சிறை நிரப்புப் போராட்டம் சரிதானா?
”அல்லாஹ்வே உணவளித்துக் கொண்டிருப்பவன். வல்லமை மிக்கவன், உறுதி மிக்கவன்.” (51:58)
“…அல்லாஹ் அருளியதிலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள், பூமியில் குழப்பவாதிகளாகத் திரியாதீர்கள். (2:60)
“நிச்சயமாக இறை நம்பிக்கையாளர்கள் யார் என்றால் அல்லாஹ் நினைவு கூறப்பட்டால், அவர்களின் இதயங்கள் நடுநடுங்கும். அவனுடைய வசனங்கள் அவர்களுக்குப் படித்துக் காட்டப்பட்டால் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். அவர்கள் தங்களின் இரட்சகனை முற்றிலும் சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். அவர்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து செலவிடுவார்கள். இவர்களே உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களின் இரட்சகனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு. (8:2-4)
“”…அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள், அவனுக்கே அடிபணியுங்கள், அவனுக்கே நன்றி செலுத்துங்கள், அவனிடமே திருப்பப் படுவீர்கள்”. (29:17)
அல்லாஹ், தான் நாடியவருக்குச் செல்வத்தை அதிகமாகவும், தான் நாடியவருக்கு அளவோடும் கொடுக்கிறான். அவர்கள் இவ்வுலக வாழ்வில் மகிழ்ச்சியடைகிறார்கள். மறுமையோடு ஒப்பிட்டால் இவ்வுலக வாழ்க்கையோ மிகவும் அற்பமானதே!
(13:26, 16:71, 17:30, 29:62, 30:37, 34:36,39, 39:52, 42:12)
(மேலும் பார்க்க . 8:74, 20:131, 22:50, 24:26, 28:82, 29:17, 34:4, 37:41, 42:27, 16:73, 20:132, 33:31, 40:13)
“”அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களை அணுகாது. அவனே எங்களின் பாது காவலன்” எனக் கூறும். இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாக நம்பட்டும். (9:51)
“”அல்லாஹ் கொடுப்பதை எவரும் தடுக்க முடி யாது. அல்லாஹ் தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது” என்பதை ஓர் இறை நம்பிக்கையாளன் ஒருபோதும் மறுக்க முடியாது.
இன்று முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் அனைத்தும் அவர்கள் தங்கள் கைகளால் தேடிக் கொண்டவையே என்று 2:95, 195, 3:117,182, 4:62, 8:51, 30:41, 42:30, 59:2 இறைவாக்குகள் எச்சரிப்பதை இன்று முஸ்லிம்கள் உணர்வதில்லை.
“”அவர்கள் சிந்திப்பதற்காக இந்த குர்ஆனில் நிச் சயமாக அனைத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். எனினும் அவர்களுக்கு அவை வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை. (17:41)
”அவர்களின் மீது நம் தெளிவான வசனங்கள் படித்துக் காண்பிக்கப்பட்டால், மறுப்பாளர்களின் முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர். அவர்களிடம் நம் வசனங்களைப் படித்துக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள்” (22:72)
“….எல்லாமே அல்லாஹ்விடமிருந்து வந்துள் ளன என்று கூறும். இந்தச் சமூகத்திற்கு என்ன நேர்ந்தது? எந்த விஷயத்தையும் அவர்களால் விளங்க முடியவில்லையே!” (4:78)
“வறுமை உண்டாகும் என உங்களை ஷைத்தான் அச்சுறுத்தி, ஒழுக்கமற்ற செயல்களை செய்யுமாறு உங்களை ஏவுகிறான்.” (2:268) (ததஜவினர் கவனிக்கவும்)
“…எந்த ஒரு சமுதாயமும் தன்னிடமுள்ளதை மாற்றிக் கொள்ளாதவரை, ஏக இறைவன் அவர்களை மாற்றுவதே இல்லைஸ” (8:53, 13:11)
“…நீங்கள் புறக்கணிப்பீர்களானால், என் இரட்சகன் உங்களை அல்லாத வேறொரு சமூகத்தை உங்களுக்குப் பதிலாக வைத்து விடுவான்” (9:39, 11:57, 47:38)
“…இவர்களுக்குப் பின்னர் உள்ள சந்ததியினர் இவர்களின் இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மன இச்சைகளைப் பின் பற்றினார்கள். எனவே அவர்கள் கேட்டையேச் சந்திப்பார்கள். (19:58)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
“யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவர் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப்பட்டவனைப் போன்று இருக்கிறார்”. (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ 552)
“நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமை” (10:103)
“நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் கடமை” (30:47)
“நம்பிக்கையாளர்களை நிச்சயம் அல்லாஹ் பாதுகாக்கிறான்.” (22:38)
”தைரியத்தை இழக்காதீர்கள், கவலைப்படாதீர்கள்! நம்பிக்கையாளர்களாய் இருப்பின், நீங் களே மேலோங்குபவர்கள்” (3:139)
“முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாய் ஆக்கியது போல், உங்களில் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிபவர்களை பூமிக்கு ஆட்சியாளர்க ளாக்கி வைப்பதாகவும், அவர்களுக்கென அவன் பொருந்தியுள்ள மார்க்கத்தில் அவர்களை உறுதிப் படுத்துவதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அமைதியானதாய் மாற்றுவதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் எனக்கு எதையும் இணை வைக்காமல், என்னையே வணங்குவார்கள். இதன் பின்னர் மாறு செய்வோரே பாவிகள். (24:55)
இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் இறையச்சத்துடன் மறுமையில் உறுதியான நம்பிக் கையுடன் படித்து உணர்கிறவர்கள், அல்லாஹ் 2:186 இறைவாக்கில் கட்டளையிடுவது போல் “”ஸநான் அருகிலேயே இருக்கிறேன். அழைப் போரின் அழைப்பிற்கு அவர் அழைக்கும்போது விடையளிக்கிறேன். எனவே, அவர்கள் நேர்வழி யைப் பெற என்னிடமே கேட்கட்டும். என்னையே நம்பட்டும்” (2:186) என்று கட்டளையிடுவதற்கு அடிபணிந்து அல்லாஹ்வையன்றி படைப்புகளிடம் இறந்தவர்களிடமோ, உயிரோடிருப்பவர்ளிடமோ கையேந்த மாட்டார்கள்.
