கோணல்வழிகளை நேர்வழியாக காட்டும் மர்மம் என்ன?
இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் 7:3, 53:1-5 வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நேர்வழி அல்லாஹ்வால் வஹீ மூலம் இறக்கப்பட்டவை மட்டும் தான்.
மனித சுய கருத்துக்களை ஒருபோதும் மார்க்கமாக எடுத்து நடக்கக் கூடாது என்பதைத் திட்டமாக அறிய முடியும்.
3:31, 33:21,36 இறைவாக்குகளைப் படித்து உணர்கிறவர்கள், அப்படி மனிதக் கருத்துக்களை மார்க்கமாக எடுத்து நடக்கும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் நரகை நோக்கி நடைபோடுகிறார்கள் என்பதை அறிய முடியும்.
மேலும் 18:102-106 குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள் அல்லாஹ் அவனது இறுதித் தூதர் அல்லாதவர்களை தங்களின் வழிகாட்டிகளாக, பாதுகாவலர்களாக எடுத்து நடப்பவர்கள் நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்); அவர்கள் செய்யும் நல்லமல்களும் நாளை மறுமையில் நிறுக்கப்படாமல் நரகில் எறியப்படுவார்கள் என்பதைத் திட்டமாக அறிய முடியும்.
அதற்குக் காரணம் 9:31 வசனம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டும் வழிப்படுவதற்கு மாறாக அவர்களின் மதகுருமார்களையும், முன்னோர்களையும் தங்களின் ரப்புகளாக ஆக்கி அவர்களின் மனிதக் கருத்துக்களை மார்க்கமாக நம்பி அவற்றைக் கண்மூடிப் பின்பற்றுவதேயாகும் என்பதைத் திட்டமாக அறிவிப்பதை அறிய முடியும்.
அல்லாஹ்வின் இறுதித் தூதரைப் பின்பற்றித் தான் ஆக வேண்டும் என்பதை 3:32,132, 4:59, 5:92, 8:1,20,46, 24:54,56, 47:33, 58:13, 64:12 போன்ற இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
மேலும் 3:50, 26:108,110,126,131,144,150, 163,179, 43:63, 71:3 இறைவாக்குகள் ஒவ்வொரு நபியும் தன்னைப் பின்பற்றி நடக்கும்படி கட்டளை யிட்ட ஆதாரங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.
நபிமார்கள் அனைவரும் வஹீயின் தொடர்புடனும், அல்லாஹ்வின் நேரடிக் கண்காணிப்பிலும் (52:48) இருந்ததால் மனித சுபாவப்படி அவர்கள் தவறிழைத்தாலும் உடனுக்குடன் திருத்தப்பட்டு அவர்கள் நேர் வழியில் மட்டுமே நடத்தப்பட்டார்கள். (பார்க்க:6:116, 17:73-75, 69:44-47, 80:1-12)
அதற்குப் பின்னர் கலீஃபாக்கள், நபி தோழர்கள், இமாம்கள், அவுலியாக்கள் என மனிதர்களில் எவருமே அந்தப் பாதுகாப்பைப் பெறவில்லை. அப்படி இருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்தவுடன், அதை மறுத்து உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வாளைத் தூக்கிக் கொண்டு கர்ஜித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்துவிட்டதாக யார் சொன்னாலும் அவரது தலையைச் சீவி விடுவேன் என்று சொன்ன சமயம் அவரது பெருந் தவறு இறைவன் புறத்திலிருந்து உடனடியாகத் திருத்தப்பட்டிருக்கும். அப்படித் திருத்தப்படவில்லை. வெளியே சென்றிருந்த அபூ பக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு திரும்பி வந்து 3:144, 39:30 இறை வாக்குகளைப் படித்துக் காட்டியே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அத்தவறு திருத்தப்பட்டது. குர்ஆன் வசனத்தைப் படித்துக் காட்டியவுடன் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தவறை உணர்ந்து தவ்பா செய்து மீண்டார்கள். இன்றைய மவ்லவிகளைப் போல் குர்ஆன் வசனங் களுக்குச் சுய விளக்கம் கொடுத்து தங்கள் தவறை நியாயப்படுத்த முற்படவில்லை.
