(இஃப்தார் எந்த அளவுக்கு அரசியல்வாதிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கு… ஒரு மீள் பதிவு)
நரேந்திர மோடியை விஞ்சிவிட்ட காதர் மொய்தீன் (முஹ்யித்தீன்)
ஒரு முஸ்லில் ஹஜ்ஜுக்கு செய்வது எப்படி கடமையோ….
ஒரு முஸ்லிம் நோன்பு நோற்பது எப்படி கடமையோ…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரை கேட்டால் ஸலவாத்து சொல்வது எப்படி ஃபர்லான கடமையோ….
அதேபோல் இந்த திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போட வேண்டியதும் முஸ்லிம்கள் மீது ஃபர்லான கடமை.
அறிவிப்பாளர் : காதர் மொய்தீன்
இடம் : இஃப்தார் மேடை
இப்படி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கடமையாக்காத ஒன்றை நமக்கு கடமையாக்கி ஃபத்வா?(மார்க்க தீர்ப்பு?) வழங்குவது யார் தெரியுமா? திமுக வின் ஆயுட்கால கொத்தடிமை முஸ்லிம் லீக்கின் அவமான சின்னம் சாட்சாத் அந்த காதர் மொய்தீன் தான்.
ஃபர்லான கடமை என்றால் என்ன ஆயுள் முழுவதும் செய்வதுதானே?
முஸ்லிம்களை எவ்வளவு கேவலமாக நினைத்துவிட்டார் இந்த பேராசிரியர். அறிவு முத்திப்போய் தலைக்கணம் பிடித்து விட்டதோ என்னவோ!
கருணாநிதியின் உள்ளத்தை குளிர்விப்பதற்காக எதையும் சொல்லத் தயங்காதவர் இவர் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
அரசியல்வாதிகளிடம் ஓட்டுக்காக சீட்டுப்பிச்சைக் கேட்பதையே பிழைப்பாக வைத்துக்கொண்டு சமுதாய சேவை செய்வதாக வேஷம் போடும் இவரை பகிரங்கப்படுத்திய அல்லாஹ் மகத்தானவன் அல்லாஹு அக்பர்.
இவரது பேச்சை கேட்கும்போது பி.ஜே.பி.கூட பரவாயில்லை என்று தோன்றுகிறது! அவர்களாவது முஸ்லிம்களின் உயிருக்கும் சொத்துக்கும் தான் குறி வைப்பார்கள் எனும் அச்சம் முஸ்லிம்களிடம் உள்ளது. ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது நமக்குள்ளேயே இருந்துகொண்டு நமது சமூகத்தை கொச்சைப்படுத்தி ஈமானுக்கே வேட்டு வைக்கும் ஒரு அயோக்கிய சிகாமணி துணிச்சலுடன் நம்மிடையே உலா வந்து கொண்டிருக்கிறார் என்று!
இந்த விதத்தில் இவர் நரேந்திர மோடியையும் மிஞ்சி விட்டார். ஆம்! நரேந்திர மோடிக்குக்கூட இவ்வாறு சொல்வதற்கு துணிச்சல் கிடையாது, ஏன், வேறெந்த தலைவருக்கும் கூட இவரைப்போன்று பேச நா எழாது. முஸ்லிமாக இருந்து கொண்டு பேசினால் எதையும் பேசலாம் முஸ்லிம்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று எண்ணிவிட்டாரோ என்னவோ! இந்த சமூகத்தை மிகவும் தவறாக எடைபோட்டு வைத்துள்ளார் என்பதற்கு அவரது பேச்சே சாட்சி.
இவருக்கு ஆலிம்களின் சப்போர்ட் வேறு….! எப்போது விழித்துக்கொள்ளப் போகிறார்களோ…?! அல்லாஹ்தான் அறிவான்.
ஆலிம்களே இவரை பகிரங்க மன்னிப்பு கேட்கச் செய்யுங்கள். இவரைப்போன்ற சமுதாய அரசியல் பித்தர்களை ஆதரிக்கும் உங்கள் அறியாமையும், அலட்சியமும் இந்த சமூகத்தை படுகுழியில் தள்ளிவிடும் என்பதை நினைவுபடுத்துகிறேன். உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
ஹஜ்ஜின் புனிதத்தைப்பற்றி அறியாத, நோன்பின் மகத்துவம் பற்றிப் புரியாத, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேன்மையைப்பற்றி துளியும் அறிந்திராத ஒருவரை எதற்காக நாம் பேராசிரியர் என்று மதிப்பளித்து அழைக்க வேண்டும்? இதைவிட அறியாமை, கேவலம் ஏதுமுண்டா? அரசியல்வாதி என்றால் எதையும் பேசலாம் என்று நினைத்து விட்டாரோ?!
