மனித குலத்துக்கு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமை
இறைவனின் வார்த்தைகளை எடுத்துரைப்பதே ஒரு முஸ்லிம் குறிக்கோளாக இருக்கவேண்டும். இச்செயலின் மூலம் நபியை பின்தொடர்வோராக ஆகுவர்.
“தூதரே! நான் உங்களுக்குக் கொடுத்தவற்றை எல்லோருக்கும் கொண்டு சென்று சேருங்கள். நீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில் என்னுடைய செய்தியை கொண்டு சேர்க்கவில்லை என்பதாகிவிடும்.” (அல்குர்ஆன் 5:67)
இந்த வசனம் நபிக்கு மட்டும் கூறியதாக இருந்தாலும் நபியவர்களைப் பின் தொடர்வோரும் இதற்குக் கடமைப்பட்டோராக, உள்ளடக்கப்பட்டோராக அமைகின்றனர்.
மேற்கண்ட வசனம் அறிவுறுத்துவது, இறைவனுடைய புனிதத்தை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமை என்கிறான்.
‘‘இறைத் தூதர் முஸ்லிம்களுக்கு சாட்சியாக வந்திருந்தார்கள் முஸ்லிம்கள் மனிதகுலத்துக்கு சாட்சியாகவிருக்கவேண்டும்.’’ (அல்குர்ஆன் 2:143)
இந்த உலகத்தில் முஸ்லிம்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு மக்களை இறைவன் பக்கம் அழைப்பதன் மூலமே பெறவியலும்.
ஒருவர் ஒரு பணிக்காக நியமிக்கப்பட்டால் அவர் செய்யும் வேலை பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும். அது போலவே இறைவன் மனித இனத்துக்கு அனுப்பிய எச்சரிக்கைகளை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
முந்தைய மக்களிடம் கொடுக்கப்பட்ட வேதத்தை கொண்டு சென்று சேர்க்காமல் நிறுத்தி விட்டனர்.
அல்லாஹ் கூறியபடி அடுத்தோருக்குக் கொண்டு சேர்க்கக் கூடியோர் அல்லாஹ்வுடன் உறவு வைத்துக் கொள்கின்றனர். கொண்டு சேர்க்காதோரும், அற்ப விலைக்கு விற்போரும் தீங்கு விளைவிக்கின்றனர்.
“எவர் ஒருவர் தான் செய்த தீயவைகளைக் கொண்டு பேரானந்தம் அடைகின்றனரோ,
தற்புகழ்ச்சியை நேசிக்கின்றனரோ,
இறைவனுடைய தண்டனைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டதாகக் கருதிக் கொள்கின்றனரோ
இவர்கள் தாங்கவியலா தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.” (அல்குர்ஆன் 3:187 – 188)
இறைவேதத்தை வைத்து தாவா செய்வது போல் சிலர் தவறான வழியில் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களையே காயப்படுத்திக் கொள்கின்றனர். அத்தகையோருக்கு எந்த நன்மதிப்பும் கிடைக்காது.
“முஸ்லிம்கள் நிரம்ப பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுயல்வதில்லை.” (அல்குர்ஆன் 5:67)
அல்லாஹ் தந்திருக்கும் செய்திகளை எடுத்துரைப்பதே மனிதருடைய பணி. மனிதனுக்கு தேவைகள் பல விருந்தாலும் பணத்தேடலுக்கே முதன்மை அளிக்கிறான். அப்பணம் மூலம் அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி செய்ய இயலுமெனக் கருதுகிறான். இந்த எண்ணத்தை இறைவேதத்தின் மீதும் வைத்து கொண்டு சேர்க்கும் பணியில் அக்கறைகாட்ட வேண்டும். (Spirit of Islam)
தமிழாக்கம் : ஏ.ஜெ. நாகூர்மீரான்
முஸ்லிம் முரசு டிசம்பர் 2013
source: http://jahangeer.in/?paged=5