ராஜீவ் காந்தி கொலை வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தவர் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயனிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில்….
ராஜீவ் காந்தி உங்களுடைய நெருக்கமான நண்பர். அவர் இப்போது இருந்திருந்தால் நாடு எப்படி இருந்திருக்கும் என்று கருதுகிறீர்கள்?
நிச்சயமாக நன்றாக சிறப்பாக இருந்திருக்கும். நாட்டின் மதிப்பையும், தரத்தையும் உலக அரங்கில் மிக பன்மடங்கு உயர்த்தியிருப்பார்.
மக்களின் அன்பையும், மதிப்பையும் பெற்ற தலைவரான அவர் நல்ல உள்ளம் கொண்டவர். மக்கள் அவரை நேசித்ததைவிட மக்களை அவர் நேசித்தார் என்றுதான் சொல்லுவேன்.
அவர் ஆட்சியில் சில சின்ன தவறுகள் நடந்திருக்கலாம். மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்திருந்தால் அந்த சிறுதவறுகளைகூட கலைந்து தவறுகளுக்கே இடம் கொடாத ஆட்சி செய்திருப்பார். இந்த மாதிரி நிலையற்ற, திறனற்ற அரசாங்கமாக அது நிச்சயமாக இருந்திருக்காது.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க… தமிழக அரசின் அறிவிப்பு சரிதானா?
மன்னிப்பு யாருக்கு அளிப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டதே என்று வருந்தி வேதனை படவேண்டிய தீர்ப்பு. உணர்ச்சி மிகுதியால் கொலை செய்தார்களா அல்லது அவசரத்தில் செய்யபட்ட கொலையா இது? வெகு நாட்களாக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி!
ஒரு அண்டைய நாட்டின் பிரதம மந்திரியை பாம் வைத்து கொன்ற கொலை வெறியர்களுக்கு மன்னிப்பே கூடாது. குறைந்த பட்சம் தூக்குதான் அவர்களுக்கு தகுந்த தண்டனை. அரசியல் காரணத்துக்காக அல்லது ஒட்டு பிச்சை கேட்டுக்கும் அரசியல் தான் இந்த அவல நாடகம்.
நீதிமன்றம் மூலம் தூக்குதண்டனை விதிக்கபட்ட குற்றவாளிகளுக்கு கருணை மனு குடியரசு தலைவரிடம் அனுப்பும் போது அந்த மனுவை ஏற்று தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சிபாரிசு செய்வதோ அல்லது மனுவை நிராகரித்து தூக்கு தண்டனையை உறுதி செய்வதோ ஒரு குறிப்பிட்ட கால கெடுவுக்குள் செய்ய வேண்டியது குடியரசு தலைவரின் பொறுப்பு. தேவைபட்டால் சட்ட திருத்தம் உடனே செய்யப்படவேண்டும்.
இந்த கொடிய செயலில் ஈடுபட்ட அனைவரையும் சிறையில் இருந்து விடுவிப்பது சரியான முடிவு அல்ல. ராஜீவ் மற்றும் அவருடன் கொடூரமாக இறந்த 18 குடும்பங்களின் கதி என்ன என்பதையும் மக்கள் சிந்திக்கவேண்டும்.
ஒரு முதல்வர் முக்கியமான ஒரு கொலை வழக்கின் குற்றவாளிகளை, ஈவு இரக்கமற்ற கொலைகாரர்களை, தீவிரவாதிகளை, நேற்று வரை குற்றவாளிகள் என்று கூறிவிட்டு, இன்று உச்சநீதிமன்றம் தண்டனை குறைப்பு செய்தவுடன், அரசியல் காரணங்களுக்காக, தேர்தல் லாபத்திற்காக இப்படி சுயநல நோக்குடன் செயல்பட்டது பொறுப்பின்மையின் உச்ச கட்டம் மட்டுமின்றி அந்த பதவியில் இருக்க தகுதியானவர்தானா என்கிற கேள்வியையும் எழுப்பும் அளவுக்கு பொறுப்பற்ற செயல் புரிந்துள்ளார். இதே மத்திய அரசால் 356 பிரிவின் கீழ் டிஸ்மிஸ் செய்யப்படும் செயல்பாட்டில் இருந்தால் செய்வாரா?
