Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மகிழ்ச்சி என்பது மலிவானதே!

Posted on December 23, 2013 by admin

மகிழ்ச்சிக்கு இலக்கணமே எளிமை தான்!

எளிமை போனால் மகிழ்ச்சி போய்விடும்.

வசதி வாய்ப்புகள் மகிழ்ச்சியைத் தந்து விடாது!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குடும்பம் வசதி வாய்ப்பில் திளைத்ததில்லை. அறுபது நாட்களுக்கு வெறும் பேரிச்சையும், தண்ணீரும் தான். வசிப்பிடம் என்பது கூரை வேயப்பட்ட வீடுகள் தான். தண்ணீருக்கு சில மைல் தூரமாவது கால் வலிக்க நடந்து போய் வந்திட வேண்டிய நிலை. திருகையில் மாவு அரைத்துத் தான் ரொட்டி; தொட்டுக் கொள்வதற்கு குழம்பு என்பது எப்போதாவது தான்!

ஆனால் அங்கே மகிழ்ச்சிக்குப் பங்கமில்லை!

மகிழ்ச்சிக்கு இலக்கணமே எளிமை தான்! எளிமை போனால் மகிழ்ச்சி போய்விடும்.

சொல்லப்போனால் – உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்கின்ற கணவனும் மனைவியும் தான் மகிழ்ச்சிக் கடலில் நீந்திட முடியும். இருவரில் ஒருவர் அப்படிப்பட்டவராக இல்லையெனில் இல்வாழ்வில் முதலில் அடிபடுவது மகிழ்ச்சி தான்.

எனவே இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம் இளைஞர்கள் தனக்கு மனைவியாக வரக்கூடியவருக்கு உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்கின்ற தன்மை இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்தல் மிக அவசியம்.

தன் மகன் இஸ்மாயிலின் மனைவியாக வருபவருக்கு இந்த அருங்குணம் இருந்திட வேண்டும் என்று தந்தை இப்ராஹிம் அவர்கள் எதிர்பாத்திருக்கிறார்கள் அதை இங்கே சுருக்கமாகப் பதிவு செய்வோம்.

இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு ஒரு தடவை இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மகனைச் சந்திக்க மக்காவுக்கு வந்திருந்தார்கள். அப்போது இஸ்மாயில் வீட்டில் இல்லை; அவரது மனைவியிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் முறையிட்டார். உடனே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல்; அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது – தந்தை வந்து விட்டுப்போன செய்தியையும், தந்தையின் அறிவுரையையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு அந்த் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மீண்டும் ஒரு தடவை அவர்களிடம் வந்தார்கள். அப்போதும் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீட்டில் இல்லை. இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய புதிய துணைவியாரிடம் இஸ்மாயீலைப் பற்றியும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்கள். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்ஸஸ.. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன் கணவன் வந்தால் அவரது வீட்டு நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொல்லி விட்டுச் சென்றார்கள்.

இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீட்டிற்குத் திரும்பி வந்ததும், தந்தை இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து சென்ற செய்தியையும் அவருடைய அறிவுரையையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். வந்திருந்தது தம் தந்தை தான் என்று மனைவியிடம் சொல்லி விட்டு அவர் சொன்ன அந்த நிலைப்படி நீ தான் என்றும், உன்னை அப்படியே மனைவியாக வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்கள் என்றும் விளக்கினார்கள்ஸ.. (-விரிவாகப் பார்த்திட புகாரி ஹதீஸ் எண் 3364)

இப்போது நமது சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம். நாம் இங்கே எடுத்துக் கொள்வது நடுத்தர நிலையில் உள்ள முஸ்லிம் குடும்பங்களைத் தான். உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வதற்குப் பதிலாக – ஒருவரைப் பார்த்து ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு – பொன்னையும் பொருளையும் சேர்த்து வைத்து அடுக்கி வைத்து அழகு பார்க்கின்ற நிலையைத்தான் வேதனையுடன் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்நிலை மாறாமல் – மகிழ்ச்சியை குடும்பத்துக்குள் கொண்டு வர முடியாது.

பல கணவன்மார்கள் – விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுப்பதன் மூலமே – தங்கள் மனைவியைத் திருப்திப் படுத்திட முடியும் என்று எண்ணுகிறார்கள்.

ஒரு தடவை – நாங்கள் ஹஜ் சமயத்தில் – மக்காவில் தங்கியிருந்தோம். அப்போது ஒரு கணவன் மனைவி இருவரும் ஜித்தாவுக்குச் சென்று தங்க வளையல்கள் சிலவற்றை வாங்கி வந்தனர். மறு நாளே அதன் டிசைன் நன்றாக இல்லை என்று யாரோ சொல்லிட – மீண்டும் ஜித்தா சென்று – டிசைனை மாற்றிக்கொண்டு வந்தார்கள். இந்த டிசைன் வளையல்களில் இலகுவாக அழுக்கு சேர்ந்து கொள்ளும் என்று எவரோ சொல்லிட மீண்டும் ஜித்தாவுக்குப் படையெடுப்பு! ஒவ்வொரு தடவையும் மாற்றும்போது எவ்வளவு பொருட்செலவு? ஆனால் மகிழ்ச்சி? அது எத்தனை நாட்களுக்கு?

ஆனால் – செலவே இன்றி உங்கள் மனைவிக்கு நீங்கள் மகிழ்ச்சி அளித்திடலாம்! சில நபிவழிகளை மட்டும் பின்பற்றினாலே போதும்.

கணவனும் மனைவியும் சேர்ந்து குளியுங்கள். என்ன செலவாகி விடும்?

எதிர்பாராமல் ஒரு முத்தம் கொடுங்கள். என்ன செலவாகி விடும்?

வீட்டுக்குள்ளேயே – ஓடிப்பிடித்து விளையாடுங்கள்! என்ன செலவாகி விடும்?

வீட்டை விட்டு வெளியே காலாற நடந்து சென்று வாருங்கள் – உங்கள் மனைவியுடன்! என்ன செலவாகி விடும்?

வெளியூர்களுக்கு உங்கள் மனைவியையும் கூடவே அழைத்துச் செல்லுங்கள். பெரிய செலவு ஒன்றும் ஆகி விடாது! வழக்கமான வேலைகளில் இருந்து விடுதலை என்பதால் மனைவிக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும்!

அவ்வளவாக செலவு வைக்காத – சின்னச் சின்ன ஆசைகள் நிறைய இருக்கும் உங்கள் மனைவிக்கு. ஒரு முழம் பூ, தலைக்கு வைத்துக் கொள்ளக் கூடிய சின்னச் சின்ன அலங்காரப் பொருட்கள். உங்கள் மனைவிக்குப் பிடித்த ஒரு இனிப்புப் பண்டம்…..

மனைவிக்குச் செலவு செய்திடும்போது – அதன் ” உயர்ந்த விலை” மகிழ்ச்சியை உறுதிப்படுத்திடாது! மாறாக அது சில சமயங்களில் சோகப்படுத்தி விடுவதும் உண்டு!

மாறாக நீங்கள் செலவு செய்வதன் பின்னணியில் உள்ள உங்களின் அன்பு, அக்கரை மற்றும் உங்கள் துணையின் உணர்வுகளுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பு – இவைகளே மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும்.

இந்த அன்பையும், அக்கரையையும், மதிப்பையும் தான் அண்ணலாரின் குடும்ப அமைப்பில் நாம் காண்கிறோம்.

மகிழ்ச்சி என்பது மலிவானதே!

source: http://muslimkudumbam.blogspot.in/2013/12/blog-post_278.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

65 + = 74

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb