குழந்தைகளை ஜாக்கிரதையாய் வளருங்கள்!
முன்பெல்லாம் பெரும்பாலான தாய்மார்கள் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்ததால் தங்கள் குழந்தைகளை கண்குத்தி பாம்பாய் கண்காணித்து வளர்த்து வந்தார்கள் ஆனால் இன்றைய சூழ்நிலையெ வேறு பெரும்பாலான தாய்மார்கள் வேலைக்கு போவதால் குழந்தைகளை பிறர் பொறுப்பில் விட்டுவிட்டு தான் போக வேண்டிய கட்டாயம் இருப்பதால் அங்கு குழந்தைகளுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.
அதிலும் இன்றைய செய்திதாள்களும் தொலைக்காட்ச்சிகளிலும் அடிக்கடி குழந்தை பாலியல் வன்முறைகளைப் பார்க்கும் பொது நெஞ்சம் பதறுகிறது. இதுப் போன்ற குழந்தைகளுக்கெதிரான பாலியம் தொந்தரவு சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது.
அது பெண் குழந்தையாகட்டும் ஆண்குழந்தையாகட்டும் பொதுவாக குழந்தைகளுக்கு இதுப் போன்ற பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் வெளி மனிதர்களிடமிருந்து வருவதில்லை நன்கு பரிச்சியமான அல்லது சொந்த உறவுகளிடமிருந்து தான் வருகிறது,அதனாலேயே குழந்தைகளால் அவர்களை நல்லவர்களா? அல்லது தண்டனைக்குரியவரா என்று எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாதபடி குடும்பங்களுக்குள்ளேயே கலந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயம்.
பொதுவாக வெளிநாடுகளில் குழந்தை பேசத் துவங்கும் பருவத்திலேயே “குட் டச்…. “பேட் டச்” …. என்கிற வித்தியாசத்தை சொல்லி கொடுப்பார்கள். அப்படி தொடுபவர் கெட்டவன் என்ற உணர்வையும் குழந்தைகள் மனதில் ஆழ பதித்து விடுகிறார்கள், அப்படி யாராவது தொட்டால் பயப்படாமல் வந்து என்கிட்ட சொல்லு என்று குழந்தைக்கு தைரியத்தை ஊட்டி வளர்ப்பார்கள், இதனால் அக்குழந்தை அதுப் போன்ற கயவர்களைப் பார்த்து பயப்பட வாய்ப்பே இருக்காது. எனவே இதுப் போன்ற விழிப்புணர்வை எல்லா தாய்மார்களும் கடைப் பிடிக்க வேண்டும். இல்லாவிடில் அக்குழந்தைகள் வளர்ந்து ஆளாகினாலும் காலம் முழுவதும் மனநோயால் பாதிபிர்குள்ளாவார்கள்.அவ்வாறு ஏற்படாதவாறு பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும்,
சில குழந்தைகள் இயற்கையிலேயே மிகவும் பயந்த சுபாவமாக இருப்பார்கள் அதனாலேயே தங்களுக்கு நடக்கிற அநியாயத்தை பயத்தினால் யாரிடமும் சொல்ல திராணியற்று எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக் கொள்வார்கள்.ஆகவே குழந்தைகளை எப்போதும் தைரியமாக பேச பழக்க வேண்டும். பேசாதே, கத்தாதே, வாயை மூடு,போன்ற கட்டளைகள் குழந்தையின் தன்னம்பிக்கையைக் குறைத்துவிடும் ஆகவே குழந்தையை தைரியமாக தெளிவாக பேச பழக்கவேண்டும்.
அதீத கண்டிப்பு காரணமாக சில குழந்தைகள் பெற்றோரை பார்த்தே பயப்படுவார்கள் இதையும் காரணமாக வைத்து கயவர்கள் அக்குழந்தைக்கு தொந்தரவு கொடுப்பார்கள். ஆகவே குழந்தைகளுக்கு அதிக கட்டுதிட்டங்க்களும் கண்டிப்பும் தேவையில்லை,செல்லமாகக்கூட கண்டிக்கலாம் இல்லையேல் பிள்ளைகள் மனத்தளவில் தங்கள் பெற்றோரை விட்டு பிரிந்து இதுப் போன்ற பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்கள்.
இதையெல்லாம் தடுக்க நிச்சயம் ஒரு தாயால் முடியும். அதாவது குழந்தை பள்ளியிளிருந்தோ அல்லது வெளியிளிருந்தோ வீட்டிற்கு வந்தால் அங்கு என்னென்ன நடந்தது என்று இதமான குரலில் கேட்க வேண்டும்.தொடர்ந்து இதை ஒரு பழக்காமாகவே வைத்துக் கொண்டால் பிறகு குழந்தைகள் பயப்படாமல் எதையும் மறைக்காமல் அப்படியே சொல்லுவார்கள்.
அவ்வாறு அக்குழந்தை தனக்கு பாலியல் தொந்தரவு நடந்தது என்று கூறினால் உடனே கோபப்படாமல் நிதானமாக பேசி முழு விவரத்தையும் கேட்டறிய வேண்டும், இல்லாவிடில் குழந்தை பயந்துப் போய் தனக்கு எதோ நடக் கூடாத ஒன்று நடந்து விட்டது என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிவிடும் ஆகவே பொருமையைக் கையாள வேண்டும்.
1. அந்த நபர் உறவுக்காரராய் அல்லது வேண்டப்பட்டவராய் இருப்பின் அக்குறிப்பிட்ட நபரிடமிருந்து குழந்தையை பக்குவமாக விலக்க வேண்டும்.
2. குழந்தையை தனியே விடாமல் எங்கு சென்றாலும் துணையோடு தான் போக வேண்டும் என்ற எச்சரிக்கையுணர்வை அக்குழந்தைக்கு கொடுப்பது நல்லது.
3. அக்குழந்தையை தனியே இருக்கும் சுழ்நிலை இல்லாமல் கண்காணிக்க வேண்டும்.
4. குடும்பத்தினரின் உதவியோடு அந்த நபரின் வருகையை அடியோடு தவிர்க்க வேண்டும்.
5. மேலும் அந்த பிரச்சனைக்குரிய நபரை தொடர்ந்து கண்காணித்து வந்து அவரை போலீசில் ஒப்படைப்பதும் இதனால் மற்ற குழந்தைகளை காப்பாற்றப்படுவதும் அனைத்து பெற்றோர்களின் கடமையே.
இவ்வாறு இதுப் போன்ற மனநோயாளிகளிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் எப்படி காப்பது என்று பெற்றோர்கள் தான் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். அவைகளை குழந்தைகளுக்கும் சொல்லித் தந்து வளர்க்க வேண்டும்.அவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைகள் இதுப் போன்ற பிரச்சனைகளிலிருந்து தங்களை காத்துக் கொண்டு அதற்குரியவர்க்கு தக்க தண்டனையும் வாங்கி கொடுப்பார்கள் என்பது திண்ணம்.
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவைகள்
1) குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.
2) கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
3) குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’ என்று சொல்ல நேரிடலாம்.
4) சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
5) சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்’ என்று மிரட்டும்.
6) குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
7) குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ” கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
8) உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.
9) குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
10) படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.
11) குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.