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பற்றி தவறாக கேவலப்படுத்தி படமெடுத்தவனுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்…?! இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் செய்த தியாகத்தைப் பற்றி துளியளவாவது இவரது மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தால் இவ்வாறு பேசியிருப்பாரா? அல்லாஹ்வின் அதிகாரத்தில் அல்லவா கைவைத்து விளையாடுகிறார்!
நோன்பாளிகளுக்கு தானே கூலி என்றுரைத்து நோன்பை மகத்துவப்படுத்தி அல்லாஹ் அருளியிருப்பதை அணுவளவாவது விளங்கிக்கொள்ள முயற்சித்தாரா…? இல்லையே…! அதன் காரணத்தாலே தானே இஃப்தார் நேரத்தில் அரசியல்வாதிகளை கூட்டி வைத்துக்கொண்டு நோன்பை கேவலப்படுத்தி, அங்கும் தனது அரசியல் எஜமானருக்கு கொஞ்சம்கூட இறையச்சமின்றி வரம்பு மீறி பாராட்டு மழை பொழிவதையே தொழிலாகக் கொள்ள முடிகிறது இவர்களைப் போன்றவர்களால்!அதில் ஏற்பட்ட சறுக்கல்தான் இன்று அவரை இவ்வாறெல்லாம் பேசும் நிலைக்கு தள்ளிவிட்டது. இதே நிலை நீடிக்குமானால் அடுத்து “கருணாநிதிக்கு கும்பிடு போடுவதும் ஃபர்ளு” – கட்டாயம்” என்று சொல்லமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை தானே!
இதுபோன்று வரம்பு மீறி பேசுவது இவருக்கு ஒன்றும் புதிதல்ல, எனவே மயிலிறகால் வருடி விடுவது போன்ற அறிவுரைகளெல்லாம் எவ்வித பலனையும் தந்துவிடாது, புத்திக்கு உரைப்பது போல் நச்சுன்னு தலையில் கொட்டியதுபோல் இருக்க வேண்டும் புத்திமதி….! அதுவும் கூட இவரைப்போன்ற அரசியல்வாதிகளிடம் செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை.
இதற்கும் ஏதேனும் சால்ஜாப்புகள் சொல்லி நியாயப்படுத்த ஒரு கூட்டம் இருக்கும். கடைந்தெடுத்த வேஷதாரிகள், சமுதாயத்தின் பெயரைச் சொல்லியே பிழைப்புநடத்தி, இவர்கள் இல்லாவிட்டால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எல்லோரும் கொல்லப்பட்டு விடுவார்கள் என்பது போன்ற பூச்சாண்டிகளை காட்டி ஏமாற்றித்திரிபவர்கள்…. வெண்சாமரை வீசி வருடிவிடாதீர்கள்.
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பில் நமது முஸ்லிம் சகோதரர்களை கொத்து கொத்தாக சிரையில் அடைத்து, பி.ஜே.பி.யை குளிர்விப்பதற்காக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து கொடுங்கோல் அரசாட்சி புரிந்த கருணாநிதிக்கும், மோடியைப்பற்றி குற்றம் சுமத்திய தனது கட்சி எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று கொக்கரித்த கருணாநித்திக்கும், ஏன் தேர்தலுக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தால் மோடிக்குக்கூட முட்டுக்கொடுக்க தயாராக இருக்கும் அதே கருணாநிதிக்கு ஓட்டு போடுவது ஃபர்ளு என்று சொல்வது கருணாநிதியின் விசுவாசியான இவருக்கு வேண்டுமானால் சரியாகப்படலாம் ஆனால் இறைவனை அஞ்சி வாழும் உண்மையான முஸ்லிம்கள் ஒருபோதும் அதனை ஏற்க மாட்டார்கள். (இப்படி சொல்வதால் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதாக அர்த்தமல்ல. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கிறது.)
”ஒரு முஃமின் ஒரே பொந்தில் இருமுறை கொத்தப்பட மாட்டான்” என்றார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஆனால், நாமோ ஆயிரம் முறை கொத்தப்பட்டாலும் உணர்ச்சியின்றி மரக்கட்டை போல் இருப்பதால்தான் இவரைப்போன்றவர்களை வைத்தே நம் கண்ணில் குத்துகிறார்கள் நம்மை வைத்து ஆதாயம் தேடுபவர்கள்.
இனி எவரும் மார்க்கத்தை வைத்து அரசியலும், பிழைப்பும் நடத்துவதை இந்த சமூகம் அனுமதிக்கக்கூடாது.