மத்திய அரசின் செயல் பாடு சரியே! ஜெயலலிதாவின் வழியில் மற்ற முதல்வர்களும் செயல்பட்டால் பெரிய கேடிகளும், கொலைகாரர்களும் விடுவிக்க படுவார்கள். இதுதான் சட்டத்தின் ஆட்சியா? இங்கே இருக்கும் அல்லக்கைகள் கூச்சல் போடும், அவர்கள் வாயை அடைக்க வேண்டும் என்று செயல்படுவதால் எடுத்த ஜெயலலிதாவின் முடிவு வன்மையான கண்டனத்திற்கு உரியது. தமிழ் மக்களே இதை ஒப்ப மாட்டார்கள்.
நாம் இதை சொன்னால் இந்த போலி தமிழ் தேசியவாதிகள் கொதிக்கிறார்கள். இந்திய அமைதிப்படை செய்த கொடுமைகளுக்கு இந்த 18 பெரும் செத்தால் தப்பில்லை என்கிறார்கள். அப்டியே அமைதிப்படை தவறு செய்து இருந்தாலும் இவர்களை கொள்ள யார்கு உரிமை இருக்கிறது? காவல் துறை செய்த கொடுமைகளுக்கு தமிழக முதலமச்சரை இப்படி கொலை செய்யலாமா?. சிந்தியுங்கள்! அவர்கள் செய்தது கொடும்குற்றம் அவர்கள் தண்டிக்க படவேண்டியவர்கள். இவர்கள் தான்உண்மையான குற்றவாளியா என்பதை நமதுஉச்சநீதிமன்றம் முடிவு செய்யும், செய்தும்விட்டது. உங்களால் அதைஒப்புக்கொள்ள முடியவில்லை என்றால், தாரளமாக நீதிமன்றம் செல்லாம்.
இது குறித்து, ராஜீவ் காந்தி வருகையின் போது அவருக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று, பரிதாபமாக உயிரிழந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி பால சரஸ்வதி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில்… ராஜீவ் படுகொலையில் பலியான மற்றவர்களை மறந்து என் கணவரும் பச்சைத் தமிழர் தான்… என் கணவரும் பச்சை தமிழர் தான். காவல்துறையில் அப்பழுக்கற்ற வகையில் மிக துணிச்சலாக பணியாற்றிய அதிகாரி. மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது மரணமடைந்தார்.
அந்த நேரத்தில் நானும், எனது மகள் பபிதா தேவி, மகன் பிரவீன் ராஜேஷ் ஆகியோர் நிற்கதியாக நின்றோம். அப்போது என் மகள் பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்தாள். மகன் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். என் கணவருக்கு அப்போது வயது 44. தூக்கு தண்டனை கைதிகளுக்காக முழக்கம் எழுப்பிய தலைவர்கள் எங்களுக்கு ஆறுதல் கூற வரவில்லை. விடுதலை உத்தரவை மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினரும் இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த என் கணவர் மற்றும் அவரைப்போன்ற மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் என்ன பதிலை கூறப்போகிறார்கள்?…
அவல நாடககத்தின் மற்றொரு பக்கம்….
