூதை நேரான வழியை கொண்டும் சத்திய மார்க்கத்தை கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குவோர் அதனை வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்கம் வெல்லும். ( 9:32,33)
-Vaigarai Velicham Mgm