மோடியின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியது பி.பி.சி.
மக்களை ஏமாற்றுவதில் கில்லாடியான நரேந்திர மோடியின் பித்தலாட்டம் தற்போது உலகெங்கும் கொடிகட்டிப்பறக்கிறது.
சமீபத்தில் வெளியான பித்தலாட்டங்களில் ஒன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நரேந்திர மோடியின் பேச்சை உன்னிப்பாக கவனிப்பதுபோன்ற விளம்பரம். இதனை அவரது வகையராக்கள் ஃபேஸ் புக் மூலம் உலகெங்கும் பரப்பி வந்த நேரத்தில் பி.பி.சி. அவர்களது பித்தலாட்டத்தை தோலுறித்துக் காட்டிவிட்டது.
இங்கு இடம் பெற்றுள்ள முதல் படம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, மோடியின் பேச்சை கேட்பது போன்றுள்ளது.
இரண்டாவது படம் அவர் அதே தினம் 28 ஜனவரி 2011, அன்று முன்னால் எகிப்திய அதிபர் முபாரக் உடைய பேச்சை கேட்கும் உண்மையான படமாகும்.
பித்தலாட்டம் செய்வதையே பிழைப்பாக் கொண்டுள்ள ஒருவர் இந்தியாவின் பிரதமராவதை நிச்சயமாக உண்மையான எந்த இந்திய குடிமகனும் விரும்ப மாட்டான் என்பதே உண்மை.