49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத் தில் நம்பிக்கை நுழையாமல் பெயர் தாங்கி முஸ்லிம் களாக இருப்பவர்களும், 12:106 இறைவாக்குக் கூறுவது போல், இணை வைப்புடன் (ஒர்க்) நம்பிக் கைக் கொண்டவர்கள் மட்டுமே, 2:186, 7:3, 18:102-106 இறைவாக்குகளை நிராகரித்து படைப்புகளிடம் தங்களின் தேவைகளுக்காகக் கையேந்துவார்கள்.
உங்களில் பெரும்பாலோர் இணை வைக்காத (ஷிர்க்) நிலையில் நம்பிக்கை கொள்ளவில்லை என்று அல்லாஹ் 12:106 இறைவாக்கில் கூறுவதை கவனமாகப் பரிசீலிப்போம். முஸ்லிம்களின் மிகப் பெரும்பான்மையினர் இறந்து அடக்கம் செய்யப்பட்ட வர்களின் கபுருகளுக்குச் சென்று அங்கு கையேந்தித் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருமாறு முறையிடுகின்றனர். இது மிகவும் கடுமையான இணை வைப்பே-கொடிய ஒஷிர்க்கே என்பதில் அணுவளவும் சந்தேகமே இல்லை.
கபுரு சியாரத் என்ற பெயரால் கபுரு வழிபாட்டை நியாயப்படுத்தும் பெரும்பாலான மவ்லவிகள், இந்த அனைத்து குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டினாலும் அவற்றை ஏற்று கபுரு வழிபாட்டைக் கைவிடுவார்களா? ஒரு போதும் கைவிட மாட்டார்கள். காரணம் அப்படிக் கைவிட்டால் அவர்களது இவ்வுலக அமோக வருமானத்திற்கு ஆபத்து வந்து விடும். எனவே இந்த நேரடி குர்ஆன் வசனங்களை நிராகரித்துத் தங்களின் சுய விளக்கங்களைக் கொடுத்து கபுரு வழிபாட்டை நியாயப்படுத்தவே முற்படுகிறார்கள்.
கபுரு வழிபாட்டால் ஏற்படும் பல பலன்களை அடுக்குகிறார்கள். பிள்ளைகள் பிறக்கின்றன. அதனால் பிள்ளைகளுக்கு மொஹிதீன் பிச்சை, நாகூர் பிச்சை, நாகூர் கனி, நத்தர் கனி என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள். பல நோய்கள் குணமாகின்றன. பல கவலைகள் தீர்கின்றன. இப்படி மக்களுக்குப் பலவித பயன்களைத் தரும் கபுரு வழிபாட்டை மறுக்கிறீர்களா? கொடிய ஒஷிர்க் என்கிறீர்களா?
உங்களுக்குத்தான் கிறுக்குப் பிடித்திருக்கிறது என்று கூறி நேர்வழி போதனைகளை குர்ஆன், நபிவழியிலிருந்து எடுத்துச் சொல்பவர்களைக் கிறுக்கன், பயித்தியக்காரன் என்று பட்டம் கட்டி சமுதாயத்திலிருந்து ஓரம் கட்ட முற்படுகிறார்கள். ஆனால், 15:39 இறைவாக்கில் ஷைத்தான் சொல்லும் “என் இரட்ச கனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், இவ்வுலகில் (தீயவற்றை) அவர்களுக்கு அழகாகத் தோன்றுமாறு செய்து அனைவரையும் வழி கெடுப்பேன்” என்று சபதமிட்டபடி நரகத்திற்கு இட்டுச் செல்லும் கபுரு சடங்குகளை அதிகமான முஸ்லிம்களுக்கு அழகாகக் காட்டுகிறான். அவர்களும் அதில் மயங்குகிறார்கள்.
மற்றபடி குழந்தைகளைக் கொடுப்பதோ, நோய்களைக் குணப்படுத்துவதோ, கவலைகள் தீர்வதோ நம்மைப் படைத்த அல்லாஹ்வைக் கொண்டே அல்லாமல், இறந்து போன அடியார்களைக் கொண்டு அல்ல என்பதே மேலே எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் கூறும் உண்மையாகும். அல்லாஹ் சோதனைக்காக நேர்வழியையும் கோணல் வழிகளையும் படைத்துள்ளான். இறை மறுப்பான கோணல் வழியைத் தேர்ந்தெடுத்தால் ஈமானை இழந்து குஃப்ரிலாகி விடுவதால் குழந்தை கிடைப்பது, நோய்கள் குணமாவது, கவலைகள் போவது அனைத்தும் அல்லாஹ் விதித்தபடிதான் கிடைக்கிறது என்பதை அறியும் ஆற்றல் அவர்க ளுக்கு இல்லை. கயிறு இழுப்புப் போட்டியில் (Tug of war) வெற்றி தோல்வி ஏற்படாதவரை தான் இருபக்க மும் கடுமையாகச் சிரமப்பட்டுத் தொடர்ந்து இழுக்கும் நிலை நீடிக்கும்.
முடிச்சு எந்தப் பக்கம் போனாலும், இரு தரப்பினருக்கும் கடுமையாகத் தொடர்ந்து இழுத்துக் கொண்டிருந்த துன்பம் நீங்கிவிடும். தோற்றுப் போனதால் இழுக்கும் துன்பம் நீங்கியதால் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று தோற்றுப் போனவன் கூத்தாடினால் அவனை என்ன சொல்வோம்? பயித்தியக்காரன் என்போம். அதேபோல் 2:186 குர்ஆன் கட்டளைப்படி அல்லாஹ்விடம் கேட்பதை விட்டு அவுலியா என்று நம்பி செத்தவர்களிடம் அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்று பல மவ்லவிகள் சொல்வதை ஏற்று தர்காக்களுக்குச் சென்று கையேந்துகிறவர்களும், அங்கு தங்களின் தேவைகள் பூர்த்தியாகின்றன, அவுலியா கொடுத்தார் என்று நம்புகிறவனும் ஈமான் இழந்து குஃப்ரிலாகி நரகம் புக தன்னைத் தயார் செய்து கொள்ளும் பயித்தியக்காரனே! இது செத்தவர்களிடம் கையேந்துபவர்களின் நிலை. இதே நிலைதான் உயிரோடிப்பவர்களிடம் கையேந்துபவர்களின் நிலையும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
அல்குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் ”மின் தூனில்லாஹ்” “மின்தூனிஹி” என்று இறை வாக்குகளில் இருப்பதைப் பார்க்கலாம். தமிழில் மொழி பெயர்த்தவர்கள் பெரும்பாலான இடங்களில் அல்லாஹ் அல்லாதவை, அல்லாஹ் அல்லாதவை என்றே அஃறிணையாக மொழி பெயர்த்துள்ளனர். இது பெரும் தவறு. இப்பதங்கள் ஜின், இன்ஸ், உயிருள்ளவை, உயிரற்றவை, உயிருள்ளோர், இறந்தோர், வானங்கள், பூமி, அனைத்து நட்சத்திரங் கள், கோள்கள், மரம், செடி, கொடி, கடலில் வாழ் பவை, தரையில் வாழ்பவை என அல்லாஹ் அல்லாத அனைத்துப் படைப்புகளையும் குறிக்கும்.
எனவே மேலே நாம் எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் முறையாக, முழுமையாக, சுயமாகப் படித்து உணர்ந்தவர்கள் கபுரிலுள்ள செத்தவர்களிடம் கையேந்தி நிற்பதும் ஆட்சியாளர்களிடம் கையேந்தி நிற்பதும் ஒன்றுதான். ஒரே குற்றம்தான். ஒஷிர்க்தான். கபுரில் கையேந்துவோர் அது “ஒஷிர்க்’ அல்ல, உங்களுக்குத்தான் கிறுக்கு என்று சொல்வது போல், அரசிடம் கையேந்துவோர் அது ஒஷிர்க் அல்ல உங்களுக்குத்தான் கிறுக்கு என்று சொல்லலாம்.
அதற்குக் காரணம் ஐங்கால தொழுகையைப் பேணித் தொழாததால், தொழுகைகளை நிலை நிறுத்தாததால், ஷைத்தானின் தோழர்களாகி இவ்வாறு பிதற்றுகின்றனர். தொழுகை பற்றி குர்ஆன் கூறுவதைப் பாருங்கள். தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் தங்களின் தொழுகையில் அலட்சியமாகவும் இருப்பார்கள். அவர்கள் (தொழுகையை) பிறருக்குக் காண்பிக்கிறார்கள். (107:4-6)
மேலும் முன்னர் எழுதப்பட்ட 19:58 இறை வாக்கையும், புகாரீ 552 ஹதீஃதையும் மீண்டும் மீண்டும் படித்து விங்குங்கள். மேலும் 2:3, 4:102, 103,142, 5:55,58,91, 9:5,54,71, 13:22, 22:35, 41, 24:37, 27:3, 29:45, 30:31, 31:4, 33:33, 35:29, 73:20, 6:92, 70:23,34, 74:43 போன்ற இறைவாக்குகளை முறையாகப் படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே ஐங்கால தொழுகைகளை நிலை நிறுத்த முடியும். அதாவது ஐங்கால தொழுகைகளையும் விடாமல் பேணித் தொழ முடியும்.
மேலும் 30:31 இறைவாக்கு தொழுகைகளை நிலை நிறுத்தாதவர்கள் முஷ்ரிக்களில் ஆகிவிடும் நிலை ஏற்படுகிறது என்று கடுமையாக எச்சரிக்கிறது. 73:43 இறைவாக்கு தொழுகையற்றவர்கள் நரகில் எறியப்படுவார்கள் என்று கூறுகிறது.
இப்போது சிந்தியுங்கள்! பாபரி மஸ்ஜித்துக்காகப் போராடுகிறவர்கள், போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல், பந்த், முற்றுகை எனத் தூள் கிளப்புகிறவர்களில் எத்தனைப் பேர் ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுகிறார்கள். அதாவது தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்.
தொழுகையற்றவர்களின் கோரிக்கைகள் இறைவனால் ஏற்கப்படுமா? அப்படியானால் யாரை ஏமாற்ற இத்தகைய போராட்டம்?
32:13, 11:118,119 இறைவாக்குகள் கூறும் நரகை நிரப்பும் பெருங்கூட்டத்தை ஏமாற்றத்தானே! அப்படிப்பட்டவர்கள்தான் மறுமையை விட இவ்வுலகை மிக அதிகமாக நேசிப்பதால், உலகியல் ஆதாயங்களைக் காட்டுவதால் அவற்றில் மயங்கி இப்படிப்பட்ட குர்ஆனுக்கும் ஹதீஃதுக்கும் முற்றிலும் முரண்பட்ட, பொது மக்களுக்குப் பெருத்த இடையூறை ஏற்படுத்தும், பிளேக்மெய்ல் செய்து அற்பமான உலகியல் லாபங்களை அடைய முற்படுவார்கள். அவர்களுக்கு நாளை மறுமையில் நன்மை ஏதுமில்லை என்று 2:200 இறைவாக்கும் உறுதிப்படுத்துகிறது.
