நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் – யூதர்கள் உறவு
பேராசிரியர் கே. தாஜுத்தீன், எம்.ஏ.
இத்தலைப்பை இரு பிரிவுகளாகப் பார்ப்போம். ஒன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வருவதற்கு முன்னுள்ள யூதர்களின் நிலை. மற்றொன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்தபின் குறிப்பாக கைபர் போர் தொடங்குவதற்கு முன்னுள்ள நிலை.
கி.மு. 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டில் சிரியாவிலிருந்து யூதர்கள் வெளியேறி மதீனாவில் குடியேறினார்கள். இப்பகுதியில் அவர்கள் குடியேற முக்கிய காரணம் தவ்ராத்தில் வாக்களிக்கப்பட்டு, முன்னறிவிப்ப செய்யப்பட்ட அந்த நபி இப்பகுதியில் தான் தோன்றுவார், அத்தோடு அவர் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழித்தோன்றலாய் இருப்பார், அவரோடு சேர்ந்து படிப்பறிவில்லாத அரபுகளை வென்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் குடியேறினர்.
அடுத்தடுத்த தலைமுறை அரபு மொழியை தாய்மொழியாக்கி, அரபு பெயர்களை சூட்டிக்கொண்டு, அரபுப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாலும தங்களின் தனித்தன்மையை இழக்காமல் இருந்தனர். அன்றைய மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதிப்பேர் யூதர்களாக இருந்தார்கள்.
அவர்கள் நகை வியாபாரிகளாகவும், வளமிக்க நிலப்பரப்பிற்கும், நீர் நிலைகளுக்கும் உரிமையாளர்களாகவும், ஆயுத உற்பத்தியாளர்களாவும், வட்டித் தொழில் செய்து பொருளாதார ரீதியாக பெரும் வலிமை கொண்டவர்களாகவும் ஆகிவிட்டிருந்தார்கள். கோபுரங்களுடைய கோட்டை கொத்தளங்கள் என்று பார்த்தால் 13 அரபுகளுக்கும் 59 யூதர்களுக்கும் சொந்தமாக இருந்தன.
எழுதப் படிக்கத் தெரியாத அரபுகளை மிகவும் வெறுத்து வந்தனர். அவர்கள் சொத்துகள் தங்களுக்கு ஆகுமானது என்றும் தாங்கள் நாடியபடி அவற்றை அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் கருதினர். மார்க்கம் என்ற பெயரால் மந்திர வேலை செய்வது, ஜோதிடம், பஞ்சாங்கம் பார்ப்பது,செய்வினை மட்டுமே செய்து வந்தனர்.
அரபுகளிடையே வெறுப்பை, பிளவை, சந்தேகத்தை விதைத்து ஒற்றுமையை குலைத்து அவர்களிடையே போர்த் தீயை மூட்டி அதில் குளிர் காய்ந்து கொண்டு இருந்தனர். கஸ்ரஜ் என்ற அரபு குலத்தாருடன் பனுகைனுகா என்ற யூத குலமும், அவுஸ் என்ற அரபு குலத்தாருடன் பனுஅந்நதீர், பனுகுரைளா போன்ற யூத குலத்தார்களும் ஒப்பந்தங்கள் செய்திருந்தனர். இவர்கள் தவிர 20 க்கும் மேற்பட்ட யூத குலத்தார்களும் மதீனாவிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் வாழ்ந்து வந்தனர்.
யூதர்களில் அப்போது 2000 க்கும் அதிகமான போர் வீரர்கள் இருந்தனர்.
சுருங்கக்கூறின் அனைத்துத் துறைகளிலும் அன்று மதீனாவில் யூதர்கள் முன்னேறியிருந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வரும் முன்னே, அவர்கள் குபாவில் தங்கி இருக்கும் போதே அவர்கள் மீது யூதர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.
இதை அன்னை சஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா (முன்னாள் யூதப் பெண்) அவர்களே அறிவிக்கிறார்கள்:
‘எனது தந்தைக்கும் எனது தந்தையின் சகோதரருக்கும்; மிகவும் பிரியமான சிறுமியாக நான் அப்போது இருந்தேன். அவர்களின் மற்ற பிள்ளைகளுடன் நான் இருந்தால் அவர்கள் என்னையே தூக்கி கொஞ்சுவார்கள். நபி அவர்கள் குபாவில் அமர் இப்னு அவ்ஃப் கிளையாரின் வீட்டில் தங்கி இருந்தபோது அவர்களைப் பார்ப்பதற்கு என் தந்தையும், என் தந்தையின் சகோதரரும் அதிகாலையிலேயே சென்றனர். சூரியன் மறையும் வரை நபியவர்களுடன் அவர்கள் போசிக்கொண்டிருந்தார்கள்.
