பந்தாடப்படும் மத வன்முறைத் தடுப்புச் சட்டம், 2011
டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ் (ஓ)
இந்திய திரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் _1950) பெரும்வாரியான மக்கள் சிறுபான்மையினர்,தலித், பழங்குடி மக்களைக் கண்ணின் இனிமைபோல பாதுகாக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அமைந்த குழு பல்வேறு சட்டங்கள் மூலம் வழிவகை செய்தது.
அதனை ஜவர்கர்லால் நேரு பிரதமராக இருந்தது வரை பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால்.. அதற்குப் பின் வந்த அரசுகளால் சிறுபான்மையினருக்குமதலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் பாதுகாப்பு அற்றநிலை ஏற்பட்டது.
அவற்றில் 1984 ஆம் ஆண்டு புது டெல்லியில் சீக்கியர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட சம்பவம், முஸ்லிம்கள் 1989 ஆம் ஆண்டு மூலைக்கு மூலை கொல்லப்பட்ட பகல்பூர் கொடுமை, 1992 ஆம் ஆண்டில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்பு மும்பை மற்ற நகரங்களில் நடந்த கொலைகள்,
குஜராத்தில் பொய்யான கோத்ரா ரயில் விபத்து 2002-இல் நடந்த் சம்பவத்திற்குப் பின்பு முஸ்லிம் மனித வேட்டை பழங்குடி மக்களுக்காக நோய் தீர்க்க குடும்பத்துடன் பணியாற்ற வந்த பாதிரியார் டாக்டர், ஸ்டைன்ஸ் தன மகனுடன் ஓடிசாவில் எரிக்கப்பட்ட சம்பவம்,
இன்றுவரை தலித் இன மக்கள் தென்னாப்ரிக்க நிறைவேறி கொள்கைபோல காலில் செருப்பு அணியக்கூடாது, அவர்களைத் தனிமைப் படுத்தும் சுவர்கள், கலப்புத் திருமணம் செய்யத் தடை என்ற போர்வையில் தர்மபுரி நாயக்கன்க் கோட்டைக் காலனித் தாக்கப் பட்டு ஒரு ஊரையே துவசம் பண்ணும் சம்பவங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இதுபோன்ற சம்பவங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கு உலக அளவில் மதிப்புக் கெடுகிறது என்று மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டு அவைகள் திரும்பவும் நடக்காமல் இருக்க ஒரு வரைவுச் சட்டத்தினை கொண்டு வந்துள்ளனர் பாராளுமன்றத்தில்.
இந்த வரைவுச் சட்டத்தினை தயாரிக்க 9 பேர் கொண்ட உறுப்பினர்களும், 4 ஆலோசர்களும் நியமிக்கப்பட்டனர். அதன் முக்கிய உறுபினர்களாக சர்ச்சைக்குட்பட்ட அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹர்ச்மதரும்,அணு ஆகா என்ற சமூக ஆர்வாளரும், குஜராத்தில் நடந்த இன படுகொலைகளையும், அதற்குப் பின்பு நடந்த மனம் பதை, பதைக்க நடந்த படுகொலைகளையும் சந்திக்கு இழுத்த டீஸ்ட செடேல்வாத் மற்றும் பரநக்வி போன்றோர் இருந்தனர்.
2011 ஆம் ஆண்டி தயாரிக்கப் பட்ட சட்டத்தின் முக்கிய அம்சங்கள் கீழ் வருமாறு:
1) தேசிய, மற்றும் மாநில மக்கள் குறை தீர்க்கும் குழுக்கள் அமைக்கப்படும். அதில் 5 பேர் மைனாரிட்டி சமூகத்தினவர் ஆவர்.
2) அந்த குழுக்களிடம் வழங்கப் படும் புகாரின் வாக்கு மூலங்கள் எந்த நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொல்லப் படும்.
3) இராணுவத்திற்கோ, காவல்த் துறைக்கோ அல்லது எந்தத் துறையானாலும் நேரடியாக அமல் செய்கின்ற உத்திரவினை அந்தக் குழுக்கள் பிறப்பிக்கலாம்.
4) வன்முறையினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நேரடியாக இந்தக் குழுக்கள் நிவாரணம் வழங்கலாம்.