– எம்.ஏ.முஹம்மது அலீ
மேலும் சிலரின் கருத்தையும் இங்கு பதிவு செய்கிறோம்…
”அப்படித்தான் சொல்வேன்”
இந்த காதர்மைதீன் கலைஞர் செய்தி video clip கேட்டதும் நான் என்னை அறியாத ஒரு வித இமோஷன் ஆகி முஸ்லீம் லீக் இணையதளம் சென்று அவரின் தொலைபேசி எண் எடுத்து அவரை கேள்வி கேட்டேன். “நீங்கள் நிதானத்துடன் இப்படி பேசிநீரா இல்லையெனில் மது அருந்து பேசினீரா?” என்று கேள்விகளை எழுப்பினேன் அதற்கு அவர் “ஆம் நான் மதுபோதையில் தான் சொன்னேன் அப்படித்தான் சொல்வேன்” என்று பதில் அளித்தார் பின் எனக்கு ஒரு வித கட்டுக்கடங்காத கோபம்.. பின்பு அவரை சரியாக வாங்கி விட்டேன், பின் அவர் தொடர்பை துண்டித்து விட்டார்.
– Kader Kvh
ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே இப்படி இருந்தால் அதிகாரத்தில் அமர்ந்து விட்டால்…
முஸ்லிம்கள் ஒரு முஸ்லிமுக்குதான் ஓட்டுபோடனும் என்ற வாதம் கேட்பதற்கு நன்றாகதான் இருந்தது
முஸ்லிம் முஸ்லிமாக இருக்கவேண்டும் அப்படி இல்லாத ஒருவரை முஸ்லிம் பெயர்வைத்துள்ளார் என்பற்காக ஆதரித்தால் அதனால் நன்மையைவிட தீமைதான் அதிகம் என்ற வாதம் சரியானதா என சந்தேகத்திலேயே பல பேர் இருந்தார்கள்.
ஒருவர் தவறானவர் என தெரிந்தும் அவர் முஸ்லிம் என்பதற்காக அவரை ஆதரிக்ககூடாது என்பதுதான் மிகமிக சரியானது என்பதை பாமரனும் புரியும்படி நிரூபித்து மக்களை தெளிவுபடுத்தி இருக்கிறார் முஸ்லிம் பெயர்தாங்கி காதர்மைதீன்.
அல்லாஹ் மனிதனுக்கு எதை எதை கடமை என சொல்லி இருக்கிறானோ அதைகூட்டவோ குறைக்கவோ மனிதனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
ஆனால் பதவி வெறி, உலக ஆதாயம் பொன்றவைகள்,மர்க்கத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு திமுக வுக்கு ஓட்டு போடுவது முஸ்லிம் கடமை என சொல்லும் தைரியத்தை கொடுக்கிறது.
அதுவும் நோன்பு எப்படி கடமையோ தொழுகை எப்படி கடமையோ அதே போல திமுகவுக்கு ஓட்டு போடுவதும் முஸ்லிம்களுக்கு கடமை என சொல்லியுள்ளார்
இதை சொல்லும் துனிச்சலை கொடுத்தது யார்? அவர் சாமியாரிடம் போனாலும் பரவாயில்லை விநாயகருக்கு போஸ்டர் போட்டாலும் பரவாயில்லை ஐயப்பன் கோயிலுக்கு போவோருக்கு லைட் கொடுத்தாலும் பரவாயில்லை அவர் முஸ்லிம், அவர்கட்சி முஸ்லிம்கட்சி என ஓட்டு போட்டதால் வந்த துனிச்சல்தான் இந்த அளவுக்கு வரம்புமீற வைத்துள்ளது
இதே வர்த்தையை ஒரு முஸ்லிம் பெயர் இல்லாதவன் சொல்லி இருந்தால் நாம் சும்மா இருந்து இருப்போமா?
முஸ்லிம் பெயர் வைத்துள்ளார் என்பதற்காக பொறுக்கி, பிராடு, பித்தலாட்டகாரன், திருடன் இவனுக்கல்லாம் ஆதரவளித்தால் இதுதான் கதி!!
பெயர்தாங்கிகள் இதையே தனக்கு கொடுத்த அங்கீகாரமாக நினைத்து இன்னும் பல பர்ளுகளை உருவாக்குவார்கள்.
ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே இப்படி இருந்தால் அதிகாரத்தில் அமர்ந்து விட்டால் பிஜெபியின் கொள்கைதான் நம் கொள்கை என சொன்னாலும் ஆச்சரியம் இருக்காது.
முஸ்லிம் பெயர்தாங்கிகளை ஒதுக்கிவைத்து விட்டு சமுதாயத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களை ஆதரிப்பதுதான் இதற்கெல்லாம் தீர்வாக இருக்கும் இதுதான் சரியான புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்
இதை அனைத்து முஸ்லிம்களுக்கும் காதர்மைதீன் மூலமாக அல்லாஹ் வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ்
– Ansari Muthupet
www.nidur.info