மூன்றாம் பாலும் முறையில்லா உறவும்
[ மனிதனாக பிறந்தவனுக்கு கட்டுபாடுகள் கட்டாயம் வேண்டும். இல்லையெனில் ஆறறிவுக்கும் மற்ற அறிவுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். இதுவும் ஒரு வகையில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலைதான்.
எதிர்பாலோரிடம் கொண்ட தேவையற்ற அச்சமும், முறையற்ற காமமே இதன் ஆரம்பம். இதன் அடுத்தநிலை உறவுக்கும் மரியாதை இருக்காது. அண்ணன் தம்பி அக்காள் தங்கை உறவுகளே நாசமாகிவிடும்
“காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றும் நாமம் கெடுக்கும் நோய்” — காமம் – நியாயம் இல்லாத தேவையற்ற ஆசைகள்; வெகுளி – ஏதும் சரிவர புரியாத நிலை; மயக்கம் – ஆறாம் அறிவு செயலற்ற நிலை. — இதுவே ஓரின சேர்கையாலரின் நிலை.உண்மையில் இவர்களுக்கு உளவியல்ரீதியான மருத்துவ கவுன்செல்லிங் தேவை.
ஒரே பாலின உறவு என்பது எந்த காலத்திலும் மனம் ஒப்பாத, முறை தவறிய உறவாகும், இன்றைய சில கேடு கெட்ட மத்திய ஆட்சியாளர்களில் ஒரு சில வக்கிர புத்தி படைத்த அரசியல்வாதிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்பை பரிசீலனை செய்யும்படி நீதிமன்றம் சென்று இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரிய செயலாகும். மனித குலத்திற்கு இழைக்கும் கொடுமையான அழிமான செயலாகும்,
சிலர் அறியாமல் ஒருபால் உறவு எப்படி காமம் மட்டும் கண்ணுக்கு தெரிகிறது என ஆதாங்கப்படுகின்றனர். நிச்சயமாய் அதில் காமம் மட்டும்மே பிரதானமாய் அடங்கி உள்ளது, ஒருபால் உறவால் மனித குலம் தழைக்குமா அல்லது மனித குலம் அழியுமா என்பதை சிந்திக்கவேண்டும். ஒவ்வருவரின் வாழ்விலும் தன்னுடைய சந்ததியினர் தழைக்க வேண்டும் என்ற குறிக்கோள் உண்டாகும், அதற்கு மாறுப்பட்டு சிந்திப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
மனம் போன போக்கில் மனிதன் வாழ்ந்தால், மனிதனுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். சிந்திக்கும் திறனை மனிதனுக்கு இறைவன் தந்துள்ளான், அதனை பயனுள்ள வழியில் சிந்திக்க வேண்டும்.]
மூன்றாம் பாலும் முறையில்லா உறவும்
ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கில், அந்தத் தீர்ப்பை ரத்து செய்து சட்டத்தின் மாட்சிமையை உச்சநீதிமன்றம் மீண்டும் நிரூபித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருப்பது ஆச்சரியத்தை மட்டுமல்ல, வேதனையையும் சேர்த்து அளிக்கிறது.
முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் இல்லாத மூன்றாம் பாலினமான அரவாணிகள் (திருநங்கைகள்) பிரச்னை வேறு. முப்பாலுக்கு அப்பாலாய், ஆணாக இருந்துகொண்டே ஆணோடு உறவு கொள்வதற்கும், பெண்ணாக இருந்துகொண்டே பெண்ணோடு உறவு கொள்வதற்கும் உரிமை கோருகின்ற ஓரினச் சேர்க்கையாளர் பிரச்னை வேறு.
மனித உணர்வுகளில் உள்ள அன்பு, பாசம், நட்பு ஆகிய உணர்வுகளுக்காக அல்லாமல், காமம் என்ற உணர்வுக்காக மட்டுமே, அதுவும் இயற்கைக்குப் புறம்பான முறை தவறிய காமத்துக்காக மட்டுமே கோரப்படும் ஓரினச் சேர்க்கை என்பது எப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கது?