மார்க்கம் அதாவது குர்ஆன், சுன்னா இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்று தெள்ளத் தெளிவாக இருக்கும் நிலையில், இந்த மவ்லவிகள் 49:16 இறைவாக்குகள் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்படுவதும், 42:21 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) அவர்களின் மனம் போன போக்கில் 10:59, 16:116 இறை வாக்குகள் கூறுவது போல் ஹலாலை ஹறாமாக்கவும், ஹறாமை ஹலாலாக்கவும் துணிவதற்கு காரணம் என்ன? அந்த மர்மம் இதுதான்.
அல்குர்ஆனை நீங்கள் பொருள் அறிந்து படிக்க முற்பட்டால் 2:100,243, 3:110, 5:59:103, 6:37,111, 116, 7:17,102,131,187, 8:34, 9:8, 10:36,55,60, 11:17,32, 12:21,38,40,68,103,106, 13:1, 16:38, 75,83,101, 17:89, 18:54, 21:24, 23:70, 25:44, 50, 26:8,67,103,124,139,158,174,190,223, 27:61,73, 28:13,57, 29:63, 30:6,9,30,42, 31:25, 34:28,36,41, 36:7, 37:71, 39:29,49, 40:57,59,61, 41:4, 43:78, 44:39, 45:26, 49:4, 52:47
இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தும் மிகமிக பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் நன்றி செலுத்த மாட்டார்கள், நரகத்திற்குரியவர்கள் என்று கூறுவதை அறிய முடியும். இதற்குக் காரணம் அப்பெருங்கொண்ட மக்கள் ஷைத்தானின் வசீகர வலையில் வசமாகச் சிக்கிக் கொள்வதேயாகும் என்பதை கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துவதைப் பொறுமையாகப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும். 4:118-120, 7:12-27, 8:48, 14:22, 15:31-43, 16:63, 17:61-65, 19:83, 20:117-130, 22:3,52,53, 23:97, 26:221-223, 35:6, 36:60, 41:36, 58:19 வசனங்களைப் படித்துப் படிப்பினை பெறுங்கள்.
6:153 வசனம் கூறும் ஒரே நேர்வழியை அல்லாஹ் மட்டுமே காட்டமுடியும். எந்த மவ்லவியோ, ஆலிமோ, அல்லாமாவோ, அவுலியாவோ நேர் வழியை நிச்சயமாக் காட்ட முடியாது என்பதை மேலும் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களும் உறுதிப்படுத்துகின்றன. 2:213, 3:101, 4:68,175, 5:16, 6:126,153, 7:16, 10:25, 15:41, 19:36, 22:54,67, 24:46, 36:4,61, 37:118, 42:52, 43:43,61,64, 46:30, 48:2,20. குர்ஆன் வசனங்களை நேரடி யாகப் படித்துப் படிப்பினை பெறுங்கள்.
மேலும் 3:101, 6:153, 24:46 வசனங்களை மீண்டும் மீண்டும் பலமுறைப் படித்துப் பார்த்துப் படிப்பினைப் பெறுங்கள். இவ்வளவுத் தெள்ளத் தெளிவாகத் திட்டமாக இரவும் பகலைப் போல், குன்றிலிட்ட தீபமாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக நேர்வழி அல்லாஹ் காட்டுவது மட்டுமே என்று இறுதி நெறிநூல் அல்குர்ஆன் தெளிவுபடுத்துவதை அறியாத மூடர்களா இந்த மவ்லவிகள்? நிச்சயமாக இல்லை! 2:146, 6:20 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் தங்களின் பெற்ற பிள்ளைகளை அறிவது போல் நேர்வழியை அறிகிறார்கள்; அறிந்த நிலை யில்தான் ஒரே நேர்வழியைப் பல கோணல் வழிகளாக்குகிறார்கள்.
