Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மக்களைப் பெற்றவர் மகராசியா?

Posted on January 22, 2014 by admin

மக்களைப் பெற்றவர் மகராசியா?

   Dr.A.P.முஹம்மது அலி, Phd., I.P.S.(rd)   

“சிறு குடும்பமே சிறப்பான வாழ்வு”,

“நாம் இருவர் நமக்கு ஒருவர்”

என்பது போன்ற குடும்பக் கட்டுப்பாடு கோசங்களை விளம்பரமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதினை வீதிதோறும் நாம் காணலாம்.
படித்த இளைஞர்களிடையே திருமணம் ஆனதும் குழந்தைப் பெற்றுக் கொள்வதினை தள்ளி வைப்பதும், ஒன்னிரண்டு குழந்தைகளோடு கர்ப்பத்தடை செய்து கொள்வதும், கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும் வாடிக்கையாக இருந்து வருவதினை நாம் காணலாம்.

ஆனால் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தின், ‘சமூக அமைப்பு சபையின்’ ஆராச்சியின் பயனாக வெளியிடிடப்பட்ட அறிக்கையில், ” அதிகமாக பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பல காலங்கள் ஒற்றுமையாக மகிழ்வுடன் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு குழந்தை பெற்றவர்கள் சீக்கிரமே மனக் கசப்புடன் பிரிந்து வாழ்கிறார்கள்” என்ற உண்மையினை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் திருக் குர்ஆனிலே, ‘குழந்தைகள் நலன் பற்றி தெளிவாக ஒன்று முதல் ஐந்து வரை உள்ள பாகத்திலே தெளிவாகக் கூறியுள்ளான்.

அதில் குழந்தை பிறக்கும் போதே அதன் உரிமை, பாதுகாப்பினை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளான்.

இறுதிநபி எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மண வாழ்க்கையும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் ஒவ்வொரு மனிதனுக்கும் முன் உதாரணமாக உள்ளது.

இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணமாகாது வாழ்வது, துறவறம், காயடிப்பது போன்றவை அனுமதிக்கவில்லை.

ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, ‘நான் இறைவனை வணங்குகிறேன், தூங்குகிறேன், நோன்பு வைக்கின்றேன், பெண்களை திருமணம் செய்து கொள்கிறேன், குழந்தைகள் பெற்றுக் கொள்கிறேன், என்னுடைய பாதையில் இருந்து விலகிச் செல்பவர்கள் என் சஹாபாக்கள் இல்லை’ என்று ஆனித் தரமாக கூறி உள்ளார்கள்.

அல்னஹல்: 46-இல், ‘செல்வமும், குழந்தையும் இந்த உலகின் அலங்கரிக்கும் பொருள்கள்’

அல் அனம்: 151இல், ‘வறுமையில் உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள் என்று சொல்லப் படுகிறது.

அல்-இஸ்ரா: 31இல், ‘உங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பவன் நானே, உங்கள் குழந்தைகளை வறுமைக்கு அஞ்சி கொல்லாதீர்கள்’..

இத்தனை அறிவுரைகள் இருக்கும்போது படித்த இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதினை தள்ளிப் போடுவதும், ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதும், பெண் குழந்தை பெற்றதும் அல்லது அது பிறக்கப் போகிறது என்று மருத்துவ ரீதியாக அறிந்து கொல்வதும் சரியா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த இரண்டு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

1) எங்களூர் இளையான்குடியில் எங்கள் தெருவிற்கு அடுத்தத் தெருவில் இரண்டு முக்கிய நடுத்தர வர்க்கத்தினைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கு பதினொன்று, மற்றவருக்கு பத்துக் குழந்தைகள். ஊரில் அவர்கள் நண்பர்கள் அவர்களைப் பார்த்துக் போட்டிப் போட்டுக் குழந்தை பெர்க்கிறீர்களா என்று கூட கேட்டு இருக்கின்றேன். இன்று அவர்கள் அத்தனைக் குழந்தைகளும்,பேரப் பிள்ளைகளும் அல்லாஹ்வின் அருளால் நல்ல சுகத்துடனும், வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.