இந்தச் சட்டத்தினை அமல் நடத்தக் கூடாது என்று பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களும், மற்ற சில மாநிலங்களும் குவ்வோ, முறையோ என்று எதிர்க்கின்றன.
அவர்கள் சொல்லும் நொண்டிச் சாக்குப் பின் வருமாறு:
1) கோத்ரா சம்பவத்திற்குப் பின்பு நடந்த மனித நர வேட்டையினை கண்ணை மூடிக் கொண்டு கண்டும் காணாதுபோல இருங்கள் என்று எந்த அரசும் அதிகாரிகளுக்கு உத்திரவிட முடியாது. ஏனென்றால் அதிகாரிகள் தேசிய மற்றும் மாநில குழுக்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும். அதற்கும் மீறி எந்த அதிகாரியாவது நடந்தால் அவர் ஆயுள் தண்டனை பெரும் அளவிற்கு தள்ளப் படுவார்.
2) இந்த வரைவுச் சட்டம் மகாராஸ்ட்ராவில் நடக்கும் மகாராஸ்டிரா மகாராஷ்டிரா மக்களுக்கே என்ற மொழி வெறி கோசங்களை எழுப்ப சிவா சேனா அமைப்புகள் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்கும்.
3) மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மைனாரிட்டி, தலித், பழங்குடியினர் ஓட்டினைப் பெரும் கண்ணோட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ளது.
4) சட்டம் ஒழுங்கு அமல் படுத்துவது மாநில அரசின் கடமை. அதில் மத்திய அரசு தலையிடக்கூடாது. ஆனால் நடுநிலையாளர்கள் ஆட்சியாளர்களும், மத வெறியர்களும் மத உணர்வுகளைத் தூண்டி விட்டு மனித வேட்டை ஆடக்கூடாது மற்றும் நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் காப்பற்றப் பட வேண்டும் என்று கூறி இந்த வரைவுச சட்டம் நாட்டிற்கு நல்லது என்கின்றனர். அதற்கு காரணங்கள் கீழ் வருமாறு:
1) 1984 ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது அரசு எந்திரம் இயக்கக் கூடிய கிரியா ஊக்கி என்ற கட்டளைகள் இட யாரும் முன் வரவில்லை.
2) 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மத்திய அரசின் கட்டுப் பாட்டில் இருந்த ராணுவம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் அதனை இயக்க மௌனம் காத்த பிரதமரைக் கொண்ட மத்திய அரசினை நாம் பெற்றதால் புராதான சின்னம் இடிக்கப் பட்டது.
3) 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் விபத்திற்குப் பின்பு நடந்த நரபலி அறிந்து கண்ணீர் விடத்தான் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயனால் முடிந்ததாக அவரே பெட்டியில் சொல்லி இருந்தார்.
4) அதற்குப் பின்னரும் இந்தியாவில் பாரத ரத்னா பத்ரம் வென்ற விஞ்ஞானி ஜனாதிபதி அப்துல் கலாம் இருந்தபோது குஜராத்தில் இனக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட முஸ்லிம்கள் தங்கி உள்ள அகதி முகாம்களை பாவையிட வேண்டும் என்றும் அப்போதைய பாரதிய ஜனதா மத்திய அரசிடம் கேட்டதாகவும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாகவும் தன் பதவி போன பின்பு எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
5) முஸ்லிம்கள் ஓட்டினை பெரும்வாரியாக பெற்று ஆட்சி அமைத்த உத்திரப் பிரதேச மாநிலத்தில் முசாபர் நகரில் கிட்டத்தட்ட 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு ஹுசைனா பாக்கில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளார்கள்
அப்படி சம்பவங்கள் தொடர் கடையாக வருவதிற்குக் காரணம் குற்றவாளிகள் நீதி மன்றத்தின் பால் நிறுத்தும் போது நீதி தேவதையின் கண்கள் நிரந்தரமாக கட்டப்பட்டு குற்ற வாளிகள் வெளி வருவதுதான் என்று மைனாரிட்டி மக்களும், தலித்தும், பழங்குடியினரும் நம்புகின்றனர்.
source: http://mdaliips.blogspot.in/