உயர் கலிமாவின் பொருள் உலகெங்கும் கேட்க ஓதுவோம் வாருங்கள்!
ஓதுவோம் வாருங்கள்
லாஇலாஹ இல்லல்லாஹ்
முஹம்மது ரசூலுல்லாஹ்
உயர் கலிமாவின் பொருள்
உலகெங்கும் கேட்க
ஓதுவோம் வாருங்கள்!
ஆதம் ஹவ்வா முதல் அன்றே
அறிந்து விளம்பிய கீதம்
போதகம் தன்மையில் யாரும்
சாகசம் பேசிய போதும்
மாற்றம் தவழும் இறைக்
கருணை உண்டாகும் (ஓதுவோம்)
வணங்கிட இறைவனையல்லால்
வான் புவி எங்குமே இல்லை
குண நபி இறைஞ்சிடும் தூதாய்
கூறுதல் தீன் தரும் எல்லை
குறையென நாம் வாழும்
நிறை மனத்தோடு (ஓதுவோம்)
மெய்ப்பொருள் கண்டுள்ளம் தேறி
நேர்வரும் மறுமையை நாடி
பொய்மையும் பேதமும் இல்லா
பாசத்தினால் ஒன்று கூடி
புனித நல் இஸ்லாம்
போதனைத் தோதாய் (ஓதுவோம் வாருங்கள்)
லாஇலாஹ இல்லல்லாஹ்
முஹம்மது ரசூலுல்லாஹ்…
பாடல் எழுதப்பட்டு, பாடப்பட்டு அரை நூற்றாண்டு கடந்தும் இன்று செவியுற்றாலும் கவிதையின் வரிகள், குரல் வளம் இரண்டும் நம் நெஞ்சத்தை ஆட்கொள்கின்றன. காலம் கடந்தும் இறவாத் தன்மையுடன் வாழும். கேட்போர் மனத்தை சூழும்.
நாற்பது, ஐம்பது ஆண்டுகள் முன்பு இப்பாடல்கள் மாற்றுமத மக்களிடம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தித் தந்த மதிப்பு, கண்ணியம், இணக்கம், நட்புகளால் இணக்கப்பட்டு, பிணைக்கப்பட்டு பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டிருந்தது.
இதை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை.
-சேதுக்குடியான், முஸ்லிம் முரசு