தேர்தலும், பாஜக நாடகமும் !!
ஏனைய அரசியல் கட்சிகளுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் அடிப்படையில் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு.
பிற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், ‘இளைஞர் அமைப்பு, மாதர் அமைப்பு, வாலிபர் அமைப்பு, தொழிற் சங்க அமைப்பு’ போன்ற பல்வேறு துணை அமைப்புகள் (வெகுஜன அரங்கங்கள்) உண்டு. இந்தத் துணை அமைப்புகள் அனைத்தும், அந்தந்த அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும். இந்தத் துணை அமைப்புகள் எவையும் கட்சியின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி மட்டும் மேற்குறிப்பிட்ட நடைமுறைக்கு முற்றிலும் தலைகீழானது.
ஏனெனில் ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்’ எனப்படும் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரு மதவாத அமைப்பின் அரசியல் பிரிவே பாரதிய ஜனதா கட்சியாகும். (இந்தக் கட்சியின் முந்தைய பெயர் ‘ஜனசங்கம்’) எனவே, இந்த பாரதிய ஜனதா கட்சி என்பது, ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை களைச் செயல்படுத்தும் அரசியல் பிரிவு தானே தவிர, அடிப்படையில், சுயமான அரசியல் கொள்கைகளைக் கொண்ட கட்சி அல்ல.
மேலும் பாரதிய ஜனதா கட்சி என்ற இந்த அரசியல் துணை அமைப்பு, ஆர்.எஸ். எஸ். என்ற தாய் அமைப்பை எந்த வகை யிலும் கட்டுப்படுத்த முடியாது. மாறாக, ஆர். எஸ்.எஸ்.தான் பாஜகவை எல்லா வகை யிலும் கட்டுப்படுத்தும். இந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவாக் கொள் கையை நடைமுறைப்படுத்துவதற்காக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் அமைப்பே பாஜக ஆகும்.
இந்துத்துவாக் கொள்கை என்பது என்ன?
இதோ, ஆர்.எஸ்.எஸ்.சின் ஆரம்பகாலத் தலைவர் குரு கோல்வால்கர் கூறுகிறார் :“இந்துக்களும் பல சமூகத்தினரும் வாழ்ந்து வந்த ஒரு முழுமையான தேசம் ஏற்கனவே இங்கு இருந்தது என்பதை அவர்கள் மறந்து விட்டனர். அவர்கள் ஒன்று விருந்தினர்களாகவோ (யூதர்கள், பார்சிகள்) அல்லது ஆக்கிரமிப்பாளர்களாகவோ (முஸ்லிம்கள், கிறித்துவர்கள்)தான் இங்கு இருக் கிறார்கள் என்பதை மறந்து விட்டார்கள்.”அதாவது, ‘இந்தியா என்பது இந்துக்க ளின் நாடு! மற்றவர்கள் அந்நியர்கள்! இந்தி யாவின் மதம் இந்து மதம். மற்றவை அந்நிய மதங்கள்! இந்து தர்மமே இந்திய தர்மம்!
இன்னும் சொல்லப்போனால், பாகிஸ்தான் நாட்டையும் இணைத்துக் கொண்ட ‘அகண்ட பாரதம்.’! இந்த நாட்டில் இந்துக் கள் தவிர, மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், பார்சி போன்றோர், இந்து தர்மத்தை ஏற்றுக் கொண்டு, தங்களின் சொந்த மத உரிமைகள் ஏதுமின்றி மட்டுமே வாழலாம்.’ என்பதே இந்துத்துவாக் கொள்கையின் சாராம்சம்.மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டு, பயங்கரவாத நடவடிக்கைகள் மூலமாகச் சிறுபான்மையினரை அச்சுறுத்தி, அதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பதுதான் ஆர்எஸ்.எஸ்.சின் செயல் திட்டமாகும்.
