[ ஆபரேஷன் பிரைம் மினிஸ்டர் ஆபரேஷன் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் இந்த ஸ்டிங்கை நடத்தியுள்ளது நியூஸ் எக்ஸ்பிரஸ்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கருத்துக் கணிப்புகள் உண்மையான மக்கள் மன நிலையைப் பிரதிபலிப்பதாக இல்லை. அனைத்துமே கருத்துத் திணிப்புகளாக உள்ளன, திரித்துக் கூறப்படும் தகவல்களையே கொண்டுள்ளன.
மேலும் ஒரு விலை கொடுத்தால் குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக உயர்த்திக் காட்டி கருத்துக் கணிப்புகளை இந்த நிறுவனங்கள் கொடுக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாமே 420 மொத்தம் 11 கருத்துக் கணிப்புகளை நடத்தும் நிறுவனங்களை இந்த டிவி அம்பலப்படுத்தியுள்ளது. அதில் பல முன்னணி நிறுவனங்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இவர்களின் கருத்துக் கணிப்புளைத்தான் பல முக்கிய செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், டிவிகள் தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து வருகின்றன.
ஆக கருத்துக்கணிப்பு எனும் பெயரில் மோடிக்கும் பி.ஜே.பி.க்கும் ஆதரவு அலை என்பதெல்லாம் சுத்த பொய் என்பது சொல்லாமலேயேயே நிரூபணமாகிவிட்டது.]
காசு கொடுத்தா விருப்பப்படி ‘சர்வே’.. 11 மோசடி நிறுவனங்களை அம்பலப்படுத்திய ‘ஸ்டிங்’ இதுதான்!
டெல்லி: காசு கொடுத்தால் போதும், உங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக கருத்துக் கணிப்புகளை விலை கொடுத்து வாங்க முடியும் என்று ஒரு டி வி நிறுவனம் 11 கருத்துத் திணிப்பு நிறுவனங்களின் முகமூடியை கிழித்துள்ளது தனது ஸ்டிங் ஆபரேஷன் மூலம்.
அது ஒரு இந்தி செய்தி டிவி நிறுவனமாகும். நாட்டில் உள்ள 11 முக்கியமான கருத்துக் கணிப்புகளை நடத்தும் நிறுவனங்கள் எப்படியெல்லாம் மோசடியாக செயல்படுகின்றன என்பதை இந்த டிவி நிறுவனம் தனது ஸ்டிங் நடவடிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.
இதனால் இதுவரை வந்த அத்தனைக் கருத்துக் கணிப்பு முடிவுகள் மீதும் சந்தேகம் வந்துள்ளது மக்களுக்கு. நியூஸ் எஸ்க்பிரஸ் டிவி நிறுவனம்தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து நாட்டையே உலுக்கியுள்ளது.
ஆபரேஷன் பிரைம் மினிஸ்டர் ஆபரேஷன் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் இந்த ஸ்டிங்கை நடத்தியுள்ளது நியூஸ் எக்ஸ்பிரஸ். இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கருத்துக் கணிப்புகள் உண்மையான மக்கள் மன நிலையைப் பிரதிபலிப்பதாக இல்லை. அனைத்துமே கருத்துத் திணிப்புகளாக உள்ளன, திரித்துக் கூறப்படும் தகவல்களையே கொண்டுள்ளன. மேலும் ஒரு விலை கொடுத்தால் குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக உயர்த்திக் காட்டி கருத்துக் கணிப்புகளை இந்த நிறுவனங்கள் கொடுக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாமே 420 மொத்தம் 11 கருத்துக் கணிப்புகளை நடத்தும் நிறுவனங்களை இந்த டிவி அம்பலப்படுத்தியுள்ளது. அதில் பல முன்னணி நிறுவனங்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இவர்களின் கருத்துக் கணிப்புளைத்தான் பல முக்கிய செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், டிவிகள் தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து வருகின்றன.
