தவறான செயலுக்கு அருவருப்பான தண்டனை தீர்வாகுமா?
நேற்றைய தினம் சன் நிவூஸ் தொலைக்காட்சியில் கண்டு அதிர்ந்து போன செய்தி ……
மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் (ஒரு ஆணும், பெண்ணும்) தனியாக இருந்து இருக்கிறார்கள். (திருமணம் ஆகாதவர்கள் )
இதை அறிந்த ஊர் நிர்வாகம் அவர்களை பஞ்சாயத்தில் ஒப்படைத்து இருகிறார்கள். இவர்களுக்கு பஞ்சாயத்தில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டு இருக்கிறார்கள்.
அந்த தொகை தன்னிடம் இல்லை என்று இருவரும் சொல்லி – இருகிறார்கள். உடனே அந்த பென்னுக்கு பஞ்சாயத்தில் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா (!) கேட்டால் வியந்து போவீர்கள்.
ஊர் சார்பாக அந்த பெண்ணை 13 பேர் கற்பழிக்க வேண்டுமாம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது. அந்த கேடுகெட்ட பஞ்சாயத்தும், ஊர் நிர்வாகமும்!
13 பேரால் கற்பழிக்க ப்பட்ட பெண் இப்போது மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்தியில் சொல்கிறார்கள். (பாருங்க இந்த கொடுமையை)
இந்த லட்சணத்தில் இன்னும் ஓர் இரு நாட்களில் இந்திய நாட்டின் —— வது குடியரசு தினம்
இந்த நிலைமையில் தான் இருக்குது நம்ம நாடு. இப்படியே போனா மக்கள் நிலை….?!!!!!!!!