ஆடு மேய்த்தலில் ஆளுமை!
[ நபியாக ஆக்கிய அனைவரையும் அல்லாஹ் ஆடு மேய்ப்பராக்கினான்.
கால்நடைகள் பிரிந்து சென்று வழிதவறி விடாதிருக்க, விலங்குகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்க கனிவான இதயத்துடன் கண்காணிப்பு நிகழ்த்த மேய்ப்பருக்கு தனித்த ஆளுமை வேண்டும்.
ஆடு மேய்த்தலில் வெற்றி காண்பவர், மக்களை ஒருங்கிணைத்தல். நல்வழிப்படுத்துதல், நெறியமர்த்துதலில் இலக்கை எட்டுவார்.
இந்த உட்கருத்தை அடிப்படையாக வைத்து தமது தூதர்கள் அனைவரையும் ஆடுகள் மேய்ப்பராகக் காட்டினான் அல்லாஹ்.
அல்லாஹ் மலக்குகளிலிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (அல்குர்ஆன் 22:75)
‘‘எனக்கு நபிப் பட்டம் வழங்கப்பட்டபோது ஜியாது குடும்பத்தாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன்.’’ – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (புகாரி, நஸயீ) ]
ஆடு மேய்த்தலில் ஆளுமை!
ஸஹாபி காலித் பின் வலீத் வம்சத்தவர் ஷேக் அப்துல் ஃபதாஹ் அபூ குதாஹ். 1917இல் பிறந்தவர். சௌதி அரேபியா ‘‘யுனிவர்சிட்டி ஆஃப் அல் இமாம் முஹம்மது’’ வில் பணி செய்து ஓய்வு பெற்றவர். உம்மு தர்மான் இஸ்லாமியா யூனிவர்சிட்டியின் வருகைப் பேராசிரியர். புருணை சுல்தான் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் ஏற்படுத்திய ஹதீஸ் இருக்கைக்கான முதல் சேர்மேன்.
70 அரபு நூல்கள் எழுதியுள்ளவர். சிரியாவைச் சேர்ந்த இவரும், இவரது பள்ளித் தோழரான ஷேக் அஹ்மது இஷ்ஷ§தீன் அல்பயனூனீ. இவர் வடக்கு சிரியா ஹலப் நகரின் பிரதான பள்ளியான ‘‘மஸ்ஜிதே அபூஜர்’’ இமாம் சூஃபி ஹஜரத் ஷேக் இஷாஅல் பயனூனீ என்பவரின் மகனாவார். 1913இல் பிறந்தவர். இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய ‘‘கப்சாத் – மின் -நூர் – அல் – நுபவ்வா’’. என்னும் அரபு நூலை பேராசிரியர் முஹம்மது அப்துஸ் சத்தார்கான் உருதுக்கு மாற்றியுள்ளார்.
சத்தார்கான் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக அரபித் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து தற்சமயம் அமெரிக்க சிகாகோ நகரில் நக்ஷபந்தி பவுண்டேஷன் உறுப்பினராக அங்கு வசித்து வருகிறார். இவர் மொழி மாற்றிய உருது நூலை ஆங்கிலப் படுத்தியுள்ளார் உஸ்மானியாஸ. அரபித்துறை இயக்குனர் டாக்டர் முஹம்மது முஸ்தபா ஷெரீஃப். நீயூ ஜெர்ஸியில் வசிக்கும் அவரது நண்பர் முஹம்மது யூனூஸ் அஹமத் அந்நூலை பதிப்பித்துள்ளார். சோதுகுடியான் மகன் ஏ.ஜெ. நாகூர் மீரான் அந்த ஆங்கில நூலிலிருந்து சில பகுதிகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
ஆங்கில நூலின் பெயர் : “Luminous Glimpses of the Prophet’s Life”
நபியாக ஆக்கிய அனைவரையும் அல்லாஹ் ஆடு மேய்ப்பராக்கினான். கால்நடைகள் பிரிந்து சென்று வழிதவறி விடாதிருக்க, விலங்குகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்க கனிவான இதயத்துடன் கண்காணிப்பு நிகழ்த்த மேய்ப்பருக்கு தனித்த ஆளுமை வேண்டும். ஆடு மேய்த்தலில் வெற்றி காண்பவர், மக்களை ஒருங்கிணைத்தல். நல்வழிப்படுத்துதல், நெறியமர்த்துதலில் இலக்கை எட்டுவார். இந்த உட்கருத்தை அடிப்படையாக வைத்து தமது தூதர்கள் அனைவரையும் ஆடுகள் மேய்ப்பராகக் காட்டினான் அல்லாஹ்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, புகாரி, நஸயீ பதிவு : ‘‘எனக்கு நபிப் பட்டம் வழங்கப்பட்டபோது ஜியாது குடும்பத்தாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன்.’’
