உலகம் பிறந்தது எனக்காக, உண்மை மறந்தது எதற்காக?
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
உலக வேடங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் வழங்கப்பட்ட அல்குர்ஆன் வரலாற்று பெட்டகமாகவும், காலத்தினால் இன்று வரை ஒரு எழுத்துகூடமாசு படாமலும், கருத்துசிதையாமலும் இருக்கின்றது என்பதினை உலகில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
உலகம் அழிந்து மனிதர்கள் ஒருநாள் எழுப்பப் படும்போது அவன் முன்பு செய்த செயல்களுக்கு பதில் கூற வேண்டும் என்று கூறுகிறது அல்குரான். அதற்கு உதாரணமாக சாதாரன விதையிலிருந்து செடி முளைத்து பின்பு மண்ணோடு மண்ணாக மடியும் என்பதினையும், அதன் பின்பு புதிதாக செடி உருவாகுவதையும், குளங்கள் வற்றி அதன் பின்பு
மழைகாலத்தில் களி மண்ணுக்கிடையே கிடந்த மீன் முட்டைகள் உருவெடுத்து துள்ளி ஓடும் மீன்களாக உலா வருவதினையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
உலகம் அழிந்து நீதி கூறும் நாள் வரும்போது சாதாரணமான நிலா நடுக்கமாகவோ, அல்லது 1945 ஆண்டு ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மாதிரியோ இருக்காதாம்.
மலைகள் வானத்தில் தூக்கி எறியப் பட்டு தவிடு பொடியாக இருக்கும் நாளாக இருக்கும் என்று அல்குர்ஆன் (78:40;69:14) விரிவாக கூறுகின்றன.
அதன் கூற்றை நிருபிக்கும் விதமாக 300 மில்லியன் டாலர் பணத்தில், பல ஆண்டு காலம் நடந்த ஆராய்ச்சியின் பயனாக ‘பிக் பாங்க் ‘என்ற நிகழ்ச்சி 2012 ஆம் ஆண்டு நடத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து தென் டென்மார்க் பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகம் அழியும்போது வானமும், பூமியும் எப்படி இருக்கும் என்று கண்டு பிடித்துள்ளார்கள்.
உலகம் அழியும்போது பூமியில் உள்ள ஒரு தானியத்திலிருந்து மலைகள் வரை அதன் எடை பன்மடங்காக ஆகுமாம். வானத்திலுள்ள கிரகங்களும், நட்ச்சத்திரங்களும் அதன் எடையினை விட பன்மடங்கு அதிகரிக்குமாம். அவ்வாறு பெரிதாகிய கோலங்கள் ஒன்றோட ஒன்றுடன் மோதி தீப்பிழம்பாகி ஒரு சிறிய பந்தாக மாறுமாம்.
அது எவ்வாறு மாறும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஆராய்ச்சியாளர்கள், ‘தண்ணீர் சூடு செய்யும்போது எப்படி ஆவியாகுகிறதோ, அல்லது காந்த சக்கித்தியுள்ள மக்னடிசம் சம்மட்டியால் அடிக்கும்போது அதன் ஈர்ப்பு சக்த்தியினை இழந்து விடுவதினை உதாரணமாக காட்டுகிறார்கள். இதன் விபரம் டென்மார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிடும், ‘ஹை எனெர்ஜி பிசிக்ஸ்’ என்ற பத்திரிக்கையில் எழுதி உள்ளனர்.
மேற்கொண்ட இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பல கோடி பணத்தினை செலவழித்து என்று கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் உலக மக்களை தட்டி எழுப்புவதிற்க்காக உண்மை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் வழங்கியுள்ளான். உலகம் ஒருநாள் அழியும், அப்போது நீங்கள் எழுப்பப் பட்டு நீங்கள் செய்த நன்மை, தீமைகள் உங்கள் கையில் புத்தகமாக வழங்கப் பட்டுக் கூலி கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கின்றான் அல்குர்ஆனிலே!
அதனை அறியாத மானிடர்களுடன், மூமிங்களும் கீழ்க் கண்டவாறு உழல்கின்றனர்:
1) கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தினை மது, மாது, சூது போன்ற களியாட்டங்களில் செலவிட்டும்,
2) இறைவன் அருளிய செல்வத்தினை ஈகை வழியில் செலவு செய்யாமலும்
3) பெற்று வளர்த்த பெற்றோரை பேணிக்காக்காது நட்டாற்றில் விட்டும்,
4) சகோதர, சகோதர சொத்துக்களை பளீகரம் செய்தும்,
5) மலம் கழிக்கும் கக்கூஸ்கள் கூட தங்கம் முலாம் பூசிய கக்கூசுகலாக ஆக்கி ஆடம்பரமாக வாழ்ந்தும்,
6) அமானித, பைத்துல்மால் பணத்தினை பளீகரம் செய்தும்,
7) இறை வழி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிப் படி நடக்காது பல இயக்கங்களாக மூநின்களைப் பிரித்து தன் வழி தனி வழி தனி வழி என்று கூறியும், எழுதியும்,
8) அப்பாவி முஸ்லிம்களை சொற்ப அரசியல் லாபத்திற்காக பகடைக் காயாக்கியும்,
9) தடை செய்யப் பட்ட வட்டி, சீதனம் வாங்கியும்
10) அதிகாரம் கிடைத்துவிட்டால் பூமி அதிரும்படி நடந்தும் நடக்கும் மாந்தர்கள் தான் உலகம் பிறந்தது எனக்காக, என்று உண்மை தெரியாதவர்களாக இருக்கின்றார்கள்.
டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறும் கூற்றினையாவது நம்பி உலகில் வாழும் நாட்களில் மனம் திருந்தி வாழ வேண்டும். டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் இன்னொன்றையும் கூறுகின்றார்கள் உலகம் அழியும் நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நடக்குமாம். ஆகவே உங்கள் நன்மை, தீமை வரலாற்று புத்தகம் உங்கள் கைக்கு மகசர் நாளில் வழங்கும்போது பதில் சொல்ல தயாராகுங்கள்!
Ap. Mohamed Ali