மாலைதான் வீடு திரும்பினார்கள். மிகவும் வாடியவர்களாக, களைத்தவர்களாக காணப்பட்டனர். வழக்கம் போல் உற்சாகத்துடன், சிரித்த முகத்துடன் நான் அவர்களிடம் விரைந்தேன். ஆனால் அவர்களில் எவரும் என் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.
என் தந்தையின் சகோதரர் என் தந்தையிடமும், உபையிடமும: ‘உண்மையில் அவர்தான் இவரா?’ அதற்கு உபை: ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரேதான்’
சிறிய தந்தை: ‘உண்மையில் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறதா உங்களுக்கு’?
உபை: ‘ஆம்’, ஆனால் என் நெஞ்சு வெறுப்பால் பற்றி எரிகிறது, அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உயிரோடு இருக்கும் காலம்வரை அவரிடம் பகைகை கொள்வேன்’ என்றார் என் தந்தை.
இதற்கு அப்துல்லாஹ் பின் சலாம் ரளியல்லாஹு அன்ஹு என்ற யூத அறிஞர் (ரப்பி) இஸ்லாத்தை தழுவியபோது நடந்த நிகழ்ச்சியும் சான்றாகும்.
அப்துல்லாஹ் பின் சலாம் ரளியல்லாஹு அன்ஹு பெரிய யூதப் பாதிரியாராக இருந்தார். நபியவர்கள் மதீனாவில் நஜ்ஜார் கிளையினரிடம் வந்து தங்கியிருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்தவுடன் நபியவர்களைச் சந்தித்து அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டார். அந்தக் கேள்விகளின் பதிலை ஒரு நபியைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. நபியவர்கள் அதற்குரிய பதில்களைச் சரியாகக் கூறியதைக் கேட்ட அப்துல்லஹ் பின் சலாம் ரளியல்லாஹு அன்ஹு அதே இடத்தில், அதே சமயத்தில் நபியவர்களை ஏற்று இஸ்லாத்தை ஏற்றார். பின்பு அவர் நபியவர்களிடம் ‘யூதர்கள், முன்னுக்குப்பின் முரணாக பேசக்கூடியவர்கள். நான் முஸ்லிமானது அவர்களுக்குத் தெரிந்தால் என்னைப் பற்றி அவதூறு கூறுவார்கள். எனவே நான் மறைந்து கொள்கிறேன். என்னைப் பற்றி அவர்களிடம் நீங்கள் விசாரியுங்கள் என்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூதர்களை வரவழைத்தார்கள். அப்துல்லாஹ் பின் சலாம் ரளியல்லாஹு அன்ஹு அறைக்குள் மறைந்து கொண்டார். யூதர்கள் வந்தவுடன் நபியவர்கள் ‘அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்’? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘எங்களில் மிக அறிந்த மார்க்க மேதை. மேலும், எங்களில் மிக அறிந்த மார்க்க மேதையின் மகனாவார்.அவர் எங்களில் மிகச் சிறந்தவர். எங்களில் மிகச் சிறந்தவரின் மகனாவார். அப்போது நபியவர்கள் ‘அப்துல்லாஹ் பின் சலாம் முஸ்லிமாகிவிட்டால் நீங்கள் அவரைப் பற்றி என்ன சொல்வீர்கள்’? என்றார்கள். அதற்கு யூதர்கள் ‘அல்லாஹ் அதிலிருந்து அவரைப் பாதுகாக்க வேண்டும்’ என்று இரண்டு அல்லது மூன்று முறைக் கூறினார்கள்.
அப்போது அறையிலிருந்து வெளியேறி ‘ அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்று அப்துல்லாஹ் பின் சலாம் ரளியல்லாஹு அன்ஹு கூறினார். இதனைக் கேட்ட யூதர்கள் ‘இவன் எங்களில் மிகக் கெட்டவன். மேலும், கெட்டவனின் மகன்’ என்றனர். (புகாரி)
இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் நுழைந்த முதல் நாளிலேயே யூதர்களிடம் பார்த்த முதல் அனுபவமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டாம் அகபா உடன்படிக்கையின்படி மதீனா வந்தபின் உலகின் முதன் முதலாக எழுதப்பட்ட அரசியல் சட்டம் உருவாக்கப்படுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை அதன் வார்த்தைகள் மாறாமல் அப்படியே நம் வரை வந்துள்ளன.