அபூஹ§ரைரா அறிவிப்பு: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரைத்தாக (புகாரி – 4 – 363) (இப்னுமஜா – 2 – 4) பதிவு. ‘‘ஆடு மேய்க்கும் முன்பு நபிப் பட்டம் வழங்கப்படவில்லை! ஸஹாபாக்கள் கேட்டனர், ‘‘நீங்கள் மேய்த்தீர்களா?’’ மக்காவிலுள்ள மக்களின் ஆடுகளைக் கூலிக்கு மேய்த்தேன்’’. பதிலளித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, ஹஜரத் அப்தா பின் ஹஸன் அறிவித்திருக்கிறார்; ஹஸரத்துகள் மூஸா அலைஹிஸ்ஸலாம், தாவூது அலைஹிஸ்ஸலாம் இரு நபிகளும் ஆடுகள் மேய்த்தனர்.
சூரா கஸஸ் வசனம்- 27. எட்டாண்டுகள் ஆடு மேய்த்து பத்தாகப் பூர்த்தி செய்தால் எனது இரண்டு மகள்களில் ஒருவரை உமக்கு மணமுடித்து வைப்பேன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறப்பட்டது.
பெரும்பாலான அரபிகள் வேலை ஆடு, ஒட்டகம் மேய்த்தல் தான். இளைஞர்கள் முதல் சிறியவர்கள் வரை அவரவர் சொந்த நிலங்களில் கால் நடைகளை மேய்த்துக் கொண்டிருப்பர்.
ஹஜரத் அப்துர் ரஹ்மான் பின் காதிப் கூறிய பதிவு. ஹஜ்ரத் உமருடன் மக்காவிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். ஸஜ்னன் பள்ளத்தாக்கு கடந்து சென்ற போது உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; ‘‘எனது தந்தையுடைய ஒட்டகங்களை இங்கு தான் மேய்த்துக் கொண்டிருந்தேன். சோர்வடையும் வரை என் தந்தை கடுமையாக வேலை வாங்குவார். சோர்ந்து விழுந்தால் அடிப்பார். இன்று எனக்குப் பின்னால் மக்கள் வரக்கூடிய அளவில் இருக்கிறேன். இதற்காக இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கு மேலாக அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் நான் அஞ்சுவதில்லை. ‘‘தபக்கத் இப்னு சையத்’’ (3,191) ‘‘அல்ரியாஸ் அல் நஸ்ராபீ மனாஹிப் அல் அஸ்ரா’’ இல் கூறப்பட்டுள்ளது.
‘அல்சலா & அல்ஜமியா’ என உமர் ரளியல்லாஹு அன்ஹு அழைப்பு விடுக்க மக்கள் ஒன்று கூடினர். உயரமான ஒன்றில் ஏறி நின்று அல்லாஹ்வுக்கு நன்றி கூறி தொடங்கினார். ‘‘என் தந்தையுடைய ஆடுகளுடன், மற்றவர்களுடைய ஆடுகளையும் மேய்ப்பேன்.’’ என் மாமி ஆடுகளையும் மேய்த்துக் கொண்டிருந்தேன்.. அவர் பனூ மஹ்சூம் குலத்தை சேர்ந்தவர். நான் அவருக்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பேன். கை நிறைய பேரித்தம் பழம் வழங்குவார்.’’
அப்துர் ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு, உமரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினா தொடுத்தார்; ‘‘எதற்காக ஆடு மேய்த்ததைக் கூறுகிறீர்கள்?’’
என்னுடைய பொறுமையின்மையை உள் மனம் நான் தனித்து உறங்கியபோது எடுத்துரைத்தது. ‘‘ஓ உமரே! நீர் நம்பிக்கையாளர்களின் தலைவர். உமக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு ஒருவர் இல்லை. உம்மை விடவும் உமது உள் மனது சுய அறிமுகம் படுத்திக் கொள்கிறது’’ என்றது. அதனால்தானே என்னவோ ஆடுமேய்த்த செய்தி கூறியிருக்கிறேன். பிழைப்புக்காக சிறிய வேலைகள் செய்வது தவறல்ல. கேவலமான செயலுமல்ல.
ஹஜ்ரத் அலி ரளியல்லாஹு அன்ஹு பள்ளத்தாக்கு ஒன்றை கடக்கும் போது கடும் பசி அவருக்கு ஏற்பட்டது. அவ்விடத்தில் யூதர் தோட்டம் இருப்பதைக் கண்டார். தண்ணீர் பெற்றுக் கொண்டு பேரித்தம் பழம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அலி ரளியல்லாஹு அன்ஹு 3, 4 வாளி தண்ணீர் எடுத்துக் கொடுத்து பேரித்தம் பழம் பெற்றார். இன்னும் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா என்றனர் யூதர்கள். தேவையில்லை. பசி தீரப் போதுமான பழம் கிடைத்துவிட்டது என்றார்.
கத்பன் பழங்குடியினமும், கைபர் யூதர்களும் சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பர். சண்டையில் கத்பன் பழங்குடியினமே வாகை சூடும். ‘‘எங்கள் விரோதிகளைக் கொல்ல உனது இறுதி நபியை அனுப்பி வைப்பாயாக’’ அல்லாஹ்விடம் கைபர் யூதர்கள் வேண்டுதல் புரிந்தனர். ‘‘துஆ’ கபூலாக்கப்பட்டு கத்பன் பழங்குடி இனம் தோல்வி சந்தித்தது. கைபர் யூதர்கள் தங்களது வேண்டுதலுக்கு மாறுசெய்தனர். நபிப்பட்டம் வழங்கப்பெற்ற ரசூலுல்லாஹ்வை ஏற்க மறுத்தனர். (சூரா பகரா 2:89)
தௌராத், இன்ஜில் வேதங்கள் வழங்கப்பட்ட போதும் இறுதி நபித்துவம் கேட்டு பிரார்த்தித்தனர். ஆனால், அல்லாஹ் தேர்வு செய்த ரசூலை அங்கீகரிக்க மறுத்தனர். இப்னு கதீரில் கூறப்பட்டுள்ளது. இறைத் தூதர்கள் அனைவரும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகைக்கு நல் ஆதரவாளர்களாகவே இருந்தனர். வரவிருக்கும் ரசூலைத்தான் நீங்கள் பின் பற்றவேண்டும் என்ற நற்செய்தியையும் தம்மைப்பின் பற்றுவோரிடம் கூறியிருந்தனர்.
அல்லாஹ் நல்ல குடும்பத்திலிருந்து தனது தூதரைத் தேர்வு செய்தான். நபியின் முன்னோர் உண்மையாளர்களாக, உத்தமமானவர்களாக இருந்தனர். அவர்கள் வம்சத்திலிருந்து அல்லாஹ் தேர்வு செய்தான். உலகின் எந்த மூலையிலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போன்ற சிறந்த மனிதரை காணவியலாது.