வகுப்பு மோதல்களை உருவாக்குவது; பயங்கரவாத வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களை, ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்புகளான (விஸ்வ ‘ஹிந்து பரிஷத்,, பஜ்ரங்தள், இந்து முன்னணி, பிராமணர் சங்கம் போன்ற) சங் பரிவாரங்கள் செய்து முடிக்கும். இவர்களுக்கு அரசியல் ரீதி யாகவும், ஆட்சி அதிகாரத்தின் மூலமாகவும் பாஜக பாதுகாப்பைக் கொடுக்கும்.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான செயல்திட்டம்
1951 இல், ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான ‘ஜனசங்கம்’ தோற்றுவிக்கப்பட் டது. அவசர நிலைக்குப் பிறகு துவக்கப்பட்ட ‘ஜனதா கட்சியில்’ ஜனசங்கம் இணைக்கப் பட்டது. 1977இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி 295 இடங்களில் வெற்றி பெற்று, மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆனார்.ஜனசங்கத்தினரும், ஆர்.எஸ்.எஸ். காரர்களும் பெருமளவில் ஜனதாக்கட்சிக் குள் ஊடுருவி, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றத்திட்டமிட்டிருந்தனர். இதனை உணர்ந்து கொண்ட ஜெகஜீவன்ராம், சரண் சிங் போன்றவர்கள், ‘ஜனதா கட்சியில் உள்ள வர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருக்கக் கூடாது’ என்று எதிர்ப்புத் தெரி வித்தனர்.
இதனை வாஜ்பாய் கும்பல் ஏற்றுக் கொள்ள மறுத்து, மொரார்ஜி அரசைக் கவிழ்த் தனர்.ஜனதா கட்சியில் இருந்து ஜனசங்கத் தினர் தனியாகப் பிரிந்து வந்து 1980 ஏப்ரல் 5ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியை அமைத்துக் கொண்டனர்.1984 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி முதன் முதலாகப் போட்டியிட்டது. 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுப் படுதோல்வியைச் சந்தித்தது. கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குரல் கட்சிக்குள் ஏற்பட்டது. 1986இல் தில்லியில் கட்சியின் மாநாடு கூட்டப்பட்டது. “பசுவதைத் தடைச் சட்டம்; பொது சிவில் சட்டம்; 370வது பிரி வை அரசியல் நிர்ணயச் சட்டத்தில் இருந்து நீக்குவது; போலி மதச்சார்பின்மை; சிறுபான் மை வாதம் – ஓர் அபாயம்” என்ற கொள்கைப் பிரகடனம் செய்யப்பட்டது.
தேர்தல்கள் – பாஜக பயங்கரவாதம்
சிறுபான்மையினருக்கு எதிரான கொள் கைகளை வரையறுத்த பின்பு, ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்றுவதற்காக வகுப்புக் கல வரங்களைத் தூண்டிவிடும் நடவடிக்கை களைச் செயல்படுத்தத் தொடங்கியது பாஜக.மண்டல் குழுவின் பரிந்துரையின் அடிப் படையில், பிரதமர் வி.பி.சிங், மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து 07.08.1990-இல் ஆணை பிறப்பித்தார். உத் தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில், மேல் சாதி மாணவர்களைத் தூண்டி விட்ட சங் பரிவார் கும்பல், பல மாணவர்களைத் தீயிட் டுக் கொளுத்தி, அவர்களே தீக்குளித்ததாக அறிவித்தது.
இதனை வாக்கு வங்கியாக மாற்றுவதற்கும், பிற்பட்ட வகுப்பினரின் எழுச்சியை ஒடுக்கவும், மிரட்டவும், அத் வானி குஜராத்திலிருந்து ரதயாத்திரை தொடங்கினார். யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் இந்து-முஸ்லிம் மோதல்கள் வெடித்துக் கலவரங்களாக மாறின. பீகாரில் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், ரதயாத்திரை யைத் தடுத்தி நிறுத்தி, அத்வானியைக் கைது செய்தார். தனது ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று வி.பி.சிங் கொள்கை உறுதியுடன் செயல்பட்டார். பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டு வி.பி.சிங் அரசைக் கவிழ்த்தது.இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, ராம ஜென்மபூமி மீட்பு இயக்கப் பிரச்சாரத்தையும், செயல்பாடுகளையும் சங் பரிவார் கும்பல் தீவிரப்படுத்தின.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற் காக செங்கல்களைத் திரட்டும் ‘கரசேவை’ இயக்கம் 1989, 90களில் நாடு முழுவதும் நடத் தப்பட்டது.1991 பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் 119 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் மொத்தமுள்ள 85 தொகுதிகளில், 51 தொகுதிகளைக் கைப்பற்றியது.1992 டிசம்பர் 6ஆம் நாள், கரசேவகர்கள் என்ற பெயரால், ஆர்.எஸ்.எஸ்.சின் சங் பரி வாரக் கும்பல்களால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.இந்த மதவெறி நிகழ்ச்சி பட்டவர்த்தன மாக ஊர், உலகம் முழுமையும் தெரிந்திருந் தாலும், இதற்குக் காரணமான சங் பரிவாரக் கும்பல்கள் மீது இன்றுவரை நடவடிக்கை ஏதுமில்லை. இதனால் தெம்பு கொண்ட அந்தக் கும்பல் இன்றுவரை, நாடு முழுக்க, தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டு தான் வருகிறது.
