கொடுங்குணமற்ற வாழ்க்கை!
மௌலானா வஹிதுதீன்கான்
குர்ஆனும் நபிமொழியும் இணைந்து இஸ்லாம் போதிப்பது கடும் தன்மையற்ற மதத்தையே! குர்ஆன் உரைத்துள்ளபடி அல்லாஹ் ஃபஸாது ஆதரிக்கவில்லை. அது சமூகக் கட்டமைப்பை உடைக்கக் கூடியது. சமூகச் சீர்கேட்டை உருவாக்கக் கூடியது. ‘அமைதி’க்கு மறுபெயர் ‘அல்லாஹ்’. எவர் அல்லாஹ்வின் வழியில் தயாளம் புரிகிறார்களோ! நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ்வின் அமைதிப்பாதை வழிகாட்டப்படும். (அல்ஹஸர் 59:23)
“சொர்க்கம் -அல்லாஹ் சமூகத்திற்குத் தந்த பயண இலக்கின் இறுதி.” (சூரா 5:16)
(10:25) வசனம், அமைதியின் இல்லம் சொர்க்கம் என்கிறது. குர்ஆன் மனோ நிலை. உடன்பாடு அமைதியை வலியுறுத்தியே உள்ளது. பொறுமைக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளது. இஸ்லாமிய பண்புகளில் மேலோங்கிய பண்பாக பொறுமை கூறப்படுகிறது. (குர்ஆன் 39:10) இல் ஒரு வார்த்தை ‘ஸபர்’ இவ்வார்த்தை அகிம்சை பொறுமை நோக்கியே கூறப்பட்டுள்ளது.
அபூதாவூது 4:255 ஹதீஸ் -‘‘அல்லாஹ் ‘ரிஃப்க்’ கனிவான குணத்தை கொடுத்துள்ளான். ‘அனஃ’ -கடுங்குணம் தரவில்லை. (6-654)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பு பத்ஹ§ல் பாரி – “ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமைதி நெறிகளை வாழ்வின் இறுதி வரை கடைப்பிடித்தார்கள்.”
இரண்டு வழிகளில் எளிமையான வழியையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தேர்வு செய்வார்கள். குர்ஆன் கூற்றுப்படி மனிதனுக்கு இரண்டுவித குணங்கள் உள்ளன. பொறாமை – பொறுமையின்மை. மனச்சாட்சி.
நஃப்ஸ் அம்மாரா – 12:53
நஃப்ஸ் லவ்வாமா – 75:02
‘ஈகோ’வைத் தன்னகத்தே கொண்டுள்ளவர்கள் சமூகத்திற்குள் தனித்த பிரிவை உருவாக்குகிறார்கள். அகிம்சை கொல்லாமையைக் கையிலெடுத்தவர்கள் நஃப்ஸ்சை தட்டி எழுப்புகின்றனர். குர்ஆனில் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது. “எவர் உனக்கு எதிரியோ அவர் உனக்கு நெருங்கிய நண்பராவார்.” (41:34)
ஹ§தைபியா உடன்படிக்கை எப்படி எளிமையாக நடந்தேறியது அதுதான் நபி வழிமுறை. விருப்பத்திற்குரிய ஒரு மாற்றம் சமூகத்தினுள் கொண்டு வருவதற்கு கடுங்குணமற்ற போக்கிருந்தால் தான் நிறைவேற்ற முடியும். நபி வெற்றிக்குக் காரணம் கடுங்குணமற்ற போக்கை கையாண்டதுதான். அதிகமான பிரச்சினைகள் இருந்தபோதிலும் அமைதி வழியில் தனது பிரசங்கத்தை பரவச் செய்தார்கள். குறைஷி தலைவர்கள் ஒன்றிணைந்து போர் தொடுத்த போதும் அமைதி வழி கடைபிடித்து ‘ஹிஜ்ரத் -புலம் பெயர்ந்தார்கள். கடும் போக்கை தவிர்க்கும் நோக்கம் காரணம்.
நபியவர்களின் அமைதிப் போக்கு அவர்களுக்குப் பின்னதாக மதினாவில் 200 ஸஹாபாக்களை உருவாக்க உதவியது. கொடும் போக்கை மக்காவாசிகள் தூண்ட முனைந்தனர். நபி ஆதரிக்கவில்லை. அங்கேயே இருந்து அப்போக்கு பரவ ஒத்துழைக்கவில்லை. நபியின் இச்செயல் மூலம் நாம் அறியலாம். கொடுங்குணம் ஓங்குமிடத்தில் இஸ்லாம் இருக்காது.