இந்த மவ்லவிகள் நன்கு அறிந்த நிலையில் அல்லாஹ் அளித்த ஒரே நேர்வழியைப் பல கோணல் வழிகளாக்கும் மர்மம் என்ன? 5:3, 3:19, 85, 33:36, 7:3, 59:7, 18:102-106, இறைவாக்கு களை நிராகரித்து (காஃபிராகி 2:39) ஆலிம்-அவாம் பிரிவு, Uஆ-சுன்னத் வல் ஜமாஅத் பிரிவு, மத்ஹபு கள் பிரிவுகள், தரீக்காக்கள் பிரிவுகள், ஜமாஅத் பிரிவுகள், இயக்கப் பிரிவுகள், கழகப் பிரிவுகள், அமைப்புப் பிரிவுகள் என எண்ணற்றக் கோணல் வழிகளை இம்மவ்லவிகள் நியாயப்படுத்தி மார்க்கமாக்கும் மர்மம் என்ன?
ஆம்! இம்மவ்விகள் மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாக, தொழிலாகக் கொண்டிருப்பது தான் ஒரே காரணம், அல்குர்ஆன் 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆக 13 இடங்களில் நபிமார்கள் அனைவரையும் அவர்கள் மீது விதிக்கப்பட்ட மார்க்கப் பணிக்காக மக்களிடம் கூலி-சம்பளம் கேட்கவில்லை, அப்பணிக்குரிய கூலி அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவிக்கச் செய்துள்ளான் அல்லாஹ்.
அப்படி மார்க்கப் பணிக்குக் கூலி மக்களிடம் கேட்டால் அதனால் அவர்கள் சுமை ஏற்றப்பட்டு வழி கேட்டில் செல்ல நேரிடும் என்பதை 52:40, 68:46, இரு வசனங்களில் எச்சரிக்கிறான் அல்லாஹ். மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்களுக்கும், அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்து மார்க்கப் பணி புரிந்த இறைத் தூதர்களுக்குமிடையேயுள்ள வேறுபாட்டை யாசீன்:36 அத்தியாயம் 13ம் வசனத்திலிருந்து 21ம் வசனம் வரையுள்ள 9 வசனங்களையும் மீண்டும் மீண்டும் பலமுறைப் படித்து விளங்கினால் கூலிக்கு மாரடிக்கும் இம்மதகுருமார்களான மவ்லவிகள் எந்த அளவு வழிகேடர்கள் என்பதை நீங்களே உய்த்துணர முடியும்.
அதில் 36:21ம் வசனம் கூலி வாங்காமல் மார்க்கப் பணி புரிபவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப் படுத்திக் கூறுவதை அறியலாம். அந்த இறைத் தூதர்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள் கூலிக்கு மாரடித்த அன்றைய மதகுருமார்களும் அவர்களது ஆதரவாளர்களுமே என்பதை அறிய முடியவில்லையா? ஆம்! கூலிக்கு மாரடிக்கும் மதகுருமார்களான மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியைக் காட்டமாட்டார்கள். தங்களுக்கு அற்ப உலக ஆதாயங்களைப் பெற்றுத் தரும் கோணல் வழிகளையே நேர்வழி யாகக் காட்டுவார்கள்.
காரணம் ஹராமான அற்பக் கூலி காரணமாக அவர்களது உள்ளங்கள் 2:74, 5:13, 6:43,125, 57:16 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் கற்பாறைகளை விடக் கடினமாக இறுகிவிட்டன. எனவே 2:41,75,78,79,109,146,159,161,162, 174,188, 3:78,187,188, 4:44,46, 5:13, 41,62, 63, 6:21,25,26, 9:9,10,34, 11:18,19, 31:6 இறை வாக்குகள் கூறுவது போல் அனைத்து வகை அக்கிரம, அநியாயக்கார, பித்அத், குஃப்ர், ஒஷிர்க் போன்ற நரகில் சேர்க்கும் மிகக் கொடிய செயல்களை மக்களுக்கு மார்க்கமாகப் போதித்து அவை மூலம் ஹராமான வழிகளில் பொருள் சேர்க்க முற்படுவார்கள்.