இந்தத் தேர்தலில்…
வரவிருக்கும் 16வது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகின்ற இந்த வேளையில் தான், கடந்த ஆகஸ்ட் மாதம் முசாபர் நகரில் (உத்தரப் பிரதேசம்) 43 உயிர்களைப் பலிவாங் கிய மதக் கலவரங்களை சங்பரிவார் கும்பல் அரங்கேற்றியுள்ளது. இந்தக் கலவரங்களில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பாஜகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை, ஆக்ராவில் மோடி கலந்து கொண்ட பேரணியில் பாஜக சமீபத்தில் கௌரவித்துள்ளது.இப்படிப்பட்ட பின்னணியில்தான், ஆர்.எஸ்.எஸ். முடிவின்படி, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, பிரதமர் வேட்பாளராகப் பவனி வருகிறார்.
குஜராத் மாநிலத்தைப் போல், இந்தியாவை சொர்க்கபுரியாக மாற்று வதற்கு நரேந்திர மோடிதான் தகுதியானவர் என்று, பாஜகவும், நரேந்திர மோடியும் கோய பல்ஸ் பிரச்சாரத்தை நாள்தோறும் நடத்திக் கொண்டுள்ளனர். அப்படி என்ன பாஜக ஆட்சிக்காலங்கள் பொற்காலங்களா? இல்லை! ஒளிரும் இந்தியா, வறுமை இந் தியா என இரு இந்தியாவை உருவாக்கிய வர்கள்தானே இவர்கள்!
மத்திய அரசில், பாஜக ஆட்சிக் காலங்களில்…
பொருளாதாரக் கொள்கைகளிலோ, அமெ ரிக்க ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கை களிலோ, காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக வுக்கும் பெரிய அளவுக்கு வித்தியாசம் கிடையாது.பொதுத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கென்றே, ‘பங்கு விற்பனை அமைச்சகம்’ என்று தனியாக ஒரு அமைச் சகத்தை உருவாக்கி பொதுத்துறைகளைச் சின்னாபின்னமாக்கியதே பாஜக அரசுதான். பெருமுதலாளிகளுக்கு ‘ஊக்குவிப்பு’ என்ற பெயரால் பல கோடி ரூபாய்களை மானியமாக வழங்கியதில், காங்கிரஸ் கட்சிக்கு பாஜக எந்தவிதத்திலும் சளைக்கவேயில்லை. பெட்ரோல், டீசல் இறக்குமதிக்கென்று, தனியே ‘எண்ணெய் நிதி’ என்று இருந்த அமைப்பைக் கலைத்து, இன்றைய பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர் வுக்கு வழிவகுத்ததே கடந்த கால பாஜக அரசுதான்.
ஊழல்களில்ர தொலைக்காட்சிகளில் அம்பலமான பங் காரு நாயுடு கையூட்டுப் பெற்றது முதல், பங்குச் சந்தை ஊழல், சுங்கத் துறை ஊழல், தெஹல்கா பாதுகாப்புத் துறை ஊழல், யூனிட் டிரஸ்ட் ஊழல், தொலை பேசித்துறை ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், பெட்ரோல் பங்க் ஊழல் என்று பாஜக ஆட்சியின் ஊழல்களைப் பட்டிய லிட்டுக் கொண்டே போகலாம்.மதவாதத் திணிப்புகளில் ர பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகங்களில், வரலாறைத் திரித்தும், இந்து மதவாத – ஏனைய மதத்தினருக்கு எதிரான கருத் துக்களையும் புகுத்தி, இளம் உள்ளங் களில் நஞ்சு பாய்ச்சியது!ர இராணுவம் உள்ளிட்ட அரசுப் பணிகளில் சங் பரிவாரக் கும்பல்களை ஊடுருவச் செய்தது! இப்படி எத்தனையோ!இப்படிப்பட்டவர்கள்தான், இன்று நரேந் திர மோடியை முன்னிறுத்தி, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வருகிறார்கள்.