குர்ஆன் – சீறா (நபியின் வாழ்க்கை) இரண்டும் கூறுவதுதான் இஸ்லாம். தொடக்கத்திலிருந்து முடிவு வரை மக்களிடையே மனமாற்றம் ஏற்படுத்துவதுதான் இலக்கு. படைப்பினத்திட்டப்படி எல்லோருக்கும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. நபியை எதிர்த்தவர்கள் அச்சுதந்திரத்தின் அனுபவிப்பாக ஆயுதமேந்தி நபி பணியை தடுத்தனர். தற்காப்புக்காக சிறிது காலம் அவர்கள் வழியிலேயே எதிர்த்துப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
நபிப்பட்டம் அளித்து 23 ஆண்டுகள் ஒவ்வொரு சூழ்நிலையின் போதும் அல்லாஹ் குர்ஆனை இறக்கியருளினான். இந்த காலக்கட்டத்தை போர் – அமைதி இரு பகுதியாக பிரித்துப் பார்த்தால் 20 ஆண்டுகளில் இறக்கப்பட்ட ஆயத்துகள் பெரும் பகுதிகள் அமைதி – நம்பிக்கை – வழிபாடு – நெறிமுறை, மனித நேயம் குறித்தே கூறப்பட்டுள்ளன.
3 வருடங்கள் இறக்கப்பட்ட ஆயத்துகள் மட்டுமே போர் குறித்து உள்ளன. நபியவர்கள், நபியை பின் தொடர்ந்து வந்தோர் மீது தாக்குதல் புரிந்தனர். அதன் காரணமாக போர் புரிய வேண்டிய நிர்ப்பந்தம் நபிக்கு ஏற்பட்டது.
குர்ஆன் – 114 அத்தியாயம் 6666 வசனங்களில் 40 வசனங்கள் மட்டுமே மறைமுகமாக, நேரடியாக போர் குறித்து கூறப்பட்டுள்ளன. மொத்த வசனங்களில் 0&6 சதம் வசனங்கள் மட்டுமே அது குறித்து பேசுகின்றன.
எல்லா நாடுகளுடைய அரசியல் சாசனங்களையும் பார்க்கலாம். அமைதி குறித்து பெரும்பாலும் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது.
ஜீசஸ் கிறிஸ்து கூறியதாக ஒரு வசனம் : “நான் நிலைநாட்ட வந்ததில் அமைதி மட்டுமில்லை வாளும் உண்டு.”
ஏதேனும் ஒரு பிரிவினர் தனித்து நின்று நம்மை எதிர்த்து நின்றால் அவர்களைத் தடுப்பதற்கு நாம் திருப்பிப் போர் புரிவது தேவையாகி விடுகிறது. குர்ஆன் 22:39 கூறுகிறது. “எவர் தாக்கப்படுகிறாரோ அவர் சண்டையிட உத்தரவு இடப்படுகிறது”. பகைமையைத் தடுக்கக் கூறியுள்ளதே தவிர ஆயுமேந்து என்று கூறவில்லை.
குர்ஆன் 41:34 கூறியிருக்கிறது. தீயவைகளுக்கு ஈடாக நல்லவை எது சிறந்ததோ அதை செய். உன் பகைமையாளரும் உனக்கு நண்பராகி விடுவார். எந்த வாக்குவாதம், பிரச்சினையிலும் போர் தொடுத்தல் கடுமையான செயல். போரற்ற பேச்சுவார்த்தையே எளிமையான ஒன்று.
நபி வாழ்க்கையின் சில கட்டங்களில் நடந்து முடிந்த சில போர்கள் அந்தந்த காலக்கட்ட நிலைகளுக்குத் தக்க நடந்தவை. ஏழாம் நூற்றாண்டின் முதல் அரை பாதி நடந்த போர் மதக்கட்டாயப்படுத்துதலாலும், மத அடக்குமுறையாலும் நடந்தவை. ஒரு மதத்தை பொறுத்துக் கொள்ளல் போன்ற இன்றைய சூழல் அன்றைய கட்டத்தில் இல்லை. ஒவ்வொன்றுக்கும் எதிர்ப்பு, சண்டை என்ற நிலை. வேறு வழியின்றி போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.
