பெண்கள் அறிவகம் புதிய கட்டட திறப்பு!
[ இஸ்லாத்தை இதயத்தில் எந்தியவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளையும், ஒழுக்க மாண்புகளையும் கற்றுத் தருகின்றன.]
நெல்லை ஏர்வாடியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெண்கள் அறிவகம் கல்விக் கலாசாலையின் புதிய கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (23.02.2014) நடைபெற்றது.
தமிழ்நாடு டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் (TNDFT) என்ற அறக்கட்டளையின் கீழ் இரு பெரும் கல்விக்கூடங்கள் செயல்படுகின்றன.
இஸ்லாத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கான அறிவகம் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் 1996 முதல் செயல்பட்டு வருகின்றது. பெண்களுக்கான அறிவகம் நெல்லை மாவட்டம் எர்வாடியில் 2004 முதல் இயங்கி வருகின்றது.
தமிழ்நாடு டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்டின் நலப் பணிகள், குறிப்பாக இஸ்லாமிய அழைப்புப் பணிகள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. 1993 ஆம் ஆண்டு முதல் முறைப்படுத்தப்பட்டு இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த இரு பெரும் கல்விக்கலாசாலைகளும் இஸ்லாத்தை இதயத்தில் எந்தியவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளையும், ஒழுக்க மாண்புகளையும் கற்றுத் தருகின்றன.
இங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கு உணவு, மருத்துவம், குழந்தைகளின் பராமரிப்புச் செலவு, ஆண்களுக்கு கத்னா உட்பட அனைத்தையும் இலவசமாக இந்த அறக்கட்டளையே செய்து வருகின்றது.
இதுவரை இஸ்லாத்தை மனமுவந்து ஏற்ற ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் இந்த இரு பெரும் கல்விக்கலாசாலைகளில் இஸ்லாத்தைக் கற்றுச் சென்றுள்ளனர். இவர்களுக்கு 4 மாதங்கள் இலவசமாக சிறப்பான பாடத்திட்டத்தின் கீழ் இஸ்லாம் போதிக்கப்படுகின்றது.
தஃவா சுற்றுப்பயணங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்து வரும் தமிழ்நாடு டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட், அமைதியாக ஆரவாரமின்றி அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கும் பணிகளை தமிழகத்தில் தொடர்ந்து செய்து வருகின்றது.
2004ல் ஒரு சிறிய வாடகைக் கட்டடத்தில் துவக்கப்பட்ட பெண்கள் அறிவகம் மாணவியரின் அதிக வரவால் இடநெருக்கடிக்கு உள்ளானது. அதனைக் கருத்திற்கொண்டு பல்வேறு சிரமங்களுக்கிடையில் இப்பொழுது ஒரு சொந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதன் துவக்க விழாவே இப்பொழுது நடைபெறவுள்ளது.
source: http://www.thoothuonline.com/