ஏன் ஓடிப்போனாள்?!
ஓடிபோவதைப் பற்றியே பேசுகிறோம்
அந்த பெண் ஓடிப் போயிட்டாள்.
அந்த பெண் யாரோடு ஓடிப் போயிட்டாள்.
அந்த பெண் அவளுக்கு தெரிந்தவனோடு ஓடிப் போயிட்டாள்.
அந்த பெண்ணுக்கு அவனை எப்படி தெரியும் ?!
அதுதான் தெரியலே!
அந்த பெண் அவனை ஏன் விரும்பினாள்?!
அதுவும் தெரியலே!
அவளுக்கு திருமணம் ஆகி விட்டதா?
திருமணம் ஆகி விட்டது.
திருமணம் ஆகியுமா ஓடிப்போனாள் ?!
ஆமாம்.
அவளது கணவன் எங்கே?
கணவன் பல ஆண்டுகளாக வெளி நாட்டில் இருக்கார்.
கணவன் வீட்டு செலவுக்கு பணம் அனுப்புகிறார்.
கடைசியா எப்போ வந்தார்?
கடைசியா ஊருக்கு வந்து ஏழு அல்லது எட்டு வருடம் ஆகி இருக்கும்.
அப்படியா!
ஓடிப்போனது குற்றம்தான்.
அதற்கு பதில் அவள் விருப்பப்படி கணவனிடமிருந்து விடுதலை வாங்கி ஓடிபோகாமல் (குடும்ப கவுரத்தை காப்பாற்ற, பாவம் செய்யாமல் இருக்க) அவள் மகிழ்வாக இருக்க ஓடிபோகாமல் அவனையே மறுமணம் செய்து வாழலாமே!
அவளுக்கு அந்த அளவுக்கு புத்திமதி சொல்பவர்களும், நல்லவர்களும், உடன் இருக்கும் பெறோர்களும் மனம் விட்டு அவளிடம் பேசாமல் போனதும் ஒரு குற்றமாக தெரியவில்லையா?!
ஓடிபோவதைப் பற்றியே பேசுகிறோம்.
வளர்க்கும் முறை, வாழும் முறையைப் பற்றி நாம் சிந்தித்து அவர்களுக்கு உதவாதது ஏன் குற்றமாக தெரியவில்லை?!
ஆண்களிடமும் குற்றம் உள்ளது என்பதனை நாம் எப்போது அறிவது?
குற்றம் இருவரிடமும் உள்ளது!
தண்டனை கொடுப்பதைப் பற்றி நாம் உறுதியாக இருக்கிறோம் ஆனால் மார்க்கம் வாழும் முறை, வளர்க்கும் முறை பற்றி போதித்ததை நாம் சரியாக அறிந்துக் கொள்வதில்லை.
திருமண பந்தம் என்பது இஸ்லாத்தின் பார்வையில் ஒரு அழகான ஒப்பந்தமே!
வெளிநாட்டில் இருப்பதும் இருக்காமல் இருப்பதும் இருவரின் ஒப்புதலோடு இருக்கனும். குடும்பத்தை எந்த விதத்திலும் பராமரிக்காமல் போனால் இப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழத்தான் செய்யும். அதற்கு அந்த கணவனே முழுப் பொறுப்பாவான்.
ஒப்பந்தத்தை ஒருவர் மீறும் போது மற்றொருவர் அழகாக விடுதலைக் கேட்டு பெற்று குடும்ப ஒப்புதலோடு அழகாய் மறுமணம் செய்துக் கொள்ளலாம் தான்! அந்த அறிவையும் ஆதரவையும் அவளைச் சேர்ந்த உறவினர்களே தரனும்.
எப்படியும் ஓடிப் போவது அவளுக்கு இழுக்கு தான். அதை நியாயப்படுத்தவே முடியாது. உறவும் விபச்சாரம் என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், அதனால் ஏற்படும் அவப்பெயர் அவள் ஜென்மத்துக்கும் தொடரும்… அல்லாஹ் எல்லோரையும் காப்பாற்றுவானாக… ஆமீன்…
Thanks to -Mohamed Ali Jinnaah & Sadeek Ali Abdullah