ஆக்கப்பூர்வ மதச் செயல்பாடுகள் அமைதி பூமி. அடக்கச் சூழலில்தான் செய்யவியலும். இஸ்லாத்தில் அமைதி ஏற்கச் செய்யவும் கூறப்பட்டுள்ளது. விரும்பத்தகாத நிலையில் மனப்பொறுமை காக்கவும் கூறப்பட்டுள்ளது.
நம்மீது அடக்குமுறைகள் நிகழ்த்தப்படும்போது எதிராளியிடம் அமைதி காப்பதோடு தட்டிக் கழிக்கும் மனப்பாங்கும் இருக்கவேண்டும். இதுதான் இஸ்லாம் கூறும் முக்கிய நெறி. ஆனால் அவர்கள் உடல் ரீதியாக ஆயுதம் தாங்கி போர் புரிந்தால் அதற்கு மட்டும் விதிவிலக்கு.
பழங்கால மக்காவில் நபி பணி செய்து வந்தார்கள். நபிப்பட்டம் பெற்ற பிறகு 13 வருடங்கள் மக்காவில் வாழ்ந்தார்கள். 13 வருடங்களும் மக்கள் போர் தொடுத்தனர். வன்முறையில் ஈடுபட்டனர். நபியவர்களும், ஸஹாபாக்களும் அமைதி, பொறுமைகாத்தனர்.
ஹ§தைபியா வாக்குவாதம் 2 வாரங்கள் நடந்தன. எதிராளி கூறுவதை ஏற்று நபி அமைதி காத்தார்கள். இன்றைய காலத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் இருவருக்குள் பிரச்சினைகள் வருகின்றன. பிரச்சினைகளை மேலும் வளர்தெடுத்து கட்டற்ற வன்முறை மோதலுக்கு நகர்த்திவிடக் கூடாது.
4:128 ஆயத் “சமரசமே சிறந்தது” என்கிறது. நபி தமது தோழர்களிடம் கூறினார்கள்; “எதிரியிடம் மோதலை நீங்கள் விரும்பக்கூடாது. அல்லாஹ்விடம் அமைதியை வேண்ட வேண்டும்.”
5:64 ஆயத் கூறியிருக்கிறது. “எப்போதெல்லாம் அவர்கள் போர் தீயை மூட்டுகின்றனரோ அல்லாஹ் அதனை அணைத்துவிடுவான்.”
மதினாவில் நபி ஆட்சி ஏற்றார்கள். அங்கிருக்கும் அரபிப் பழங்குடியினரிடையே அமைதியை நிலைநாட்டி அனைவரையும் ஒருங்கிணைத்தார்கள். அவர்கள் மூலம் இஸ்லாத்தை பரப்பினார்கள். இதன் வாயிலாக இஸ்லாத்தை ஆழ்ந்து பார்த்தால் போரை ஆதரிக்காத தன்மை தெரியும்.
போர் தொடுப்பதற்கான காரணங்கள் 1. எதிரிகளை அழிப்பதற்கு 2. ஆட்சியை பிடிப்பதற்கு. இந்த இரண்டு இலக்குகள் அடையவும் இஸ்லாம் கூறவில்லை. எதிரியிடமும் பகைமையை தவிர்த்து நேசி என்றே இஸ்லாம் கூறியிருக்கிறது. குர்ஆன் கூற்றுப்படி எதிரிகளிடமும் நட்பிற்கான நற்குணங்கள் இருக்கும். அதனை அடைவது நம் கரங்களில் உள்ளது.
நபிக்கு ஆத்திரமூட்டும் எதிர்ச் சூழலில் தான் நபி பணி செய்தார்கள். குர்ஆனைப் போதித்தார்கள். அல்லாஹ்வின் பெயரால் ஓதச் சொன்னார்கள். நீதி நெறி முறை, தொழுகை, அமைதி எடுத்துரைத்து முரண்பாடுகளைத் தவிர்க்கக் கூறினார்கள். 23 வருடப் பணியை நிறைவு செய்தார்கள்.
– தமிழாக்கம் : ஏ.ஜெ. நாகூர் மீரான்
source: http://jahangeer.in/?paged=4