மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யாரு?!
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடையில் மிரட்டல்கள், கணவன் மனைவிக்கு இடையில் மிரட்டல்கள், முதலாளி தொழிலாளிக்கு இடையில் மிரட்டல்கள், ஆசிரியர் மாணவிகளுக்கு இடையில் மிரட்டல்கள். அதாவது மிரட்டல் என்று வந்துவிட்டாலே பல தேசங்களுக்குள், அரசியல் கட்சிக்களுக்குள், இயக்கங்களுக்குள், இனங்களுக்குள், குடும்பங்களுக்குள், பல இடங்களில் பலர் விதவிதமாக மிரட்டுவதை பார்க்கலாம். அப்படிப்பட்ட அந்த எல்லா மிரட்டல்களையும் ஒரு பட்டியல் போட்டு பேசினால் இந்த வலைதளமே போதாது.
ஏன் மிரட்டுகிறார்கள்? எதனால் மிரட்டுகிறார்கள் ? எதற்காக மிரட்டுகிறார்கள் ? மிரட்டல் என்ற ஆயுதத்தை ஏன் மனதிலும் கையிலும் எடுத்துக் கொண்டு அலைகிறார்கள் ? தான் நினைத்தை சாதித்துக் கொள்வதற்கோ அல்லது அடைவதற்கோ அல்லது வலுக்கட்டாயமாக அபகரிப்பதற்கோ யாராவது தடையாக இருக்குமேயானால் அவர்களை மிரட்டி காரியத்தை சாதித்துக் கொள்வது.
இன்று சாதாரணமாக நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஒரு சில மிரட்டல்களை மட்டும் உங்களுடன் ஒரு சில வார்த்தைகளைக் கொண்டு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
தொலைக்காட்சிகள் வராத நாட்களில் அன்று வாழ்ந்த மக்கள் சினிமாவை கண்டு களித்து மகிழ்ந்து வந்தனர், அன்று சினிமாவில் சொல்லப்பட்ட அத்தனை கதைகளும் சரி… காட்டப்பட்ட காட்சிகளும் சரி… நம் வாழ்க்கையோடு ஒத்துபோயின, இருப்பினும் ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களோ அல்லது காட்சிகளோ அப்படியும் இப்படியும் இருந்தது.
இன்று சினிமாக்களில் வருகின்ற கதைகளும் காட்சிகளும் சரி, சின்னத்திரைகளில் வருகின்ற கதைகளும் காட்சிகளும் சரி, குடும்பங்களையும் சமுதாயத்தையும் சீர்குலைப்பதற்கென்றே வந்து கொண்டு இருக்கின்றன.
ஒட்டுமொத்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் குற்றம் சொல்ல முடியாது, நமக்கு தேவையான எத்தனையோ நல்ல விஷயங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளும் வந்தாலும், தேவையற்ற விஷயங்கள் அடங்கிய நிகழ்ச்சிகள்தான் அதிகம் வருகின்றன, இதில் எதை அதிகம் பார்கிறார்கள் என்று ஒரு சர்வே எடுத்து பார்த்தலில் தேவையற்ற விஷயங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளைத்தான் மக்கள் பார்கின்றனர்.
இன்று பல சீரியல்களில் பத்து சதவிகிதம் தகுந்த வார்த்தைகளையும், தொண்ணூறு சதவிகிதம் தகாத வார்த்தைகளைக் கொண்டு பின்னப்பட்டு, அது ஒரு தொடர்கதைகளாக தொலைக்காட்சிகளில் இருபத்திநான்கு மணிநேரமும் இடைவிடாமல் ஒளி ஒலிபரப்பாகி வருகின்றது. இப்படியாக பல கதைகள் தொடர்கதைகளாக உருவெடுத்து பல சேனல்களில் பல மாதங்களுக்கு சின்னத் திரையில் காண்பிக்கப்பட்டு பல குடும்பங்களையும், குடும்பத்திற்கு வெளியிலும் சமுதாயங்களை குழப்பிக் கொண்டும் குலைத்துக் கொண்டும் வருகின்றது.
கதைகளில் காட்டப்படும் தகாத சம்பவங்களில் ஒன்றுதான் மிரட்டல் என்கிற சம்பவமும், இந்தமாதிரி நிகழ்வுகளில் ஆண்கள் பெண்கள் என்றில்லை, சிறியவர்கள் பெரியவர்கள் என்று கணக்கில்லை, ஏக போக அனைவரும் அடிமையாகி சீரழிந்து வருகின்றனர் என்பது மட்டும் உண்மை. தொலைக் காட்ச்சிகளில் வரும் கதைகளையும் காட்ச்சிகளையும் பார்த்தும் கேட்டும் இன்றைய சமுதாயம் வெகுவாக சீரழிந்து கொண்டு வருகின்றது என்றால் அதுதான் உண்மையாக இருக்கின்றனது.
பிள்ளைகள் சீரியல்களில் வருகின்ற கதைகளை பார்த்துவிட்டு தங்களுடைய பெற்றோர்களை மிரட்டுகின்றனர் பெற்றோர்களும் பிள்ளைகளின் மிரட்டல்களுக்கு அடிபணிகின்றனர் விளைவு பிள்ளைகள் தன் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர், தகாத நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக்கொண்டு இஷ்டம்போல் ஊர் சுத்துகின்றனர், ஊர் வம்பை வளர்த்துவிடுகின்றனர். கடைசியில் பெற்றோர்கள் தலைகுனிகின்ற நிலைக்கு தள்ளபடுகின்றனர். பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டிக்காமல் வேறு யாரு கண்டிப்பது? நாய் குரங்கா வந்து கண்டிப்பது! எந்த பெற்றோர்களும் தன் பிள்ளை நல்ல நிலையில் இருக்கத்தான் ஆசைப்படுவர்.
மனைவி கணவனுக்கு கீழ்படிய கடைமைப் பட்டவள், ஆனால் அனேக இடங்களில் மனைவி தங்களுடைய கணவனை மிரட்டி அடிமைப்படுத்தி வைக்கின்றனர் இதனால் கணவன் வாயை பொத்திக்கொண்டு அமைதியாகி பெட்டிப் பாம்பைப் போல் ஆகிவிடுகின்றான். இவன் வாயைத் திறந்தால் அவ்வளவுதான் மனைவி அப்படியே ஒரு கொத்து கொத்திவிடுவாள், மனைவியின் இஷடத்துக்கு இவன் தலைகுனிந்து ஆடுகின்றான். இதுதான் கல்லானாலும் கணவனா? புல்லானாலும் புருஷனா?
இன்றும் நற்குனத்தோடு கணவனுக்கு கீழ்படிந்து நடக்கின்ற நல்ல மனைவியும் உண்டு, அதே நேரத்தில் கணவனுக்கு கீழ்ப்படியாமல் எடுத்தெறிந்து நடக்கின்ற மனைவிகளும் அநேகம் உள்ளனர். ஒரு மனைவி கணவனுக்கு தெரியாமல் ஒரு கடுகளவேனும் காரியத்தை செய்தால் அதுக்கு அர்த்தம் வேறு, அதை நான் இங்கு எழுத விரும்ப வில்லை.
சில குடும்பங்களில் சொத்துப் பிரச்சனை காரணமாக ஒருத்தரை ஒருத்தர் மிரட்டுகின்றனர். இலாபம் யாருக்கு ? மூன்றாவது ஆளுக்கு.
பள்ளிக்கூடங்களில் சில ஆசிரியமார்கள் மாணவர்களையும் மாணவிகளையும் மிரட்டி எனக்கு இணங்காவிட்டால் உன்னை பெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டுவதும் சகஜமாகிப் போய்விட்டது, இதை நாம் பல ஊடகவாயிலாக அறிந்துருக்கின்றோம்.
பணிக்கு போய்வருகின்ற பெண்களை பணி செய்யும் அலுவலகங்களிலும், போய் வரும் பாதைகளிலும், பேருந்துகளிலும், இன்னும் பிற இடங்களிலும் அவர்களை மிரட்டி தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் ஒரு சில அல்லது பல ஆண் வர்க்கங்கள். மேலும் பணிக்கு செல்லும் சில பெண்கள் தங்கள் உடைகளை அநாகரிகமாக அணிந்துகொண்டு ஆண்களை கிண்டலடித்து மிரட்டி தன் இஷ்டத்துக்கு வைத்துக்கொள்வதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஒரு பெண் நர்சிங் படிக்க ஆசைப்படுகிறாள் என்றால், அந்தப் பெண் பல நோயாளிகளை கவனிப்பதில் ஆர்வம் காட்டுகின்றாள் என்றுதான் அர்த்தம், ஆனால் இன்றைய நாட்களில் என்ன நடக்குது. அங்கேயும் இந்த ஆண் வர்க்கம் விட்டு வைக்கவில்லை.
தென்னந் தோப்பில் தேங்காய் வெட்டப்போனால் தோட்டக்காரன் மிரட்டுகின்றான், கடலில் மீன் பிடிக்கப்போனால் அடுத்தவன் மிரட்டுகின்றான். பஸ் ஸ்டாண்டில் அதிக நேரம் நின்றால் வேறு ஒருத்தன் வந்து மிரட்டுகின்றான். இப்படி ஒவ்வொரு கோணத்திலும் பார்த்தால் மிரட்டல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.
மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யாரு !?
‘மனித உரிமை ஆர்வலர்’
K.M.A. ஜமால் முஹம்மது.