எல்லாமே சந்தேகமாப் போச்சே இதன் காரணமாக இதுவரை நாம் பார்த்து வந்த, படித்து வந்த, கேட்டு வந்த அத்தனை கருத்துக் கணிப்புகளுமே சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
வசதிக்காக எர்ரரை உயர்த்தும் நிறுவனம் அதிலும் ஒரு முக்கியமான, பெரிய கருத்துக் கணிப்பு நிறுவனம்தான் மிகப் பெரிய அளவில் மோசடி செய்கிறதாம். இந்த நிறுவனத்தின் கருத்துக் கணிப்புகள் பல முன்னணி ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம், தனக்கு கூடுதலாக பணம் கொடுத்தால், மார்ஜின் ஆப் எர்ரரை, வழக்கமான 3 சதவீதம் என்பதிலிருந்து 5 சதவீதமாக உயர்த்த முன்வருமாம்.
நமக்கு சாதகமான முடிவு கிடைக்கும் இப்படி எர்ரர் மார்ஜினை உயர்த்துவதால் ஒட்டுமொத்த முடிவும் தாறுமாறாக மாறிப் போய் விடும். அதாவது உண்மையான கருத்து அதில் இருக்காது. மாறாக நாம் விருப்பப்படும் கட்சிக்கு சாதகமாக முடிவுகளைத் திருப்ப முடியும்.
தனித் தனியா காசு கொடு இதுகுறித்து அந்த கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் பிசினஸ் டெவலப்மென்ட் மேலாளர், ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியவரிடம் கூறுகையில், முடிவுகளைத் திரித்துக் கூற தனித் தனியாக ரேட் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த மார்ஜின் ஆப் எர்ரர் மாற்றம். அதனால் நமக்குச் சாதகமானவர்களுக்கு ஆதரவாக முடிவை மாற்றிக் கூற முடியும் என்று கூறியுள்ளார். இந்த மேலாளர் ஒரு பெண் அதிகாரி ஆவார்.
வினோத் கப்ரி நியூஸ் எக்ஸ்பிரஸ் சானலின் எடிட்டர் வினோத் கப்ரி இந்த ஸ்டிங் குறி்த்துக் கூறுகையில், கருத்துக் கணிப்புகள் குறித்த உங்களது கருத்துக்களைக் கூறுங்கள் என்று கடந்த ஆண்டு கட்சிகளிடம் கேட்டிருந்தது தேர்தல் ஆணையம். இதுதான் எங்களை இப்படி ஒரு ஆபரேஷனில் ஈடுபட ஊக்குவித்தது.
திரித்துக் கூறப்படும் தகவல்கள் பல கருத்துக் கணிப்புகளில் முடிவுகள் திரித்துக் கூறப்படுவதாக தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்திருந்தது. இது வாக்காளர்களின் மனதைப் பாதிக்கும் செயலாக அமையும் என்றும் அது கவலை தெரிவித்திருந்தது. இதுதான் எங்களை மோட்டிவேட் செய்து இதில் ஈடுபட வைத்தது.
ஒட்டுமொத்த மக்களையும் மோசம் செய்கிறார்கள் எங்களது ஸ்டிங் நடவடிக்கையில் நாங்கள் தெரிந்து கொண்டது, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் இந்த கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் மோசடி செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் என்பதுதான். 11 நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் திரித்துக் கூறப்படுபவையே.
தேவையில்லாததை தூக்கிருவோம் ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனம், சாதகமான கட்சி அல்லது வேட்பாளருக்கு சாதகமாக நடக்க,தேவையி்ல்லாத, பாதகமான தகவல்களையே நீக்க முன்வந்தது.
கருப்புப் பணம் வாங்கும் நிறுவனங்கள் ஒரு நிறுவன மூத்த அதிகாரி கூறுகையில், பிராந்தியக் கட்சி ஒன்றுக்கு அவர்கள் ரூ. 4 கோடிக்கு கருத்துக் கணிப்பு நடத்திக் கொடுத்தனராம். அப்போது வெள்ளையாக ரூ. 12 லட்சம் மட்டுமே வாங்கியுள்ளனர். மற்றவற்றை கருப்புப் பணமாகவே வாங்கியுள்ளனராம்.
பிரபல சானல்களில் போட்ரலாம் மேலும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை நாட்டின் பிரபலமான சானல்களில் வெளி வரச் செய்வதாகவும் அந்த நிறுவனம் உறுதியளிக்கிறது.