உலகில் பேர், புகழ், பிரபல்யம், செல்வாக்கு, சொத்து, சுகம், பணம், காசு என அழிந்துபடும் அற்ப இன்பங்களைக் குறிக்கோளாகக் கொண்டு கோணல் வழிகளை நேர்வழியாகக் காட்டுவார்கள் இந்த மவ்லவிகள். அது கொண்டுதான் கோணல் வழிகளில் சென்று நரகை நிரப்பும் பெருங்கொண்ட மக்கள் இந்த மவ்லவிகளுக்குப் பின்னால் அணி வகுத்து இவர்களின் பைகளை நிரப்புவார்கள்.
32:13, 11:118,119 குர்ஆன் வசனங்களைப் படித்து உணர்கிறவர்கள் அவை, பெருங்கொண்ட மக்கள் நரகை நிரப்பும் கோணல் வழிகளில் செல்வார்கள் என்பதை உறுதிப்படுத்துவதை உணர முடியும். அதற்கு மாறாக மிகமிக செற்பமானவர்களே நேர்வழி நடந்து சுவர்க்கம் செல்வார்கள் என்பதை 2:83,88, 246,249, 4:46,83,142,155, 5:13, 7:3,10, 11:116, 17:62, 23:78, 27:62, 32:9, 40:58, 48:15, 67:23, 69:41,42 போன்ற இறைவாக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நூஹ்(அலை) அவர்கள் 950 வருடங்கள் வாழ்ந்துப் பிரசாரப் பணி புரிந்தும் வெறும் ஒரு நூறு நபர்களைக் கூட நேர்வழிக்குக் கொண்டு வர முடியவில்லை என்பது வரலாறு (பார்க்க:29:14) அவரது மனைவியும் மகனும் கூட நேர்வழிக்கு வர வில்லை. (பார்க்க: 66:10, 11:42) ஒரு சில நபிமார்கள் தன்னந்தனியாகவும், ஒரு சில நபிமார்கள் ஓரிருவரு டனும் சுவர்க்கம் செல்வார்கள் என புகாரீ (ர.அ) 5705, 5752 ஹதீஃத்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆயிரம் (1000) நபர்களிலும் ஒருவரே சுவர்க்கம் போவார் என்று புகாரீ(ர.அ) 3348 ஹதீஃத் கூறுகிறது.
இந்த நிலையில் அந்த நபிமார்கள் மார்க்கப் பணியை வயிற்றுப் பிழைப்பாக, தொழிலாகக் கொண்டிருந்தால் அவர்களால் நேர்வழியை உள்ளது உள்ள படி சொல்லியிருக்க முடியுமா? மேலும் நபிமார்கள் இறைவனுடன் வஹீ எனும் இறைச் செய்தியுடனும், இறைவனின் கண்காணிப்பிலும் இருந்ததால் பெருங் கொண்ட மக்களின் விருப்பப்படி நடக்க முற்பட்ட போது அவர்களைக் கண்டித்துத் திருத்தியதை அல்குர்ஆன் 6:116, 17:73-75, 69:44-47, 80:1-12 வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.