மாறிவரும் இளைய சமுதாயத்தின் விருப்பத்தை உணர்ந்துகொண்டு ஓரினச் சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தரவேண்டும் என்பது சிலரது வாதம். இதில் அரசியல்வாதிகளும் அடங்குவர்.
இளைய சமுதாயமே பொங்கி எழுந்து இதற்காகப் போராடுவதுபோன்ற பிம்பத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள். ஒருவேளை இளைய சமுதாயம் அப்படியொரு தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவது மூத்தோர்கள், சான்றோர்களின் கடமை அல்லவா?
தனிமனித விருப்பம் என்றும் உரிமை என்றும் இவர்கள் பல பெயர் சொல்லி அழைக்கும் முறையற்ற காமத்துக்கு எதற்காக சட்டப்பூர்வ அங்கீகாரம்? லஞ்சம் வாங்குவது பல பேரின் விருப்பம் என்பதால் அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தந்துவிடலாமா? வியாபாரம் என்று வந்தால் எப்படியாவது ஏமாற்றத்தானே செய்கிறார்கள் என்பதற்காக மோசடி செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தந்துவிடலாமா?
ஆணும் பெண்ணுமாக சேர்ந்துவாழும் சமுதாயத்தில் சில தவறுகள், குற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. இந்தக் கட்டுப்பாடு இருக்கும்போதே குற்றங்கள் நடக்கின்றன என்றால், இந்தக் கட்டுப்பாடும் ஒழுங்குமுறையும் சிதைந்துபோனால் என்ன ஆகும்? மனித நாகரிகத்தின் அடித்தளமான குடும்பம் என்ற அமைப்பே சிதைந்துபோகுமே!
சம்ஸ்கிருத இலக்கணத்தில் சொற்களுக்கு ஆண்பால் (புலிங்கம்), பெண்பால் (ஸ்த்ரீலிங்கம்), நடுப்பால் (நபும்ஸகலிங்கம்) என்று மூன்று பால் இருப்பதைச் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழ் இலக்கணத்திலே சொற்களுக்கு இதுபோல் மூன்றாம் பாலினம் இல்லை.
இருப்பினும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், கிளவியாக்கத்தில் (சொல்லாக்கத்தில்) மக்களைப் பற்றிச் சொல்லும்போது ஆண், பெண் மட்டுமின்றி ஆண்தன்மை நீங்கிய மூன்றாம் பாலினர் பற்றிய குறிப்பு உள்ளது. மூன்றாம் பாலினரை, பெண்மையாய் சுட்ட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆக, மூன்றாம் பாலினம் இருப்பதை அந்தக் காலத்தில் இருந்தே சமுதாயம் ஏற்றிருக்கிறது.
ஒரே பாலினத்துக்குள்ளான முறையற்ற காமத்தை எந்த இலக்கியமும், புராணமும், எந்தச் சட்டமும் எக்காலத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை.
தமிழ் இலக்கணத்திலே, பொருந்தாக் காமம் எனப்படும் கைக்கிளை (ஒருதலைக் காதல்), பெருந்திணை (வயது வித்தியாசம் பாராத காதல்) ஆகியவற்றுக்கு மதிப்பில்லாத போதிலும், இடம் இருக்கிறது.
ஆனால், ஓரினச் சேர்க்கை எனப்படும் கொடுந்திணையான, பாலினம் பாராத பொல்லாக் காமத்துக்கு எந்த வகையிலும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இனிமேலும் அளிக்கப்படக் கூடாது.
ஏனெனில், மூன்றாம் பாலினத்தாரைப்போல ஓரினச் சேர்க்கையாளர்களின் பிரச்னை உடல் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்ததே.
ஆகையால் மனத்தைக் கட்டுப்படுத்தும் மார்க்கத்தை இவர்களுக்கு சமுதாயமும் சட்டமும் கற்றுத்தர வேண்டுமே தவிர, அவர்கள் மனம்போன மார்க்கத்தில் திரிவதற்கு அங்கீகாரம் தந்துவிடக் கூடாது.
By பத்மன்
source: http://www.dinamani.com (24/12/2013)