Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பது ஏன்?

Posted on January 20, 2014 by admin

ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பது ஏன்?

ஆண்கள் பலதார மணம் செய்வதைப் பற்றித் தர்க்க ரீதியான காரணங்களை முதலில் பார்த்து விட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்வதற்கு ஆண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதையும் பார்ப்போம்.

உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது. அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும்.

அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும்.

மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.

மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாகக் கலைக்கப்படுவதும் பிறந்து விட்ட குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுக்கொலை செய்ய விடுவதுமே இதற்குக் காரணம் ஆகும்.

இந்தியாவில் மாத்திரம் ஒரு வருடத்திற்குப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் – பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன அதாவது அழிக்கப் படுகின்றன. இந்தக் கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களின் எண்ணிக்கையைவிட ப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்களுக்குத் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்). அதுபோல, பிரிட்டனில் 40 லட்சம் பெண்களுக்கும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்களுக்கும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்களுக்கும் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும்.

திருமணமே ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும் கைவிடப்படுவதும் மலேசிய இந்துச் சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். (-மலேசிய நண்பன் நாளிதழ் – 05.01.2002)

1948 ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகில உலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றிப் பலவாறு விவாதிக்கப்பட்டும் இறுதிவரை எந்தத் தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதார மணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும், இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித் தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்பட்டது.

திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும், நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் பெண்களின் வாழ்க்கை காலத்தைவிடக் குறைவாகவே இருப்பதால் எந்த காலகட்டத்திலும் மனைவியை இழந்த கணவர்களை விட, கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

சராசரியாகப் பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு, ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகப் பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.

தனக்குத் திருமணமே நடக்காது என்றெண்ணித் தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.

தம் பெற்றோரால் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாறிக் கற்பிழந்து வருகின்றனர்.

மேலும் உள்ளதைக் கொண்டு நல்லது செய்ய மனமில்லாத அயல் விரும்பி விபச்சாரன்களின் உறவுகள் மூலம் பாலியல் நோய்களைத் தானும் பெற்று, தனது மனைவிக்கும் பரிசளிக்கும் அவலங்களும் அதிகரித்து வருகிறது.

இயற்கையிலேயே ஆணிணமும் பெண்ணிணமும் பெரும்பாலும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தியுடன் எதிர்க்கும் தன்மை வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்தக் காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் மரணிப்பதில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தாம் அதிகமாக மரணிக்கின்றனர்.

நன்றி : இறை நேசன் blogspot

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

44 − = 37

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb