கர்ப்ப காலத்தில் ஏற்படும் தீவிரமான குமட்டலை தடுக்க உதவும் சில அருமையான வழிகள்!
கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அழகிய காலமாகும். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால், குழந்தை பெறப் போகும் சந்தோசம் உங்கள் இதயத்தில் நிறைந்திருக்கும்.
வயிற்றில் இருக்கும் உங்கள் குழந்தையிடம் நேரம் போவதே தெரியாமால் பேசிக்கொண்டே இருப்பீர்கள். ஆனால் சந்தோசம் இருக்கும் இடத்தில் சில சங்கடங்களும் இருக்கத்தானே செய்யும். அதில் ஒன்று தான் குமட்டல்.
காலையில் ஏற்படும் குமட்டல் என்பது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஒன்றும் புதிதல்ல. சொல்லப்போனால், குமட்டல் ஏற்படுவது நல்ல அறிகுறியே. அப்படி ஏற்பட்டால், உங்கள் கர்ப்ப சம்பந்தப்பட்ட ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கிறது என்றாகும். அதனால் உங்கள் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் உடல் HCG என்ற ஹார்மோன்களை சுரக்கும். அவசியம் படிக்கவும்: இரண்டாவது மூன்றுமாத காலத்தில் கர்ப்பிணிகள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்! உடல் பராமரிப்பை தொப்புள் கொடி கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வேளையில், HCG அளவு குறைந்து உங்கள் குமட்டலும் இளக்கமடைந்து விடும்.
இந்த குமட்டல் கருவுற்று 12-14 வாரங்கள வரை நீடிக்கும். இக்காலத்தின் போது, தொடர்ச்சியாக வாந்தி ஏற்படும்.
ஒரே நாளில் பல முறை கூட வாந்தி எடுப்பீர்கள். கர்ப்பமாக இருக்கும்போது, ஒயீஸ்ட்ரோஜென் மற்றும் தைராக்சின் போன்ற இதர ஹார்மோன்களும் உங்களை பாதிப்பதாலும் கூட குமட்டல் ஏற்படும்.
இந்த குமட்டலை எதிர்கொள்ள சில வழிகள் இருக்கிறது. போதிய ஓய்வு மற்றும் சில வகை உணவுகளை தவிர்த்து வந்தாலே இதனை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை எதிர்கொள்ளும் முறைகளை பற்றி பார்க்கலாமா?
நல்ல ஓய்வு
கர்ப்பமாக இருக்கும் போது நீண்ட நேரம் ஓய்வு அவசியமானது. அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நன்மையை விளைவிக்கும். பகல் நேரத்திலும் கூட தூங்க வேண்டும். கண்களின் மீது சூரிய வெளிச்சம் படாமல் இருக்க, கண்களுக்கு அணியும் மாஸ்கை கூட அணிவித்துக் கொள்ளலாம்.
கர்ப்ப கால தலையணையை பயன்படுத்தினால் உங்கள் முதுகுக்கும் கழுத்துக்கும் போதிய ஓய்வு கிடைக்கும். அதனால் அதனை பயன்படுத்தி பாருங்கள். உணவு உட்கொண்ட பிறகும், இரவு நேரத்தின் போதும் நல்ல ஓய்வு அவசியம். தூக்கத்தை கெடுக்கும் உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்.
மெதுவாக விழியுங்கள்
உங்களுக்கு காலையில் சீக்கிரமே, தடாலென எழும் பழக்கம் இருக்கலாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும் போது, இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும். காலை எழுந்திருக்க உங்கள் உடலுக்கு போதிய நேரத்தை கொடுங்கள். போதிய ஆதரவுடன் மெதுவாக எழுந்திருக்க வேண்டும். உங்கள் வயிற்றில் குழந்தை உள்ளது. அதனால் குழந்தை உணரும் படி உலுக்காதீர்கள்.
உங்களுக்கு தோதான உணவுகள்
கர்ப்ப காலத்தில், குமட்டலை தவிர்க்க, காப்ஃபைன் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்கும். அதே போல் கொழுப்புச்சத்து மற்றும் மசாலாப் பொருட்கள் நிறைந்துள்ள உணவுகளும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
உங்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுகளை சிறிய அளவில் உட்கொள்ளுங்கள். இந்நேரத்தில் சில உணவுகளின் வாசனையும் கூட உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். அவைகளை தவிர்க்கவும். ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். நீண்ட நேரத்திற்கு காலி வயிறாக இருக்காதீர்கள். அமிலம் சேர்ந்தாலும் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
சுறுசுறுப்பாக இருங்கள்
குமட்டல் ஏற்படும் போது நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள். அதனால் இங்கேயும் அங்கேயும் செல்ல பிடிக்காது. எப்போது பார்த்தாலும் படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால் சிறிதளவு அசைவு கொடுப்பது அவசியமான ஒன்றாகும். சற்று சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மையை அளிக்கும்; உங்கள் குமட்டல் அளவையும் குறைக்கும்.
கம்ப்யூட்டரால் மோசமடையும்
கம்ப்யூட்டரின் திரை சிமிட்டும் போது சில கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டல் ஏற்படும். அப்படி ஏற்படும் பட்சத்தில், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்த வேண்டும். ஆனால், பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தால், திரையை பெரிதாக்கி, எழுத்துரு வகைகளையும் பெரிதாக்கி கொள்ளுங்கள். அதே போல் உங்கள் கண்களுக்கும் திரைக்கும் போதிய தூரம் இருக்க வேண்டும். அப்படி செய்யும் போது, இந்த குமட்டல் ஓரளவுக்கு குறையும்.
இஞ்சி மற்றும் நீர்மங்கள்
என்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி, இஞ்சி நல்ல தீர்வாக அமையும். வயிற்றை சாந்தபடுத்த இஞ்சி பெரிதளவில் உதவி புரிவதால், குமட்டல் சம்பந்தப்பட்ட அனனித்து பிரச்சனைகளுக்கும் அது நிவாரணம் அளிக்கும். குளிர்ச்சியான இஞ்சி பானத்தை பருகுதல், இஞ்சியை முகர்ந்து பார்த்தல்.
ஏதாவது ஒரு வகையில் இஞ்சியை பயன்படுத்தலாம். அதே போல் கர்ப்ப காலத்தில் போதுமான அளவில் நீரை பருக வேண்டும். குமட்டல் இருப்பதால், உங்களால் அளவுக்கு அதிகமாக தண்ணீரை பருக முடியாமல் போகலாம். ஆனால் நீர்ச்சத்து இல்லாமல் போனால் நிலைமை மோசமாகி விடும். அதனால் முடிந்த வரை தண்ணீரை அதிகமாக குடியுங்கள்.
Written by: Ashok CR