இரட்டையர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில உண்மைகள்!
இரட்டைக் குழந்தைகள் என்பது பொதுவாக அனைவரின் ஆவலை தூண்டக்கூடிய ஒரு விஷயமாகும். பெரும்பாலானோருக்கு இது ஆர்வம் மற்றும் மர்மம் நிறைந்ததாகக் கூடத் தோன்றும். இரட்டைக் குழந்தைகளைப் பற்றிய மர்மங்கள் மற்றும் தவறான புரிதல்களை கண்டறிந்து, அவற்றிற்கான உரிய பதில்களை அறிவோம் வாருங்கள்!
குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள்!!! இங்கு இரட்டையர்களைப் பற்றி அவ்வளவாக வெளியே அறியப்படாத சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை ஐடென்டிக்கல் இரட்டையர்களாக இருக்க முடியுமா? இதற்கான எளிமையான ஒற்றை வரி பதில் – ‘முடியாது’ என்பதே. உண்மையில் பொதுமக்கள் “ஃப்ரட்டெர்னல்” அல்லது “ஐடென்டிக்கல்” என்ற சொற்களின் பிரயோகங்களைப் பற்றி தவறான புரிதலையே கொண்டிருக்கிறார்கள். இவை இரட்டைக் குழந்தைகள் உருவாகும் முறையை விளக்க உபயோகிக்கப்படுகிறதேயன்றி, அவர்களின் தோற்றத்தைப் பற்றி அல்ல.
மோனோஸைகாட்டிக் (ஐடென்டிக்கல்) இரட்டையர்கள் ஒரே பாலினமாகவே இருப்பர். ஒரே ஸைகாட்டிலிருந்து ஐடென்டிக்கல் இரட்டையர்கள் உருவாகின்றனர். ஐடென்டிக்கல் இரட்டையர்கள் பெண் மற்றும் ஆணாக இருக்கலாமேயன்றி, ஆண் மற்றும் பெண்ணாக இருக்க முடியாது.
அதே சமயம், ஃப்ரட்டெர்னல் இரட்டையர்கள் இரு வேறு விந்தணுக்களால் ஃபெர்ட்டிலைஸ் செய்யப்பட்ட இரு வேறு கருமுட்டைகளிலிருந்து உருவாகின்றனர். எனவே, ஃப்ரட்டெர்னல் இரட்டையர்கள் (fraternal twins) இரண்டு ஆண் குழந்தைகளாகவோ அல்லது இரண்டு பெண் குழந்தைகளாகவோ அல்லது ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை என்றோ இருக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
இரட்டையர்கள் வெவ்வேறு பிறந்த நாட்களைக் கொண்டிருக்க முடியுமா? இரட்டையர்கள் என்போர் ஒன்றாகப் பிறந்த குழந்தைகள் என்றே எண்ணப்படுகிறார்கள். ஆனால் மிகவும் அபூர்வமாக ஒரே நாளில் இரு குழந்தைகளும் பிறக்காமல், அடுத்தடுத்த நாளில் பிறந்தவர்களும் இருக்கின்றனர். பெரும்பாலும் நிமிட இடைவெளியுடன் பிறந்திருப்பவர்களே அதிகம். இதிலிருந்து என்ன தெரிகிறது, இரட்டையர்கள் வெவ்வேறு பிறந்த நாட்களையும் கொண்டிருக்க முடியும்.
இரட்டைக் குழந்தை பிறப்புக்கு ஏதேனும் மரபணு அல்லது பரம்பரை சார்ந்த தொடர்பிருக்குமா? தாயானவள் ஹைப்பர்-ஓவுலேசன் ஜீனை மரபு ரீதியாகப் பெற்றிருந்து, அதன் விளைவாக ஃப்ரட்டெர்னல் இரட்டையர்கள் (fraternal twins) பிறந்திருந்தால் மட்டுமே, அது மரபணு ரீதியிலானது என்று கருத முடியும். ஐடென்டிக்கல் (மோனோஸைகாட்) இரட்டையர்கள் உருவாவது தற்செயலானதேயன்றி, பரம்பரை குணம் அல்ல.
இரட்டையர்கள் தங்களுக்கு இடையே இரகசிய மொழியைக் கொண்டிருப்பரா? இரட்டையர்கள் தங்களுக்கிடையே ஒரு இரகசிய பாஷையைக் கொண்டிருப்பர் என்பது வெறும் கட்டுக்கதையே. க்ரிப்டோஃபேஸியா, ஆட்டோனாமஸ் லாங்க்வேஜ் அல்லது இடியோக்ளாஸியா போன்ற சொற்கள் இரட்டையர்களின் மொழியைக் குறிக்க உபயோகிக்கப்படும் சொற்களாகும்.
பொதுவாக குழந்தைகள் அடுத்தவரைப் பார்த்து சம்பந்தமில்லாத ஒலியெழுப்பி புரிந்து கொள்ள இயலாத மொழியில் பேசுவதைப் போலவே, இரட்டை குழந்தைகளும் பேசிக் கொள்ளும் மொழி தானே தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறு ஒலியெழுப்புவதன் மூலம் குழந்தைகள் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தவும், தங்களின் மொழியை வளர்த்துக் கொள்ளவும் முற்படுகின்றன.
இரட்டையர்களின் கைரேகைகள் ஒரே மாதிரியாக இருக்குமா? ஐடென்டிக்கல் (மோனோஸைகாட்) இரட்டையர்களைப் பொறுத்தவரை, இதற்கான பதில் ‘இல்லை’ என்பதே ஆகும். ஐடென்டிக்கல் இரட்டையர்கள் ஒரே மாதிரியான மரபணு உருவாக்கத்தைக் கொண்டிருப்பர். அவர்களின் டிஎன்ஏ ஒரு விதைப்பையில் உள்ள இரு விதைகளைப் போல் பிரித்தறிய முடியாதவாறு ஒரே மாதிரியாக இருக்கும்.
source: http://tamil.boldsky.com/