2) வளைகுடா நாட்டில் வாழும் ஒருவர் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் பெற்றுக் கொண்டு மனைவிக்குக் கருத்தடை செய்து கொண்டார். ஆனால் அவருடைய கல்லூரி படிக்கும் மகன் இரு சக்கர வாகன விபத்தில் இறைவனடி சேர்ந்து விட்டதால் அவர் மனம் ஓடிந்தவராகி விட்டார்.

இவைகளை ஏன் இங்கே குறிப்பாக சொல்கின்றேனென்றால் பல பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஓட்டாண்டியாகப் போனதுமில்லை, ஒரு குழந்தைப் பெற்றவர் சந்தோசமாக வழ்ந்ததுமில்லை என்று சொல்வதிற்குத் தான்.

“குழந்தைகள் பெற்றுக் கொள்வது சிரமம் தான். அனால் பயனுள்ளது, ஏனென்றால் விலைவாசி ஏற்றம்,குறைந்த வருமானம் என்று மனம் சஞ்சலம் இருக்கத் தான் செய்யும். ஆனால் உண்மையில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒரு மூலதனமாகும்”. என்று கிழக்கு மேற்கு சுற்றுப்புற சூழல் அராய்ச்சி இயக்குனர் டெர்ரி-வில்லியம் கூறுகிறார்.

அதற்கான பத்துக் காரணங்களாக கீழ்க் கண்டவைகளைக் கூறுகிறார்:

1) குழந்தைப் பெற்றுக் கொள்ளது விட்டால் மன வாழ்வு நிறைவு பெறாது.

2) கிடைத்ததினை பெற்றோரே தின்பது என்றசுயநலமானது, பகிர்ந்துண்ணும் பண்பை வளர்க்கும்.

3) குழந்தைகள் பிற்காலத்தில் பலன் தரும் விருச்ச மரங்கள்.

4) பெற்றோர்கள் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களாக இருக்கலாம். ஆனால் இன்றைய கணினி உலகில் குழந்தைகள் அவர்களுக்கும் பாடம் எடுக்கும்.

5) குழந்தைகள் பெறும்போது பெற்றோர்கள் உடல் உறுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு சுகாதாரத்துடன் வாழ்வார்கள்.

6) குழந்தைகள் பெற்றுக் கொள்வது மூலம், ஆண்களின் வீரத்தினையும், பெண்களின் வீரியத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

7) குழந்தைகள் மூலம் உங்களுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு மகன் அல்லது ஒரு மகள் தான் பெற்றோர் போன்று வர வேண்டும் என்று சொல்லும்போது உங்கள் மனது அவர்களைப் பெற்ற சந்தோசத்தினை பெற்றவர்களாவீர்.

8) பெற்றோர்கள் குழந்தைகளோடு வன விலங்குப் பூங்காவிற்கோ,கடக்கறைக்கோ, விளையாட்டுத் திடலுக்கோ அல்லது இடங்களுக்கோ சென்று அவர்களுடன் விளையாடும் பொது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவிண்டோ?

9) குழந்தைகள் செய்யும் குறும்புத் தனத்தினை கண்டு சிரிக்காத பெற்றோர்கள் உண்டா?

10) நீங்கள் குழந்தைகளைக் கொஞ்சும்போது, அவை உங்களைக் கொஞ்சும்போது ஏற்படும் மனநிறைவு பெறாத பெற்றோர் உண்டா?

சீனா கூட சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ளும் கட்டுப் பாடு வந்து 2013 ஆண்டில் அந்தக் கட்டுப்பாடு ஏற்படுத்திய பொருளாதார, சுற்றுப் புறசூழல் தாக்கத்தினை அறிந்து அந்தக் கட்டுப்பாடினை இரண்டு குழந்தையாக மாற்றி உள்ளனர்.
சுற்றுலாபுகழ் சுவிட்சர்லாந்து நாட்டில் குழந்தைகள் எண்ணிக்கை குறைவிதினை அறிந்து குழந்தை பெறுவதிற்கு பல வகையில் ஊக்கம் கொடுக்கின்றனர்.

ஆகவே மக்களை பெற்றவர் மகாராசியாகத் தான் வாழ்ந்துள்ளனர், எந்தக் காலத்திலும் ஓட்டாண்டியாக வாழ்ந்தது இல்லை!

AP,Mohamed Ali

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb