முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள்
முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள் ஏராளம்..
முஸ்லிம்களின் செயல்பாடும், முஷ்ரிக்குகளின் செயல்பாடும் ஒருபோதும் ஒத்துபோகாது…
முஸ்லிம் என்றால் (தன் இறைவனுக்கு) முற்றிலும் கீழ்படிந்தவன்.
முஷ்ரிக் என்றால் இறைவனுக்கு கீழ்படிவது போல பிறருக்கும் பிறவற்றுக்கும் கீழ்படிபவன்.
முஸ்லிம்களின் செயல்பாடுகள் அனைத்தும் தன் இறைவனின் திருப்தியை நாடியே இருக்கும்..
முஷ்ரிக்குகளின் செயல்பாடுகள் அனைத்தும் தன் மன திருப்திக்காகவும், தன் முன்னோர்களின் சொல்லை மட்டுமே அடிப்படையாக கொண்டு இருக்கும்..
முஷ்ரிக்குகள் இறைவனை நம்பியிருப்பார்கள்..
முஸ்லீம்கள் இறைவனை நம்ப வேண்டிய விதத்தில் நம்பியிருப்பார்கள்..
முஷ்ரிக்குகள் இறைவனுக்கு ஆற்றல் இருப்பதாக நம்பி அவனை வணங்குவார்கள்..
முஸ்லீம்கள் இறைவனுக்கு மட்டுமே எல்லாம் வல்ல ஆற்றலும் இருப்பதாக நம்பி அவனை மட்டுமே வணங்குவார்கள்.
முஸ்லீம்கள் தனக்கு நேரும் பிரச்சனைகளை அதை தீர்க்கும் தகுதியும் ஆற்றலும் கொண்ட இறைவனிடம் மட்டுமே சிரம் தாழ்த்தி கேட்பார்கள்..
முஷ்ரிக்குகள் இறைவனோடு சேர்த்து (தன் முன்னோர்கள் கற்றுத்தந்த) அவ்லியாக்கள், தன் ஷெய்குமார்கள், நாதாக்கள், சமாதிகள் சமியார்கள் என பலவற்றை நம்பி அவர்களுக்கும் சிரம் தாழ்த்தி கேட்பார்கள்.
முஸ்லீம்கள் மறுமை வெற்றிக்காக தன்னுடைய அமல்களையும், இறைவனின் மன்னிப்பையும் இரக்கத்தையும் நம்பி இருப்பார்கள்..
முஷ்ரிக்குகள் தங்கள் ஷெய்குமார்கள் மற்றும் அவ்லியாக்களின் (இல்லாத) பரிந்துரையை நம்பியிருப்பார்கள்.
முஸ்லீம்களுக்கு இறைவனிடம் கிடைக்கும் அந்தஸ்து உயர்ந்தது..
முஷ்ரிக்குகளுக்கு இறைவனிடம் கிடைப்பது நிரந்தர நரகம்..
“தனக்கு இணை கற்பிக்கப் படுவதை இறைவன் மன்னிக்க மாட்டான்.இதற்கு கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோர்க்கு மன்னிப்பான்.இறைவனுக்கு இணை கற்பிப்பவர் தூரமான வழிகேட்டில் உள்ளார்.” (அல்குர்ஆன் – 4:116)