ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்துகின்றது – SHARIA THE THREAT TO AMERICA
இப்படியொரு அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கை அதாவது ஷரீஅத் அமெரிக்காவை மிரட்டுகின்றது என்ற அறிக்கையை தயாரித்தது ஏதோ ஒரு தனிமனிதரோ அல்லது ஆராய்ச்சி நிறுவனமோ அல்ல.
அமெரிக்காவின் இராணுவ தலைமையகம் பெண்டகன். இந்த அறிக்கையை தயார் செய்து இருக்கின்றது.
இதில் அங்கம் வகித்தவர்கள் அனைவரும் அமெரிக்காவின் எதிர்காலத்தை மட்டுமல்ல. எதிர்வரும் நாள்களில் எங்கெல்லாம் அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் வகுத்து தருபவர்கள்.
ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்த முடியுமா….?
அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டும் என்றால் அமெரிக்கா செய்து தயாராக வைத்திருக்கும் ஆயதங்களை விஞ்சிடும் வண்ணம் உள்ள ஆயுதங்கள் அமெரிக்காவை அச்சுறுத்தலாம். அல்லது அமெரிக்காவை விஞ்சும் விஞ்ஞான வளர்ச்சியை பெற்ற ஒரு நாடு அமெரிக்காவை அச்சுறுத்தலாம். ஆனால் ஷரீஅத் எப்படி அமெரிக்காவை அச்சுறுத்த முடியும்?
400 பக்கங்களை கொண்ட பென்டகனின் அறிக்கை சொல்கிறது ஷரீஅத்தால் அமெரிக்கா அச்சப்பட்டு நிற்கின்றது என்று!
ஆமாம்! அமெரிக்காவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அமெரிக்காவில் இஸ்லாம் வளருவதற்கு காரணம் அமெரிக்காவில் சென்று குடியேறிய முஸ்லிம்கள் அல்ல. மாறாக அமெரிக்க மக்களே இஸ்லாத்தை அதிக அளவில் ஏற்று வருகின்றார்களாம்.
இந்த மக்கள் அமெரிக்காவின் மேலை நாட்டு நாகரீகத்தை தூக்கி வீசிவிட்டு இஸ்லாமிய நாகரீகத்தையும் இஸ்லாமிய பண்பாட்டையும் விரும்பி பின்பற்றி வருகின்றார்களாம்.
இந்த முஸ்லிம்-அதாவது அமெரிக்க மக்களாகிய பெருகி வரும் முஸ்லிம்கள்- ஷரீஅத் சட்டங்கள் தாம் நமது வாழ்வின் பிரச்சனைகளை தீர்த்திடும் வல்லமை பெற்றவை. ஷரீஅத் ஐ முழுமையாக பின்பற்றிடும் போதே வாழ்க்கை இயற்கையோடும் மனிதனின் இயல்போடும் ஒத்துப்போகும் என்பதை உளப்பூர்வமாக நம்புகின்றார்கள். ஆகவே இனி ஷரீஅத் சட்டங்கள் அமெரிக்க குடிமக்களாகிய நம்மை ஆண்டிடும் சட்டமாக ஆகிட வேண்டும் என விரும்புகின்றார்களாம்.
வெறுமனே விரும்புவதோடு நின்று விடவில்லையாம் அதற்காக அவர்கள் தங்களால் இயன்றதையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்களாம். இதனால் நடப்பில் இருக்கும் அமெரிக்க அரசியல் சாசன மரபுகள் வெளியேற்றப்பட்டு அந்த இடத்தில் ஷரீஅத் கோலாட்சுமாம்.
இப்படியெல்லாம் அமெரிக்காவின் எதிர்காலத்தை கணிக்கும் பெண்டகன் இன்னொன்றையும் குறிப்பிடுகின்றது. அமெரிக்காவின் கொள்கைகளை வகுத்து தந்தவர்கள் ஒரு பெரும் தவறை செய்து விட்டார்களாம் அது.
உலகமெல்லாம் தீவிரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கின்றோம் என அல்லும் பகலும் உற்றுப் பார்த்து கொண்டிருந்தவர்கள் அமெரிக்காவினுள் என்ன நடந்தது என்பதை காணத்தவறிவிட்டார்கள்.
உண்மையில் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போர் GLOBAL WAR ON TERROR இஸ்லாத்திற்கு எதிரான போர்தான். இதை அடிக்கடி நினைவு படுத்தினாலும் இப்போது தான் ஊடகங்கள் இந்த உண்மையை ஒத்து கொள்கின்றன. ஆனாலும் சாக்கு போக்கான சொற்களையே இதற்கு பயன் படுத்துகின்றன.
எடுத்துகாட்டாக பத்து ஆண்டுகளுக்குப் பின் (அதாவது 2001-2011) அமெரிக்காவின் நிலையை விவரிக்க வந்த பிரண்ட் லைன் ஏடு இப்படி குறிப்பிடுகின்றது. “THE WORLD HAS PAID A HEAVY PRICE FOR THE UNITED STATES GLOBAL WAR ON TERROR IN THE TEN YEAR AFTER THE AL-QAIDA ATTACK OF SEPT 11, 2001.
அதாவது பத்தாண்டுகளுக்குப் பின் செப்டெம்பர் 11 2001 –அல் கொய்தா தாக்குதலுக்கு பின் உலகம் ஒரு பெரும் விலையை தந்திருக்கின்றது அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில்.
அல்கொய்தா என்ற அமைப்பு அமெரிக்காவின் கம்ப்யூட்டர்களில் தான் இருக்கின்றது. நிச்சயமாக அது உலகில் இல்லை. பத்து ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கா குடிமக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது.
இந்த பெரும் போரின் இறுதியில் அமெரிக்காவினர் உலகிலிருந்து இஸ்லாத்தை துடைத்திட இயலவில்லை. மாறாக அது இஸ்லாத்தின் கைகளுக்கு வந்து கொண்டிருக்கின்றது. இப்போது பெண்டகனின் ஒரு பகுதியினர் தங்களுடைய முழு கவனத்தையும் ஷரீஅத்-இன் பக்கம் திருப்பி இருக்கின்றார்கள்.
விளக்கமாக சொன்னால் ஷரீஅத் சட்டங்களை மக்கள் மன்றத்தில் பெரும் பேய் எனக் காட்டிட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
“THE LEGAL, POLITICAL-MILITARY DOCTRINE KNOWN WITH ISLAM AS SHARIAH”
அதாவது ஷரீஅத் சட்டம், அரசியல்-இராணுவம் இத்தனையும் உள்ளடக்கியது. இதைத் தான் ஷரீஅத் என அழைக்கின்றார்கள்.
இப்படி அனைத்தையும் உள்ளடக்கிய ஷரீஅத் ஒரு TOTALITARIAN THREAT அதாவது சர்வாதிகார ஆபத்து என பூதகரப்படுத்துகின்றார்கள்.
(SOURCE: PREFACE SHARIAH THE THREAT TO AMERICA)
உண்மையில் ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்தவில்லை, அமெரிக்காதான் ஷரீஅத்தைக் கண்டு அஞ்சுகிறது. இதுதான் உண்மை.