ஹஜரத் வதில்லாஹ் பின் அல் அஸ்கா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவித்திருக்கிறார். புனிதரான இப்ராஹிம் நபியிடமிருந்து இஸ்மாயிலை அல்லாஹ் தேர்வு செய்தான். இஸ்மாயிலிடமிருந்து பனூகினானா வம்சத்தை உண்டாக்கினான். அவர்களிலிருந்தும் பனூஹாஷிம், குரைஷிகள் வந்தனர். பனூஹாஷிமிலிருந்து ரசூலுல்லாஹ்வை கொண்டு வந்தான் அல்லாஹ். (முஸ்லிம், திர்மிதி)
ரபியுல் அவ்வல் – 12 திங்கட்கிழமை அன்றே நபி பிறந்தார்கள். நபிப்பட்டம் வழங்கப்பட்டதும், இறப்பெய்தியதும் திங்கட்கிழமையே!
ஹஜரத் அபூகததா கூறியதாக, அல்லாமா தஹபீ கூறியிருக்கிறார். ‘‘நபியவர்களிடம் பித்தோயின் வினவினார், ‘‘ஒவ்வொரு திங்களும் நோன்பு வைக்கிறீர்களே’’? நபி பதிலளித்துள்ளார்கள்; எனது பிறப்பு திங்கள் அன்று. முதல் வஹி வந்ததும் திங்கள். அதனால் திங்கள் தோறும் நோன்பு வைக்கிறேன். (தரீக்க அல் இஸ்லாம் அத் – 1&22)
அல்லாஹ்வின் உதவியால் தூய மனிதராகத் தனித்த தன்மையுடன் விளங்கினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய கேரக்டரால் சமூகத்திற்குள் பிரபலமடைந்தார்கள். ஹஸரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாக, ஹஜ்ரத் சூயிது ரளியல்லாஹு அன்ஹு எழுதிய ‘‘கஸைஸ் குப்ரா’’ கிதாபு 1-82 பதிவு.
“உணவு உண்ண வருமாறு எல்லா குழந்தைகளையும் அபுதாலிபு அழைப்பார். ஒரு குழந்தையுடைய உணவை மற்றொரு குழந்தை பறித்து உண்ணும் போக்கில் குழந்தைகள் இருப்பர். முஹம்மது மட்டும் அக்குழந்தைகளோடு சேராது தனித்திருப்பார். அவரது பண்பைக் காணும் அபுதாலிபு அவருக்கென ஒரு தட்டு உணவை எடுத்து தனியாக வைத்திருப்பார்.”
முஹம்மது ஹிபத் அல்மௌலா என்பவர் தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ரசூலுல்லாஹ்வுக்கு தனித்து எந்த ஆசானும் இல்லை. அல்லாஹ்வைக் கொண்டு தம் வாழ்வின் பல நிலைகளைக் கடந்தார்கள். இறை துணையால் மேலான நிலை அவர்களுக்குக் கிடைத்து அத்தன்மை மனித குலத்திலேயே சிறந்த மனிதராக உருவாக்கியது. அதன் காரணமாக அரபி பழங்குடியின வாழ்க்கை முறை ரசூலுல்லாஹ்வின் வாழ்க்கையினுள் சிறு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
‘‘சிரா அண்டு பேட்டல்ஸ்’’- வாழ்க்கையும் யுத்தமும் என்ற தலைப்பிலான நூலில் கூறப்பட்டுள்ளது. அரபுப் பழங்குடி இனத்தவரிடம் இருந்த சிலை வணக்கம். சிலைகளுக்குப் பலியிடப்பட்ட விலங்கினங்களுடைய சதை உண்ணும் பழக்கம் ரசூலிடம் இல்லை. இறை ரப்பு நபிக்குச் சொல்லிக் காட்டியதன் மூலமாக நேரான வாழ்வு வாழ்ந்ததாக ஹாபிஸ் இப்னு கதீர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இப்னு