மவ்லவிகளான மதகுருமார்களைத் தங்களின் ரப்பாகக் கொண்டு (பார்க்க : 9:31) அவர்களின் வழிகெட்ட போதனைகளை இறைவாக்காகக் கொண்டு கண்மூடி நடப்பவர்களே, அல்குர்ஆனை ஏறிட்டுப் பார்க்காதவர்களே, இப்படிப்பட்ட ஷிர்க்கான காரியங்களை துணிந்து செய்வார்கள்; அது மட்டுமா?
கபுரில் கையேந்துபவர்கள் சோதனையில் தோற்று ஈமானை இழந்து, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகில் விதித்ததை அடையும் போது அவுலியாக்களே கொடுத்தார்கள் என்று நம்பி பெருமையடைவது போல், அதையே மக்களுக்குக் கூறித் திரிவது போல், அரசிடம் கையேந்துபவர்களும் சோதனையில் தோற்று ஈமானை இழந்து, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகில் விதித்ததை அடையும் போது, பெரும் மகிழ்ச்சி அடைந்து, தங்க ளின் போராட்டத்தால் கிடைத்த வெற்றி என இறுமாப் படைகின்றனர். தங்களின் பத்திரிகைகளில் பெரிதும் விளம்பரப்படுத்திப் பெருமை கொள்கின்றனர்.
“அணுவத்தனை பெருமையுடையவனும் சுவர்க்கம் நுழைய முடியாது” என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடுமையான எச்சரிக்கையை ஷைத்தான் மறக்கச் செய்துவிடுகிறான். ஆக கபுரில் கையேந்துபவர்களுக்கும், அரசிடம் கையேந்து பவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. 2:186 இறைக்கட்ட ளைப்படி செத்தவர்களிடம் கையேந்துபவர்களும், உயிரோடிருப்பவர்களிடம் கையேந்துபவர்களும் ஒரே குற்றத்தையே செய்கின்றனர். இறைவனுக்கு இணை (ஷிர்க்) வைக்கின்றனர். 2:186 இறைக் கட்டளையை நிராகரித்து அல்லாஹ்வை நம்பாமல் அரசை நம்புகின்றனர். இது பெரும் குற்றம்.
பதவியை விரும்புகிறவர்களுக்கோ, பதவியைக் கேட்பவர்களுக்கோ, பதவிக்குத் தகுதியற்றவர்களுக்கோ பதவி கொடுக்கக் கூடாது என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். இந்த எச்சரிக்கையைத் துச்சமாக எண்ணித் தூக்கி எறிந்து விட்டு, “”நாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், தகுதியில் குறைவானவர்கள்; ஆயினும் குறைந்தத் தகுதி அடிப்படையில் மத்தியில் 10 விழுக்காடு, மாநிலத்தில் 7 விழுக்காடு பதவிகளைத் தர வேண்டும் என அரசிடம் கையேந்திப் போராடுகிறார்கள். இதுவும் குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்ட செயலா? இல்லையா?
அது சரி! பொதுமக்களின் அன்றாட செயல் பாடுகளுக்கு இடையூறு விளைவித்துத் தங்களின் கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்த குர்ஆன், ஹதீஃத் இடம் தருகிறதா? இல்லையே! நடைபாதைக்கு இடையூறாகச் சிலர் பேசிக் கொண்டிருந்ததையே நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளதைப் பார்க்கிறோமே. இவர்களின் இப்போராட்டம் ஆயிரக் கணக்கான லட்சக் கணக்கான மக்களின் அத்தியாவசிய தேவைகளையே நிறைவேற்ற முடியாமல் தடுக்கின்றது.
பிரசவத்திற்காக, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, கடும் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனை செல்ல, இன்னும் இவை போல் எண்ணற்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தடுப்பது குர்ஆன், ஹதீஃத் வழியா? இவர்களே தலைநகர் குலுங்கியது, தலைநகர் ஸ்தம்பித்தது, தலைநகரை சுனாமி தாக்கியது எனத் தங்களின் இதழ்களில் எழுதி பெருமைப்படுகிறார்களே! இது குர்ஆன், ஹதீஃத் வழியா? 33:36 இறைக் கட்டளைக்கு முரணான மனிதக் கருத்தா சொல்லுங்கள்!
இன்னும் பாருங்கள்! அரசுத் துறைகளில் ஊழலும், லஞ்சமும் தலை விரித்தாடும் நிலையில் பெயர் தாங்கி முஸ்லிம்கள் வேண்டுமானால் அரசு உத்தியோகங்களுக்கு ஆசைப் படலாம். ஈமானுள்ள உண்மையான ஒரு முஸ்லிம் அரசு உத்தியோகத்திற்கு ஆசைப்படுவானா? 1963லேயே வலிய வந்த மத்திய அரசு தொடர் வண்டித் துறையின் பதவியை உதறித் தள்ளியவரையும் நாம் அறிவோம்.
IAS, IPS, IFS என பெரும் படிப்புப் படித்து மிக உயர்ந்த பதவியிலிருக்கும் அரசு அதிகாரிகளும், படிப்பறிவற்ற, அரைகுறை படிப்பறிவுள்ள மந்திரிகளுக்கு கூழைக்கும்பிடு போடவும், சட்டத்திற்கு விரோதமான காரியங்களை வாய்மொழி உத்திரவு மூலம் கட்டளையிடுவதை நிறைவேற்றவும் ஓர் உண்மை முஸ்லிமால் முடியுமா? சொல்லுங்கள்.
லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் கை கோர்க்க முடியுமா? சொல்லுங்கள். இப்படிப்பட்ட பதவிகளில் 10விழுக்காடு, 7 விழுக்காடு என பதவிகள் பெறவா குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரண்பட்ட இப்போராட்டம்? இவர்களா குர்ஆன், ஹதீஃத்படி நடப்பவர்கள்? யாரை ஏமாற்ற இப்படி வேடமிட்டு நடிக்கிறார்கள்! நாளை நரகை நிரப்ப இருக்கும் இன உணர்வுள்ள பெருங்கூட்டத்தை (பார்க்க : 32:13, 11:118,119) ஏமாற்றி உலகியல் ஆதாயங்களை அடையலாம். அல்லாஹ்வையும், உண்மை விசுவாசிகளையும் ஒருபோதும் ஏமாற்ற முடியாது.
