Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நபிகளாரின் வாழ்வியல் போதனைகள்

Posted on February 11, 2014 by admin

நபிகளாரின் வாழ்வியல் போதனைகள்

  சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.  

போதுமென்ற மனமே…

ஏராளமான வாழ்க்கை வசதிகளும் பணங்காசுகளும் உண்மையான செல்வங் கள் அல்ல. மாறாக, போதுமென்ற மனமே உண்மையான செல்வம் ஆகும். (நபிமொழி, ஸஹீஹுல் புகாரீ – 6446)

உறவைப் பேணுங்கள்!

நீண்ட ஆயுளோடும் நிறைந்த வசதிகளோடும் வாழ வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா? உறவைப் பேணி வாழுங்கள். பதிலுக்குப் பதில் உறவு கொண்டாடு பவர் உறவைப் பேணியவராகமாட்டார்.மாறாக,உறவை முறித்துக்கொள்பவரு டனும் நல்லுறவு பாராட்டுபவரே உறவைப் பேணியவர் ஆவார். (நபிமொழி, ஸஹீஹுல் புகாரீ – 5986, 5991)

ஆதரவற்றோரை ஆதரிப்பீர்!

கணவனை இழந்த கைம்பெண்களுக்காகவும் ஏழை எளியோருக்காகவும் உழைக்கின்றவர் இரவெல்லாம் நின்று தொழுபவரைப் போன்றும், பகலெல் லாம் உண்ணா நோன்பு இருப்பவரைப் போன்றும் ஆவார். அல்லது அல்லாஹ் வின் வழியில் அறப்போராட்டாம் மேற்கொண்டவரைப் போன்று ஆவார். (நபிமொழி, ஸஹீஹுல் புகாரீ – 5353)

பெருந்தன்மையோடு வாழ்வோம்!

விற்பனை செய்யும்போதும் கொள்முதல் செய்யும்போதும் தமக்குச் சேர வேண் டிய உரிமையைக் கோரும்போதும் மென்மையோடும் பெருந்தன்மையோடும் யார் நடந்துகொள்கின்றாரோ அவருக்கு இறைவன் அருள் புரிவானாக. (நபிமொழி, ஸஹீஹுல் புகாரீ – 2076)

பெண் குழந்தைகளிடம் பரிவு

யார் வறுமையைப் பயந்து தாம் பெற்றெடுத்த பெண் குழந்தையைக் கொல்லா மலும் கொடுமைப்படுத்தாமலும், அதைவிட ஆண் குழந்தைக்கு முதலிடம் வழங்காமலும் அதனிடம் பரிவும் பாசமும் காட்டி வளர்ப்பாரோ அவருக்கு இறைவன் சொர்க்கத்தை வெகுமதியாக வழங்குவான். (நபிமொழி, சுனன் அபீதாவூத் – 4480)

அண்டை வீட்டார் பசித்திருக்க…

அண்டை வீட்டார் பசியால் வாடிப்போயிருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர் உண்மையான முஸ்லிம் அல்லர். (நபிமொழி, ஹாகிம் – 7307)

பொறாமை வேண்டாமே!

பொறாமையைக் கைவிடுங்கள். ஏனெனில், பொறாமையானது, நெருப்பு விற கைத் தின்று தீர்ப்பதைப் போன்று நன்மைகளைத் தின்று தீர்த்துவிடும். (நபிமொழி, சுனன் அபீதாவூத் – 4257)

இறையடியார்களே இணைந்திருங்கள்

ஆதாரமின்றி யார்மீதும் சந்தேகம் கொள்ளாதீர்கள். சந்தேகம் ஒரு பொய் ஆகும். அடுத்தவர் குறையைத் துருவி ஆராயாதீர்கள். குரோதம் கொள்ளாதீர் கள். கோபம் கொள்ளாதீர்கள். இறையடியார்களே! சகோதரர்களாக இருங்கள். (நபிமொழி, ஸஹீஹுல் புகாரீ – 6064)

இதயம் சீராக இருந்தால்…

உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால் முழு உடலும் சீராக இருக்கும். அது சீர்கெட்டால் முழு உடலும் சீர்கெடும். அதுதான் இதயம் ஆகும். (நபிமொழி, ஸஹீஹுல் புகாரீ – 52)

இடைவிடாமல் நற்செயல் புரிக!

நேர்மையோடு செயலாற்றுங்கள். நிதானம் இழக்காதீர்கள். நற்செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது யாதெனில், அளவில் சிறிதாக இருந்தா லும் இடைவிடாமல் செய்யப்படும் நிலையான நற்செயல்தான். (நபிமொழி, ஸஹீஹுல் புகாரீ – 6464)

தீமைக்கு மௌன சாட்சியமா?

உங்களில் ஒருவர் ஏதேனும் தீமையைக் கண்டால், அதைத் தமது கையால் தடுத்து நிறுத்தட்டும். அதற்கு இயலவில்லையாயின் நாவால் சொல்லித் தடுக்க முயலட்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதளவில் அதை வெறுத்து விலகிவிடட்டும். (நபிமொழி, ஸஹீஹ் முஸ்லிம் – 78)

எளிய நல்லறங்கள்

உங்கள் சகோதரரைப் பார்த்து புன்னகை பூப்பதும் ஒரு நல்லறம். சாலையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை அகற்றுவதும் ஒரு நல்லறம். வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு வழி காட்டுவதும் ஒரு நல்லறம். கண்பார்வை அற்றவருக்கு உதவுவதும் ஒரு நல்லறம். அடுத்தவருக்கு ஒரு வாளி நீர் இறைத்துக் கொடுப்பதும் ஒரு நல்லறம். (நபிமொழி, சுனனுத் திர்மிதீ – 1879)

எண்ணம் போல் வாழ்க்கை

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒருவர் எதை எண்ணிச் செயல்படுகின்றாரோ அதற்கான பலனையே அடைவார். (நபிமொழி, ஸஹீஹுல் புகாரீ – 1)

வெளித்தோற்றம் இறைவனுக்குத் தேவையில்லை

இறைவன் உங்கள் வெளித்தோற்றத்தையும் உங்களின் பொருளாதார வளத் தையும் பார்ப்பதில்லை. மாறாக, உங்களின் உள்ளத்தையும் செயல்களை யும்தான் கவனிக்கின்றான். (நபிமொழி, ஸஹீஹ் முஸ்லிம் – 5012)

பணத்திற்கு அடிமையாகாதீர்!

பொற்காசு, வெள்ளிக்காசு, ஆடம்பர ஆடைகள் ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவர் நற்பேறற்றவர் ஆவார். அவை கிடைத்தால்தான் அவருக்குத் திருப்தி. கிடைக்காவிட்டாலோ அவர் அடைவது விரக்திதான். (நபிமொழி, ஸஹீஹுல் புகாரீ – 6435)

source: http://yousufsiddheeq.blogspot.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb