”…நாங்கள் இல்லை என்றால்… அப்படி ஆகியிருக்கும், இப்படி ஆகியிருக்கும் என்று சொல்ல வேண்டாம்.” இப்படி சொல்வதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கிறார்கள். ஏனெனில் காலம் அல்லாஹ்வின் கரங்களில் உள்ளதே தவிர எந்த மனிதனின் எந்த இயக்கத்தவரின் கரத்திலும் இல்லை.
பொதுவாகவே தமிழகத்திலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும், இயக்கவாதிகளும் தங்களது சாதனைகளை குறிப்பிடும்போது இதுபோன்று குறிப்பிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார்கள்.
மாற்றார்களுக்கு இது கலாச்சாரமாக இருக்கலாம் ஆனால் ஒரு முஸ்லிம் இதுபோன்ற வார்த்தைகளை உச்சரிப்பதை விட்டும் விலகிக்கொள்ள வேண்டும். தயவுசெய்து முஸ்லிம் அரசியல் மற்றும் இயக்கவாதிகள் இதுபோன்று பேச வேண்டாம்.
மறுமையுடன் இம்மையை ஒப்பிடும்போது இம்மை மிக மிக அற்பமானது என்கிறது இறைவேதம். எனவே இம்மைக்காக மறுமையை இழந்துவிட வேண்டாம்.