சரி…. இறந்தவர் சாமான்யர் அல்ல. இந்தியாவின் பிரதமராக இருந்தவர்… வரப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டவர்; அவரின் படுகொலை விசாரணை ஏன் மூடிய கதவுகளுக்குள் நடத்தப்பட்டது? பல சந்தேகங்களோடு தீர்ப்பு வழங்கப்பட்டது? குற்றவாளி தண்டிக்கப்பட நீதி நிலை நாட்டப்பட வேண்டாமா? சந்தேகங்களோடு கூடிய புலன் விசாரணை அதன் அடிப்படியிலான தீர்ப்பு என்பதை ஓரங்கட்டி விட்டு எவ்வித சார்பும் இன்றி நீதியை நிலைநாட்டும் புலன் விசாரணை… சந்தேகங்கள் நீக்கப்பட்ட தெளிவான முடிவு,அதன் அடிப்படையிலான குற்றவாளிகளின் நிர்ணயம்,அதற்கான தண்டனை – தீர்ப்பு!!! இந்தியாவின் ஆளும் வர்க்கம் ஆயத்தமாக உள்ளதா? குரலில்… கூக்குரலில்… கோரஷில் யாரையோ தப்பிக்க வைக்க முயற்சிகள் அல்லவா?தொனிக்கிறது.
இந்த ஒரு வழக்கை உதாரணமாக கொண்டு நமது தேசத்தின் சட்டம் எவ்வளவு பலகீனமாக இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். இப்படியே போனால் வழக்குகள் மக்கள்தொகையை விட அதிகமாக போய்விடும். முதல்நாள் விடுதலை தீர்ப்பு, மூன்றாம் நாள் தடை சட்டம்! எதுக்கு இப்படி ஒரு தீர்ப்பு?
7 குற்றவாளிகளையும் விடுவிக்கக் கூடாது- ராஜீவுடன் பலியானோரின் குடும்பத்தினர் வலியுறுத்தல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று குண்டுவெடிப்பில் ராஜீவுடன் பலியானவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கி வரும் அடுத்தடுத்த தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான அமெரிக்கை நாராயணன் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றிற்கு சென்னையில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த சந்திப்பில் 1991ம் ஆண்டு பெரும்புதூரில் ராஜீவ் காந்தியுடன் பலியான சம்தானி பேகம், எட்வர்டு ஜோசப், முனிசாமி உள்ளிட்டவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது ராஜீவ் காந்தியுடன் குண்டு வெடிப்பில் பலியான சம்தானி பேகத்தின் மகன் அப்பாஸ் கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு கொல்லப்பட்டபோது என்னுடைய தாயாரும் அங்கு சென்றிருந்தார்.
அப்போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் என் தாயார் உடல் சிதறி பலியானார். ஏற்கெனவே தந்தையை இழந்து தவித்த நான் எனது 10 வயதில் தாயாரையும் பறிகொடுத்தேன்.
இந்நிலையில் எனது தாயாரை கொலை செய்தவர்களை விடுதலை செய்வது எப்படி நியாயமாகும். குற்றவாளிகள் 23 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளதே பெரிய தண்டனை என்று சிலர் கூறுகின்றனர். நான் கூட வாழ்நாள் முழுக்க எனது தாயாரை இழந்து தவிக்கிறேன், இதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.
அவரைத்தொடர்ந்து ராஜீவுடன் பலியான சிபிசிஐடி அதிகாரி எட்வர்ட் ஜோசப்பின் தம்பி ஜான் கூறுகையில், “எனது அண்ணன் நாட்டிற்காக உயிரைவிட்டுள்ளார். அவரது மரணத்திற்கு காரணமானவர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகிவிடும்” என்றார்.
குண்டுவெடிப்பில் பலியான முனுசாமியின் மகன் மோகன் கூறுகையில், “கொலை குற்றவாளி
களை விடுதலை செய்வது அரசியல் ஆதாயத்திற்கான செயலாகும். இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் மார்ச் 6-ம் தேதி வரவுள்ள தீர்ப்பினை பொறுத்து, குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்தின் சார்பில் பதில் மனு செய்வோம்” என்றார்.
இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்கை நாராயணன் கூறுகையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பினை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதே வேளையில் குற்றவாளிகள் தப்பிப்பதை ஏற்று கொள்ள முடியாது.
எங்கள் தலைவர் ராஜீவ் காந்திக்காக மட்டுமல்ல, அவருடன் பலியான அப்பாவி பொதுமக்களுக்காகவும் குரல் கொடுப்போம்.” என்றார்.
தொகுப்பு – தி இந்து