அதில் 47 விதிகள் உள்ளன. விதிகள் 1 முதல் 23 வரை உள்ள பகுதி நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் (அன்சாரிகள் 10 முஹாஜிர்கள்) உரியன. விதிகள் 24 முதல் 47 வரை உள்ள பகுதி நபியவர்களுக்கும் யூதர்களுக்கும் உரியன. இரண்டாம் பகுதியின் நிபந்தனைகளில் சில:
– யூதர்கள் தங்கள் மார்க்கப்படியும் முஸ்லிம்கள் தங்கள் மார்க்கப்படியும் வாழ்வர்.
– இரு சாராரில் எவர் தாக்கப்பட்டாலும் மற்றவர் அவர் உதவிக்கு வர வேண்டும்.
– ஒருவர் மற்றவர்க்கு எதிராக செயல்படுதல் கூடாது.
– அநீக்கு ஆளானவர் உதவி செய்யப்படுவார்.
– முஸ்லிம்களுடன் சேர்ந்து போரில் ஈடுபட நேரிட்டால் போரின் செலவினங்களில் பங்கு பெறவேண்டும்.
– இந்த ஒப்பந்தகாரர்களுக்கு மதீனா ஒர் புனித பூமி.
– அது அந்நியர்களால் தாக்கப்படுமானால் இதன் ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் தங்கள் உடல், பொருள், ஆவியை தந்து மதீனாவை பாதுகாத்திடவேண்டும்.
– மக்கத்து குறைஷிகளுடன் எவ்வித வியாபாரத் தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. எந்த உதவியும் பாதுகாப்பும் அளித்தல்; கூடாது.
– ஒப்பந்தக்காரர்களிடையே கருத்து வேறுபாடுகளால் பிரச்னை, பிணக்கு ஏற்பட்டால் அல்லாஹ், நபியவர்களின் தீர்ப்புக்கு கட்டுப்படவேண்டும்.
– ஒப்பந்தக்காரர்களுக்கு பழிக்குப் பழி வாங்குவதற்கு முழு உரிமையுண்டு.
ஒன்பது மாதங்கள்தான் கடந்தன. இவை போன்ற இன்னும் பல ஒப்பந்த விதிகள் ஒவ்வொன்றாக வேண்டுமென்றே அப்பட்டமாக அவர்கள் மீறினார்கள்.
இந்த ஒப்பந்த மீறல் பனுகைனுகா சந்தையில் யூத அங்காடி ஒன்றில் ஒரு முஸ்லிம் பெண் பொருள் வாங்கும் போது சில யூத கயவர்களால் கேலி கிண்டலுக்குள்ளாக்கப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்டு சமூகத்தில் குழப்பத்தையும், ஒழுங்கீனத்தையும் ஏற்படுத்தியதிலிருந்து ஆரம்பமாகிறது. அப்பெண்ணின் பாதுகாப்பிற்கு சென்ற முஸ்லிம் கடைகாரனை கொண்று விடுகிறார். பிறகு அந்த முஸ்லிமும் கொல்லப்படுகிறார். விளைவு போருக்கு அந்நிகழ்வே வித்தாகிவிட்டது.
யூதர்கள் மதீனாவில் எண்ணிக்கையில் சற்று குறைவுதான். எனினும் தங்கள் ஆதிக்கத்தை, செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள மதீனாவில் உள்ள அரபு குலங்களுக்கிடையே சாமர்த்தியமாக பகையை வளர்த்து வந்தனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகைக்குப்பின் மதீனாவின் இரு பெரும் குலத்தார்களான கஸ்ரஜ், அவுஸ் குலத்தார்கள் இஸ்லாத்தினால் ஒன்றுபட்டு விட்டனர்.
முஹாஜிர்களுக்கும் யூதர்களுக்கும் இதற்குமுன் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. இப்போது அன்சாரிகள் – முஹாஜிர்கள் கொள்கை ரீதியிலான சகோதரத்துவ உறவு ஏற்பட்டு அது வளர வளர அது முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் உள்ள இடைவெளியை அதிகமாகியது.
