பிரபஞ்சத்தின் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் தன்மைகள்!
o அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (அல்குர்ஆன் 2:255)
o அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (அல்குர்ஆன் 28:88)
o எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கின்றான்! (அல்குர்ஆன்)
o அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (அல்குர்ஆன் 42:11)
o அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (அல்குர்ஆன் 5:17)
o ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; முழு பிரபஞ்சமும் அவனுடைய படைப்பே! (அல்குர்ஆன் 6:101)
o அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. (அல்குர்ஆன் 112:3)
o பிரபஞ்சம் முழுவதின் ஆட்சியதிகாரம் நேரடியாக அவனிடத்தே இருக்கிறது. (36:83)
o வானம், பூமி மற்றும் பிரபஞ்சம் முழுவதையும் அவனே நிர்வகிக்கின்றான். (32:5)
o அனைத்துக்கும் உணவளிப்பவன். (37:5)
o வாழ்வையும், மரணத்தையும் படைத்தவன் (67:2)
o அவனே வாழ்வையும் வழங்குகிறான்; மரணத்தையும் அளிக்கின்றான். (53:44)
o அனைத்துக்கும் அமைதியும், புகலிடமும் அளிப்பவன். (59:23)
o மறைந்திருப்பவை, நிகழ்ந்தவை, நிகழக் கூடியவை அனைத்தையும் அறிந்தவன். (2:29,59:22)
o அனைத்தையும் செவிமடுப்பவன். (6:13)
o அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். (2:20)
o அனைத்தையும் மிகைத்தவன்; அவனது தீர்ப்பை யாரும் எதிர்த்திட முடியாது. (59:23)
o அவன் நுண்ணறிவாளன்; அவனது எந்த படைப்பும் வீணானவை, இலக்கற்றவை அல்ல! (34:1)
o அளவிலாக் கருணையுடையவன்; இணையிலாக் கிருபை உடையவன். (1:2)
o மிகவும் அன்புடையவன். (2:207)
o அவனுடைய கருணையும், கிருபையும் ஒவ்வொரு அணுவையும் சூழ்ந்திருக்கின்றது. (7:156)
o நீதி செலுத்துபவன்; மக்களிடம் முழு நீதியுடன் நடந்து கொள்பவன்.(10:4)
o யார் மீதும் அணுவளவும் கொடுமை புரியாதவன். (50:29)
o அவனுடைய கட்டளைகள் அனைத்தும் நீதியின் அடிப்படையிலானவை. (6:115)
o அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவரைப் பழிவாங்குபவன். (3:4)
o மன்னிப்புக் கோருபவருக்கு மன்னிப்பு அளிப்பவன். (85:14)
o பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்பவன். (110:3)
o நன்மைகளைப் பெரிதும் மதிப்பவன். (64:17)
o தான் நாடியதைச் செய்யக் கூடியவன். (55:16)
o பேசுகிறவன். (2:253)
o தான் விரும்பும் வகையில் செயல்படுபவன். (3:40)
o அவன் நாடுவது உண்டாகும்; அவன் நாட்டமின்றி எதுவும் தாமாகவே நடப்பதில்லை. (76:30)
o தன்னிறைவுடையவன்; யாருடைய தேவையுமற்றவன்; அவனுக்கு தேவையானது எதுவுமில்லை. (35:15)
o தனக்குத்தானே பெருமைக்குறியவன்; மிகவும் சிறப்புடையவன்; கண்ணியமானவன். (11:73)
o எந்த ஒரு குறையையும் விட்டுத் தூய்மையானவன். எல்லா சிறப்பு அம்சங்களும் கொண்டவன். அந்த உன்னத அந்தஸ்தை விட்டுத் தாழ்மையான அல்லது அதற்கு முரணான எந்தத் தன்மையும் அவனிடம் இல்லை. (59:23)
o ஒவ்வொரு தகுதியிலும் இணையற்றவன். அவனுடன் எதையும் ஒப்பிட முடியாது. (42:11)
o வானம், பூமியில் நிகழும் எதுவொன்றையும் வைத்து அவனது எதார்த்த நிலையை யூகிக்க முடியாது. (30:26)
o வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே! (2:163)
o பிரபஞ்சம் முழுவதும் அவனுடைய மகிமையே படிந்திருக்கிறது. (45:37)
o அவனுடைய ஆட்சியதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. (அல்குர்ஆன் 18:26)