பெண்களுக்கு மிக மிக உயரிய இடம் கொடுத்து அழகு பார்க்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
எவ்வளவு அழகான நடைமுறை கொண்ட மார்க்கம் இஸ்லாம் எனும்போது மெய்சிலிர்க்கிறது.
“பெண்களைப் போற்றுகிறோம்” என்று பொய்கள் பல கூறி, ஒரு மாயையை உருவாக்கி, உண்மையில் பெண்களை கேவலமான முறையில்தான் ‘இஸ்லாத்தைத் தவிர’ உள்ள பிறமதங்கள், சித்தாந்தங்கள், இசம்கள் எல்லாம் கங்கணம் கட்டி செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன.
தேவர் அடியார்கள் என்ற பெயரில் (இதுவே விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு மற்றொரு பெயராக உருவெடுத்திருக்கிறது) பிறமத ஆலயங்களில், இளம் பெண்களை வைத்து சேவையென்ற போர்வையில் அவர்களை தங்களின் பாலியல் வல்லுறவுக்கும் பயன்படுத்தி வருவதை தெய்வத் தொண்டுதான் என பெண்களை கேடு கெட்ட நிலைக்குத் தள்ளியது இந்து மத சட்டங்கள்.
மிக சமீபத்தில், கர்நாடகாவில் தொன்று தொட்டு நடைபெறும் இப்பழக்கத்தை இந்திய சுப்ரீம் கோர்ட் தடை செய்து உத்தரவு போட்டது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அதுபோல அவர்களுக்கு சொத்துக்களில் பங்கு கிடையாது என்றது இந்து சனாதன சட்டம். ஆகையினால்தான் இந்திய பாராளுமன்றத்தில் இந்துப் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்று சட்டமும் இயற்றப்பட்டது. ஆக இப்படி நடை முறைக்கு ஒத்துவராத சட்டங்களை வைத்துள்ள இந்து மதம் அடிக்கடி பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட் என்று குட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறது.
இந்துப் பெண்கள் விதவையானால், மிகவும் அடிமைத் தனமான காட்சிகள் அரங்கேறும், தாலி கழற்றி, வளையல்கள் உடைத்து , அவர்களின் பொட்டை அழித்து, வெள்ளாடை தரித்து, ஒப்பாரியும்,கூக்குரலும் இட்டு என பெண்களுக்கு எதிரான, குரூர கொடுமைகள் நடத்தப்படும்.கணவனை இழந்த அந்தப் பெண்படும் அவலங்கள் போக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெண்களின் மாண்பு குலைக்கப்படுகிறது என்பது கண் கூடு.
கிறிஸ்துவதப் பெண்களுக்கு அவர்களின் இயற்கை உபாதைகளில் ஒன்றான மாதவிடாய் காலங்களில் இழைக்கப்படும் கொடுமைகள் மிக அதிகம். அதைச் செய்ய அவர்களின் பைபிளே ஊக்கம் கொடுக்கிறது.
“சூதகஸ்திரீ தன் சரீரத்தில் உள்ள உதிர ஊறளினிமித்தம் 7 நாள் தன் விலக்கதில் இடுக்க கடவள். அவளைத் தொடுகிற எவனும் சாய்ங்கால மட்டும் தீட்டுப் பட்டிருப்பானாக! அவள் தீட்டாய் இருக்கும் சமயத்தில் அவள் எதில் உட்காருகிறாளோ, படுத்துக் கொள்கிறாளோ, அதெல்லாம் தீட்டும் (இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது (ஆதாரம் : லேவியராகமம் 15:19-30).
ஆனால், அல்குர்ஆன் என்ன சொல்கிறது?
“மாதவிடாய் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள் அது அருவருக்கத்தக்கதாகும் என (நபியே) நீங்கள் கூறுங்கள், ஆகவே மாதவிடாயின் போது அப்பெண்களை (தாம்பத்திய உறவிலிருந்து) விலக்கிக் கொள்ளுங்கள்” – (குர்ஆன் 2:222).