மக்களிடம் கூலி வாங்காமல் அல்லாஹ்வின் பொருத்தம் மட்டும் நாடி மார்க்கப் பணி புரிந்த நபிமார்களுக்கே பெரும்பான்மையினர் பற்றிய மயக்கம் ஏற்பட்டு அல்லாஹ் அவர்களைத் திருத்தி நேர்வழி நடக்கச் செய்துள்ளான் என்றால், மக்களிடம் கூலியை-சம்பளத்தை எதிர்பார்த்து மார்க்கப் பணி புரிவதாக நடிக்கும் இம்மவ்லவிகள் எந்த அளவு பெரும்பான்மை மக்களைக் கவரும் நிலையில் கோணல் வழிகளை நேர்வழியாகப் போதிப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து 2:39 வசனம் கூறுவது போல் குஃப்ரிலாகி, நிரந்தர நரகை அடையும் நிலையில் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக, தொழிலாகக் கொண்டுள்ள அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள் அனைவரின் இழி நிலையை 2:8-20,159-162, 3:77, 4:27, 5:48, 6:157, 7:146,175-179, 16:95, 18:57, 45:23, 47:24-28 போன்ற இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்து விளங்குங்கள். அது மட்டுமல்ல, அன்றை தாருந்நத்வா குருகுல மடத்தின் தலைவன் அபூஜஹீலுக்கும், அவனுடனிருந்த ஜாஹில்களுக்கும் இன்று “”நாங்கள்தான் ஆலிம்கள், மார்க்கம் கற்ற மேதாவிகள், எங்களிடம் தான் மக்கள் மார்க்கம் பற்றிக் கேட்டு விளங்க வேண்டும்” என்று பெருமை ஆணவம் பேசும் மவ்லவிகளுக்கும் அணுவத்தனையும் வித்தியாசமில்லை என்பதையும் அறியலாம்.
அன்று அபூஜஹீலும் அவனது கூட்டத்தாரும் எப்படி குறைஷ்களைப் பொய்க் கடவுள்களைக் கொண்டும், மதகுருமார்களைக் கொண்டும் ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்த்து வந்தார்களோ அது போலவே இன்று அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளும் இறைவனுக்கும் அவனது அடியார் களுக்குமிடையில் 2:186, 7:3 இறைக் கட்டளை களுக்கு மாறாகத் தரகர்களைப் புகுத்தி முஸ்லிம்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்த்து வருகிறார்கள்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திலிருந்து அனைத்து நபிமார்களின் காலம் வரை ஒவ்வொரு நபியின் சமூகத்திலும் இம்மதகுருமார்கள் திருட்டுத் தனமாகப் புகுந்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்த் தது போல், இறுதி நபிக்குப் பின்னர் இந்த முஸ்லிம் சமுதாயத்தினுள் திருட்டுத்தனமாகப் புகுந்து மக் களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்களே இந்த அனைத்துப் பிரிவு மவ்லவிகளும் என்பதில் சந்தே கம் இருக்க முடியுமா? இன்று முஸ்லிம் சமுதாயத்தில் மவ்லவி, ஆலிம், அல்லாமா, காரீ, முஃப்தி எனப் பல்வேறு பெத்தப் பெயருடன் பெருமையாக வலம் வரும் அனைத்துப் பிரிவு மதகுருமார்களான மவ்லவிகளும் அல்குர்ஆன் மிக மிக வன்மையாகக் கண்டிக்கும் கொடிய ஹராமான செயல்களைச் செய்யக் கூடியவர்களே. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பெருமையையும், கண்ணியத்தையும் அபகரிப்பவர்களே, திருடுபவர்களே அனைத்துப் பிரிவு மவ்லவிகளும். தங்கள் வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு மவ்லவி அல்லாதவர்களை அவாம்கள் ஆடுமாடுகள் போன்றவர்கள் என இழிவு படுத்துகிறவர்களே!
அல்குர்ஆன் 2:34, 4:36, 7:146,175-179,206, 11:10, 16:22,23,49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:18, 32:15, 39:49, 40:35, 56,60, 45:37, 57:23, 59:23, 74:1-3 குர்ஆன் வசனங்கள், புகாரீ 4850, 4918, 6071, 6657, முஸ்லிம் 2620 ஹதீஃத்கள் இவற்றை நேரடியாகப் படித்து உணர்கிற வர்கள் நிச்சயம் இம்மவ்லவிகளின் ஆணவம், பெருமை, அகங்காரம் இவற்றை எளிதாக விளங்க முடியும். அவர்கள் எப்படிப்பட்ட கேடுகெட்ட நிலையில் இருக்கிறார்கள். நாளை தங்கள் பின்னால் வந்த பெருங் கூட்டத்தினருடன் நரகை நிரப்ப இருக்கிறார்கள் என்பதையும் விளங்க முடியும்.
