இசை இஸ்லாத்தில் ஹராம்! இது யாருக்கும் தெரியாமல் இல்லை!
ஆனாலும் இன்று இசை உலகின் ஜாம்பவானாக கொடிகட்டிப் பறக்கும் சிலரும் முஸ்லிமாக உள்ளனர் என்பதற்காக இசையை ஆதரிப்பதும் அதை கேட்டு ஆர்ப்பரிப்பதும் நமது சமுதாய இளைஞர்களிடத்தில் சர்வ சாதாரணமான விசயமாகி விட்டது.
தங்கள் புரொஃபைல் படமாக ஏ.ஆர்.ரஹ்மான் படத்தை வைத்து கொள்வதும், அவர் பாடலை மற்றவர்களுக்கு பகிர்வதும் தங்கள் கடமயை போல் செய்கின்றனர்.
போதாததற்கு சமீபத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய இலக்கிய விழாவில் கவிஞர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் இசையை, இலக்கியத்தின் வழியாக இஸ்லாம் ஆகுமாக்கி வைத்திருப்பது போன்ற பொய்யான தோற்றத்திற்கு அவ்விழாவை பயன்படுத்த முனைந்தது நிச்சயமாக ஆட்சேபணைக்குறிதாகும்.
மார்க்க அறிஞர்கள் இவரது பேச்சுக்கு மறுப்பு – கண்டனக்குரல் எழுப்பினாலும் பிரபலமான கவிஞரல்லவா….. ஷைத்தான் இவரைக்கொண்டு தனது காரியத்தை நிறைவேற்ற மறுபடியும் முனையத்தான் செய்வான். உண்மையான முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
தவறான ஒரு காரியத்தை செய்யும் ஒருவன் முஸ்லிம் என்பதால் அது சரியாகி விடுமா?
ஒரு முஸ்லிம் சாராயம் விற்றால் அது நமக்கு ஹலாலாகி விடுமா?
ஒரு முஸ்லிம் பீடி சிகரெட் விற்றால் அது நமக்கு ஹலாலாகி விடுமா?
ஒரு முஸ்லிம் முஸ்லிமோடு விபச்சாரம் செய்தால் அது ஹலாலாகி விடுமா?
அதேபோல் தான் நமக்கு ஏ.ஆர்.ரஹ்மானும் அவர் இசைக்கும் இசையும்.
நம் சமுதாயத்தின் பார்வையில் அவரும் ஒரு சினிமா கூத்தாடி அவ்வளவு தான். இவரோடு தன்னையும் இணைத்துக்கொள்வதற்கு கவிஞர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் விரும்புகிறாரோ என்னவோ!
o நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். (புகாரி-5590)