200 சீட் கிடைக்கும்.. பச்சைப் பொய் சொன்ன நிறுவனம் அதேபோல உ.பியைச் சேர்ந்த ஒரு முக்கியமான கட்சிக்கு சாதகமாக மிகப் பெரிய தில்லாலங்கடி வேளையில் ஒரு நிறுவனம் ஈடுபட்டதாம். அதாவது அந்தக் கட்சியின் முக்கியமான தலைவரின் மச்சான் இந்த நிறுவனத்தை அணுகி தங்களுக்கு சட்டசபைத் தேர்தலில் 200 சீட் கிடைக்கும் என்று கூறுமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் அக்கட்சிக்கு 80 சீட்டுக்கு மேல் கிடைக்காது என்று தெளிவாகத் தெரிந்தும் கூட ரிஸ்க் எடுத்து பச்சைப் பொய் சொன்னதாம் அந்த நிறுவனம். எ்லலாம் காசு வாங்கிக் கொண்டுதானாம்.
கருப்பு நிறுவனங்கள் பட்டியலில் சி வோட்டர் ஸ்டி் ஆபரேஷனுக்காக அணுகப்பட்ட நிறுவனங்களில் சில – சி வோட்டர், கியூஆர்எஸ், இப்சாஸ் இந்தியா, எம்எம்ஆர், டிஆர்ஸ். மக்களை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள்… பாருங்கள்.
‘ஸ்டிங் ஆபரேஷன்’ எதிரொலி- சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவை நிறுத்தி வைத்தது ”இந்தியா டுடே”!
காசு கொடுத்தால் விருப்பபடி கருத்துக் கணிப்பு முடிவுகளை சிலர் வெளியிடுவதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் நியூஸ் எக்ஸ்பிரஸ் என்ற இந்தி தொலைக்காட்சி அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த இந்தியா டுடே நிறுவனம் சி வோட்டர் மூலம் தான் நடத்திய கருத்துக் கணிப்பின் முடி்வுகளை நிறுத்தி வைத்து விட்டது.
மேலும் சி வோட்டர் மூலம் தான் நடத்திய அத்தனை கருத்துக் கணிப்பு முடிவுகளையும் வெளியிடப் போவதில்லை என்றும் அது அறிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று இதுதொடர்பாக நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் காரணமாகவே இந்த முடிவுக்கு இந்தியா டுடே வந்துள்ளது.
புனீத் ஜெயின் சொல்வது என்ன இதுகுறித்து இந்தியா டுடே குழுமத்தின் சட்டப் பிரிவு தலைவர் புனீத் ஜெயின் கூறுகையில், ஸ்டிங் ஆபரேஷனில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களையும், குற்றச்சாட்டுக்களையும் நாங்கள் தீவிரமாக ஆய்ந்து வருகிறோம்
அதுவரைக்கும் சஸ்பெண்ட் அதுவரையிலும் இந்தியா டுடேவுக்காக சி வோட்டர் நடத்திய அத்தனை கருத்துக் கணிப்புகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
சி வோட்டருக்கு நோட்டீஸ் மேலும் இதுதொடர்பாக சி வோட்டர் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தவறுகளை ஏற்க முடியாது நாங்கள் எந்தக் காரணத்துக்காகவும் தவறான தகவல்களை வாசகர்களுக்கு அளிக்க விரும்பவில்லை. நாங்கள் வெளியிடும் எதுவாக இருந்தாலும் அதன் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் தருவோம் என்று அவர் கூறியுள்ளார்.
இது இந்தியா டுடே போட்ட ஒரு கருத்துக் கணிப்பு இந்தியா டுடே சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தது. அதை நடத்தியது சி வோட்டர்தான். தற்போது காசு கொடுத்தால் நாட்டின் 11 கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் விருப்பப்படி கருத்துக் கணிப்பை நடத்தித் தருவதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சி வோட்டர் சொன்னது இது.. தனது கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு படு சாதகமாக முடிவுகளைத் தெரிவித்திருந்தது சி வோட்டர். அதாவது உ.பியில் பாஜகவுக்கு 30 இடம் கிடைக்கும் என்றும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 24 இடம் என்றும், சமாஜ்வாடிக்கு 20 இடம் கிடைக்கும் என்றும் கூறியிருந்தது. காங்கிரஸுக்கு வெறும் 4 இடம்தான் கிடைக்கும் என்றும் கூறியிருந்தது.
source: http://tamil.oneindia.in/