இத்தனைப் பெருங்கேடுகளுக்கும், பெரு நட்டத்திற்கும் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிச் சபிப்பதற்கும் அடிப்படைக் காரணம் இம்மவ்லவிகள் மார்க்கத்தை எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதே. மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள இம்மவ்லவிகள் ஒரு போதும் சத்தியத்தை-நேர்வழியைச் சொல்ல முடியவே முடியாது என்பதை அல்குர்ஆன் யாசீன் 36:21 இறைவாக்கு நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் நெத்தியடியாகவே கூறுகிறது.
ஆக இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் பொறுமையாக பெரும் முயற்சி எடுத்து (ஜிஹாத்) கவனமாகப் படித்து விளங்குகிறவர்கள் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள் ஒருபோதும் மக்களுக்கு நேர்வழியைக் காட்டமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்ள முடியும். காரணம் என்ன? சத்தியத்தை-நேர்வழியை மக்களுக்கு எடுத்துச் சொல்லும்போது கோடிக்கணக்கான சிப்பிகளில் ஒரு சில சிப்பிகளில் மட்டுமே பெறுமதியான முத்துக்கள் இருப்பது போல், ஒரு சிலரே அப்போதனையை ஏற்று நேர்வழிக்கு வருவார்கள். அந்த ஒரு சிலரும் குர்ஆன், ஹதீஃத் போதனைக்கு முரணாக இவர்கள் செய்யும் கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி கொடுக்கவே மாட்டார்கள். இம்மவ்லவிகளின் கும்பி காயும், குடும்பம் பதறும். நேர்வழியை ஏற்பார்களா இம்மவ்லவிகள்?
அதற்கு மாறாக 32:13, 11:118,119 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் நரகை நிரப்பும் பெருங் கொண்ட மக்கள் விரும்பி ஏற்கும் கோணல் வழிகளை நேர்வழியாகப் போதிக்கும் போதுதான், அப் பெருங்கூட்டம் இம்மவ்லவிகளின் பின்னால் அணி வகுக்கும். அவர்களே இம்மவ்லவிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள். தொப்பையையும், பையையும் நிரப்புவார்கள். இப்போது புரிகிறதா இந்த மவ்லவிகள் ஏன் கோணல் வழிகளையே நேர் வழியாகக் காட்டுகிறார்கள் என்பது. யாசீன் 36:21 குர்ஆன் வசனம் கூலி-சம்பளம் வாங்காமல் கடமையான மார்க்கப் பணி புரிகிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்கிறார்கள் என்று திட்டமாக அறிவிக்கும் இரகசியம் புரிகிறதா?
திட்டமாக, தெளிவாக, உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நாங்கள்தான் மார்க்கம் கற்றவர்கள், மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மவ்லானாக்கள் என பெருமை, ஆணவம் பேசி, நாங்கள் தான் மக்களுக்கு மார்க்கப் பிரசாரம் செய்யும் ஆற்றலும் உரிமையும் பெற்றவர்கள் எனத் திமிர் பேசும், கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையுள்ள அனைத்துத் தரப்பு மவ்லவிகளும் ஒருபோதும் சத்தியத்தை-நேர்வழியை போதிக்க மாட்டார்கள்.
அவர்களின், 3:103, 105, 6:153,159, 30:32, 42:13,14 குர்ஆன் வசனங்க ளுக்கு முரணான பிரிவுகளுக்கு ஏற்றார் போல் நேர் வழியின் பேரால் கோணல் வழிகளையே போதிப்பார்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். 2:186, 3:103, 7:3, 33:36 இறைவாக்குகளுக்கு முற்றிலும் முழுவதுமாக அடிபணிந்து அனைத்துத் தரப்பு மவ்லவிகளையும், இயக்க, கழக, ஜமாஅத் தலைவர்களையும் முற்றிலும் புறக்கணித்து குர்ஆன், சுன்னாவைப் பற்றிப் பிடிப்பவர்களே வெற்றியாளர்கள். அல்லாஹ் அருள் புரிவானாக!
–அபூ அப்தில்லாஹ்
source: http://annajaath.com/?p=6757