இப்படி எண்ணற்ற வகையில் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்படும், பொது மக்களுக்கு பெரும் துன்பம் விளைவிக்கும் போராட்டங்களை அவற்றின் தீங்கை 2:146 6:20 இறைவாக்குகள் கூறுவது போல் நன்கு அறிந்த நிலையில் ஏன் செய்யத் துணிகிறார்கள் தெரியுமா? அங்கு தான் இரகசியமே இருக்கிறது.
கபுரு-சமாதி வழிபாடு கூடாது என்பதை நன்கு அறிந்த நிலையில் இவர்களின் பங்காளிகளான இன்னொரு புரோகிதர் கூட்டம் தங்களின் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரண்பட்ட சொத்தை வாதங்களை(பார்க்க 33:21,36)க் கூறி கபுரு வழிபாட்டை நியாயப்படுத்தித் தங்களின் பைகளை நிரப்புவது போல், குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என வாய் கிழிய வாயளவில் பீற்றிக் கொண்டு, மேலே விளக்கியுள்ளபடி குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரண்பட்ட மாற்றாரின் செயல்பாடுகளான ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த்,, சாலை மறியல், முற்றுகை போன்றவற்றைச் செயல் படுத்த ஒரே காரணம் தங்கள் பைகளை நிரப்பவே.
இத்தீய நோக்கத்துடன் இறைவாக்குகள் 33:21,36 கூறும் நேரடிக் கருத்துக்களுக்கு முற்றிலும் முரணாக தங்களின் சொத்தை வாதங்களை எடுத்து வைத்து 32:13, 11:118,119 இறைவாக்குகள் கூறுவது போல் நரகை நிரப்ப இருக்கும் பெருங்கொண்ட மக்களைக் கவர்ந்திழுப்பார்கள். அவர்களும் நரகைச் சென்றடையச் செய்யும் இன வெறிக்கு ஆளாகி கஷ்டப்பட்டு உழைத்தப் பணத்தை இவர்களுக்கு வாரிக் கொட்டுவார்கள்.
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை கன ஜோராக நடக்கும். பக்தகோடிகளுக்கு வசூலில் கமிசன் கிடைப்பதால் அவர்களும் சுய வேட்கையுடன் விழுந்து விழுந்து வசூலிப்பார்கள். பெருந்தொகை சேரும். அடுத்து என்ன செய்வார்கள் தெரியுமா? பேருந்து, சிற்றுந்து, இதர வாகனங்கள் என வாடகைக்கு அமர்த்தி எல்லா ஊர்களிலும் கூலிக்கு ஆட்களைப் பிடித்து பெருங்கூட்டத்தை லட்சக் கணக்கில் கூட்டி எங்கள் பின்னால்தான் பெருங்கூட்டம் இருக்கிறது என்று ஊடகங்கள் அனைத்திலும் விளம்பரங்கள் செய்வார்கள்.
பெரும் அரசியல் கட்சிகளை தங்கள் பக்கம் கவனம் செலுத்த வைக்க குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரண்பட்ட செயல்களைச் சுயவிளக்கம் கொடுத்து செய்வார்கள். அந்த வேடிக்கையையும் பாருங்கள்.
குர்ஆன், ஹதீஃதுக்கு இவர்கள் கொடுக்கும் சுய விளக்கப்படி இவர்கள் மட்டுமே முஸ்லிம்கள். நேர்வழி நடப்பவர்கள். மற்றவர்கள் அனைவரும் காஃபிர்கள், முஷ்ரிக்கள், அவர்களின் பள்ளிகளில் தொழுவது ஹராம். அத்தொழுகை கூடவே கூடாது. அவர்களோடு ஸலாம், கலாம் எதுவும் கூடாது. திருமண உறவும் கூடாது. பெற்ற தகப்பனாக இருந்தாலும் மகன் அவரின் ஜனசா தொழுகையில் கலந்து கொள்வது ஹராம். அவர்களின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்ளக் கூடாது. இவைதான் ததஜ மத்ஹபு இமாமின் ஃபத்வாக்கள். இப்படி குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரண்பட்ட ஃபத்வாக்கள் கொடுத்தால்தான் தனிப்பள்ளிகள், தனி நிர்வாகம், தனி ஆதிக்கம், தனி வருமானம் என ஜமாய்க்க முடியும்.
இப்படிப் பள்ளிகளில், முஸ்லிம் சமுதாயத்தில் காஃபிர்கள், முஷ்ரிக் ஆனவர்கள், இவர்களின் இப்படிப்பட்ட ஹராமான போராட்டங்களுக்கு மட்டும் முஸ்லிம்கள் ஆகும் வினோதத்தைப் பாருங்கள்.
ஆரிய மதகுருமார்கள் சில மந்திரங்களைச் சொல்லி கற்சிலைகளுக்கும் தெய்வீக சக்தி ஏற்படுவதாகவும், அவற்றை வணங்குவது கொண்டு, இறைவனை திருப்திபடுத்தலாம் என்று இந்து பெரும் மக்களான பக்தர்களை தங்களின் சூனிய வசீகர பேச்சால் மயக்குவது போல், ததஜ மத்ஹபு இமாமும் சில மந்திர உச்சாடனங்களை(?) சொல்லி பள்ளியில், சமுதாயத்தில் காஃபிர், முஷ்ரிக் ஆனவர்கள் அனைவரையும், தனது ஹராமான ஒர்க்கான போராட்டங்களில் கலந்து கொள்ள வைக்க முஸ்லிம் களாக மாற்றும் சக்தி(?) பெற்றுள்ளதாகச் சொல்லி, தனது சூன்ய, வசீகர பேச்சால் (பார்க்க : 6:112) தனது பக்தர்களை மட்டுமல்ல, பள்ளியில் காஃபிராக்கப்பட்ட முஸ்லிம்களையும் ஏமாற்றி வஞ்சிக்கிறார்.
