அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கிவிடாதீர்கள்!
அந்த ஒரு சாக்கடையில் தான் உங்கள் உரிமைகளும் அதிகாரங்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது!
அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களுடைய நீதியும் சுதந்திரமும் ஒளித்து வைக்கப்பட்டுருக்கிறது!
அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களுடைய பதவியும் பாதுகாப்பும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது!
ஏனென்றால் யாரும் அந்த சாக்கடையை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால்! நீதியை நிலைநாட்ட இம்மண்ணில் படைக்கப்பட்ட சமுதாயமே…. சகித்துக் கொள்வோம் அரசியல் எனும் சாக்கடையை!
மூழ்கி எடுப்போம், மறுக்கப்பட்ட நம் உரிமைகளை! நமக்காக அல்ல! நம் வாரிசுகளாவது வாழ்ந்துவிட்டு போகட்டும்!
உன்னத அரசியலை உலகம் வியந்து பார்கட்டும்! மறைக்கப்பட்ட வரலாறு, இனி நமக்காக திரும்பட்டும்! ஒதுக்கிவிடாதீர்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவீர்கள்! வெறுத்துவிடாதீர்கள் வாழ்வுரிமையையே இழந்து விடுவீர்கள்!
உரிமை மீட்பு என்பது அரசியல் எழுச்சியே! மூன்றாம் தார குடிமக்களாய் நசுங்கியது போதும்! இனி படமெடுத்து ஆடும் மோடிகளுக்கு பாடம் புகட்டுவோம்!
நாளைய இந்தியாவின் தலைவர்களாய் உன் வாரிசுகளை அமர்த்துவோம்! ஆம். . . அரசியலில் முஸ்லீம்கள் தனித்துவ அதிகாரம் அடைந்தே தீர வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். –ABDUL RAHUMAN
முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் மோடியின் வெற்றியை தடுக்க முடியும்! -ஹிந்து குழுமத்தின் பதிவில் சில பகுதிகள்
முஸ்லிம்களின் ஓட்டுகளை கைப்பற்றாமல் மோடியால் வெற்றி பெற முடியாது. ஒட்டு மொத்த குஜராத் முஸ்லிம் படு கொலைக்குப் பின் 2004பாராளுமன்ற தேர்தலுக்கு பின் நாம் அதை கண் கூடாக கண்டோம்.
NES என்ற நிறுவனம் 2004 தேர்தலுக்கு பின் நடத்திய சர்வேக்கு பின் 420 தொகுதிகளில் பத்தில் ஒன்பது முஸ்லிம் வாக்காளர்கள் பிஜேபி கட்சிக்கு எதிராக வாக்களித்தது தெளிவாகியது. அன்றைய தேர்தலில் முஸ்லிம்கள் பிஜேபி க்கு எதிராக ஒட்டு மொத்தமாக வாக்களிததிருந்தர்கள் .
2004 தேர்தலில் 85 விழுக்காடு முஸ்லிம் வாக்காளர்களும் பிஜேபி தவிர்த்த கட்சிகளுக்கு தான் வக்க்களிதிருந்தர்கள். அவர்கள் தாங்கள் சார்ந்திருந்த கட்சிகளை கணக்கில் எடுத்து கொள்ள வில்லை. தாங்கள் சார்ந்திருந்த கட்சி பிஜேபி உடன் கூட்டணி இருந்த பின்னும் முஸ்லிம்கள் எதிர் கட்சிகளுக்கு தான் வாக்களிதிருந்தர்கள்.
சென்ற இரண்டு பாராளுமன்ற தேர்தல்களில் 60 விழுகாடு தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் அந்த தொகுதிகளில் வாழும் முஸ்லிம் வாக்களர்களை விடவும் மிகவும் குறைவு .அப்போது ஒட்டு மொத்த முஸ்லிம் சமுகம் பிஜேபி.க்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தால் பிஜேபி யால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது .
2004 தேர்தலில் பிஜேபி யுடன் கூட்டு அமைத்த எல்லா கட்சிகளும் பெருவாரியாக தோல்வியைத் தழுவின. சென்ற மாதம் கர்நாடக பாராளுமன்றத்திற்கு நடந்த இடை தேர்தலில் பிஜேபி யுடன் கூட்டு அமைத்த ஜனதா தல் செகுலர் மண்டீய, பெங்களூர் ரூரல் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.
முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை என்று சொல்லும் சிவசேனை, அகாழி தல் என்ற இரண்டு கட்சிகள் தான் பிஜேபி யுடன் தற்போது கூட்டணி உள்ளது .
2014 தேர்தலுக்கு முன்னும், பின்னும் ஜனதா தல் (united and secular), தெலுங்கு தேசம், சமாஜ் வாஜ் பார்ட்டி பிஜேபி யுடன் எக்காரணம் கொண்டும் கூட்டணி அமைக்காது .
2004 தேர்தல் நமக்கு கற்று தந்த பாடம் முஸ்லிம்களில் படித்தவர்கள் ,படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி பிஜேபி க்கு எதிராக தான் வாக்களிப்பார்கள். அஸ்ஸாம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா முஸ்லிகளுக்கு எதிராக நடந்த கடந்த பத்து வருட கால கலவரங்களால் முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக பிஜேபி க்கு எதிராக திரும்புவார்கள் என்பது திண்ணம்.
1983 நெல்லி படுகொலை அஸ்ஸாம், 1989 பஹல்பூர் படுகொலை பீகார் இவை ஒன்றையும் முஸ்லிம் சமூகம் மறக்க தயாரில்லை .
மனித உரிமை மீறலும், மனித உரிமை மீறல் அமைப்புகளின் எதிர்ப்பும், முஸ்லிம்கள் எதிர்ப்பும் குஜராத்தில் பிஜேபி க்கு எதிராகவே மிக வேகமாக உள்ளன.
இதையெல்லாம் தாண்டி மோடி ஆட்சியை பிடிக்க முடியாது . அப்படி நடந்தால் அது ஆச்சரியம்.
–anoop sadanandan.
courtesy : business line—-hindu group —-page 8. #Save muslim ummah
Thanks to Mydeen Khan