குஜராத்தில் நரேந்திர மோடி சாதித்தது தான் என்ன?
நரேந்திர மோடியின் இன்றைய பிரபலத் துக்குக் காரணமே, கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்த வன் முறைக் கலவரங்களும்தான்! குஜராத்தில் ஆண், பெண், வயதானவர்கள், குழந்தைகள் என்றுகூடப் பாராமல், ஏன், கருவில் இருக் கும் குழந்தை என்றுகூடப் பாராமல் நரவேட் டையாடி முஸ்லிம்களின் உயிரைப் பறித்த வன்முறை வெறியாட்டமும்தான்! இவை தான் நரேந்திர மோடியின் மகத்தான சாதனை.
மேலும், பாஜகவினரும், பெரும் நிறுவனங்க ளின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களும் உயர்த்திக் காட்டும் அளவுக்கு, குஜராத் மாநி லம், அப்படியொன்றும் வளர்ச்சியில் பெரு மளவுக்கு முன்னேறிவிடவில்லை. குறிப்பிட் டுச் சொன்னால், மனிதவள மேம்பாடு, குழந் தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல துறைகளில் பிற மாநிலங் களைவிடப் பின்தங்கியே உள்ளது என்பதை, மத்திய அரசின் அதிகாரப்பூர்வப் புள்ளி விவரங் களே வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.
இன்றுகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கோடிகோடியாக மானியத்தைப் பெற்றுக் கொழுத்த பெரும் நிறுவனங்கள் (கார்ப்பொரேட் நிறுவனங்கள்), இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்குக் கூட்டணியின் அரசுமீது கடும் கோபத்தில் இருப்பதையும், எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதையும் சரியாகவே கணக்கிட்டு, பாஜக ஆட்சிக்கு வருவதுதான் தங்களின் எதிர்கால நலன்களுக்கு உகந்தது என்று முடிவெடுத்து, அந்தப் பெருநிறு வனங்கள் பாஜகவுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன.
பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்?
“இந்துத்துவாக் கொள்கைகளை வெற்றி கரமாகப் பரிசோதிக்கும் கூடமாக குஜராத் தை உருவாக்கியதில் சங் பரிவாரங்கள் பெருமை கொள்கின்றன. இந்த நடவடிக்கை களை முன்மாதிரியாகக் கொண்டு தேசிய அளவில் இதனை வலுக்கட்டாயமாக நடை முறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.” என்கிறார் லக்னோவைச் சேர்ந்த ஆர்.எஸ். எஸ். தலைவர் ஒருவர்.“குஜராத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த வர்களின் இந்து மத உணர்வை மிக உயர்ந்த அளவுக்கு சங் பரிவாரங்கள் உயர்த்தியுள்ளன. தர்மத்தைப் பாதுகாப்பதற்காக இலட்சக் கணக்கான இந்துக்களைத் தெருவுக்கு வரவழைக்க ஒரு கோத்ரா நிகழ்ச்சியே போது மானதாக இருந்தது. அனைத்துக் கிராமங் களிலும் இஸ்லாம் இல்லாது ஒழிக்கப் பட்டது. முஸ்லிம் மதத்தினர் அனைவரும் அகதி முகாம்களுக்கு வெற்றிகரமாக விரட் டப்பட்டனர்!” என்று இறுமாப்பு கொள்கிறார் விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால்.பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக் கும் என்பதை வெளிப்படையாகவே ஆர்.எஸ். எஸ்.சும், சங்பரிவாரங்களும் அறிவித்து விட்டன.பாஜகவின் இந்த முகமூடி வேடத்தைக் கிழித்தெறிய நாம் உடனடியாகக் களத்தில் இறங்குவதே நம் இந்திய மக்களைப் பாதுகாக்கும் வழியாகும்!
நன்றி : இன்று ஒரு தகவல்