பள்ளியில் முஷ்ரிக், காஃபிர், ததஜ, மத்ஹபு இமாமின் போராட்டங்களில் முஸ்லிம் என்ற இரட்டை வேடம் ஏன் தெரியுமா? பள்ளியில் முஸ்லிம்களை முஷ்ரிக், காஃபிர் ஆக்கினால் தான் தனிப் பள்ளி, தனி ஆதிக்கம், தனி வருமானம் என தன்னை வளர்த்துக் கொள்ள முடியும். அதற்கு மாறாக போராட்டம் ஆர்ப்பாட்டங்களுக்கு இந்தப் பருப்பு வேகாது. சில ஆயிரம் மட்டுமே கூடுவார்கள். அரசியல் கட்சிகளிடம் தலைகளைக் காட்டிப் பேரம் பேச முடியாது. அத னால்தான் பள்ளியில் முஷ்ரிக், காஃபிர், போராட்டங்களுக்கு அனைவரும் முஸ்லிம்கள் என்ற இரட்டை வேடம்-முனாஃபிக் தனம் புரிகிறதா?
49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத் தில் ஈமான்-இறை நம்பிக்கை நுழையாத பெயர் தாங்கி இன வெறி கொண்ட முஸ்லிம்களிடம் பெரும் தொகை வசூலாகிக் கொண்டிருக்கிறது. அப்பெரும் பணம் கொண்டு பேருந்து, சிற்றுந்து இன்னும் பலவகை வாகனங்கள் மூலம் தலைகளைக் காட்ட முஸ்லிம், முஸ்லிம் அல்லாதார் என வேறுபாடின்றி கூலிக்கு ஆட்களை பிடித்து ஜனவர 28-ல் அரசியல் கட்சிகளை ஏமாற்றத் தலைகளை காட்டப் போகிறார்.
அதன் பின்னர் நடப்பது என்ன? பேரம் நடக்கும்! எங்கள் ததஜவில் இத்தனை லட்சம் மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகள் ஒட்டு மொத்தமாக உங்களுக்கே. எத்தனைக் கோடி தருகிறீர்கள் என பேரம் பேசப்படும். இதிலும் பெருந்தொகை பெற கடைபிடிக்கும் தந்திரம் என்ன தெரியுமா? ஜனநாயக ஆட்சி முறை இறையளித்த ஆட்சி முறை அல்ல. இந்த நாட்டின் பிரஜை என்பதை நிலைநாட்ட வாக்களிப்பது, தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பது நிர்பந்த நிலை. எந்த ஆத்மாவையும் அதன் சக்தி மீறி சோதிப்பதில்லை என பல இறைவாக்குகள் கூறுகின்றன. நிர்பந்த நிலையில் உள்ளத்தில் ஈமானின் உறுதியோடு நாவினால் குஃப்ரான, ஒஷிர்க்கான சொல்லை சொல்வது குற்றமில்லை என்று 3:28, 16:106 இறைவாக்குகள் கூறுகின்றன!
எனவே வாக்களிப்பதோ, வேட்பாளர்களாக நிற்பதோ அல்லாஹ்வால், நிர்பந்தம் காரணமாக அனுமதிக்கப்பட்ட செயல்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதற்கு மாறாக தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க மாட்டோம். ஆனால் வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்காக எங்கள் உயிரைக் கொடுத்தும் பெரும்பாடுபட்டு அவர்களை வெற்றி பெறச் செய் வோம் எனப் பிதற்றுவது குர்ஆன், ஹதீஃத் வழியா? குறைந்தது குர்ஆன், ஹதீஃத் நிர்பந்த நிலையில் அனுமதிக்கும் செயலா? சொல்லுங்கள்.
ஒரு முஸ்லிம் M.C., M.L.A. M.P.. எனத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது அல்லாஹ்வின் பயம் இருக்கும்; தப்புத் தண்டா செய்ய ஓரளாவது பயப்படுவான். அதற்கு மாறாக ஒரு நாத்திகனோ, பல தெய்வ ஆத்திகனோ தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களுக்கு அந்த அளவு இறையச்சமோ, மறுமை பயமோ இருக்க முடியுமா? அப்படிப் பட்டவர்களை உயிரைக் கொடுத்து உழைத்து வெற்றி பெறச் செய்து பதவியில் அமர்த்திவிட்டால், அதன் பின்னர் அவரது பதவிக் காலங்களில் அவர் செய்யும் அனைத்துத் தீச் செயல்களிலும் இவர்களுக்கும் பங்கு உண்டா? இல்லையா? தெரிந்த நிலையில் ஏனிந்த கொடூர செயல்? அதற்கும் காரணம் உண்டு.
பெரும் அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசும் போது சீட்டும், ரொக்கமும் என்று பேரம் பேசும் போது பெருந்தொகை கிடைக்காது. சீட்டுக்காகவும் கணக்குப் பண்ணுவார்கள். சீட்டு வேண்டாம் பணம் மட்டும் போதும் எனப் பேரம் பேசும்போது பெருந்தொகை கிடைக்கும். ததஜ மத்ஹப் இமாமின் தந்திரம் புரிகிறதா? அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முற்படும் கட்சியிடம் கோடிக்கணக்கில் கறக்க அரிய வாய்ப்பு.
ஆம்! 2014 ஜனவரி 28-ல் கூலிக்கு ஆட்களைப் பிடித்தும், பள்ளியில் முஷ்ரிக், காஃபிர் ஆக்கப்பட்டவர்களை, போராட்டத்தில் முஸ்லிம்களாக மந்திரத்தால் ஆக்கியும், லட்சக்கணக்கில் தலைகளைக் காட்டப் போகிறார். ஏப்ரல் 2014-ல் நடைபெற இருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்குத்தான் இந்த முன் ஏற்பாடு. பெரும் கூட்டத்தைக் காட்டி அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி ஹராமான வழியில் கோடி கோடியாகக் கொள்ளை அடிக்கவே இந்த மாய்மாலம்.
மவ்லவிகள் மட்டுமே மார்க்கத்தைச் சரியாக விளங்க முடியும் என்ற குருட்டு நம்பிக்கையில் ததஜ மத்ஹப் இமாம் பின்னால் கண்மூடிச் செல்லும் சகோதரர்களே, 47:24 இறைவாக்குச் சொல்வது போல் உங்கள் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு குர்ஆன், ஹதீஃதை நேரடியாகப் பார்த்து சிந்தித்து விளங்க முற்படாமல், ததஜ இமாமின் குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்ட சூன்ய பேச்சில், வசீக பேச்சில் மயங்கி (பார்க்க : 6:112) அவற்றை இறைவாக்காக நம்பிச் செயல்பட்டு நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு ஒப்பாரி வைக்காமல் (பார்க்க : 33:36, 66,67,68) அவரை அங்கு வேதனை தாங்காது சபிக்காமல், இங்கே சுய சிந்தனையுடன் குர்ஆன், ஹதீஃதை நேரடியாகப் பார்த்து விளங்கி அதன்படிச் செயல்பட முன் வாருங்கள்.
ததஜ மத்ஹபு இமாம் பின்னால், 47:24 இறை வாக்குக் கூறுவது போல் உங்களின் உள்ளங்களில் பூட்டுப் போட்டுக் கொண்டு கண்மூடிச் செல்லும் அன்புச் சகோதரர்களே, (உங்களில் மிகப் பெரும் பாலோர் அவரை தக்லீது செய்வதாகவும், அதனால் தான் மற்றவர்களின் பேச்சை கேட்க விடாமலும், எழுத்துக்களைப் பார்க்க விடாமலும் அவர் தடுப்பதாகவும் அவரே ஒப்புக் கொண்டிருப்பதாலேயே இவ்வாறு எழுத நேரிடுகிறது)
தயவு செய்து உங்கள் உள்ளங்களிலுள்ள பூட்டைக் கழற்றி எறிந்து விட்டு அல்குர் ஆன் 33:36, 66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்க முற்படுங்கள். இவ்வசனங்களில் காணப்படும் பெருமையடிப்போர், “”நாங்கள்தான் அரபி கற்ற மவ்லவிகள், எங்களுக்குத்தான் குர்ஆன் சரியாக விளங்கும், உங்களுக்கு விளங்காது” என்று பெருமை பேசும் மவ்லவிகளையே குறிக்கிறது. நரகில் கிடந்து வெந்து கொண்டு அவர்களைச் சபிப்பதை விட்டு, இங்கேயே அவர்களைப் புரிந்து கொண்டு புறக்கணியுங்கள். நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடியுங்கள்.
நீங்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள ததஜ இமாம் தமுமுகவை விட்டு வெளியேறும் போதே (2005-ல்) தன்னுடைய உண்மை நிலையை தமுமுக அலுவலகத்தில் இருந்த பலர் முன்னிலை யில் அவர்களைச் சாட்சியாக வைத்துக் கொண்டு தெளிவாக அம்பலப்படுத்தி விட்டார். அதாவது “”பீ.ஜை.யாகிய தான் அபூ ஜஹீலை விடக் கொடியவன். எனது ஒரு முகத்தைத்தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். எனது அடுத்த முகம் உங்களுக்குத் தெரியாது எனத் திருவாய் மலர்ந்துள்ளார். 1986லிருந்து அவருடன் நெருங்கிப் பழகிவரும் அவரது இணை பிரியா அன்பு நண்பரும் பீ.ஜை. கிரிமினல் களிலேயே கொடிய கிரிமினல் என சர்ட்டிபிகேட் அங்கேயே கொடுத்துவிட்டார்.
ஆம்! ததஜ மத்ஹபு இமாம்; அவரது உணர்வு வார இதழில் தொடர்ந்து காணப்படும் முக்கிய அறிவிப்பு, கேள்விகளுக்கு அவர் கொடுக்கும் பதில்கள், எழுதும் கடிதங்கள், அன்றைய அபூஜஹீலிடம் காணப்பட்ட ஆணவம், பெருமை, அகங்காரம், தான் என்ற மமதை அனைத்தம் சிந்தாமல் சிதறாமல் இன்றைய அபூ ஜஹீலிடம் இருப்பதையே வெளிப்படுத்துகின்றன. இந்த நிலையில் அவரைக் கண்மூடிப் பின்பற்றும் சகோதரர்கள் கண் திறந்து, உள்ளத்திலுள்ள பூட்டை அகற்றிச் சுயமாக குர்ஆன், ஹதீஃத்களைப் பார்த்து உண்மையை உணர்ந்து திருந்தினால் தப்பினார்கள். இல்லை என்றால் இந்த ஆக்கத் திலுள்ள குர்ஆன் வசனங்களை கூறும் மிகக் கொடிய தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும் என எச்சரிப்பது மட்டுமே எமது கடமை.
கீழ்க்கண்ட வசனங்களை கவனமாகப் படித்துப் படிப்பினை பெறுங்கள்.
அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் நெறிநூலுக்கும் வாரிசுகள் ஆனார்கள். இவ்வுலகில் அற்பப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு (அதற் கேற்றபடி நெறிநூலின் நேரடிக் கருத்தை மாற்றிக் கொண்டனர்) எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் எனக் கூறுகின்றனர்.