இஷாக் கூறியதாகக் கூறியிருக்கிறார். நபி தனது இளமைக் காலத்தை நீதியுடன் நேரிய வழியில் கடந்ததாக, தீயவைகளிலிருந்து விலகிக் கொண்டதாக, எல்லா நிலைகளிலும் பாதுகாக்கப்பட்டு பொறுமையின் சிகரமாக விளங்கியதாக. ஆமீன் மற்றும் சாதிக், நேர்மையாளர் – நம்பகத்தன்மையுள்ளவர் என்றும் அறியப்பட்டார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு இஷாக் உரைத்திருக்கிறார். ‘‘இரண்டு முறை அரபு மக்கள் பழக்க வழக்கங்களுடன் இணக்கமாகி விடக் கருதினேன். இரண்டு முறையும் அல்லாஹ் காப்பாற்றினான். தான் மேய்த்துக் கொண்டிருந்த ஆடு, மாடுகளை பார்த்துக் கொள்ளுமாறு குரைஷிவம்சத்தவர் ஒருவரிடம் கூறிவிட்டு இளைஞர்கள் நடத்தும் இரவு நேர கேளிக்கையில் கலந்து கொள்ள மக்காவிற்குள் நுழையும் போது ஒரு வீட்டுக்குள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். என்ன என்று வினவினேன். ஒரு திருமண நிகழ்வு என்றனர். அங்கு சென்றமர்ந்தேன் அல்லாஹ் என்னை உறக்கத்தில் ஆழ்த்தி விட்டான். விழித்துப் பார்த்தேன் பொழுது விடிந்திருந்தது. மீண்டும் ஒரு முறை சென்ற போதும் முன்பை விடவும் அதிகமான உறக்கத்தில் ஆழ்த்தி விட்டான் அல்லாஹ்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவம் பெறும் முன்பே அரபிகளிடம் இருந்த சிலை வணக்க முறையை வெறுத்தவர். இப்னுஹிஷம் எழுதிய அல்சிறா அல்நபவியூ அத் – 1 குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவிற்கு நபி நடந்து சென்றபோது துறவி புஹைராவைச் சந்தித்தார். இருவரும் உரையாடும் போது நபியிடம், புஹைரா ‘‘லாத்-உஜ்ஜா’’வை வைத்து உங்களிடம் வினா தொடுக்கிறேன் பதிலளிப்பீர்களா? கேட்டார்.
நான் மிகவும் வெறுக்கக் கூடியவர்கள் ஸாத் – உஜ்ஜா. எனப் பதிலளித்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
சிலை வணக்கவாதிகள் பாகன் அரபிகள். அவர்கள் பாதையைப் பின்பற்றுவேன் என லாத் – உஜ்ஜாவிடம் சத்தியம் செய்தவர் புஹைரா. அல்லாமா காஷியியாஸ் கூறுகிறார்; புஹைரா சத்தியம் பெற்றது ரசூலை சோதிப்பதற்காக. ‘‘அல்ஷிபா பீ ஹ§க்கு அல் முஸ்தபா’’ நூலில் பதிவு செய்திருக்கிறார்.
மக்கள் தங்கள் கரங்களால் ஒரு வடிவத்தை செய்து அதைக் கடவுள் என வணங்குவதை ரசூல் விரும்பவில்லை. சிலை வணக்க பழங்குடி அரபிகளிடமிருந்து அல்லாஹ் ரசூலைப் பாதுகாத்தான், உலகிலுள்ள மனித குலத்தை நல்வழிப்படுத்திக் கொண்டு சேர்ப்பதற்காக.
அல்லாஹ் மலக்குகளிலிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (அல்குர்ஆன் 22:75)
– ஏ.ஜெ. நாகூர் மீரான்
முஸ்லிம் முரசு ஜனவரி 2014
source: http://jahangeer.in/?paged=2