அந்த நேரத்தில், கணவனை உறவு கொள்வதிலிருந்து, விலகி இருக்க மட்டும்தான் சொல்கிறது இஸ்லாம். அவள் நின்றது, உட்கார்ந்தது, படுத்தது, தொட்டது இவைகள் எல்லாம் தீட்டு என்று சொல்லவில்லை. அந்த நேரத்தில் உறவு கொள்வது, மிக ஆபத்து என்கிறது அறிவியல்.இஸ்லாத்தை பொருத்தவரை அது எந்த அமைப்புவிடமிருந்தும் குட்டு வாங்காது, மாறாக, அதுதான் அறிவியலையும் மற்ற எல்லா அமைப்புக்களையும் குட்டி குட்டி திருத்திக் கொண்டிருப்பதை நாம் நிதர்சனமாக பார்க்கிறோம்,அல்லவா?
இஸ்லாம் மட்டுமே ஏக இறைவனால்,அங்கீகாரம் பெற்றது என்பது இதன் மூலமும் நிரூபணம் ஆகிறது அல்லவா?
ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இருந்து கொண்டு “ஆய்ஷாவே! (தொழுகைத்) துணியை எனக்கு எடுத்துக் கொடு” என்று கூறியதற்கு, ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நிச்சயமாக நான் மாதவிடாய் காரியாக இருக்கிறேன் எனக் கூற, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உன் மாதவிலக்கு, உன் கையில் இல்லை” எனக் கூறினார்கள். அப்போது அத்துணியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தனர் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல் : முஸ்லிம் 172)
எவ்வளவு அழகான நடைமுறை கொண்ட மார்க்கம் இஸ்லாம் எனும்போது மெய்சிலிர்க்கிறது.
பெண்களுக்கு மிக மிக உயரிய இடம் கொடுத்து அழகு பார்க்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு அல்லாஹ் வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள் “வீட்டில் உள்ளவர்களே ! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்” பின்னர் அந்தக் குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள். மேலும், அதன் தலைமீது கரங்களால் தடவியவாறு கூறுவார்கள் “இது ஒரு பலவீனமான ஆன்மாவிலிருந்து பிறந்த ஒரு பலவீனமான ஆன்மாவாகும். இந்தக் குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமை நாள் வரையில் இறைவன் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்” (அறிவிப்பாளர்: நப்த் இப்னு ஜுரைத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : அல் முஅஜ முஸ்ஸகர், ஹதீஸ் எண் 243)
மேற்கண்ட ஹதீஸை நிதானமாகப் படித்து, உள்வாங்கி அசை போட்டுப் பாருங்கள். பெண் குழந்தைகளை இதைவிடவா போற்ற முடியும்? இந்த ஹதீஸைக் கண்ணுறும் முஸ்லிமுக்கு எத்தனை பெண் குழந்தைகள் பிறந்தாலும், அகமகிழ்வான். அல்லாஹ்வின் உதவி, மறுமை வரை கிடைப்பதென்றால் சும்மாவா? பெண் குழந்தை பிறந்ததற்கே அவ்வீட்டில் உள்ள யாவருக்கும் சுபச் செய்தி கிடைக்கிறது! ஆஹா இனிக்கிறதே! முஸ்லீமாக இருப்பது நமது உள்ளம் பனிக்கிறதே!
ஆனால், முஸ்லிம் அல்லாத பிறமதத்தவர்களோ பெண் குழந்தை பிறந்தால், லபோ-திபோ என அடித்துக் கொள்ளத்தான் முடியும்! கூண்டுக்கிளே..! பிறமதம் பின்பற்றும் பெற்றோருக்கு பிறந்த பெண்ணே! உன்னைப் போற்றிப் பாதுகாக்கா தூய மார்க்கத்தை தழுவிக் கொண்டு ஈடேற்றம் பெறு… வெற்றி பெறு…! அழைக்கிறோம்… அரவணைக்க காத்திருக்கிறோம் !
-இப்னு அப்துல் ரஜாக்