இது போன்று வேறோர் அற்பப் பொருள் அவர்களுக்கு வந்துவிட்டால் அதையும் எடுத்துக் கொள்வார்கள். அல்லாஹ்வின்மீது உண்மை யேயன்றி வேறொன்றும் கூறலாகாது என்று நெறி நூலின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்பட வில்லையா? அதிலுள்ளவற்றை அவர்கள் படிக்கின் றனர். (ஆனால் அவற்றை அவர்கள் பொருட்படுத்து வதில்லை) பயபக்தியுடையோருக்கு மறுமை வீடே மேலானதாகும். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (7:169)
”எவர்கள் நெறிநூலை உறுதியாகப் பற்றிப் பிடித்துத் தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ, அந்த நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்கமாட்டோம்”. (7:170)
ததஜ மத்ஹப் இமாம் முதல், அம்மத்ஹபின் முகல்லிதுகள் தொழுகையை நிலைநிறுத்துகிறார்களா? இல்லையே!
மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டி ருப்பது பற்றி அல்லாஹ் பாராமுகமாக இருக்கி றான் என்று நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம். அவர்க ளுக்கு (தண்டனையை) தாமதப்படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (மறுமை) நாளுக்காகத்தான். (14:42)
7:3, 18:102-106 இறைவாக்குகளில் அல்லாஹ் கட்டளையிடுவது போல் அல்லாஹ் அல்லாத யாரை யும் பாதுகாவலர்களாக, நேர் வழிகாட்டிகளாக நம்பிப் பின்பற்றாமல், 2:186ல் அல்லாஹ் கட்டளையிடுவது போல் அல்லாஹ்வையே முற்றிலும் முழுவதுமாக நம்பி இந்த ஆக்கத்தில் எடுத்தெழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள், 2005க்குப் பிறகு கற்பனை செய்யப்பட்டுள்ள ததஜ மத்ஹபு பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதையும், அதனைக் கற்பனை செய்து புழக்கத்தில் விட்டிருக்கும் அதன் இமாம் பீ.ஜை. தன்னை நம்பி தன் பின்னால் வரும் அப்பாவி முஸ்லிம்களை நரகை நோக்கி நடைபோட வைப்பதையும் (பார்க்க 33:66,67,68)
எளிதாக உணர முடியும். 47:24 இறைவாக்குக் கூறுவது போல் தங்கள் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுகொண்டு, குர்ஆன் நமக்கு விளங்காது என்ற மூட நம்பிக்கை யில் அதை ஏறிட்டுப் பார்க்காதவர்கள் ஒரு போதும் நேர்வழி பெற முடியாது என்பதை மேற்படி குர்ஆன் வசனங்கள் அனைத்தும் திடனாக உணர்த்துகின்றன.
ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை கூடாது என்றால் பின் எப்படி நமது உரிமைகளைப் பெறுவது என்று சிலர் கேட்கலாம்.
3:103,105,139, 6:153,159, 8:46, 24:55, 30:32, 42:13,14 குர்ஆன் வசனங்களை மீண்டும், மீண்டும் நேரடியாகப் படித்து உள்வாங்குங்கள். முஸ்லிம் சமுதாயம் நரக விளிம்பில் நிற்பதற்கும், அதல பாதாளத்தில் விழுந்து புழு, பூச்சிகள் போல் துடிப்பதற்கும் காரணத்தைப் புரிந்து கொள்வீர்கள். இதற்குக் காரணம் அல்லாஹ்வை முற்றிலும் முழு வதுமாக நம்பாமல் சுயநலமிக்க மத வியாபாரிகளான மவ்லவிகளையும், அரசியல் வியாபாரிகளை யும் நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்வது தான்.
இந்த இரு இடைத்தரகர்களையும் முற்றிலும் புறக்கணித்து விட்டு முஸ்லிம்கள் 3:103 இறைக் கட்டளைப்படி மத்ஹபு, தரீக்கா, இயக்கம், கழகம் எனப் பிரியாமல், ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடிப் போத னைகள்படி நடக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.
33:36 இறைக் கட்டளையை நிராகரித்து இப் புரோகிதர்களின் சுயவிளக்கங்களை ஒருபோதும் நம்பிப் பின்பற்றக் கூடாது. சமுதாயத்தில் இந்த நிலை ஏற்பட்டுவிட்டால் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு விடுவார்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு விட்டால் அவர்கள் விரும்புகிறவர்கள் மட்டுமே ஆட்சியில் அமர முடியும். அவர்கள் முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்க முற்படுவார்களா?
R.S.S. வகையறாக்கள் 1435 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை எதிர்த்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது போல், காணாமல் போய்விடுவார்கள். 24:55 இறைவாக்கில் அல்லாஹ் வாக்களித்துள்ளது போல் ஆட்சி அதிகாரத்தையே முஸ்லிம்களுக்கு தந்து விடுவான். ஆனால் அந்த நிலை ஏற்படுவது எந்நாளோ?
ஆயினும் 33:36 இறைக் கட்டளையை நிராகரித்து குர்ஆன், ஹதீஃதுக்குச் சுயவிளக்கம் கொடுத்து பெருங்கொண்ட மக்களை வழிகெடுக்கும் இம்மூடர்களின் மூளை வரண்ட செயல்பாடுகளை மக்களுக்கு தெளிவாக விளக்கி அவர்களின் சூன்ய, வசீகர, உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்க ஓயாது உழைப்பது மட்டுமே நம் கடமை. இந்தக் காலக் கட்டத்தில் மீண்டும் இஸ்லாமிய எழுச்சியை அல்லாஹ் நாடி இருந்தால் அது நடக்கும். இல்லை என்றால் இல்லை. ஆயினும் அதற்காக உழைத்த வர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது. இம்மையிலும், மறுமையிலும் அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அல்லாஹ்விடம் உண்டு. அதில் சந்தேகமே இல்லை. அல்ஹம்துலில்லாஹ்.
-அபூ அப்தில்லாஹ்,
source: http://annajaath.com/?p=6818