இஸ்லாமிய பொருளாதாரம் அவர்களது வட்டித் தொழிலைப் பாதித்தது.
மார்க்க ரீதியாக நபியவர்களின் வருகை, யூதர்களைப் பற்றிப் பேசும் குர்ஆன் வசனங்கள் போன்றவை அவர்களைப் பலவீனப்படுத்தின.
குறைஷிகள் தங்களின் பெருமை, கர்வம், பாரம்பர்யம் பாழ்பட்டு விடக்கூடாது, தங்களின் ஆதிக்கம் தொடர்ந்திட இஸ்லாம், முஹம்மது, முஸ்லிம்கள் எதிர்க்கப் படவேண்டும் என்ற ளுரிநசழைசவைல ஊழஅpடநஒ தான் காரணம்.
யூதர்கள் தங்களின் பொய்கள் – பொருளாதார கொள்கைகள், பொறாமை மற்றும் கீழ்த்தரமான நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சமே காரணம். அதாவது ஐகெநசழைவைல ஊழஅpடநஒ. எனவே இஸ்லாத்தை, முஹம்மதை, முஸ்லிம்களை எதிர்த்தாக வேண்டும் என்ற நிர்பந்தம்.
யூதர்களின் தீய நடவடிக்கைகளில் சில:
– நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் அன்னை ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் திருமணம் பற்றிய விமர்சனம்.
– அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கற்பு குறித்து பரப்பட்ட அவதூரில் கலந்து கொண்டது.
– பனுநஜ்ஜார் கோத்திரத்தார்களுக்கு இஸ்லாமிய பயிற்சியளிக்க நியமிக்கப்பட்ட அபூஉஸாமா அஸது பின் ஜராஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாலிப வயது மரணம் குறித்து,
‘முஹம்மத் உண்மையில் நபியாய் இருந்தால் அவர் தோழர் இந்த இளம் வயதில் மரணமடைய மாட்டார்’ என்றனர் யூதர்கள்.
– அவுஸ் கஸ்ரஜ் குலங்களைச் சார்ந்த சிலரை போலி முஸ்லிம்களாக்கி முஸ்லிம்களின் திட்டங்களi – அந்தரங்கங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சித்தது. 7 பேர்கள் அவ்வாறு கைக்கூலிகளாக செய்ல்பட்டனர்.
– யூதர்களிலேயே சிலரை பெயருக்கு முஸ்லிமாக்கி சில மாதங்களுக்குப்பின் மீண்டும் யூத மதத்திற்கு திரும்ப வைத்தல். ஊடன், ‘உண்மையான மார்க்கத்தை முஹம்மத் போதித்திருந்தால் யாரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறியிருக்கமாட்டார்கள்’ என்று அற்ப்ப – அசிங்கப் பிரச்சாரம் செய்தான்.
– பனுநுளைர் என்ற யூத குலத்தைச் சேர்ந்த சலீம் பின் அபிஅல்ஹகம் என்பவன் ‘கத்ஃபான் மற்றும் சிறு சிறு அரபு குலத்தார்களுக்கு லஞ்சம் கொடுத்து மதீனாவைத் தாக்க வைத்தான்.
– குறைந்தது மூன்று முறை நபியவர்களை கொலை செய்ய யூதர்கள் திட்டமிட்டனர்.
– உம்முல் கர்ஃபா என்ற யூத பெண் கவி கவிதைகளால் வசை பாடினாள். துன் 5 மகன்கள் உட்பட 40 யூதர்களை தயார்படுத்தி நபியவர்களை கொலை செய்ய தயார் செய்தாள்.
– ஜைனப் பின் அல் ஹர்ஸ் என்ற யூதப் பெண் நபியவர்களை உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயன்றாள்.
பனுநதீர் குலத்தாரிடம் பேசுவதற்கு சென்ற நபியவர்களை கொல்வதற்கு அவர்கள் திட்டமிட்டனர்.
– தேவையற்ற, குழப்பம் விளைவிக்கும் நோக்கத்துடன் கேள்விகள் கேட்பது.
‘அல்லாஹ்தான் மனிதனைப் படைத்தான் என்றால் அல்லாஹ்வைப் படைத்தது யார்’?
‘தந்தையின் விந்தினால் பிறக்கம் குழந்தை ஏன் தாயின் தோற்றத்தைப் பெறுகிறது’?
‘உங்கள் தூக்கம் எத்தகையது’?
‘யாகூப் அலைஹிஸ்ஸலாம் தனக்குத் தானே தடைசெய்துக் கொண்டவைகள் யாவை’?
‘வேத வெளிப்பாட்டை உங்களுக்குத் கொண்டுவரும் வானவர் நிலை என்ன’?
– கிப்லா மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதது.
– இரண்டு பொருள்பட பேசுவது. (அல்குர்ஆன் -அந்நிஸா: 4:46)
-சூனியத்தின் மூலம் தொல்லை – லபீத் பின் அஃஸம் அதை செய்தான்.
– ஒப்பந்த விதிகளை மீறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் குறைந்தது 4 போர்களில் ஈடுபட்டனர்.(பனுகைனுகா போர், பனுநுளைர் போர், பனுகுறைளா போர், கைபர் போர்)
இப்படி அந்த சமுதாயத்தின் குற்றப்பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. அன்றிலிருந்து இன்று வரை எந்த தவறுக்கும் இவர்கள் வருந்தியதேயில்லை. ஆயினும் தாங்கள் அநியாயம் இழைக்கப்பட்டுவிட்டதாக எவ்வித ஆதாரமின்றி தொடர்ந்து இஸ்லாத்தையும் நபியவர்களையும் இழிவுபடுத்தியே வந்திருக்கின்றனர். ஒரு குறைந்த பட்ச தண்டனையைக்கூட அவர்களின் மோசடிகளுக்கும், துரோகங்களுக்கும், உடன்படிக்கை மீறல்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும், கொலைகளுக்கும், குழப்பங்களுக்கும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் வரலாறு.
இவர்களைப் பற்றித்தான் அல்லாஹ்:
‘எவர்களுக்கு நாம் வேதம் அருளியிருக்கின்றோமோ அவர்கள், தங்களுடையை மைந்தர்களை இனம் கண்டு அறிந்து கொள்வதைப் போல் (நபியை) அறிவார்கள’. (அல்குர்ஆன் 2:146)
‘நீர் இறைவனால் அனுப்பப்பட்டவர் அல்லர் என்று இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர். நீர் கூறும்: எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வின் சாட்சியம் போதுமானது. மேலும், அவனுடைய வேதத்தின் அறிவைப் பெற்றிருப்பவரின் சாட்சியம் போதுமானது’. (13:43)
ஆனால் நூற்றுக்கு நூறு அவர்கள் அனைவரும் அப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது. காரணம் அன்றிலிருந்து இவர்களில் நியாயவான்கள், உண்மை விரும்பிகள், உண்மை நம்பிகள் இருந்துதான் வந்துள்ளனர்.
அவர்களைப் பற்றியும் அல்லாஹ்:
(நபியே) முன்னர் எவர்களுக்கு நாம் வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள், உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதத்தின் மூலம் மகிழ்ச்சியடைகிறார்கள். (அல்குர்ஆன் 13:36)
மேற்கண்ட நீண்ட குற்றப்பட்டியலுக்குப் பின்னரும், நபியவர்கள் மரணிக்கும் போது அவர்களின் கவச ஆடை ஒரு யுதனிடம் அடமானத்தில் இருந்தது என்பதையும், நபியவர்களின் பணியாட்களில் ஒரு யூதனும் இருந்தான் என்பதும், நோயுற்றிருந்த ஒரு யூதனை நலம் விசாரிக்க சென்றார்கள் என்பதும், ஒரு யூதனின் மரண ஊர்வலத்தின் போது எழுந்து நின்று இறந்த அந்த யூத உடலுக்கு மரியாதை செய்தார்கள் என்பதையும், பனுகுரைழா போருக்குப்பின் தவ்ராத்படியே குற்றம் புரிந்த யூதர்கள் கொல்லப்பட விரும்பினார்கள் – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் தீர்ப்பல்ல அது – என்பதையும், கைபர் போருக்குப்பின் விவசாயம் செய்ய யூதர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதையும் ஒரு போதும் நபியவர்கள் யூதர்களுடன் அநீதியாக நடந்து கொள்ளவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்க.
ஆக்கம்: பேராசிரியர் கே. தாஜுத்தீன், எம்.ஏ.
source: http://igckuwait.net